அமெரிக்கத் தீவிரவாதம்... இதுவரை அமெரிக்கா புரிந்த அநியாயங்கள் புகைப்பட ஆதாரத்துடன்

உலகில் தீவிரவாதிகளை பட்டியலிடும் அமெரிக்கா தன்னையும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளாதது ஏன்?
இந்த பதிவை படித்த பிறகு கீழே நான் குறிப்பிட்டுள்ள தளத்தை சொடுக்கி உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.
எதற்கெடுத்தாலும் தீவிரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்கா முயற்சிக்கின்றது என்றதொரு கூப்பாட்டை அது போடுவதுண்டு. அதில் எள்ளளவேனும் உண்மை இருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்கத் தீவிரவாதத்திற்கு கோடிக்கணக்கான மக்கள் பலியிடப்பட்டுள்ளார்கள். இதில் குழந்தைகள் தாய்மார் என பேதமின்றி நேட்டோ படைகளால் கொல்லப்பட்டுவருவது அமெரிக்க தீவிரவாதிக்கு கால் கழுவும் சவுதியின் (மாங்கா)மன்னர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பதிவை நீங்கள் வாசிக்கும் இந்த நொடி கூட மத்திய கிழக்கின் அப்பாவி உயிர்கள் எத்தனையோ பலியெடுக்கப்படுகின்றன.
அதன் விபரம் நான் அறிந்த மட்டில்.
பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த 1945 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 200 இற்கும் மேற்பட்ட தடவை வெளிநாட்டு விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 1945 முதல் தன்னுடைய சுயநலத்திற்காக 20 நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்துள்ளது. அவையாவன :
கிரீஸ் (1947-49), இத்தாலி (1948), கொரியா (1950-53), ஈரான்(1953), குவாட்டிமாலா (1954), காங்கோ (1960), கியூபா(1961), வியட்நாம் (1961-75), லாவோஸ் (1961-75), டொமினியன் ரிபப்ளிக் (1965), கம்போடியா (1969-71), சிலி (1973), கிரனெடா (1983), லெபனான் (இரண்டு முறை: 1958 மற்றும் 1983), லிபியா (1986), பனாமா (1989), ஈரான் (3 தடவை: 1991, 1993, 1998-99), சோமாலியா (1991-92), ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் (1998), மற்றும் செர்பியா (1999).
கடந்த நூற்றாண்டில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பிரச்னைகளில் 100க்கு மேல் தலையிட்டு, தன்னுடைய அதிகாரத் திணிப்பை அங்கு நடத்தியுள்ளது.
1890 ல் 300 லாகோடாஸ் மக்களை கொன்று குவித்தது முதல், தன்னுடைய கரத்தை எப்பொழுதும் அமெரிக்கா இரத்தம் தோய்ந்ததாகவே வைத்திருக்கின்றது.
அர்ஜென்டினா 1890 - வியாபார நோக்கம்
சிலி 1891 - தேசியவாதப் படையுடன் மோதல்
ஹைட்டி- 1891 நவஸா என்ற தீவு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு. அங்கு நடந்த கலவரத்தை ஒடுக்க, ஹவாய் - 1893 தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதற்கு அமெரிக்க நேவியைப் பயன்படுத்தியது.
நிகாராகுவா-1894
சீனா 1894-95
கொரியா - 1894-96
பனாமா - 1895
சீனா - 1894-1900
பிலிப்பைன்ஸ் - 1893-1902 - 600,000 பிலிப்பைன் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
கியூபா - 1898-1902
போர்ட்டோரிகோ - 1898
நிகாராகுவா - 1898
சகோவா - 1899
பனாமா - 1901-14
ஹோன்டுராஸ் - 1903
டொமினியன் ரிபப்ளிக் - 1903-04
கொரியா 1904-05
கியூபா - 1906-09
நிகராகுவா - 1907
ஹோன்டுராஸ் - 1911
சீனா - 1911-41
கியூபா - 1912
ஹோன்டுராஸ் -1912
நிகராகுவா - 1912-33
மெக்ஸிகோ - 1913
டொமினியன் ரிபப்ளிக் - 1914
மெக்ஸிகோ 1914-18
ஹைட்டி 1914-34
டொமினியன் ரிபப்ளிக் - 1916-24
கியூபா - 1917-33
முதலாம் ஊலகப் போர் - 1917-18
ரஷ்யா 1918-22
ஹொண்டுராஸ் 1919
குவாட்டிமாலா 1920
துருக்கி 1922
சீனா 1922-27
ஹோண்டுராஸ் 1924-25
பனாமா – 1925
சீனா 1927-34
எல் சால்வடார் 1932
இரண்டாம் உலகப் போர் 1941-45
யூகோஸ்லேவியா 1946
உருகுவே 1947
கிரீஸ் 1947-49
ஜெர்மனி 1948, 444 நாட்கள் ஜெர்மனி மீது விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்து.
பிலிப்பைன்ஸ் 1948-54
போர்ட்டோ ரிகோ 1950
கொரியன் போர் 1951-53
ஈரான் 1953, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மொஸ்ஸெடெக் என்பவரை பதவி நீக்கம் செய்து விட்டு, தன்னுடைய அடிவருடி மன்னரை ஆட்சி பீடத்தில் ஏற்றி வைப்பதற்குப் பின்னணியாக அமெரிக்க உளவுத் துறை சிஐஏ செயல்பட்டது. இவர்கள் தான் ஜனநாயகக் காவலர்கள் வேஷம் போடுபவர்கள்.
வியட்நாம் 1954
கொடமாலா 1954
எகிப்து 1956
லெபனான் 1958
பனாமா 1958
வியட்நாம் 1950 மற்றும் 1975 வியட்நாம் போர்
கியூபா 1961 கேஸ்ட்ரோ அரசைக் கவிழ்ப்பதில் சிஐஏ தோல்வி கண்டது
கியூபா - 1962
லாவோஸ் 1962
பனாமா - 1964
இந்தோனேஷியா - 1965 (ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க ராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியது அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ.
டோமினியன் ரிபப்ளிக் - 1965-66
குவாட்டிமாலா 0 1966-67
கும்போடியா - 1969-75 வியட்நாம் போரை விரிவுபடுத்த, கம்போடியாவிற்குள் அமெரிக்கப் படைகளை அனுப்பியது.
ஓமன் - 1970 ஈரானுக்குள் நுழைவதற்கு ஓமன் நாட்டைப் பயன்படுத்தியது
லூவோஸ் - 1971-75
சிலி - 1973 ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அல்லின்டே அவர்களைக் கொலை செய்து விட்டு, பினோசெட் தலைமையில் இராணுவ ஆட்சி அமைவதற்கு, அமெரிக்காவின் சிஐஏ ஒத்துழைப்பு வழங்கியது.
கும்போடியா 1975
ஆங்கோலா - 1976-92 தென்ஆப்ரிக்க கலகக்காரர்களுக்கு உதவி செய்து அங்கோலாவின் மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்டுகளுக்கு எதிரான யுத்தத்திற்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ உதவி செய்தது.
ஈரான் 1980
லிபியா 1981 அமெரிக்கப் போர் விமானங்கள் லிபியாவின் இரண்டு போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தின
எல்சால்வடார் 1981-92 எல்சால்வடார் போரில் குஆடுN க்கு எதிராக ஆலொசனைகளை சிஐஏ வழங்கியது.
நீகராகுவா 1981-90
லேபனான் 1982-84 லெபனானின் உள்நாட்டுப் போரின் பொழுது, அமெரிக்க ராணுவம் தலைநகர் பெய்ரூத்தைக் கைப்பற்றியது. ஆமெரிக்க இராணுவத்தின் தங்குமிடத்தில் போராளிகள் தாக்கி 241 அமெரிக்க ராணுவ வீரர்கள் மாண்டனர்.
ஹோண்டுராஸ் 1983-84
கிரனெடா 1983-84 கிரனடாவின் மாரிஸ் பிஸப் அரசைத் தூக்கி எறிய அமெரிக்க ராணுவம் அனுப்பப்பட்டது
ஈரான் - 1984 பெர்ஸியன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த இரண்டு ஈரானின் போர் விமானங்களை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
லிபியா - 1986 லிபியாவின் தலைநகர் திரிப்போலியை அமெரிக்க ராணுவ விமானங்கள் தாக்கி அழித்தன.
போலிவியா - 1986
ஈரான் 1987-88 ஈரான் - ஈராக் போரில் ஈராக்கிற்கு சார்பாக அமெரிக்கா போரில் குதித்தது.
லிபியா - 1989 மேலும் இரண்டு லிபியப் போர் விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது
சர்ஜின் தீவுகள் - 1989
பிலிப்பைன்ஸ் 1989
புனாமா 1989-90 பனாமாவின் நோரிகா அரசைத் தூக்கி எறிவதற்காக 27 ஆயிரம் அமெரிக்கத் துரப்புகளை அமெரிக்க இராணுவம் அனுப்பியது. இதில் 2000 பனமா நாட்டு மக்கள் கொல்லப்பட்டனர்.
ஐலபீரியா 1990
சேளதி அரேபியா 1990-91 ஈராக்கிற்கு எதிராக நடந்த போரில் அமெரிக்கப் படைத்தளமாக சவுதி அரேபியா பயன்படுத்தப்பட்டது.
குவைத் - 1991 ஈராக் அதிபர் சதாம் உசேனைக் கவிழ்ப்பதற்காக குவைத்திற்கு அமெரிக்கப்படைகள் அனுப்பப்பட்டன.
சோமாலியா – 1992-94 சோமாலியாவின் உள்நாட்டுப் போரின் பொழுது, சோமாலியாவை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமித்தன.
போஸ்னியா 1993-95 யூகோஸ்லேவியாவின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதல் தொடுத்தன.
ஹெய்ட்டி 1994-96
ஆல்பேனியா – 1997
சூடான் 1998 சூடானின் மருந்து உற்பத்தித் தொழிற்சாலையை அமெரிக்க ஏவகணைகள் தாக்கி அழித்தன.
ஆப்கானிஸ்தான் - 1998 ஆப்கானில் உள்ள போராளிகளின் பயிற்சித் தளத்தை அமெரிக்க ஏவகணைகள் தாக்கி அழித்தன.
ஈராக் 1998-99 பாக்தாத் மற்றும் பெரிய நகரங்களின் மீது அமெரிக்க விமானத் தாக்குதல்நடைபெற்றது
யூகோஸ்லேவியா 1999 மொல்ஸ்விக்கிற்கு எதிராக நாட்டோ படைகளுடன் இணைந்து அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இவற்றைத் தவிர்த்து இன்னும் 100க்கும் அதிகமான அமெரிக்காவின் அந்நியத் தலையீடுகளை நான் இங்கு குறிப்பிடவில்லை.
இரண்டாம் உலகப் போரிலிருந்து, இது வரை 23 நாடுகளின் மீது ஏவகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்துள்ளது.
சீனா 1945-46, கொரியா 1950-53, சீனா 1950-53, குவாடிமாலா 1954, இந்தோனேஷியா 1958, கியூபா 1959-60, குவாடிமாலா 1960, காங்கோ 1964, பெரு 1965, லாவோஸ் 1964-73, வியட்நாம் 1961-73, கம்போடியா 1969-70, குவாடிமாலா 1967-69, கிரேனடா 1983, லெபனான் 1984, லிபியா 1986, எல்சால்வடார் 1980, நிகராகுவா 1980, பனாமா 1989, ஈராக் 1991-இன்று வரை, சூடான் 1998, ஆப்கானிஸ்தான் 1998, யூகோஸ்லேவியா 1999.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் தனக்கு சாதமாக உள்ள தலைவர்களை நியமிப்பதற்காக வேண்டி, 20 நாட்டு தலைவர்களை அதிரடி நடவடிக்கை மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அகற்றி, தனக்கு சாதகமான தலைவர்களை நியமிக்க அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ பங்காற்றியது. இதில் 6 க்கும் அதிகமான நாட்டுத் தலைவர்களை இது கொலையும் செய்திருக்கின்றது.
தன்னுடைய முதாளித்துவ கொள்கையைத் திணிப்பதற்காகவும், தன்னுடைய மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளவுமே அமெரிக்கா இத்தகைய அந்நியத் தலையீடுகளை மேற்கொள்கின்றது. மற்ற நாடுகளாக இருந்தால், கம்யூனிஸத் தீவிரவாதிகள் என்று கூறி விடுவதும், முஸ்லிம் நாடுகளாக இருந்தால் அடிப்படைவாதிகள் தீவிரவாதிகள் என்றதொரு கதையைக் கட்டி விடுவதும், இந்தக் குற்றச்சாட்டுகளைப் பின்னணியாக வைத்து, தங்களது கபட நாடகத்தை அரங்கேற்றுவதும் தான், இந்த அமெரிக்காவின் வழக்கமாக இருந்து வருகின்றது. முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா செய்து வரும் அடாவடித்தனங்கள் அந்த நாடுகளில் ஜனநாயகத்தை மலர வைப்பதற்கான அதன் முயற்சி என்பதை விட, அந்த நாடுகளின் கனிம வளங்களின் மீது அது கொண்டிருக்கும் காதல் என்றே குறிப்பிடலாம்.

இந்த பதிவை சொடுக்கி அமெரிக்காவின் அராஜகத்தை புரிந்து கொள்ளுங்கள்.
மேலே நாம் பார்த்த அமெரிக்காவின் அந்நியத் தலையீடுகளில் இருந்து யார் உலகத் தீவிரவாதி என்பது, யாருக்கு எதிராக இந்த முழு மனித சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நன்றி - விக்கிபீடியா, பிபிசி, சிஎன்என்
22 COMMENTS:
Post a Comment