உப்பு கல்லை போல வைரம் தன்னை நீ நினைத்தாய்..

23:34 Hisham. M 1 Comments

தொழில் ரீதியான கடந்த கால வாழ்க்கை அதிக அழுத்தங்களையும் சவால்களையும் தந்ததால் முட்டி மோதி வெளியே வந்து சிந்திக்க கொஞ்சம் நேரமாச்சு.ஆனால் கடந்த வருடமும் இந்த வருடத்தின் ஒரு சில மாதங்களும் வாழ்க்கை பற்றியும் மனிதர்கள் பற்றியும் கற்றுக்கொண்ட அனுபவங்கள் ஏராளம்.

போன வருஷத்துல இருந்து கட்டுவதும் இடிப்பதும்னு சின்ன புள்ள விளையாட்டு மாதிரி கடந்து போயிடுச்சி. திரும்ப கட்டத்தொடங்கியிருக்கோம் கடவுள்தான் காப்பாத்தனும். ஒவ்வொரு முறையும் இடிந்து விழுறது கட்டிடம் இல்ல என்னோட கனவுகளும் உழைப்பும்தான் கூடவே வீண்விரயங்களும். இந்த இடிபாடுகளுக்குள் சிந்தனைகளும் சிக்கிக் கிடந்தன.. பதிந்தால் பலருக்கும் மனம் நோகும், சிந்தித்தால் விழித்துக்கொள்ளலாம். நான் விழித்துக்கொண்டேன்.

ஒவ்வொரு முறையும் ஒதுக்கப்பட்டு தடை தாண்ட  படும் பாடு சொற்களில் அடங்காது..... நண்பன் இப்படி சொல்லலாமான்னு யாராவது கேட்டால் சொல்லித்தான் ஆகனும் ஒரே தடையை புதுசு புதுசா எத்தனை முறை தாண்டுறது.

கிராமத்து வாழ்க்கை மீண்டும் அழைக்கிறது. இனி எனக்காக கொஞ்சம் பாடுபடலாம்னு நினைக்குது.

அழுத்தங்களை மறந்து அமைதி தேடிய என் சிந்தனை பயணத்தில் கொஞ்சம் ஆறுதலும் நம்பிக்கையும் தந்தது "itssoldier" என்கிற தலைப்பில் தனித்துப்போன ஒரு இராணுவ வீரன் தன் ஆத்ம திருப்திக்காய் youtubeஇல் இசைக்கும் பாடல் ஒன்று.

"பிறர்க்காகவே அழுதேன் அன்று..
எனக்காக இன்று அழவோ..
எனக்காருமே துணை இல்லை என்று வானம் கூட வருமோ..

ஒரு நொடியும் உனை மறவாத ஒரு வரம் தான் கேட்டேனே
ஒரு மூலை கதியினில் என்னை கதையாக சேர்த்தாயே

உப்பு கல்லை போல வைரம் தன்னை நீ நினைத்தாய் போ
"


1 COMMENTS: