மனிதம் மரணித்துவிட்டது.

23:39 Hisham Mohamed - هشام 9 Comments

ராமசாமி அண்ணே ஒருத்தன் ஆபத்துல இருக்கிறப்போ இருக்க இடம் தந்து உண்ண உணவு தந்தவனை கொலை செய்த கதை உங்களுக்கு தெரியுமா?
குரங்கில் இருந்து மனிதன்.
மனிதனில் இருந்து...............

இஸ்ரேலிய தீவிரவாதிகள் பலம்மிக்க யுத்த தாங்கிகளின் உதவியோடும் ஆட்டிலறிகளினாலும் வான் வழியாகவும் பலஸ்தின் நாட்டின் பெண்கள் சிறுவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி 600 பேரின் இரத்தத்தை ருசிபார்த்து நிற்கும் தருணத்தில் கண்ணீரோடும் ஆத்திரத்தோடும் பதிவெழுத முடியாத சோகத்தில் ஒரு சில வரிகள்......

அம்மாவின் அன்பும் பாசமும் உலகில் விலை மதிக்க முடியாதது.
தன் பிள்ளைக்காக வாழ்கிற பெற்றோர் பிள்ளையின் நலனில் காட்டுகிற அக்கறை எவராலும் உணரப்படக்கூடியது.
பாடசாலைக்கு செல்லும் தன் பிள்ளைக்கு பகல் உணவை கட்டிக் கொடுக்கும் ஒரு தாய், பாடசாலைக்கு அழைத்து செல்லும் தந்தை,
கட்டிக்கொடுத்த பகல் உணவு சிதறிக்கிடந்தது.....
டாட்டா காட்டிய மகனின் கை ஜன்னல் ஓரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது......
பிறந்த நாளுக்கு பரிசாய் கொடுத்த கைக்கடிகாரத்தின் மூலம் அடையாளம் காண்கிறர் தந்தை......
இடிந்து போன இதயத்தோடு தன் பிள்ளையின் உடல் அங்கங்களை தேடுகிற வேதனையை உங்களால் உணர முடியுமா???

எட்டு உறுப்பினர்களை கொண்ட ஒரு குடும்பம் புத்தாண்டில் ஒன்றிணைந்த வேளையில் நொடிகளுக்குள் இருண்டது அவன் வீடு இருட்டில் தரை தடவிய அவன் கைகளில் வழு வழுப்பான சிறு துண்டுகள் அகப்பட்டன அவை சற்று முன் தன் தோளில் சாய்ந்து கதை சொன்ன தன் சகோதரியின் சதைத்துண்டுகள.; 7 பேரை இழந்து அநாதையாக நிற்கிற அவனின் வேதனையை உங்களால் உணர முடியுமா???


உங்கள் தேசம் முழுக்க இரத்தமும் மனித உடல் அங்கங்களும் கொட்டிக்கிறபோது உங்களால் உண்ண முடியுமா? உறங்க முடியுமா?

மனிதன் என்கிற இனம் அழிந்து வருகிறது. இந்த விஷ ஜந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக மனித இனத்தை அழிக்க ஆரம்பித்துவிட்டன. இந்த போராட்டத்தில் வெல்லப்போவது யார்? எவ்வளவு காலம் எடுக்கும்?
இவை புரியாத புதிர்.

1948 வரை இஸ்ரேல் என்று ஒரு நாடு கிடையாது பிரிட்டிஷ; போட்ட கூறுதான் இஸரேல் உருவாக காரணம். உலகப்படத்தில் இஸ்ரேல் என்று ஒரு சிறிய வட்டம் அதற்கு அருகில் ஜெருசலேம், காஸா என்று புள்ளி வைக்க முடியாத இரண்டு சிறிய வட்டங்கள் எங்கே பலஸ்தீன்? பலஸ்தீன் என்பது கோரிக்கை மடடும்தான். 20ம் நூற்றாண்டின் சரித்திர மோசடி இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இழைத்தது. வாழ இடமில்லாமல் நாடு நாடாக அழைந்து திரிந்தவர்களுக்கு வாழ இடம் கொடுத்தவர்கள் பலஸ்தீனியர்கள். இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினையை நான்கு வரிக்குள் அடக்க முடியாது இது நான்காயிரம் வருட சரித்திரம்.


இந்த விஷப்போராட்டத்தை நிறுத்த அதிகாரக்கதிரையில் அமர்ந்தும் ஆணையிட முடியாத பேன்கீ மூன் ஒரு புறம் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்காக குரல் கொடுக்கும் பிரான்ஸ் அதிபர் ஒரு புறம் சத்தம் வெளியில் வராமல் சண்டை பிடிக்காதீங்கன்னு சொல்கிற அரபுலகம் இன்னுமொரு புறம்.

பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிக்கு பார் தந்த பலஸ்தீனியர்களை கதற கதற கழுத்தறுத்த கதை புத்தாண்டின் வாழ்த்துச்செய்தி செருப்படி வாங்கிய புஷ்ஷுக்கும் விஷ ஜந்துக்களுக்கும்.பால் மணம் மறக்காத பச்சைக்குழந்தைகளை ஆயுத டொலர்களுக்கு பலி கொடுக்கிற அராஜகம் எந்தவொரு யுகத்திலும் நடந்திருக்க வாய்ப்பில்லை.


