ஆபத்தான ஆடுகளம்.

00:44 Hisham Mohamed - هشام 14 Comments

இன்று (27.12.2009) ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தொலைக்காட்சி ரசிகனாக மாறி ஏமாந்த கதை! ஒரு ஊடகவியலாளன் ரசிகனாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவன் நல்ல ஊடகவியலாளனாக வர முடியும். இன்று ஒரு நாள் முழுமையாக மாறிப்பார்த்தேன்.

ஒரு சில வேலைகள் மட்டுமே இருந்ததால் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 5ஆவது ஒரு நாள் போட்டியை ரசிக்கலாமென்று முதல் நாளே யோசித்திருந்தேன். வருடத்தின் கடைசி ஒரு நாள் போட்டி கைவிடப்படும்னு யார் நினைச்சா? நேந்து விட்ட ஆடு விஜய் படத்தை பார்க்க போற மாதிரி இப்போட்டி முடிவு தீர்மானிக்கப்பட் ஒன்று. ஏற்கனவே தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது இந்திய அணி. இருந்தாலும் ''அது போன வாரம்'' ன்னு வடிவேலு ஸ்டைல்ல எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்களேன்னு தைரியமா பாக்கலாம்னு உட்கார்ந்தால் முதலாவது பந்திலே போல்ட் செய்யப்பட்டார் தரங்க. டில்சான் ஜயசூரிய இருந்த நம்பிக்கையில் உறுதியாக அமர்ந்திருந்தேன். மிட் நைட் மசாலா சிக்கலுக்கு நான்காவது போட்டியில் துப்புக் கொடுத்த இருவரும் இந்த போட்டியிலும் சொதப்பிருவாங்களோன்னு ஒரு சந்தேகம் வேற. அதாங்க நான்காவது போட்டிக்கு முதல் நாள் அதிகாலை இரண்டு மணி வரை இரவு விடுதியில் ஆடிப்பாடிவிட்டு வந்ததா சொன்னாங்களே. அந்த படங்கள் வலையுலகில் வட்டமடிப்பதாய் அறிந்தேன்(ஆர்வமுள்ளவங்க தேடிப்பாருங்க).

கூப்பிட்டு அடிக்கிறீங்களே நியாயமா?

தில்சான் சனத் இருவரும் சந்திந்த பந்துகள் வழக்கத்துக்கு மாறாக இருந்தன. இருவரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் காயமில்லாமல் பந்து உடம்பில் பட்டு வேதனை கண்டது வருத்தம் தந்தது.

ஐயோ அம்மா இனி இந்த பக்கமே வரமாட்டேன்டா சாமி!

இலங்கை அணியின் விக்கட்டுக்கள் அடுத்தடுத்து சரியத் தொடங்கியது. 5 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தது இலங்கை அணி. அப்போது தான் ஆடுகளம் தன் நிஜ ரூபத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பந்துக்கு முகம்கொடுப்பதில் சிரமப்பட்டதை தொடக்கத்தில் அவாதானிக்கக் கூடியதாய் இருந்தது. ஆடுகளத்தில் பதிகிற பந்து வழக்கமாக மேலெழும்பும் அளவை விட உயரமாக வந்ததால் 23ஆவது ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது. க்ளைமெக்ஸில் போட்டி நடுவர்கள், வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் எல்லாருமா கூடி என்னோட ஞாயிற்று கிழமை உல்லாசத்துக்கு கும்மியடிச்சிட்டாங்கப்பு. கொல்டா ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு ஆபாத்தானதாக கருதி போட்டி கைவிடப்பட்டது.


இந்தியா தோத்துப்போனா வீரர்கள் வீட்டுக்குத்தான் கல்லடிப்போம் இப்பதான் மைதானத்துக்கு அடிக்கிறோம். ஐ ஜாலி!

கொல்டா மைதானம் மோசமான ஆடுகளம் என்று பல முறை விமர்சனத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1997ம் ஆண்டு ஏற்கனவே ஒரு போட்டி கைவிடப்பட்டிருந்தது. கடந்த ஒக்டோபரில் நடந்த செம்பியன்ஸ் லீக் போட்டியின் போதும் கவுதம் கம்பீர் இம்மைதானத்தை விமர்சித்திருந்தார்.

