பாலை வனத்து நாட்கள்.

18:27 Hisham Mohamed - هشام 0 Comments


இந்த பாலை வனத்தில் சோலை தேடி, எனக்காக பேசுகிறது என் வலைப்பூ.

நான் நிற்கும் இந் பாலைவனத்தில் நண்பர்களைப்போல நிறைய மரங்கள்ஆனால்
அவை நிழல் தருவதில்லை.
கொஞ்சம் சாய்ந்து பெருமூச்சு விட அவை இடம்
தருவதுமில்லை. வஞ்சக எண்ணம் கொண்ட அவற்றின் உடம்பெல்லாம் முட்கள்.

இங்கு நட்பு என்று நான் பல தடவை ஏமாந்துப்போய் கானல் நீரை அருந்தியதும்
உண்டு. நானே விரும்பி வந்த சுற்றுலா வெறுத்தொதிக்கி போக முடியாதுபோகவும்
மாட்டேன். முழுமையாக இதை அனுபவிக்கப்போகிறேன்.

நட்பு எனும் புனிதத்தை இனியும் இந்த பாலைவனத்திற்கு கொடுக்க எனக்கு
மனசாட்சி இல்லை.

நல்ல பசுமையான நண்பர்களின் நினைவுகள் இன்றும் என்னை விட்டுநீங்காததால்
இந்த கொடுமை என்னை ஆட்கொல்லப்போவதில்லை.

ராமசாமி அண்ணே அங்கே யாரோ நெருப்பு தேடி அலைகிறார்கள் கூப்பிடுங்கள் என்
கோபங்களை அள்ளித்தருகிறேன் ஒரு வேளை இந்த பாலை வனம்தீப்பிடித்தெரிந்தால்
அதற்கு நான் பொறுப்பில்லை.


பாலை வனத்து நாட்கள் தொடரும்....

0 COMMENTS: