என் கண்மணி உன் காதலி

00:28 Hisham Mohamed - هشام 10 Commentsசில சமயம் நாம் வாசிக்கும் விடயங்கள் நம்மை சிந்திக்க வைப்பதுண்டு... அதை நம் இதயத்தில் இருக்கும் பலரோடும் பகிர்ந்து கொள்ளவும் நாம் மறப்பதில்லை... அதுபோல நம் இதயத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு காதல் கதை...

கண் தெரியாத ஒருத்தி தன் வாழ்க்கையை வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தாள். அவள் வெறுக்காதவை எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அவள் இந்த உலகத்தில் அன்பு வைத்தது தன் காதலனிடம் மட்டும்தான். அவன் எப்போதும் அவளுக்காகவே வாழ்கிறவன். அவன் விடுகிற ஒவ்வோரு மூச்சும் இவள் பற்றிய சிந்தனையாகத்தான் இருக்கும்.

ஒரு நாள் பார்வையிழந்த அந்த பெண் தன் காதலினிடம் ''எனக்கு மட்டும் பார்வை இருக்குமென்றால் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்'' என்றாள்.

பல நாட்கள் கடந்த இந்த காதல் பயணத்தில் ஒரு முறை யாரோ ஒருத்தர் இவள் பார்வைக்கு கண்களை தானமாக கொடுத்திருந்தார்.

இப்பொழுது அவள் இந்த உலகத்தையே பார்க்கிறாள். அவள் இதயக்கூட்டில் இருக்கும் காதலனை தன் இரு கண் கொண்டு பார்க்கிறாள்.

இந்த உலகத்தை விட தன்னை நேசித்த காதலியிடம் காதலன் ''இப்போ உனக்கு பார்வை வந்துடுச்சி என்னை கல்யாணம் கட்டிக்கிறியா'' என்று கேட்கிறான். திடுக்கிட்டுப்போன காதலி ''கண் தெரியாத உன்னை நான் கல்யாணம் கட்டுவதா? எப்படி சாத்தியப்படும்? '' என்று கோபத்தோடு பதில் சொன்னாள்.

நொறுங்கிய இதயத்தோடு அவன் எழுதிய கடிதத்தின் அடியில்...

''உனக்குள் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிற சந்தோசத்தோடு விடை பெறுகிறேன். என் கண்களையாவது கவனமாகப்பார்த்துக்கொள்.''


வாழ்க்கையின் படிநிலைகள் மாறி உயர்வு பெறும் போது மனித மனங்களும் மாறுவதில்லையா? 
எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம் கடந்த பாதையை? 
வருத்தங்களில் எம் கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள் எங்கே?


(இப்போது இவளை உலகம் தெரியாதவள் அல்லது கண் தெரியாதவள் என்பதை விட குருடி என்றழைப்பது பொருத்தமென்று ராமசாமி அண்ணே சொல்லச்சொன்னாரு.)

10 COMMENTS:

ஆத்தா நான் ஜெயிச்சிட்டேன்.

21:33 Hisham Mohamed - هشام 9 Comments

பக்கத்து பக்கத்து கம்யூட்டர்களில் உட்காந்துகிட்டு காலையிலிருந்து சகா லோசனும் நானும் மொக்கை போடுவது வழக்கம். நடுவில யாராவது மாட்டிக்கிட்டா சிக்கி சின்னாபின்னமா போவதுமுண்டு.(ஏன் சில சமயம் நானும் கூட)வலையுலகத்துல இருக்கிற மூலை முடுக்கெல்லாம் சுத்தி ஆராய்ந்த விடயங்களை நாம் பகிர்ந்து கொள்வோம். சகா லோஷன் இருக்காறே உண்மையில இவர இப்ப எல்லாருமே பிளாக்கர்ன்னு தான் கூப்பிடுறாங்க(உங்களுக்கு தெரியாம இருக்கலாம்.) வலைப்பூவை மெய்ன்டெய்ன் பன்றதுல இவர மாதிரி என்னால முடியாது. இருந்தாலும் எங்கயாவது தேடி ஒரு மொக்கையை போட்டு சாதனை படைச்சிடுவன்.