இந்த லட்சனத்துல 2011 உலகக்கிண்ண போட்டி இங்கும் நடக்குமாம். அடுத்த சர்வதேச போட்டித் தொடர்களுக்கு முன் இந்திய கிரிக்கட் சபை மைதான ஓழுங்கமைப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தினால் நல்லது இல்லைன்னா திடீர்ன்னு கரன்ட் கட்டாகிடும்.

+++++

தொலைக்காட்சியில் அலைவரிசை மாற்றிக்கொண்டிருந்தேன். திடீர்னு பாத்தா ஏதோ வாக்கு வாதம் நடந்துகிட்டிருக்கு. ரிமோட் கொன்ரோலை உட்கார வைச்சிட்டு வேடிக்கை பார்த்தேன். (எங்க வீட்ல கேபிள் TV கிடையாது)


நட்சத்திர பாடகர் தெரிவாம். ஒருத்தர் பாடுறாரு அப்புறம் நிகழ்ச்சி நடத்துறவரு நடுவர் கிட்ட கேள்வி கேட்குறாரு அதுவும் எடக்கு முடக்கான கேள்வி. குறித்த ரெண்டு பேருல யாரு தெரிவாகுவாங்க? sms முடிவு வேற மாதிரி சொல்லுதே. அதுக்கு அந்த நடுவர் சொன்ன பதில் sms ஐ வைத்து முடிவு பன்றதா இருந்தா நடுவர்கள் எதற்கு?
நியாயமான கேள்வி. பாட்டு பாடுற நடுவர் ஐயா உங்க பதிலுக்கு பிறகு தானே புரிஞ்சது உங்க ட்ராமா.(இந்த படத்த ஏற்கனவே நாங்க பாத்துட்டோம்ல) ஓரிரு வாரத்துக்கு முதல்ல சிங்கள அலைவரிசை பாட்டு போட்டியிலயும் இதே மாதிரி ஒரு வாக்குவாதம் அந்த நடுவர் சொன்னதும் இதே பதில்தான் தொகுப்பாளர் கேட்டதும் இதே கேள்விதான். (ரீமேக்கா இருக்கும் போல)
வருந்தத்தக்க அணுகு முறை.
இப்படித்தான் பர்வையாளர்களை அதிகரிக்கனுமா? போட்டியாளர்களும் நடிகர்களா இருக்க மாட்டாங்களான்னு என்ன உறுதி?
முடிவு தீர்மானிக்கப்பட்ட ஒரு போட்டியா இருக்க வாய்ப்பில்லையா? sms அனுப்புகிறவர்கள் முட்டாள்களா?
நடுவர்களாக வந்தவர்கள் இலங்கை பாடகர்களா அல்லது நடிகர்களா? (நடிக்க வந்த பாடகர்களா, பாட வந்த நடிகர்களா? குழப்பமா இருந்தா விட்டுறுங்க)
இதுவும் ரொம்ப ஆபத்தான ஆடுகளம் இல்லையா?

ஏற்கனவே இந்த மாதிரியான நாடகத்தை தமிழகத்தின் அலைவரிசைகள் அரங்கேற்றி மூக்குடைந்த கதை உலகறிந்த விடயம். ஒரு அலைவரிசை சிம்ரனையும் இன்னுமொரு அலைவரிசை சிம்புவையும் வாடகைக்கு அமாத்தியது எங்களுக்கு தெரியாதா. தயவுசெய்து தொலைக்காட்சி ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். சந்தையை பிடிக்க இதைவிட பல நல்ல வழிகள் இருக்கின்றன.

இருந்தாலும் இலாப நோக்கத்திற்காக சந்தையை முறை தவறி கையாளும் பலரும் நம் மத்தியில் இருக்கிறம்.

14 COMMENTS:

வேட்டைக்காரன் சொதப்பினால்?

00:33 Hisham Mohamed - هشام 10 Commentsஅழகிய தமிழ் மகன், குருவி, வில்லு மூன்று டப்பா படங்களுக்கு பிறகு இளைய தளபதி தருகிற 49வது படம் வேட்டைக்காரன். விட்ட தவறுகளை திருத்தி தன்னை நிலை நிறுத்திக்கொள்வாரா இல்லை அரைத்த மாவையே திரும்ப அரைத்து வெறுப்பை சம்பாதித்துக்கொள்வாரா. அரைச்சதத்தை பூர்த்தி செய்யப்போறவர் தோனி ஸ்டைலில் சிக்ஸ்சரோடு பூர்த்தி செய்தால் தான் பார்க்க நல்லா இருக்கும். வேட்டைக்காரனின் வெற்றி தோல்வி விஜயின் திரைத்துறையை மாத்திரமன்றி பலரையும் பாதிக்கும்னு நான் நினைக்கிறேன்.

என்னதான் ரீமேக்கோ அல்லது சும்மாவோ வந்த படங்களின் பெயரை திரும்ப வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை சின்ன ஒரு உதாரணம் வேட்டைக்காரன் இது MGR நடித்து வெளியான ஒரு சூப்பர் ஹிட் படம் இணையத்தில் இந்தப்படம் தொடர்பனா தகவல் தேடுபவர்கள் சிரமப்படுவார்கள். வேட்டைக்காரன் என்று டைப் செய்து ஏதாவது ஒரு தேடு பொறியில் தேடிப்பாருங்க இளைய தளபதியின் வேட்டைக்காரன் தான் முதல் 10 பக்கங்களில் வந்து நிற்கும். அதை விட வருகிற சந்ததிக்கு பழைய படம் ஞாபகத்திற்கு வராது.
எங்கேயோ ஒரு கிராமத்துல இருந்து டவுனுக்கு வாறீங்களாம் வந்தவரு பொளப்ப பார்க்காம சமூகத்துல நடக்கிற அநியாயத்தை தட்டி கேட்கிறீங்களாம். அது மட்டுமில்ல ஒரு ஆட்டோ சாரதியா வேற வாறீங்கன்னு இப்பவே நக்கலடிக்கிறாரு ராமசாமி அண்ணே. இந்த கதையை கேட்டா ரெண்டே வாரத்துல ஜெம்ஸ் கெமரூனின் அவதார் அள்ளிரும் போல இருக்கே.

தன் குரு நாதர் தரணி, குருவி படத்தில் பறக்கவிட்ட தளபதியின் புகழை கட்டிக்காக்க வந்த சிஷ்யன் இயக்குனர் பாபு சிவனுக்கு(குருவி - உதவி இயக்குனர்) இது முதல் படம். சொதப்பினால் அடுத்த படத்துக்கு ஐயா! அம்மா!
ரெண்டு படத்தில் தமிழில் அறிமுகமான அனுஸ்கா விஜய்யுடன் நடிக்கும் முதல் படம் சொதப்பினால் அருந்ததியில் கிடைத்த பெயரும் அம்போ!

40 கோடி இந்திய ரூபாய் செலவாம் அடப்பாவமே இந்தப்படத்துக்கு இவ்வளவான்னு கேட்க மாட்டேன். ம்ம்ஹ் நம்ம மஹிந்த ராஜபக்சவிற்கு கொடுத்திருந்தா போஸ்டர் ஒட்டியே முடிச்சிருப்பார்.தயாரிப்பளர்கள் பாலசுப்ரமணியமும் குருநாத்தும் வேட்டைக்காரன் புட்டுகிட்டாலும் சூப்பர்னுதான் சொல்லுவாங்க ஏன்னா முற்கூட்டியே படத்தை சன் பிக்சர்ஸ்க்கு வித்துட்டாங்களே. சொதப்பினால் சன் பிக்சர்ஸ் நிலமை வழமையைவிட(வழக்கமா இவங்க டப்பா படத்துக்கும் டெரராதான் கூப்பிடுவாங்க) அம்மா பாருங்க ஐயா பாருங்க! தம்பி பாருங்கன்னு கால பிடிக்காத குறையாதான் இருக்கும்.
விஜய் அன்ரனி புண்ணியத்துல கொஞ்சம் ஓடும்னு எதிர்பார்க்கிற நேரத்துல சின்னத்தாமரை பாடல் காட்சியில் வந்து பயமுறுத்துறாரே தளபதி. படம் வர முதல்ல இவ்வளவு சொல்லக்கூடாது இருந்தாலும் சொதப்பினால் பாவம் சதீஸ் இன்னும் நம்பிக்கிட்டிருக்கான்.

