கியூபாவின் கண்ணீர் கனவுகள்.

23:06 Hisham Mohamed - هشام 6 Comments

::யாவும் கற்பனை::

கொஞ்(ச)சும் மழை, காது நோகாம ஒரு பாட்டு, நெடுந்தூரம் யாருமில்லை கால் நீட்டி வண்டி ஓட்டுற சுகம் இதை விட வேற என்ன வேணும் மது?. ஆஹா பிராமதம்! சோடா புட்டிக்கு ரசிக்கவும் தெரியுதுன்னு சொன்னாள் மது. லூசுத்தனமா எதச் சொன்னாலும் ஆஹா போட நீ இருக்கும் போது செவேரோ சாதூயை மிஞ்சிடுவேன் பாரேன்னு பதில் சொன்னான் ராகுல்.


செவேரோ கியூபாவின் பிரபல கவிஞர்களில் ஒருவர். ராகுலுக்கு ஆறு வயது இருக்கும் போதே அவன் பெற்றோர் கியூபாவின் சென் நிக்கலோஸில் குடியேறிவிட்டார்கள். இவன் அடிப்படை கல்வியை பெற்றது இங்குதான். ஸ்பெய்னின் காலநித்துவத்தில் கசங்கிப்போன சுவடுகளில் இருந்து மீளாத கியூபாவைப்போல அவன் ரசனைகளும் பழக்க வழக்கங்களும் வருடங்கள் 19 கடந்தும் மாறவில்லை.

தாயகத்தை இன்னும் அவனுக்கு ஞாபகப்படுத்த இருக்கும் ஒரே ஒரு சொத்து மது. கம்பியில்லாமல் காற்றில் வாகனத்தை செலுத்திக் கொண்டே கதை சொல்லும் ஒரு வழக்கம் ராகுலுக்கு கார் வாங்கிய பிறகு.

''ரெண்டு மூனு நாளா உன்ன மாதிரியேதான்'' என்று வாய் திறந்தவன் மூடுவதற்குள் ''என்ன என் மாதிரியான்னு?'' கேட்டு முடித்தாள் மது. ''ம்ஹ்ஹ்; அழுது கிட்டே இருக்கு வானம்'' எப்பவும் அவளை கிண்டலடிப்பதில் அவனுக்கு அப்படி ஒரு ப்ரியம்.

காலையில் எழுந்து கடன் தீர்த்து அலுவலகம் செல்வதும் மாலை வீடு திரும்புவதும் தவிர ராகுலுக்கு இருக்கும் ஒரே ஒரு தனிமை கில்லர் மது. அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான தூரம் 40 நிமிடங்கள். இந்த இடை வெளியில் அவன் கொட்டித்தீர்க்கும் வார்த்தைகள் ஏராளம்.

''எனக்கென்ன கவலை மது ஓபீஸ் - வீடு - ஓபீஸ் வீடுபோனால் என்னை காதலிக்க டீட் டீட் டீட் டீட '' தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் அழைத்தால் ஸ்பெனிஸ் மொழியில் ஒரு பெண் குரல்.

''நீங்கள் அழைத்த வாடிக்கையாளருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை''
தொடரும்....

6 COMMENTS:

யார் நாயகன்? கமல், மணி, ராஜா

00:11 Hisham Mohamed - هشام 10 Comments

ரொம்ப நாளைக்கு பிறகு ஏற்கனவே பலமுறை பார்த்த நாயகன் படத்தை மீண்டும் பார்த்து முடித்தேன். எல்லா படங்களையும் பல தடவை பார்க்க முடியாது ஆனால் சில படங்களை எத்தனை தடவை வேண்டுமானாலும் புதிதாய் பார்க்கலாம் (பாட்ஷா,முதல் மரியாதை, படையப்பா). அப்படியொரு படம் இது.

நாயகன் படத்த ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் புதுசா ஏதாவது தோணும். அந்த காலத்தில் மும்பை தாரவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் என்கிற ஒருவரின் உண்மைக் கதையாம் நாயகன் தெரிந்தவர்கள் சொன்னார்கள்


.
நாயகன் திரைப்படம் கமல் நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டிய படம் அல்லது மணிரத்னம், கமலுக்குள் இருந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படம் எப்படியும் சொல்லலாம்.

நாயகன் படத்தில் வாலிபனாகவும் முதுமை பருவத்திலுமான இரண்டு தோற்றத்திலும் நடிப்பிலும் சரி பொடி லெங்க்வேஜிலும் சரி வேலு நாயகராக வாழ்ந்திருக்கிறார் கமல்ஹாசன்.


கமல்ஹாசன், மணிரத்னம் இவர்களோடு சரிசமமாக நாயகன் படத்துக்கு பின்னணி இசையாலும் பாடல்களாலும் பங்களிப்பு செய்த இளையராஜா பாராட்டப்பட வேண்டியவர்.

டைம்ஸ் இதழின் சிறந்த 100 படங்களில் இடம் பிடித்த நாயகன் படத்தை இன்னுமொருமுறையும் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட ஒரு படத்தில் எப்படி ஒரு நாயகனை தேடுவது...

நான் ரசித்த சில காட்சிகள்

# பொலிஸ் அதிகாரி கமல் மீது தண்ணீரை பாய்ச்சும்போது தனி ஆளாக நிற்பது. பிறகு பொலிஸ்காரர் அடிக்கப்போறியான்னு கேட்கும் போது அதற்கு கமல் ''நான் அடிச்சா நீ செத்துருவ''ன்னு சொல்வது

# க்ளைமெக்ஸில் கமலின் பேரன் நீங்க நல்லவரா கெட்டவரான்னு கேட்பான் அதுக்கு ''தெரியலேயப்பா''ன்னு வேலு நாயக்கர் சொல்வார்.


வேலுநாயக்கரை சாரு கேள்வி கேட்கும் காட்சி# நீங்க யாரு எது தப்பு எது சரின்னு பார்த்து தண்டனை கொடுக்கன்னு மகள் கேட்க வாக்குறுதி கொடுத்துட்டேன்பாரு வேலுநாயக்கர்.

# தப்பில்ல, நாலு பேர் சாப்பிட ஒதவும்னா எதுவுமே தப்பில்ல..

# நிறுத்தவே மாட்டீங்களா? நிறுத்துறேன் அவங்கள நிறுத்தச்சொல் நான் நிறுத்துறேன்...........
நீங்க ரசித்ததையும் சொல்லுங்கோ.........

10 COMMENTS:

ஐயோ நானில்லை மழைத்துளி !

15:01 Hisham Mohamed - هشام 1 Commentsஞாயிறு மாலை ஜன்னலோரத்தில்

(கவிதை எழுத) தெரியாமல் ஒரு கவிதை எழுதுகிறேன்

மழையுடன் மப்பும் மந்தாரமுமாய் வானம்

என் வீட்டுச்சாலையோரம் எங்கும் ஒரே அமைதி

ரசிப்பதற்கு ஒன்றுமில்லை பஞ்சவர்ண குடைகளும் கூட

திரும்பும் போது ஒரு மழைத்துளி என் முகத்தில்

தேடினேன் எங்கிருந்து வந்ததென்று

ஆ! அங்கே ஒரு மின் கம்பம்

கம்பி நெடுவே தப்பிப் பிழைத்த சில துளிகளும்

தற்கொலை செய்து கொள்கின்றன

என்னை தேடி வந்த மழைத்துளி என்ன சொல்ல வந்தது?

நீ சொல்லாத ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நியாயமில்லாமல் காரணமில்லாமல் கனவுகள் ஆயிரம்

யாருக்கு தெரியும் யார் கண்பட்டதோ

இந்த நகரத்தில் இனி எனக்காக யார்

காதல் செய்ய யாருமில்லை

வலிகள் ன ந

க ந வாக்குறுதி

மௌனம்


தடுமாறிப்போனேன் மழைத்துளியா இது !


குறிப்பு :- மழைத்துளி எழுதியதால் காய்ந்து போயிருக்கும் தேட வேண்டாம்.

1 COMMENTS:

இது ஜிஹாதா? கோழைத்தனமா?

21:10 Hisham Mohamed - هشام 3 Comments


Fort Hood பாதுகாப்பு தளத்தில் ஹஸனின் துப்பாக்கி முனையில் 13 பேர் பலியான நிகழ்வு ஆட மேடை தேடியவனுக்கு வழி அமைத்து கொடுத்துவிட்டது.

அமெரிக்க பாதுகாப்பு தளங்களில் ஒன்றான Fort Hood இல் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரியும் நிடால் மலிக் ஹசன் சக பாதுகாப்பு அதிகாரிகள் மீது மேற்கொண்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு. கட்டியெழுப்பபடும் நல்லிணக்கப்பாடுகளை சீர்குலைக்கும் இன்னுமொரு செப்டம்பர் 11.

பாதுகாப்பு தளத்தில் நுழைந்த ஹசன் தான் சொந்தமாக வாங்கிய துப்பாக்கியில் சம்பவ தினம் மருத்து பரிசோதனைக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் வந்திருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது '' இறைவன் மிகப் பெரியவன்'' எனக் கோசமிட்டபடி வேட்டுக்களை தீர்த்தான். 13 பேர் தளத்தில் பலியானதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர். கண்மூடித்தனமான தாக்குதலை பலரும் இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது ஜிஹாத் என்று பெயர் வைத்து கருத்து சொல்வது வேதனைக்குரியது.

ஜிஹாத் என்றால் என்ன? நிராயுதபாணிகளையும் பெண்களையும் கொலை செய்வதா?

சமயத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்துவது சரியானதா?

இப்படி பல கேள்விகளும் வேதனைகளும் உள்ளே புதைந்து போய் கிடந்தாலும், உன் போனற மந்த புத்தியுள்ளவாகளால் அவை வெளிக்காட்டப்படும் விதம் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான வெறுப்புக்கு கதவு திறக்கிறது.

சம்பவத்திற்கு பிறகு ...

வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளின் போது பள்ளிகளுக்கருகில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள்...

உண்மையான முஸ்லிம் அமைப்புகளுக்கு ஈமெயில் மூலமாக மரண அச்சுறத்தல்களும் கசப்பான கடிதங்களும் குவிந்துள்ளன...

அமெரிக்க பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் 3572 முஸ்லிம்கள் எந்த கோணத்தில் நோக்கப்படுவார்கள்...

ஹசனின் துணிவு ஒரு கோழையின் செயல்.
அமெரிக்க முஸ்லிம்களின் வருங்காலம் இருளில்

3 COMMENTS: