மனிதம் மரணித்துவிட்டது (2).

23:01 Hisham Mohamed - هشام 7 Comments

காஸா நிலமெங்கும் மரண ஓலம்.
உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
பல சிறுவர்கள் அநாதையாக்கப்பட்டு விட்டார்கள்.
அங்கிருந்து வருகிற புகைப்படங்களை பார்க்கும் போது என் அடி மனது தீப்பிடித்து எரிகிறது.

உண்ண உணவின்றி நீர் இன்றி தவிக்கும் பலஸ்தீன பொது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் ஜனவரி 8ம் திகதி வரை 700 பேர் பலியாகியுள்ளனர் இதில் 219 சிறுவர்கள் 89 பெண்கள் அடங்குகின்றனர் .
ஐநா போரை நிறுத்தும்படி அறிவித்துவிட்ட நிலையில் உலகெங்கிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஐநா தடையை மீறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?
அதற்கு உலக போலீஸ்காரன் அனுமதி வழங்குவானா ?

விஷமிகளே அங்கே இருக்கிற ஹமாஸ் இயக்கத்தின் மீது போர் தொடுங்கள். அப்பாவி சிறுவர்கள், பெண்கள், போரிட முடியர் முதியவர்களை விட்டுவிடுங்கள்.
இஸ்ரேலிய விஷமிகளுக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?

இவர்களின் நோக்கத்தை கடந்த டிசம்பர் 27ம் திகதியில் இருந்து நடத்துகிற தாக்குதல் மூலம் புரிந்து கொள்ளலாம். இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் அதிகம் கொல்லப்பட்டவர்கள் பெண்களும் சிறுவர்களும்தான். இதன் மூலமாக எதிர்கால சந்ததி தடுக்கப்படுகிறது. இந்த விஷமிகள் உண்மையில் கோழைகள் ஆயுதங்களோடு நிற்கிறவனோட போராட தெமபில்லாதவர்கள்.


பலஸ்தீன சோகக்கதைகள் தொடர்கின்றன.

4 பிள்ளைகள் படுகாயமடைந்த தன் தாயை காப்பாற்ற பல முயற்சிகள் எடுத்தும். இஸ்ரேலிய தீவிரவாதிகள் காஸாவிற்குள் அம்யுலன்ஸ் வண்டிகளை அனுமதிக்காததால் மருத்துவ வசதி இன்றி அந்த தாய் உயிரை விட வேண்டியிருந்தது. இறந்த தாயின் உடலோடு கதறி அழுகிறார்கள் நான்கு பிள்ளைகளும்.

பாதுகாப்பான இடம் என்று விஷமிகள் 100 பலஸதீனியர்களை ஒரு வீட்டுக்குள் அடைத்து பிறகு ஷெல் வீசி கொலை செய்திருக்கின்றனர். இதில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்கிறது ஐ.நா .


இன்னும் ஆழ்ந்த நித்திரையில்

700க்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்ட நிலையில் இவர்கள் இன்னும் ஆழ்ந்த நித்திரையில்.

1. உலக பொலிஸ்காரன் என்று தன்னை அழைத்துக்கொள்பவன்.
2. ஐ. நா
3. மனித உரிமை அமைப்புகள்
4. உலக சிறுவர் அமைப்புகள்
5. அரபுலகம்.

என் இறைவா இன்னும் ஏன் நீ மௌனமாய் இருக்கிறாய்..

7 COMMENTS:

உங்களுடைய படைப்புகளை இசைமின்னலில் இனைத்து அதன் மூலம் மற்றவரும் பயனடைய உதவுங்கள் உங்களுடைய இந்தச்செய்தி என்னால் இனைக்கப்பட்டுள்ளது இனி நீங்கள் படைக்கும் அனைத்து பதிவுகளையும் இசைமின்னலிலும் இனையுங்கள்
நன்றி www.isaiminnel.com

Sinthu said...

அண்ணா கொடுமையான வாழ்க்கை.... ஆனால் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள், அப்படி புரிந்துகொண்டாலும் புரியாதது மாதிரி நடிப்பவர்கள் பலர்........ இவை மாறினால் அல்லது மாற்றப்பட்டால் மட்டுமே விடியல் கிட்டும்.....இந்த அப்பாவி மக்களுக்கு...........

Anonymous said...

dear brother pls c this also
http://www.swissmurasam.net/news/breakingnews-/11204--5-.html

Anonymous said...

nengal aen sri lanka la ula tamils pati kavalipada madengala? estral ,palastin madum therijuma?

ABU NOORA said...

இலக்கியம் படைக்கிறேன் என்று இறைவனைப் பழிப்பது பெரும்பாவம்.

இறைவன் உறக்கம் உட்பட எந்த தேவையுமற்றவன். தெய்வம் நின்று கொல்லும் என்ற வரிகளே நூற்றுக்கு நூறு சரியானது.

இறைவனின் தண்னையை நாம் கூடிய விரைவில் காணலாம். காண முடியாவிட்டாலும் மறுமையில் அவன் தண்டனையளிப்பதில் வல்லவன்.

படைத்தவனைப் பழிக்காதீர் - அது மிகப்பெரும் பாவம்.

Anonymous said...

Hamas iyakkathinar appavi Israel Sportsmen 14 pera konnagela atha pathi en thala eluthamatengara..........

//Hamas iyakkathinar appavi Israel Sportsmen 14 pera konnagela atha pathi en thala eluthamatengara..........//

அநாநி எனக்கு நேரமில்லை முடிந்தால் நீங்கள் எழுதுங்கள்.