நாலு பேர் தப்பா பேசுவாங்க.... யார் அந்த நாலு பேர்?
அந்த நாலு பேர் யாருன்னு தெரியாது ஆனா தப்பா பேசுவாங்க. இந்த நாலு பேருக்கு பயப்பட்ற நம்ம நண்பர்கள் ஏன் அந்த ஒருத்தனுக்கு(இறைவன்) பயப்பட்றதில்ல.இது என்னோட அனுபவ பதிவு மனசுல உள்ளத கொட்டி தீர்க்கப்போறேன் நேரம் இருந்தா படிச்சுப்பாத்துட்டு பின்னூட்டம் எழுதுங்க.
பதிவு எழுத ஆரம்பிக்கும் போது பக்கத்துல இருந்த லோஷன் அண்ணாவுக்கும் அருந்ததி அக்காவுக்கும் (எல்லாரும் ஒன்னாதான் வெற்றிக்காக உழைக்கிறம்)சின்னதா ஒரு விவாதம் நடந்தது. ஏற்கனவே பதிவின் ஆரம்பத்தில் 'அந்த ஒருத்தனுக்கு பயப்பட்றதில்ல' என்று சொல்லியிருக்கேன் கடவுள் நல்லவங்கள தேடி வருவாருன்னும் கஷ;டத்துல தான் கடவுள தேடி போவேன்னும் லோஷன் அண்ணா சொல்றார் அதுக்கு அது கூடாது என்று ஆரம்பித்த அருந்தி அக்கா சொன்னாங்க மனிதனுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எவ்வளவோ இருக்கு நீங்க கூட கடவுள தேடி பேவீங்க உங்களுக்காக இல்லன்னாலும் உங்க குடும்பத்துக்காகவாவது செய்வீங்க இப்படி நேர் எதிரான கருத்துக்கள் பறந்து கொண்டிருந்த போது எனக்கொரு விஷயம் எழுதனும் போல இருந்தது பள்ளிகளிலும் கோயில்களிலும் ஏன் எல்லா மதத்தலங்களிலும் அதிகம் கடவுளை தரிசிப்பவர்கள் 50 வயதை தாண்டியவர்கள் பொதுவாக வாழ்க்கையை கிட்டத்தட்ட முழுமையாக வாழ்ந்தவர்கள். ஏன் இந்த வயதெல்லையில் இருப்பவர்கள் அதிகம் கடவுளை தரிசிக்கனும் தெளிவாக புரியுது மரண பயம்....... இது ஏன் ஆரம்பத்துல வரக்கூடாது? எப்படி வரும். 50 வயதுக்கு பிறகு மரணம் நேரும் என்பது நிச்சயமான உண்மை ஆனால் அதற்கு முதலும் வரலாம் வராமலும் போகலாம்.
இந்த 50 வருட வாழ்க்கையில கிட்டத்தட்ட அரைவாசி முடிஞ்சுது (அதுக்காக எனக்கு 25 வயதுன்னு நீங்க நினைக்க கூடாது) அதுக்குள்ள நான் கத்துக்கிட்டத கொட்டப்போறேன். வாழ்க்கைய புரிந்து கொள்ள எனக்கு ரொம்ப காலம் எடுத்தது. என்னுடைய மத குரு, ஊடகத்தில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவருடைய இறப்பு என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. இப்ப கூட என்னுடைய கையடக்கத்தொலைபேசியில ஏதாவதொரு இலக்கத்த தேடும்போது அவருடைய இலக்கம் கடந்து போகும் அப்ப நான் பட்ற வேதனைய சொல்ல வார்த்தைகள் இல்ல அந்த இலக்கம் இப்ப பாவனையில் இல்லையென்றாலும் அத அழிக்கிறதுக்கு மனசும் இல்ல. அவரு சொல்லி கொடுத்த நல்ல விஷயங்கள கொஞ்சம் கொஞ்சமா கடைபிடிக் ஆரம்பிச்சிட்டேன். எஞ்சியிருக்கிற அரைவாசி வாழ்க்கையில சரி நல்லவனா வாழ முயற்சி செய்யப்போறேன். இல்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க..
ஊடகத்துறையை விட்டுவிட்டு அப்பாவோட சேர்ந்து வியாபாரத்தை கவனி இல்லன்னா மேல்படிப்பை கவனின்னு அடிக்கடி சொல்ற அம்மாவோட வார்த்தைக்கு காது கொடுக்கலாம்னு நினைக்கும் போதே எனக்கு ஞாபகத்துக்கு வாரது அன்னை வானொலி இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக 8 மாதகாலமாக நான் பெற்ற கடுமையான பயிற்சி. அறிவிப்பாளனாக இப்படி ஒரு பயிற்சியான்னு அன்று வெறுத்துப்போனாலும் இன்று அதன் தேவையை உணர்கிறேன்.
