கறுப்பு ஒக்டோபர் - இலங்கையின் வடபுல சோனிகள் விரட்டியடிக்கப்பட்டு 18 ஆண்டுகள்.

00:07 Hisham Mohamed - هشام 19 Comments


ஒக்டோபர் 25ம் திகதி நமீதாவுடைய பிறந்த தினம்னு நினைக்காதிங்க அதவிட சந்தோசமான நாள் புலிகளுக்கு.


1990ம் ஆண்டு வேலைக்கு போயிருந்த அப்பாவுக்கு உறவுக்காறங்க சொன்ன தகவல் அவர கதி கலங்க வைத்தது அப்படின்னு ஒரு மகன் தன்னுடைய வேதனையை சொல்கிறார்.


10 வருஷத்துக்கு மேல உட்காந்து சாப்பிடலாம் அப்படின்னு விடுதலை புலி உறுப்பினர்கள் மார்தட்டிக்கொண்டார்கள்.


இலங்கையின் வடபுலத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்த அத்தனை முஸ்லிம் இனத்தவர்களும் விரட்டியடிக்கப்பட்ட நாள். இவர்களை கதறக்கதற ஆயுத முனையில் விரட்டிய புலிகள் சொன்ன ஒரு விடயம் அசையும் அசையா சொத்துக்கள் எதையும் கொண்டு போகக்கூடாது.


'அக்காவோட கழுத்துல ஆசையாக அப்பா வாங்கிக்கொடுத்த நகைகளை புலிகள் கண் முன்னே அறுத்தெடுத்த நிகழ்வை நினைச்சா நான் ஆம்புளயா பொறந்தது நினைச்சி வெட்கப்பட்றேன்.' அகதி முகாமில் இருக்கிற ஒரு வாலிபர்.


'என்னோட மகன் படிப்பு செலவுக்கு மத்தவங்ககிட்ட பிச்ச கேட்குற மாதிரி பணம் கேட்பதை கண்ணால பாத்த பிறகு நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்' உடல் ஊனமுற்ற ஒரு தந்தை சொல்கிறர்.


90களுக்கு முன்பு நல்ல வசதி வாய்ப்புக்களோடு நாலு பேருக்கு தர்மம் செய்யக்கூடிய மாடி வீடுகளில் இருந்தவர்கள் 2008இல் இன்று மழை பெய்தால் ஒழுகுகிற குடிசைகளில் மூன்று வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடுவதை நினைத்தால் சந்தோசமாக இருக்கும் புலிகளுக்கு. புலிகளால் அவதிப்படுகிறவர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல இந்துக்களும்தான் இன்று வடக்கில் அகதிகளாக ஆயிரக்கணக்கில் மர நிழல்களில் வாழுகிறவர்களும் தென் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களும் இதற்கு நல்ல சான்று.


அடுத்த வீட்டுக்காரனோட வேலி பிரச்சினையில் ஆரம்பிக்கிற யுத்தம் அடுத்த நாட்டு எல்லை வரை யோயிடுச்சி. இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ஆடு மாடுகளாக வாழப்போறோம்?


ஒரு விசயத்தை கவனிச்சிங்களா என் குடும்பம், என் வீடு, என் சொத்து என்று வாழ்கிற நிறைய பேர் வானொலிகளிலும் தொலைக்ககாட்சியிலும் இந்த செய்திகளை கேட்டு விட்டு "எந்த நாளும் இதே பிரச்சினை" என்று சலித்துக்கொண்டு AC கார், கை நிறைய சம்பளம், அழகான மனைவி, பிள்ளைகள் குடும்பம் என்று சந்தோசமாக வாழவில்லையா.(உங்கள தப்பா சொல்லல......)


ஒரு சில இனவாதிகளால் தமிழ் பேசும் அப்பாவி மக்கள் அல்லல் பட வேண்டியிருக்கு. இவங்க பிள்ளைகள் வசதியா வெளிநாடுகளில் படிக்கிறதுக்காக கோமதி அக்காவுடைய மகன் மழையில நனைஞ்சுகிட்டு வெடிகுண்டு சுமக்கணுமா? ஏன் அவன் படிச்சா படிப்பு ஏறாதா?

19 COMMENTS:

v.sinthuka said...

அண்ணா மனதை உருக்கும் கசப்பான உண்மையை சொல்லி இருக்கிறீர்கள். சில உண்மைகளை மூடிவைக்க முடியாது தானே.

v.sinthuka said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்........அது தான் இப்போ நடக்கிறதோ?