பதிவுலகத்திற்கு வந்த பிறகு நான் கற்றுக்கொண்டது ஏராளம். என் மனதை திறந்தால் என்ன கிடைக்கும் என்பதை நன்றாகவே அறிந்து கொண்டேன்(அதற்காக திறக்காமல் விடமாட்டேன்). சகாவுடன் எனக்கிருக்கும் ஒரு சின்ன கோபம் அவர் போடுகிற பதிவுக்கு ஊர் பேர் தெரியாத அநானிகள் எனக்கு பின்னூட்டம் வழியா பல மொழிகளில் வாழ்த்து சொல்வார்கள்(என்ன மொழின்னு தயவு செய்து கேட்டுறாதீங்க). அந்த வேதனையை நான் எங்க போய் சொல்லுவேன்.

நமக்குள்ள ஒரு போட்டி ஒரே நாளில் அதிக ஹிட்ஸை பெறுவது யார்?

2638 ஹிட்ஸ் அதிக பட்சமாக பெற்று கிட்டதட்ட 3 மாதங்கள் அசைக்க முடியாத சாதனையாக்கியிருந்தார் சகா . நினைக்காத ஒரு பதிவுக்கு அதிக ஹிட்ஸ் கிடைச்சு சாதனையை முறியடிப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. ஏதேச்சையாக வலையில் சிக்கியவர் இளைய தளபதி வறுத்தெடுத்தில் 3298 ஹிட்ஸ் சாதனை வைத்தேன். தீடீர்னு விஜய் ஒழிக என்று கோஷமிட்டு 3424 ஹிட்ஸால் ஒரே நாளில் முறியடித்தார். அடுத்த பதிவில் மனோரமாவையும் சேர்த்து அழைத்து 3637 ஹிட்ஸால் புதிய இலக்கை எட்டியிருக்கிறேன். (எப்ப முறியடிப்பீங்கன்னு ராமசாமி அண்ணே கேட்க சொன்னார்)

குறித்த நாட்களில் என் தளத்தை எட்டிபப்பார்த்தவர்களுக்கும் பின்னூட்டம் வழியாக வந்தவர்களுக்கும் ரொம்ப நன்றி. பதிவுலகத்துல இதெல்லாம் சகஜமப்பா(ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு)

9 COMMENTS:

அக்கா மாலாவுக்கு ஆப்பு

20:01 Hisham Mohamed - هشام 5 Comments

கடந்த இரண்டு பதிவுகளும் இளையதளபதியின் ஆவேசத்தையும் மனோரமாவின் கொந்தளிப்பையும் விளக்கியதில் எனக்கும் சகா லோஷனுக்குமிடையிலான ஆரோக்கிய போட்டியின் சாதனைகள் திருத்தப்பட்டன.இனி சீரியஸான மேட்டருக்கு திரும்புவது நல்லது என நினைத்தேன் கிடைத்ததோ கோக்கோ கோலா. அக்கா மாலாவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு தனிப்பட்ட விடயம் அதற்கும் இந்த பதிவிற்கு எந்த தொடர்புமில்லை.

சர்வதேச சந்தையில் பன்னெடுங்காலமாக தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்திருக்கும் கொக்கோ கோலாவுக்கு முதலாவது ஆப்பை வைத்தது சீனா.


கேள்விக்கட்டளைகளின் 2.4 பில்லியன் டொலர்களை சீனா இம்முறை ரத்துச்செய்திருக்கிறது. இதற்கு பதிலாக சீனாவின் தேசிய தயாரிப்பான ஹீயான் பழச்சாறு தயாரிக்கும் நிறுவனத்திற்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்கியிருக்கிறது. இதன் மூலமாக 40 சதவீதமான குளிர்பான சந்தையை ஆளப்போவதும் பழச்சாறு தயாரிக்கும் நிறுவனம்தான்.(பழச்சாறு உடம்புக்கு நல்லதுன்னு ராமசாமி அண்ணே சொல்லியிருக்காரு)

சுதந்திரத்திற்கு பிறகும் இன்னும் அடிமைத்தனத்தில் இருந்து மீளாதா நாடுகளுக்கு சீனா கொடுத்த ஆரம்பம் நல்ல சாட்டையடி.