திரு அப்துல் ஹமீத், திரு ஜெயகிருஷ;ணா, திரு சந்திரமோகன், மறைந்த திரு கணேஷ;வரன், திருமதி ராஜேஷ;வரி சண்முகம், திரு ராஜகுரு சேனாதிபதி, திரு அஹமத் முனவ்வர் இவர்களிடம் அறிவிப்புத்துறையின் குழந்தைப்பருவத்தில் பெற்ற பயிற்சி என்னை இன்று வெற்றி வானொலியின் உதவி முகாமையாளர் கதிரையில் அமர வைத்திருக்கிறது. இவ்வாறான ஒரு பதவி எனக்கு கிடைத்திருக்காவிட்டால் ஒரு வேளை ஊடகத்துறைக்கு விடை கொடுத்திருப்பேன். இந்த புதிய பயணத்தில் நான் சந்தித்தவர்களில் ஒருவர் லோஷன் அண்ணா இவர்தான் வெற்றியின் முகாமையாளர் என்னோட புதிய குரு. முகாமையாளர் பயிற்சி நெறிக்கான என்னுடைய குரு (ஆனால் அவர் கட்டணம் அறவிடுவதில்லை) அவ்வப்போது அவர் சொல்லித்தருகிற நல்ல விஷயங்களை எனது நாட்குறிப்பு பதிவு செய்யும்;. எப்பவுமே பைபிளோடு நான் பார்க்கிற அருந்ததி அக்கா, வெற்றியின் ஒழுங்கமைப்பாளர் இலங்கையில் தனியார் வானொலியின் ஆரம்பம் முதல் இன்று வரை பல நட்சத்திரங்களை பார்த்தவர் இவரிடமிருந்து நான் பெற வேண்டிய அனுபவ அறிவு ஏராளம். இப்படி இன்னும் ஏராளமாக சொல்லலாம் அதுக்குள்ள பல வருஷங்கள் ஓடிடும் அப்போ நான் எப்ப நல்லவனாகிறது? இல்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க..
பதவியும் பணமும் இல்லாத போது இருந்த சந்தோஷம் இப்ப என்கிட்ட இல்ல. பணமும் பதவியும் நிரந்தரமில்;லை என்பதை தற்போதைய உலக பொருளாதாரமும் அரசியலும் உறுதிப்படுத்துவதாக அண்மையில் 16வது பாப்பரசர் சொல்;லியிருந்தார். எளிமையாக வாழ்ந்த நபிகள் நாயகமும் புத்தரும் அதற்கு நல்ல உதாரணம். பணம் கொஞ்சம் அதிகமாக இருந்தா இன்னும் கொஞ்சம் சேர்க்கலாமே அப்படி ஒரு ஆசை. பதவி இருந்தா அடுத்தவர்களால தொல்லை. இது இரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கைய தேட கொஞ்சம் காலம் தேவை. அதுக்குள்ள நாலு பேர் தப்பா பேச மாட்டாங்களா?
5 வருட ஊடகத்துறை வாழ்விலும் சரி அதற்காக ஏங்கிய நாட்களிலும் சரி எத்தனையோ விதமான மனிதர்களை பார்த்துவிட்டேன்;. எங்க குடும்பத்துலயும் சரி பரம்பரையிலும் சரி ஊடகத்துறையில் யாரும் கால் பதித்ததில்ல. ஏன் அது பற்றி அறிந்ததும் இல்ல. எங்கப்பா புகையிரதத்தில பேப்பர் போட்டு உழைப்பை தெடங்கினவரு. அப்புறம் நான் எப்படி அறிவிப்பாளரானேன்னு கேட்கிறீங்களா? அம்மா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. பாடசாலையில் அவங்ககிட்ட படிக்க கிடைச்சது பெரும் பாக்கியம். இப்போ இலங்கை அரச தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், வெற்றி எப் எம் தனியார் வானொலியின் உதவி முகாமையாளராகவும் இருக்கேன். கொஞ்ச காலத்துக்கு முதல்ல இதெல்லாம் வெறும் இலட்சியக்கனவு எனக்கு. அத அடைய நான் எடுத்த 4 வருடங்கள் எதிர்பார்ப்புகளுடனும் ஏக்கத்துடனும் கழிந்ததால் நாட்கள் நகர்ந்ததே தெரியல. எனக்காக நான் வாழ்ந்தது தான் அதிகம் இந்த இடைப்பட்ட காலத்தில் கவலையாக இருந்த சில சந்தர்ப்பங்களில் சில நல்ல மனிதர்களின் நாலு வார்த்தை மனசுக்கு ஆறுதலாக இருக்கும். அண்மையில் கொஞ்சம் மனசுக்கு கவலையா இருந்தது அப்போ என்னோட மூத்த அதிகாரி ஒருவர் சொன்ன ஒரு விஷயம் நகைச்சுவையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது உங்களை மனதளவில் பாதிப்படைய செய்கிறவர்களை நகைச்சுவை பாத்திரங்களாகவும்; அவர்களுடைய செயல்களை இவ்வாண்டின் சிறந்த நகைச்சுவையாகவும் எடுத்துக்கொள்ளுங்கள் பிரச்சினையே வராது என்றார்.