Anonymous said...

நண்பரே ஒரு கேள்வி..! சமீபத்தில் இலங்கைத்தமிழருக்கு இழைக்கப்படும் அநீதியயைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதன் பேரில் கைது செய்யப்பட்டவர்களுள் இயக்குனர் அமீரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.. அதெப்படி.. உங்கள் நாட்டில் மட்டும் இன அடையாளத்தை மதம் மேற்கொண்டது..? உங்களுக்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.. மதத்தால் ஒன்றுபட்டிருந்தாலும் மொழியின வேறுபாட்டால் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிய நேரிட்டது.. நீங்கள் மூராகவோ யாராகவோ இருந்துவிட்டுப் போங்கள்.. தாய்மொழி என்றால் தமிழ் என்று தானே சொல்வீர்கள்..பிறகு எங்ஙனம் இப்படி ஒரு அவலம் ஏற்பட்டது..? தயவு செய்து விளக்கவும்.. பெயர் வெளியிட சில தடைகள் உள்ளன.. மன்னிக்கவும்..!

Anonymous said...

///புலிகளால் அவதிப்படுகிறவர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல இந்துக்களும்தான்///

உங்கள் பேச்சில் மதவுணர்வு உள்ளது.

தாய்மொழி என்றால் தமிழ் என்று தானே சொல்வீர்கள்..பிறகு எங்ஙனம் இப்படி ஒரு அவலம் ஏற்பட்டது..?

தயவு செய்து விளக்கவும்.. பெயர் வெளியிட சில தடைகள் உள்ளன.. மன்னிக்கவும்.

வருத்தம் தான். உங்களுக்கு எந்த நாடு? என்ன இனம்? ஒரு கேள்வி நான் பௌத்த மதத்தை தழுவினால் சிங்களவனாக மாற முடியுமா? கிறிஸ்தவனாக மாறி ஆங்கிலேயனாக மாறலாமா?பிறகு எப்படி இஸ்லாம் மதம் மாறினால் முஸ்லீம் ஆக மாறலாம்? உங்களை முதலில் கேள்வி கேளுங்கோ. இலங்கையில் எவ்வளவு பேர் செத்துத் துலையுதுகள். முஸ்லீம்கள் என்ன செய்தார்கள்? காசாவில குண்டு வெச்சா கோவணத்தை உருவிக் கொண்டு நிக்கிறீங்களே, ஏன்? அல்லாவின் பேரால கிழக்கில நீங்கள் செய்த அட்டூழியங்கள் தெரியுமா? அதை எல்லாம் பட்டியல் போட முடியுமா? இலங்கையில் வழுவீர்கள். சாதரண கிரிக்கெட்டுக்கே பாகிஷ்தானுக்கு ஆதரவு செய்வீர்கள். ஏன்? நீங்கள் யார்?

HISHAM said...

என் தாய்மொழி தமிழ்தான் அதில் சந்தேகம் வேண்டாம். தமிழ்தான் எனக்கு சோறு போடுகிறது.....

இந்தியர்களிடம் இருக்கிற ஒரு நல்ல பண்பு இலங்கையர்களிடம் இல்லை அதுதான் அவர்கள் நான் இந்தியன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக்கொள்வார்கள். ஆனால் இலங்கையில் யாரும் எனக்கு தெரிந்த அளவில் நான் இலங்கையன் என்று சொல்வதில்லை. (அதற்கும் அதுதான் காரணம்)

நான் எழுதிய 'கறுப்பு ஒக்டோபர்'; பதிவை கந்தசாமியோ, ஜெக்சனோ எழுதியிருந்தால் உங்கள் பார்வையும் பின்னூட்டமும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

என்னுடைய எந்தவொரு பதிவும் மதச்சார்ந்ததல்ல குறிப்பாக என்னுடைய 'எதயும் யாரும் வளர்க்க தேவையில்லை' பதிவுக்கு வந்த பின்னூட்டம் தான் கறுப்பு ஒக்டோபர் தலைப்புக்கு உதவியது.

// Anonymous said...
dai sony p----- mahanai vaaya muududaa
October 24, 2008 5:17 PM //
ஒற்றுமையை வலியுறுத்தியதற்கு கிடைத்த பரிசு.

என்னுடைய பார்வையில் கறுப்பு ஜுலைக்கு கொடுக்கிற அதே இடம்தான் கறுப்பு ஒக்டோபருக்கும். தவறை கந்தசாமி, முஹம்மட், ஜெக்சன் யார் செய்தாலும் அது தவறுதான். இலங்கையில் நடக்கிற நடந்த அவலத்தை ஒரு ஊடகவியலாளனாக இருந்தும் எழுத வில்லை என்றால் நானெல்லாம் எதுக்கு பதிவெழுதனும்.