ஏற்கனவே பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதியவர்கள் நாளை ஊகம் சரியான சந்தோசத்தில் மிதக்கப்போகிறார்கள். படம் ஊத்திகிச்சின்னா அதை கொண்டாட காக்கா பிர்யானி வாங்கி கொடுப்பாங்க முக்கியமா நம்ம லோஷன் அண்ணா 5ருபாய்க்கும் ஆயிரம் தடவை யோசிப்பாரு இருந்தாலும் கவலையே இல்லாம யோகட் வாங்கி கொடுப்பாரு.

விஜய் அண்ணே இம்புட்டு மேட்டர் இருக்கு கவுத்துடாதீங்கோ! வேட்டைக்காரன் சொதப்பினால் சுறாவுக்கு கூட்டம் வராது.

10 COMMENTS:

இருக்கிறம் - அசிங்கம்

13:39 Hisham Mohamed - هشام 18 Comments

பசியில் தவிக்கும் மாடு உணவில்லாமல் போஸ்டர் சாப்பிடும் கதையாகிவிட்டது இருக்கிறம் சஞ்சிகை.

இருக்கிறம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்! 

01-15-12-2009 இதழில் 50ம் பக்கம் வந்திருக்கும் ''ஊடக மயக்கம்'' கட்டுரை இருக்கிறம் சஞ்சிகையின் நிலையை காட்டியிருக்கிறது. யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்தார் என்பதற்காக (உங்கள் சஞ்சிகையில் இருக்கும் ஒலி ஒனி ஊடகவியலாளர்கள் அப்படி இருக்கலாம்) ஒட்டுமொத்த இலத்திரனியல் ஊடகத்துறையும் இப்படித்தான் இருக்கும் என்று பிரசுரிக்க நீங்கள் யார்? 
தூசனத்தில் எழுதிக்கொடுத்தாலும் பிரசுரிப்பீர்களா? இருக்கிறமின் கீழ்த்தரமான விற்பனை தந்திரம் இது.

வரலாற்று தவறுகளை சுட்டிக்காட்டும் அளவுக்கு எழுதியவரது அனுபவம் கேள்விக்குறியானது.
எழுதியவர் அப்படி இருந்ததற்காய் ஒட்டு மொத்த ஒலி ஒளி ஊடகத்தையும் குறி வைத்து சுடுவது பயிற்சியில்லாமல் துப்பாக்கி தொடுகிற ஒருவரின் நிலையை காட்டுகிறது. 

சம்பாத்தியம் அதிகம் இல்லாவிட்டாலும், அற்ப சொற்ப சம்பாத்தியங்களுக்காக வேண்டாத வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் 

யார் செய்கிறார்கள்? பெயர் குறிப்பிட்டு சொல்லுங்கள்.

இப்போது மழைபெய்யாததற்கு இதுகூட காரணமாம் நீங்கள் வானிலை அவதான நிலையத்தில் வேலை பார்க்க வேண்டிய ஒருவர்.

அத்தனை அசிங்கங்கள். அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர்கள் புரியும் மாய லீலைகள், மந்திரங்கள், தந்திரங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

எங்கே நடக்கிறது அதையும் சொல்லியிருக்கலாமே. எழுதி கொடுங்கள் அதையும் பிரசுரிப்பார்கள்.

மீன் மலிந்தால் சந்தைக்கு வருமே அதுபோலவாம் தற்போதைய அறிவிப்பாளர்கள் 

மலிந்து சந்தைக்கு வந்தது உங்கள் சஞ்சிகையில் வந்திருக்கும் குப்பைகள்தான். இலவச இணைப்பாய் தமன்னாவை காட்டிதான் உங்கள் சஞ்சிகை விற்பனையாகிறது. 

வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்கும் இந்தத் தொழில் தேவைதானா?

தேவைதான். எனக்கு தேவை அத்தனை வினாடிகளும் எனக்கும் திறமையுள்ள ஊடகவியலாளர்களுக்கும் முக்கியமானவை.


ஆடத்தெரியாத ஒருவரின் கவலையை அரங்கேற்றிய சஞ்சிகைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.  திறமையுள்ளவர்கள் எங்கும் நிலைத்து நிற்பார்கள். 


சக பதிவர் லோஷனின் பதிவு


18 COMMENTS: