யார் நாயகன்? கமல், மணி, ராஜா

00:11 Hisham Mohamed - هشام 10 Comments

ரொம்ப நாளைக்கு பிறகு ஏற்கனவே பலமுறை பார்த்த நாயகன் படத்தை மீண்டும் பார்த்து முடித்தேன். எல்லா படங்களையும் பல தடவை பார்க்க முடியாது ஆனால் சில படங்களை எத்தனை தடவை வேண்டுமானாலும் புதிதாய் பார்க்கலாம் (பாட்ஷா,முதல் மரியாதை, படையப்பா). அப்படியொரு படம் இது.

நாயகன் படத்த ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் புதுசா ஏதாவது தோணும். அந்த காலத்தில் மும்பை தாரவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் என்கிற ஒருவரின் உண்மைக் கதையாம் நாயகன் தெரிந்தவர்கள் சொன்னார்கள்


.
நாயகன் திரைப்படம் கமல் நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டிய படம் அல்லது மணிரத்னம், கமலுக்குள் இருந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படம் எப்படியும் சொல்லலாம்.

நாயகன் படத்தில் வாலிபனாகவும் முதுமை பருவத்திலுமான இரண்டு தோற்றத்திலும் நடிப்பிலும் சரி பொடி லெங்க்வேஜிலும் சரி வேலு நாயகராக வாழ்ந்திருக்கிறார் கமல்ஹாசன்.


கமல்ஹாசன், மணிரத்னம் இவர்களோடு சரிசமமாக நாயகன் படத்துக்கு பின்னணி இசையாலும் பாடல்களாலும் பங்களிப்பு செய்த இளையராஜா பாராட்டப்பட வேண்டியவர்.

டைம்ஸ் இதழின் சிறந்த 100 படங்களில் இடம் பிடித்த நாயகன் படத்தை இன்னுமொருமுறையும் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட ஒரு படத்தில் எப்படி ஒரு நாயகனை தேடுவது...

நான் ரசித்த சில காட்சிகள்

# பொலிஸ் அதிகாரி கமல் மீது தண்ணீரை பாய்ச்சும்போது தனி ஆளாக நிற்பது. பிறகு பொலிஸ்காரர் அடிக்கப்போறியான்னு கேட்கும் போது அதற்கு கமல் ''நான் அடிச்சா நீ செத்துருவ''ன்னு சொல்வது

# க்ளைமெக்ஸில் கமலின் பேரன் நீங்க நல்லவரா கெட்டவரான்னு கேட்பான் அதுக்கு ''தெரியலேயப்பா''ன்னு வேலு நாயக்கர் சொல்வார்.


வேலுநாயக்கரை சாரு கேள்வி கேட்கும் காட்சி# நீங்க யாரு எது தப்பு எது சரின்னு பார்த்து தண்டனை கொடுக்கன்னு மகள் கேட்க வாக்குறுதி கொடுத்துட்டேன்பாரு வேலுநாயக்கர்.

# தப்பில்ல, நாலு பேர் சாப்பிட ஒதவும்னா எதுவுமே தப்பில்ல..

# நிறுத்தவே மாட்டீங்களா? நிறுத்துறேன் அவங்கள நிறுத்தச்சொல் நான் நிறுத்துறேன்...........
நீங்க ரசித்ததையும் சொல்லுங்கோ.........

10 COMMENTS:

தமிழ் சினிமாவிற்கு இப்படம் ஒரு பெருமையான விஷயம் தான்.. பகிர்தலுக்கு நன்றி :)

விபச்சார விடுதியில் கமலும், சரண்யாவும் சந்திக்கும் காட்சியே என்னை அதிகம் பாதித்தது. அந்த காட்சிகளின் வரும் பாலகுமாரனின் வசனங்கள் மிகவும் அற்புதம். அடுத்து கமல், சரண்யாவை கல்யாணம் செய்துகொள்வதாக கூறும்பொழுது சரண்யா அழுவதும் மறக்க முடியாதது.

இந்த பதிவுக்கு பெரிய அளவில் சம்பந்தமில்லாத தகவல்: நாயகனின் ஹிந்த மொழிப் பதிப்பு பார்த்து அழுதே விட்டேன். ஏவென்றால், எவ்வாறு மீள் தயாரிப்பு செய்யக்கூடாது என்பதற்கு அதுவொரு எடுத்துக்காட்டு.

"என்னதான் உனக்கொரு நியாயம் இருந்தாலும் அநியாயமாய் ஒருவன் தண்டிக்கப்பட்டால் அதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும்".

இதுதான் நாயகன் பற்றிய எனது புரிதல்.

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்..

ஆனால் இந்த கமல் உன்னைபோல் ஒருவன் தந்ததுதான் என் வருத்தம்..
http://eksaar.blogspot.com/2009/10/get-lost.html

நாகா said...

//அந்த காலத்தில் மும்பையில் வாழ்ந்த தாரவி என்கிற ஒருவரின் உண்மைக் கதையாம்//

தாராவி என்பஹ்டு அந்த ஏரியாவின் பெயர். அந்த மனிதர் வரதராஜ முதலியார். இன்றைய தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் அனைவருமே ஒரு காலத்தில் அவரிடமே பணி புரிந்தனர்

எனக்குப் பிடித்தது, அயிரே அந்த ஆம்புலன்ஸ் என்ன வெல? வாங்குறோம் 5 வாங்குறோம்.ஏழைங்களுக்கு மட்டுந்தான் ஓடும்........

Anonymous said...

வரதராஜ முதலியார்
http://www.google.lk/search?q=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a

பிரசன்ன குமார்,மருதமூரான்,என்ன கொடும சார் ,புலவன் புலிகேசி வருகைக்கு நன்றி.

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நாகா.

எல்லா காட்சிகளுமே அருமை என்றாலும், ஒரு காட்சி..

நாசர் கமலிடம் லாக் அப்பில் பேசி முடித்து விட்டு. வெளியே போகும் வரை புத்தகத்தை பார்த்து கொண்டிருந்து விட்டு, கதவு மூடும் போது கண்ணாடியை கழட்டி தாங்க முடியாமல் அழ ஆரம்பிப்பார்.. அது கவிதை :)

Lojee said...

keep it up.

விபு said...

நல்ல பகுப்பு........ படம் மட்டுமல்ல, கோர்ப்பும் அருமை..