அன்புள்ள ஆட்காட்டிக்கு
//அல்லாவின் பேரால கிழக்கில நீங்கள் செய்த அட்டூழியங்கள் தெரியுமா? அதை எல்லாம் பட்டியல் போட முடியுமா? இலங்கையில் வழுவீர்கள். சாதரண கிரிக்கெட்டுக்கே பாகிஷ்தானுக்கு ஆதரவு செய்வீர்கள். ஏன்? நீங்கள் யார்? //

அல்லாஹ்வின் பெயரால் அட்டூழியங்கள் செய்யச் சொல்லி இஸ்லாம் கூறவில்லை யாரோ ஒரு தீவிரவாதி இஸ்லாமிய பெயருடன் செயற்பட்டதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்?

கிழக்கில் யார் புரிந்தது அட்டூழியம்?
காத்தான்குடி பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்ட நூற்றுக்கணக்காணவர்களை கொன்று குவித்தது யார்?
அரந்தலாவ விகாரையில் அட்டூழியம் புரிந்தது யார்?
90களில் கிழக்கில் பெண்களை கற்பழித்தது யார்?

செய்றத செஞ்சிட்டு மதங்களை எதற்கு வம்புக்கு இழுக்கணும்.

உன் மதம் உனக்கு என்மதம் எனக்கு நபிகள் நாயகம்.

ஆட்காட்டி உங்களிடம் ஒரு கேள்வி
//மானங்கெட்ட தமிழர்களே.........
நானும் நெடு நாளாய் பதிவு மற்றும் பல பக்கங்களை படித்து வருகிறேன். ரொம்ப நாட்களாகவே ஒரு வருடல். குசேலன் பற்றி பக்கம் பக்கமாய் எழுதுகிறார்கள். குருவி பற்றி விமர்சனங்கள் பறக்கின்றன. கமலுக்கு காவடி பிடிக்கிறார்கள்.ஆனால் //
மற்றவர்களை கேள்வி கேட்கிற நீங்க ஏன் இத பதியப்படாது...

போடுறன். எனக்கும் நல்ல முஸ்லிம் நண்பர்கள் உண்டு. ஆனாலும் சில விடயங்கள் பிரச்சினைக்கு உகந்தது. நீங்கள் போட்ட பட்டியல் சரி. ஆனால் காரணம் உங்களுக்கு தெரியாதா?

HISHAM said...

// போடுறன். எனக்கும் நல்ல முஸ்லிம் நண்பர்கள் உண்டு. ஆனாலும் சில விடயங்கள் பிரச்சினைக்கு உகந்தது. நீங்கள் போட்ட பட்டியல் சரி. ஆனால் காரணம் உங்களுக்கு தெரியாதா? //

காரணம் எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்.

//எனக்கும் நல்ல முஸ்லிம் நண்பர்கள் உண்டு. //
மீண்டும் ஆரம்பிக்கிறீங்களே. நட்புக்குள்ள எதுக்கு மதம். உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு. மதங்கள் என்ற பெயரில் பிளவுபடும் படி எந்த ஒரு மதமும் சொன்னதில்லை.ஆட்காட்டி உங்களுக்கு இருக்கும் நல்ல நண்பர்களில் நானும் ஒருவனாக ஆசைப்படுகிறேன். மதம் என்ற போர்வையில் இல்லை.

Anonymous said...

Hisham udaya adangam sari,annal enn muslim makal velietapadarhal enrum oruhannam parka vendum!
ennenral muslikal orupothum thangal tamilarhal ennru kuruvathu kidaiyathu(in srilanka not in india).srilankavil thamilarhal ennral (hindhu & christian).Indiavil thamilarhal ennral (hindhu,muslim & christian).
srilankavil muslimkal thangal thanitha oru innamaha kadikolhinralhal,ithanalthan avarhal thangaluku oru thani pirivu veendu ennru soluhinrarkal(christians appadi alla avarhal thangal tamilarhal ennru solpavarhal).
northil urundu muslikal velierinathu oruvithathil avarhaluku nallam,waral avarhal alliavillai.unnmail avarhali vellietiathatku karanam avarhallil silar setha thapu(selling information to army)ithanal thandithal muslimhal tamilarhaluku ethiraha killantheluvarhal athu unnmai.ethai than orusila thamilarhal seithu thndanai petu avarhalin vallithonralhal innru thamilthesiathitku ethiraha ullarhal ithhu muttilum unnmai.
Annal muslikali vellietumpothu avarhalin uddamaihali eduthuchelavidathu thaduthathu muttilum thavaru(athu avarhalin irratham ullaipu)adaithaduka yarukum urimai illai.

