பசியில் தவிக்கும் மாடு உணவில்லாமல் போஸ்டர் சாப்பிடும் கதையாகிவிட்டது இருக்கிறம் சஞ்சிகை.
இருக்கிறம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்!
01-15-12-2009 இதழில் 50ம் பக்கம் வந்திருக்கும் ''ஊடக மயக்கம்'' கட்டுரை இருக்கிறம் சஞ்சிகையின் நிலையை காட்டியிருக்கிறது. யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்தார் என்பதற்காக (உங்கள் சஞ்சிகையில் இருக்கும் ஒலி ஒனி ஊடகவியலாளர்கள் அப்படி இருக்கலாம்) ஒட்டுமொத்த இலத்திரனியல் ஊடகத்துறையும் இப்படித்தான் இருக்கும் என்று பிரசுரிக்க நீங்கள் யார்?
தூசனத்தில் எழுதிக்கொடுத்தாலும் பிரசுரிப்பீர்களா? இருக்கிறமின் கீழ்த்தரமான விற்பனை தந்திரம் இது.
வரலாற்று தவறுகளை சுட்டிக்காட்டும் அளவுக்கு எழுதியவரது அனுபவம் கேள்விக்குறியானது.
எழுதியவர் அப்படி இருந்ததற்காய் ஒட்டு மொத்த ஒலி ஒளி ஊடகத்தையும் குறி வைத்து சுடுவது பயிற்சியில்லாமல் துப்பாக்கி தொடுகிற ஒருவரின் நிலையை காட்டுகிறது.
சம்பாத்தியம் அதிகம் இல்லாவிட்டாலும், அற்ப சொற்ப சம்பாத்தியங்களுக்காக வேண்டாத வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்
யார் செய்கிறார்கள்? பெயர் குறிப்பிட்டு சொல்லுங்கள்.
இப்போது மழைபெய்யாததற்கு இதுகூட காரணமாம் நீங்கள் வானிலை அவதான நிலையத்தில் வேலை பார்க்க வேண்டிய ஒருவர்.
அத்தனை அசிங்கங்கள். அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர்கள் புரியும் மாய லீலைகள், மந்திரங்கள், தந்திரங்கள் கொஞ்சமா? நஞ்சமா?
எங்கே நடக்கிறது அதையும் சொல்லியிருக்கலாமே. எழுதி கொடுங்கள் அதையும் பிரசுரிப்பார்கள்.
மீன் மலிந்தால் சந்தைக்கு வருமே அதுபோலவாம் தற்போதைய அறிவிப்பாளர்கள்
மலிந்து சந்தைக்கு வந்தது உங்கள் சஞ்சிகையில் வந்திருக்கும் குப்பைகள்தான். இலவச இணைப்பாய் தமன்னாவை காட்டிதான் உங்கள் சஞ்சிகை விற்பனையாகிறது.
வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்கும் இந்தத் தொழில் தேவைதானா?
தேவைதான். எனக்கு தேவை அத்தனை வினாடிகளும் எனக்கும் திறமையுள்ள ஊடகவியலாளர்களுக்கும் முக்கியமானவை.
ஆடத்தெரியாத ஒருவரின் கவலையை அரங்கேற்றிய சஞ்சிகைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். திறமையுள்ளவர்கள் எங்கும் நிலைத்து நிற்பார்கள்.
சக பதிவர் லோஷனின் பதிவு