உலகமே 2009ம் ஆண்டை வானை பிழக்கும் வான வேடிக்கைகளோடும் கேளிக்கை கூத்துக்களோடும் பரபரப்பாக வரவேற்றுக்கொண்டும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டும் இருந்த போது பலஸ்தீன பொதுமக்கள் வாய் கிழிய கத்தியது 'கடவுளே காப்பாத்து' என்றுதான்.


ஜ.நா வின் உதவியோடு இயங்குகிற அல் பக்ரா பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 40 மாணவர்களின் உயிர் குடித்த விஷமிகள் 10 நாட்களை கடந்து மனித இன அழிப்பை தொடந்து நடத்துகின்றனர். இதன் வெளிப்பாடாக பொறுமையின் விளிம்பில் இருந்த என் பதிவும் பொங்கி எழ வேண்டியிருந்தது.


தாக்குதல்கள் ஆரம்பித்து 11ஆவது நாளில் 600பேர் பலியெடுக்கப்பட்டனர். இதில் 200 பேர் சிறுவர்கள் என்றும் பலஸ்தீன் இரத்த ஆறாக ஓடுவதாகவும் ICRC சொல்கிறது. இங்கே காயமடைந்தவர்கள் கணக்கெடுக்கப்படவில்லை கிட்டத்தட்ட 2900 பேர் காயமடைந்திருக்கலாம். இதன் கொடூரத்தன்மையை உலகிற்க உணர்த்த ஒரு உண்மை கண்மூடித்தனமான தாக்குதலில் விஷமிகள் குழுவின் நால்வர் தங்கள் படைகளின் செல் வீச்சுக்களால் உயிரிழந்தனர். தங்கள் படைகளின் நிலை அறியாமல் தாக்குதல் நடத்துகிறவர்களுக்கு சிறுவாகள் பெண்கள் எப்படி கண்களில் தெரியப் போகிறார்கள்.


புத்தாண்டில் பட்டாசு சத்தங்களுக்கு பதிலாக ஆட்டிலறிகளினதும் ஷெல்களினதும் சத்தத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள்,
உண்ண உணவின்றி கதறும் குழந்தைகள்,
அதிர்ச்சியில் கனவிலும் அலறும் குழந்தைகள்
இவர்களின் வேதனையில் இறைவா உனக்கென்ன ஆறுதல் இருக்கிறது.


இந்த விஷமிகளை உன்னுடைய ஆற்றலால் நிலை குலையச் செய்வாயாக!!!!!

9 COMMENTS:

Anonymous said...

//இந்த விஷமிகளை உன்னுடைய ஆற்றலால் நிலை குலையச் செய்வாயாக!!!!!//

Ameen.

Anonymous said...

அது சரி... நீங்கள் மட்டும் பாம்பே, அமெரிக்கா, மலேசியா என்று சகல இடங்களிலும் அடுத்தவனை சூதடிக்கலாம்..!! இப்படிதானே இருக்கும் அனைவருக்கும்...!! டேய்... இப்பொது சொல்கிறேன்... உன் இனம் இனி மெல்ல சாகும்....!! உன் அல்லா மீது ஆணை...!!

Sinthu said...
This comment has been removed by a blog administrator.
Raja said...

இது மாதிரியெல்லாம் கடவுள் உனக்கு மட்டும் ஆசிர்வதிக்க அவர் ஒன்றும் உங்கள் பகுதி கான்ஸ்டபில் அல்ல.வரலாற்றில் இஸ்லாமியர்கள் செய்யாத கொடுமையா? அதற்கு நீங்கள் விலை கொடுத்துதான் ஆகவேண்டும்.

//இந்த விஷமிகளை உன்னுடைய ஆற்றலால் நிலை குலையச் செய்வாயாக!!!!!//
ஆமீன்.

Anonymous said...

இராமசாமி அண்ணைக்குச்சொன்னதை யாருககு என்பதை கொஞ்சம் உறைக்கச் சொல்லியிருக்கலாம் தானே அண்ணே!

HISHAM said...

//டேய்... இப்பொது சொல்கிறேன்... உன் இனம் இனி மெல்ல சாகும்....!!//

ஏன் நீங்கள் மனித இனத்தை சேர்ந்தவர் இல்லையா......
பிஞ்சு குழந்தைகளினதும் பெண்களினதும் இரத்தம் உறிஞ்சுவதில் அவ்வளவு ஆனந்தமா?

Anonymous said...

//டேய்... இப்பொது சொல்கிறேன்... உன் இனம் இனி மெல்ல சாகும்....!!//

இந்த படங்களை பார்த்த பின்பும் எப்படி உங்களால் இப்படி பேச முடிகிறது...
யார் செய்தாலும் தவறு தவறு தான்

Anonymous said...

உருகவைக்கும் கொடுமை! இவர்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்......- சிந்தூரி

சுட்டி: http://www.puthinam.com/full.php?2b24OOA4b3dC6Dp34d01VoK2a03O4AKb4d24SmA4e0dM0Mtjce0cf1e02cce4cYU3e