சுதந்திர இந்தியாவின் மானம் நிவ்யோர்க் ஏலத்தில்

22:48 Hisham Mohamed - هشام 4 Commentsசுதந்திரத்தை பார்த்த கண்ணாடிகள் மீண்டும் தாயகத்துக்கு

இந்தியாவின் நாணயம் தொட்டு பல விடயங்களில் தேசிய சொத்தாக போற்றப்படும் காந்தி பாவித்த கண்ணாடி, கடிகாரம், இறுதியாக உணவருந்திய தட்டு இவை இந்தியாவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க தலைநகர் நிவ்யோர்க்கில் ஏலத்தில் விடப்பட்டது.

எதிர்ப்புகளை சமாளிக்க ஏலம் கைவிடப்பட்டதாக அறிவித்திருந்தும். குறித்த திகதியில் ஏலத்தை நடத்தியது ஏல நிறுவனத்தின் சாமர்தியம்.

உலகின் பல நாடுகளில் இருந்தும் பலர் வருகை தந்திருந்தனர்.

அகிம்சையை போதிக்க இப்படி ஒரு வழிமுறையை அமெரிக்காவை தவிர யாரால் கையாள முடியும்.

பொருளாதாரம் சரிந்து விழுகிற தருவாயிலும் இவர்கள் மீசையில் மண் ஒட்டாது பாருங்கோ. சரிந்ததை நிமிர்த்துவதற்கான வழியாக கூட இது இருக்கலாம்.

காந்தியின் பொருட்கள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன.

அதை வாங்கியவர் இந்திய பணக்காரர் விஜய் மல்லய்யா என்பதில் இந்தியா பெருமைக்கொள்ளலாம். அவற்றை அவர் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்.(இல்லாட்டி விட்டுருவாங்களா)

இந்த ஏலம் இன்னும் இரண்டு வாரங்களில் முழுமைபெறும். அதுவரை சட்ட சிக்கல்கள் பிச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

காந்தி தன் கண்ணாடியை இந்திய இராணுவ வீரரான தீவான் நவபின்னுக்கு 1930களில் பரிசளித்திருந்தார். இதை பரிசளிக்கும் போது காந்தி ''இதுதான் சுதந்திர இந்தியாவை எனக்கு காட்டியது'' என்று சொல்லியிருந்தாராம்.

ஸெனித் கடிகாரம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பரிசாக கொடுத்தது.

காந்தி தன் கைகளால் உருவாக்கிய செருப்பை இந்திய சுதந்திரத்துக்காக லண்டன் வட்ட மேசை மாநட்டில் கதைக்க சென்ற பிரிட்டிஷ் இராணுவ வீரருக்கு பரிசாக கொடுத்தார்.


காந்தியின் சொத்தை விற்றது யார்?

4 COMMENTS:

Sinthu said...

"காந்தியின் சொத்தை விற்றது யார்?"
எதையும் சொல்லிடுங்க...

sshathiesh said...

ஏனுங்க ராமசாமி அண்ணா நீங்க செய்யிற நிகழ்ச்சிதான் கற்றது கையளவு ஆனால் நீங்க திறந்த பெட்டகமாயே இருக்கிறிங்களே.

Iyarkai said...

:-(

இந்த காந்தியின் சொத்துக்கள் எப்படி அமெரிக்கவிற்கு சென்றது? ஏலத்தில் விட போகும் போது தான் காந்தியின் சொத்துக்கள் அமெரிக்காவில் உள்ளது இந்தியர்களுக்கும் ஏலத்தினை எதிர்பவர்களுக்கும் தெரியுமா? அல்லது ..?