இறுதியாக ஒரு விஷயம் நான் உங்களுக்கு சொல்லவில்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க.
உலகின் பணக்காரர் பில்கேட்ஸூம் சரி நாங்களும் சரி எதை கொண்டு போக போறோம். சூரியன் மேற்கில் உதிப்பதற்கு முன் எனக்கு நிறைய பொறுப்புகள் காத்திருக்கி;ன்றன ஏன்னா அதுக்கு பிறகு பிரார்த்தனைகளை என்னுடைய இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
இப்ப சொல்லுங்க உங்களுக்கு தெரியுமா யார் அந்த நாலு பேர்?ஒரு வேளை நாத்தம் புடிச்ச நம்ம உடலை சுமந்து போக போற அந்த நாலு பேரா இருக்குமோ!!!!!
6 COMMENTS:
Nall Vishayam....Ulagin No1 Panakkarar ippa "Warren Buffet" Thaane...NANBAN
//இப்ப சொல்லுங்க உங்களுக்கு தெரியுமா யார் அந்த நாலு பேர்?ஒரு வேளை நாத்தம் புடிச்ச நம்ம உடலை சுமந்து போக போற அந்த நாலு பேரா இருக்குமோ!!!!! //
:)
நல்ல பதிவு!
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
அதை கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
enga ithule naane vare illeye????????
அண்ணா கவனம் நாலு பேர் பாத்திட்டு நாலு விதமாக பேசப்போறாங்க....
எங்கேயோ படித்தது:
நாலு பேருக்கு நன்றி...
நாலு பேருக்காக உழைக்க ஆரம்பித்தேன்(பெற்றோர் உடன்பிறந்தோர்)
நாலுபேருக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்(மனைவி, மக்கள்)
நாலு பேர் மதிக்கவேண்டும் என்று ஒழுக்கத்துடன் வாழ்கிறேன்.
நாலு பேர் பாரட்டவேண்டும் என்று அக்கரையோடு வேலை செய்கிறேன்
நாலு பேரிடம் கடன் வாங்கக்கூடாது என்று சேமித்து வைக்கிறேன்.
நாலு பேர் முன் சுயமரியதையோடு வாழ வேண்டும் என்பதற்காக அதிகமாக சிந்திக்கிறேன்
நாலு பேருக்காக தவறு செய்ய அஞ்சுகிறேன்
நாலு பேருக்காக நல்லது செய்கிறேன்
நாலு பேருக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாலு பேருக்காக மது அருந்துவதையும் புகைப்பிடிப்பதையும் தவிர்த்துக் கொள்கிறேன்.
நாலு பேர் பின்னூட்டமிடுவதால் எழுதுகிறேன்.
“+”போடும் நாலு பேரால் நான் ஊக்கம் அடைகிறேன்
“-”போடும் நாலு பேரால் என்னைத் திருத்திக் கொள்கிறேன்
நாலு பேர் என்னை கவனிக்கும் போதுதான் என்னை நான் சரி செய்து கொள்கிறேன்
நாலு கெட்டவர்களைப் பார்த்துதான் எப்படி வாழ்க்கூடாது என்று கற்றுக்கொண்ட நான்
நாலு நல்லவர்களை பார்த்துதான் எப்படி வாழ வேண்டும் என்றும் கற்றுக் கொண்டேன்
என்னைப் பொருத்தவரை நாலு பேர்தான் என்னை நேர்வழியில் அழைத்துச்செல்லும் வழிகாட்டி என்னுடய ஊக்கசக்தி, என்னை உயர்த்திவிடும் ஏனிப்படிகள், தூக்கிவிடும் கரங்கள்.
அந்த நாலு பேர் தான் இறுதியில் தூக்கிச்செல்பவர்கள்...
இப்போ கீழ போங்க...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
ஊரோடு ஒத்து வாழ் (அதே) நாலு பேர்
உலகம் இயங்குவது நாலு பேரால்.
நாலு பேர் தான், நேரங்கழித்து வரும் பெண் கெட்டு போகும் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்.
நாலு பேர் தான் ஒரு தெருவில் யார் யார்க்கு யாரோடு தொடர்பிருக்கும் என்கிற யூகங்களோடு சுற்றுகிறார்கள்.
நாலு பேர் தான் மஞ்சள் விளக்கு எரியும் போதே ஹாரன் அடித்து உங்களை விதிகளை மீறச் சொல்லுவார்கள்.
நாலு பேர் தான் குடிப்பது உலக மகா கெட்ட பழக்கமாக ஆக்கியிருக்கிறார்கள்.
நாலு பேருக்காக சிலர் தன் பெண் பருவமெய்தியதை ஊருக்கு சொல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சுற்றத்தினை அழைக்கிறார்கள்.
நாலு பேருக்காக கடனை வாங்கி சீர் செய்கிறான் பெண்ணைப் பெற்றவன். அந்த நாலு பேர் 51 ரூபாய் மொய் எழுதிவிட்டு ரசத்துல உப்பில்லை என்று எழுந்து போவார்கள். இல்லை மாப்பிள்ளை வீட்டு முறை சரியில்லை என்று முரண்டு பிடிப்பார்கள்.
நாலு பேர் தான் எந்த நடிகை எந்த நடிகரோடு, தயாரிப்பாளாரோடு படுத்தாள் என்று புறம் பேசுவார்கள்.
நாலு பேர் தங்களின் ஆளுமைகளையும், சுகத்தினையும் கணக்கிலெடுத்து கலாச்சார அரசியல் பேசுவார்கள்.
நாலு பேர் தான் யாராவது புதிதாக தொழில் தொடங்கினால், நஷ்டமாகும் என்று பயமுறுத்துகிறார்கள்.
நாலு பேர் உங்களை காரில் வர உசுப்பிவிட்டு, கடன் கட்ட முடியாமல் போனால், இகழுவார்கள்.
பெண்களுக்கான கலாச்சார ஆடை புடவைதான் என்று சொல்லும் நாலு பேரின் கண்கள் வஞ்சகத்தோடு இடுப்பிலும், புட்டத்திலும், மார்பிலும் தங்கும்.
நாலு பேர் தான் ஒருத்தனும் சரியில்லை என்று சொல்லிக் கொண்டே தன் அலுவலக A4 தாள்களை வீட்டுக்கு தள்ளிக் கொண்டு வந்து கணக்கெழுதுவார்கள்.
நாலு பேர் தான் வாழும்போது ஒன்றும் செய்யாமல் செத்த பின் அவரை மாதிரி ஒரு தங்கமான மனுஷனைப் பார்க்க முடியாது என்று விவாதிப்பார்கள்.
நாலு பேர் தான் புதிதாக எதை செய்தாலும் அது சரி வராது என்று முதலில் ததாஸ்து-வாக ஆசிர்வதிப்பார்கள்.
நாலு பேர் தான் மனிதனை நினை என்று சொல்பவர்களை நாத்திகர்களாக ஒதுக்கி வைத்து விட்டு, கடவுளோடு கமிஷன் பேரத்தில் இறங்குவார்கள். நாலு பேருக்கு தான் ஒரு பெண் ஆண்குறி எழுதிவிட்டால் கலாச்சார பேதி வந்துவிடும்.
இந்த நாலு பேரின் சாயங்களை பொது கழிப்பிடங்களில் நீங்கள் என்றைக்காவது காண நேரிடும்.
நாலு பேர்கள் தான் மனிதர்களை அவரவரகளின் மத,இன,பாலியல், மொழி, ஜாதி சான்றிதழ்களோடு பார்த்து பேசுவார்கள்.
ஆகவே சனங்களே...
ஊரோடு ஒத்து வாழ நீங்களும் நாலு பேரில் ஒருவர் ஆகுங்கள். மெஜாரிட்டி எது சொன்னாலும் அது தானே சரி. பூமி உருண்டை என்று சொன்ன கலிலீயோ ஒரு முட்டாள். அவன் நாலு பேரின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கிறான். தாமஸ் ப்ரீட்மேனே world is flat என்று சொன்ன பிறகு உலகத்தினை தட்டையாக்கும் டெண்டரினை யாருக்காவது விடலாம். அது சரி, தயாராகுங்கள். நீங்களும் அந்த நாலு பேரில் ஒருவராக?
கருத்துரையிடுக