Anonymous said...

sorry there is so many spelling mistakes.

Anonymous said...

Anyhow we should respect his feelings!
But same time he should think why they vocated by ltte,always there is reason!
There is no history Tamil rape muslims!!! this is fully lie!!
but tamil raped by tamil thats true!(2years ago happned.

HISHAM said...

/There is no history Tamil rape muslims!!! this is fully lie!!
but tamil raped by tamil thats true!(2years ago happned.//

i never mention anything regarding //There is no history Tamil rape muslims!!!// please read what i mention. i never target any community

//கிழக்கில் யார் புரிந்தது அட்டூழியம்?
காத்தான்குடி பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்ட நூற்றுக்கணக்காணவர்களை கொன்று குவித்தது யார்?
அரந்தலாவ விகாரையில் அட்டூழியம் புரிந்தது யார்?
90களில் கிழக்கில் பெண்களை கற்பழித்தது யார்?
//

IRSHATH said...

என்னை கேட்டால் ஜூலை கலவரத்தைவிட அக்டோபர் இன சுத்திகரிப்பு தான் இலங்கையில் நடந்த பெரிய அட்டூழியம் என்பேன் .

காரணம்

1) ஜூலை இல் தமிழ் மக்கட்கு சிங்களவர் உதவினர். ஆனால் அக்டோபர் இல் தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு உதவவில்லை.

2) ஜூலை கலவரத்தை வைத்து தமிழ் மக்கள் பிழைத்து கொண்டார்கள். இல்லாவிட்டால் ஐரோப்பா கனவுகள் சாத்தியப்பட்டிருக்குமா? (அவர்கள்தான் இப்போதும் புலிகளை யுத்தத்துக்கு தூண்டிகொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. இன்று கூட வெளிநாட்டு கனவுகளுடந்தான் சுய காணாமல் போதல்கள் அரங்கேறுகின்றன) .

3)கொழும்பில் தொடர்ந்தேச்சயாக தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளின் பகுதிகளை விட அதிக சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களை வேரோடு பிடுங்கி எறி ந்திருக்கிறார்கள். இன்று வரை அவல வாழ்கை அவர்களை துரத்துகிறது.

அமீர் முஸ்லீம் பெயர் கொண்டிருந்தாலும் அவருக்கு காத்தான்குடி சம்பவம் பற்றியோ யாழ்ப்பாண துரத்தல் பற்றியோ அறிவு இருக்கிறதா? பெண்ணை பாதி ஆடையுடன் காட்டும் அவருக்கு முஸ்லீம் என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது.

இந்தியா முதலில் மதத்தால் தான் பிரிந்தது. அதேபோல் இங்கும் தமிழர்களுக்கும் கிரிஸ்தவர்கட்கும் பிரச்சினை வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

ஏன் இன்று ஊர்வலம் போகும் தமிழ் நாடு அன்று துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன செய்தது? இது போதாதா முஸ்லிம்கள் வேறாக்கப்பட்டு தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்?

முஸ்லிம்கள் நாங்கள் சொல்வது அன்று அஷ்ரப் சொன்னது தான். தமிழர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் மன்னித்திருகிறோம். ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்! நாங்கள் இன்று வரை பூமியை போல் பொறுமையாகவே இருக்கிறோம்.

இர்ஷாத்

Anonymous said...

ஐயோ தம்பிமார்களே ......... இதுக்கெல்லாம் செலவழிக்கிற நேரத்த விட்டுபோட்டு அடுத்த தேர்தலில் யாரு ஆட்சிக்கு வருவாங்க யாருக்கு வால் புடிக்கலாம் எண்டு யோசிக்கிற வழியபாருங்கோ. இல்லன்ன இலங்கை அரச ஊடகத்தில இடம் கிடைக்காம போய்டும்

HISHAM said...

வால் புடிச்சி நொந்து போய் இப்படி ஆலோசனை கொடுக்காதிங்க தம்பியான்.

Anonymous said...

முஸ்லிம் - தமிழ் உறவு திட்டமிட்டு சிதைக்கப்பட்ட ஒன்று. முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட காலத்துக்கு முன்பு எத்தனையோ தடவை சச்சரவுகள் ஏற்பட்டு இருபக்கத்து தலைவர்களாலும் சுமுகமாகத் தீர்த்துவைக்கப்பட்டதை நான் அறிவேன். குறிப்பாக திலீபன் யாழ்மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தபோது மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கவிருந்த சச்சரவை தனி ஆளாக வீடு வீடாகச் சென்று மக்களுடன் கதைத்து மேலும் பிரச்சனைகள் வலுக்காமல் தீர்த்து வைத்ததும் நான் அறிந்தது. ஆனால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னணியில் இருக்கும் நோக்கக்களும் - அவர்களுக்குள் ஊடுருவியிருந்த ஒரு சில தீய சக்திகளை அகற்றுவதை விட்டு ஒட்டுமொத்த அப்பாவிகளையும் விரட்டியதை யாராலும் நியாயப்படுத்தவியலாது. கையில் சிறு பொதியேனும் எடுக்க அனுமதிக்கப்படாமல் அவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது அதனை விளங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் பேந்தப் பேந்த முழித்தபடி பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் நான். என்னைப்போலவே அத்தனை தமிழர்களும் இருந்தார்கள்...

-அநபாயன்.

Anonymous said...

யாழ்பானத்திலே முச்லீம்கள் தொரத்தப்பட்டனர்ன்னு இங்கே உருகி அழுவுற ஆளுங்கதான் இந்தியாவுல முச்லீங்கள தீவிரவாதின்னு கைதுபன்னவும் மோடி கொல்லவும் உற்சாகம் கொடுக்குரவுங்க. இத யாருகிட்ட சொல்லி அழுவுரது? மட்டகிளபுல காத்தான்குடியுல கருனா முச்லீமை கொன்னான்னு சொல்லிக்கிட்டிருந்தானுவ கருனா புலி இயக்கத்துல இருக்குறப்ப. இந்திய அரசு கருனாவ பொம்மை ஆக்கி வெச்சாப்புரம் கருனா சனநாயகவாதின்னு சூப்பரா ஆக்டு குடுக்குரானுவ. கருனா முசிலிமை கொன்னான்னு சொல்லரதெல்லாம் கானம போச்ச்சு.

அது செரி. அது எப்புடிங்க சிந்துலா அநபாயன் இர்ஷாத் இப்படி ஆலுங்கல்லாம் ஒங்க பதிவுலமட்டும் பின்னூட்டம் போடரானுவ. பாத்துங்க. இவனுகளே நீங்களா இருந்துடப்போரீங்கன்னு யாராச்சும் சொல்லிடப்போரானுவ. ஸ்ரீலங்கா அரசு அப்போ தயார் பண்ணி முச்லீங்கள்ன்னு காட்டற மாதிரி வெச்சிருந்த முச்லீம் ஊர்காவல்படை ஜிகாத்த பத்தியும் சொல்லி வெய்யுங்க. பொறவு யாராச்சும் இந்திய இந்துங்க நீங்க ஸ்ரீலங்காவுல முச்லீங்களோட அநியாயத்த சொல்லாம வுட்டுட்டீங்கன்னு அழுவுரா மாதிரி அழுது ஈழதமிழரோட இன்னமும் முச்லீங்களுக்கு பிரிவு பெரச்சனைன்னு ஆக்கிவெப்பாங்க. பிரிச்சூ வெச்சே ஆண்ட ஆலுங்கய்யா தமிழ்நாட்டுபூனூல்பார்ட்டி.

HISHAM said...

குறித்த பதிவில் உள்ள விடயங்கள் ஒக்டோபர் மாதம் நடந்ததால் வரலாற்றை கொஞ்சம் கவலையோடு ஒரு சாதாரண மனிதனாக திரும்பிப்பார்த்தேன்.(திரும்பிப்பார்த்ததற்கே இப்டியா) இது எந்த இனத்திற்கு நடந்திருந்தாலும் சுட்டிக்காட்ட அஞ்சமாட்டேன். ஒரு மனிதனாக இன்னொருவருடைய கண்ணீருக்கு முடிந்தால் கொஞ்சம் காது கொடுங்கள் இல்லையென்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள். ஆதரவு திரட்டும் முயற்சி அல்ல இது.
வாழ்க மனித இனம்

புலிகளை எதிர்ர்த்து அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வலைப்பதிவு உலகில் ஏன் மனம் திறப்பதில்லை எனும் எண்ணம் எப்போதும் இருந்தது. உங்கள் பதிவினைப் பார்ப்பதற்கு முன்.