குறிப்பாக அவ்வப்போது கொடியேந்தியும் சினிமாவிலும் அக்கா மாலாவுக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் இந்தியா டொலருக்கு முன் சைலன்ஸ்.

இலங்கையில இத பற்றியெல்லாம் யாரும் வருத்தப்படுவதில்லை. ஏனென்றால் சிறிமாவின் ஆட்சியில் திறந்த பொருளாதார முறைக்கு முட்டுக்கட்டையை ஓவரா போட்டு நொந்து நூலானதால அனுபவம் நல்லா இருக்கு. (இப்ப மரவள்ளி கிழங்கு நாட்ட இடம் இல்லையே)

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை ஆளும் அதிகாரம் உள்ள நாடுகள் சில்லறை விடயத்தில் இருந்து பில்லியன் வரை பல வழிகளிலும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

5 COMMENTS:

சூப்பர் ஸ்டார் ஏன் இப்படி ஆயிட்டாரு?

22:03 Hisham Mohamed - هشام 9 Comments

இந்த மொக்கை பதிவ பார்க்க முடிவெடுத்த முக்கால்வாசி பேருக்கும் முதல்ல என் வணக்கம். முக்கியமான வேலை இருக்கிறவங்க முதல்ல அத முடிங்க. (ரைமிங்கா இல்ல...)

பதிவெழுத மேட்டர் தேவை. அதுக்காக மனசுல உள்ளதெல்லாம் கொட்டிடேன்னா. நிழலுக்கு ஒதுங்கவும் மரம் கிடைக்காது.

கிடைக்கிற மேட்டரெல்லாமே டக்கால்டியா இருக்கு போஸ். ஒன்னு அடுத்தவன் பிரச்சினையா ஆயிடுமோன்னு ஒரு நினைப்பு இல்லைன்னா நடுநிலைமை பேசிக்கிட்டு ராமசாமியண்ணே நியாயம் கேட்டு வாராரு. (எப்படித்தான் யோசிக்கிறாங்களோ)

ஒரு முடிவெடுத்துட்டன். முடிவெடுத்தா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்னு பஞ்ச் டயலோக்கெல்லாம் நாம பேச கூடாது அப்புறம் பாவம் விஜய். அவர் படத்துல இது ஒன்னுதான் கொஞ்சம் சுமாரா இருக்கு.

இனி மேட்டருக்கு வாங்க தமிழ் சினிமாவின் ஓட்டைகளுக்குள் கொஞ்சம் காது கொடுத்தேன் வைரமுத்துவின் குதிரையும் பால் தரும் போல இருக்கே.

கோடம்பாக்கத்துல இப்ப ஒரே பரபரப்பு. ஒரு மாசத்துக்கு எவன் படத்தையும் எந்த தியேட்டர்லயும் ஓட்ட முடியாது பாருங்கோ. ஏப்ரல் மாசத்துல பண மழை கொட்டும் IPL போட்டிகள் ஆரம்பமாவதுதான் முக்கயமான காரணம். ஆனால் இம்முறை பலத்த பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்குங்கிறதால போன வருசத்தை போல பய புள்ளங்கைங்க போவாய்ங்களான்னு தெரியல.

பாவம் கந்தசாமியை ஏப்ரல் ஏமாத்திகிட்டு இருக்கு. ஓநாய் வருது கதை மாதிரி கந்தசாமி ஏப்ரல் வருவேன்னு சொல்லி வராததால ஏப்ரல் இப்ப கந்தசாமிய ஏமாத்திடிச்சு. விக்ரம் பாடுறத கேட்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்கனுமோ தெரியல.

ஹீரோவை நம்பி படமெடுக்கிற கோடம்பாக்கத்துல எப்பவாவது இருந்துட்டு ஒருக்கா கதாநாயகியை மையப்படுத்தி படமெடுப்பாய்ங்க. ஆனால் சுந்தர் C படத்த நமீதாவை நம்பித்தான் எடுக்குறாய்ங்க. தடபுடலா அடுத்தடுத்து வந்த பெருமாள், தீ இரண்டு படமும் ரெண்டு வாரம் கூட ஓடல இலங்கையில. இதுக்கு பிறகு சுந்தர் C வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிறது ராமசாமி அண்ணே பொக்கட்டுக்கு நல்லது.

என்னதான் தலைவன்னு தலையில தூக்கி வச்சிகிட்டு ஆடினாலும் அந்தரங்கத்தை அரங்கேற்ற மாட்டாரு. எந்திரன் படப்பிடிப்பின் போது ஒரு அறைக்குள் பாசக்காற பயலுகள தொரத்திட்டு நாலு பேரோட கெமராக்கு முன்னால தலைவா உங்களுக்கு எதுக்கு இந்த சீன்னு ராமசாமி அண்ணே கேட்க சொன்னாரு.

கொஞ்ச நாளா நீங்க பன்னுறது எனக்கு நான் கடவுள் படம் பாத்த மாதிரியே இருக்கு. இந்த பதிவப்போல ஒரு மொக்கை படத்தை பாத்துட்டு நல்லா இருக்குன்னு பாராட்டுறதும். அதுல நடிச்ச ஹீரோயினை வீட்டுக்கு அழைத்து விருந்து வைச்சு ஒட்டி நின்னு படம் புடிக்கிறதும். நான் விரும்பும் சூப்பர் ஸ்டாருக்கு நல்லா இல்லை. உங்களுக்கு எப்படியோ?
அது என்னமோ என்ன மாயமோ தெரியல ஒஸ்கார் வாங்கின தமிழன் மட்டும் தலைவா உ
ன் கண்ணுக்குத்தெரியவே இல்ல.

நயன நடிகை
க்கு ஆப்பு வைக்கிற மாதரி வெச்சு ஆப்பிள் கொடுத்த பஞ்சாயத்து பா.. பா... பா.... (ராமசாமி அண்ணே ஒன்னு நீங்க சொல்லுங்க இல்ல என்ன சொல்ல விடுங்க)

பா.. பா.. பா....
வேணாம் நீங்களே சொல்லுங்க.9 COMMENTS:

சுதந்திர இந்தியாவின் மானம் நிவ்யோர்க் ஏலத்தில்

22:48 Hisham Mohamed - هشام 4 Commentsசுதந்திரத்தை பார்த்த கண்ணாடிகள் மீண்டும் தாயகத்துக்கு

இந்தியாவின் நாணயம் தொட்டு பல விடயங்களில் தேசிய சொத்தாக போற்றப்படும் காந்தி பாவித்த கண்ணாடி, கடிகாரம், இறுதியாக உணவருந்திய தட்டு இவை இந்தியாவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க தலைநகர் நிவ்யோர்க்கில் ஏலத்தில் விடப்பட்டது.

எதிர்ப்புகளை சமாளிக்க ஏலம் கைவிடப்பட்டதாக அறிவித்திருந்தும். குறித்த திகதியில் ஏலத்தை நடத்தியது ஏல நிறுவனத்தின் சாமர்தியம்.

உலகின் பல நாடுகளில் இருந்தும் பலர் வருகை தந்திருந்தனர்.

அகிம்சையை போதிக்க இப்படி ஒரு வழிமுறையை அமெரிக்காவை தவிர யாரால் கையாள முடியும்.

பொருளாதாரம் சரிந்து விழுகிற தருவாயிலும் இவர்கள் மீசையில் மண் ஒட்டாது பாருங்கோ. சரிந்ததை நிமிர்த்துவதற்கான வழியாக கூட இது இருக்கலாம்.

காந்தியின் பொருட்கள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன.

அதை வாங்கியவர் இந்திய பணக்காரர் விஜய் மல்லய்யா என்பதில் இந்தியா பெருமைக்கொள்ளலாம். அவற்றை அவர் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்.(இல்லாட்டி விட்டுருவாங்களா)

இந்த ஏலம் இன்னும் இரண்டு வாரங்களில் முழுமைபெறும். அதுவரை சட்ட சிக்கல்கள் பிச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

காந்தி தன் கண்ணாடியை இந்திய இராணுவ வீரரான தீவான் நவபின்னுக்கு 1930களில் பரிசளித்திருந்தார். இதை பரிசளிக்கும் போது காந்தி ''இதுதான் சுதந்திர இந்தியாவை எனக்கு காட்டியது'' என்று சொல்லியிருந்தாராம்.

ஸெனித் கடிகாரம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பரிசாக கொடுத்தது.

காந்தி தன் கைகளால் உருவாக்கிய செருப்பை இந்திய சுதந்திரத்துக்காக லண்டன் வட்ட மேசை மாநட்டில் கதைக்க சென்ற பிரிட்டிஷ் இராணுவ வீரருக்கு பரிசாக கொடுத்தார்.


காந்தியின் சொத்தை விற்றது யார்?

4 COMMENTS:

இருளில் ஓர் இரவு

22:35 Hisham Mohamed - هشام 5 Comments

இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதில் ஆயிரம் கேள்விகள் எனக்குள்.மின்சாரம் துண்டிக்கப்ட்டால் கொழும்பு வாழ்க்கை பரபரப்பாவது பழக்கப்பட்டுவிட்டது.

அந்த தாயும் தந்தையும் என் வீட்டு முற்றத்தில் இருந்த மரத்தின் அடியில் பாசத்திற்காய் தவித்ததை அந்த மரம் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. (மனிதர்களே உணராத போது மரங்கள் என்ன விதிவிலக்கா)

மறக்க முடியாத அந்த இரவு

இறுதியாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது என் வீட்டு முற்றத்தில் நடந்த சோகமான சம்பவத்தால் இன்னுமொரு மின்சார தடையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. (இன்னும் பல பகுதிகள் மின்சாரம் இருந்தும் இருளில்)

அன்றிரவு வீட்டின் மொட்டை மாடியில் தொலைபேசியில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்த போது திடீரென நகரெங்கும் இருள் வானெங்கும் பெரும் இரைச்சலுடன் சிவப்பொளிகள்.

கொழும்புக்கு இது புதியது என்பதால் வேடிக்கை பார்த்தவர்கள் பலர். அதில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நானும் அம்மாவும் வீட்டு வாசலில், முற்றத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் என ஏராளம் பேர்.

பேரீரைச்சலுக்கு மத்தியில் வானத்தை அண்ணாந்து பார்த்தவள் இரத்தம் சிந்தி நிலத்தில் விழ மரத்தடியெங்கும் மனிதம் சிந்திக்கிடந்தது.

ஜயோ என்ற ஓலத்துடன் கத்திய சகோதரியின் குரல் அடங்கு முன் அந்த 14 வயது சிறுமி விடைபெற்றுக்கொண்டதை பெற்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவள் ஒரு நாள் கழித்து பிணமாக வீடு வந்தாள்.

அன்றிரவு பல மணி நேரத்திற்கு பின் ஒரு குடும்ப விளக்கை அணைத்து மின்சாரம் தந்தது இருள்.

விடை தெரியாதா கேள்விக்கு இன்னும் எத்தனை பேர் பலியாகப்போகிறார்கள்.

இது எந்த மொழிக்கும் இனத்துக்கும் சார்பான பதிவல்ல. நான் கண்டதை பதிகிறேன்.(காணாதது எத்தனையோ)

மனிதர்கள் கவசங்களல்ல, பலிகடாக்களல்ல.
என் தேசம் யாருக்கும் சாபமுமல்ல.......

5 COMMENTS: