நேபாள மக்களின் புதிய கடவுளாக மூன்று வயது சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிற்பகல் 6:33 Hisham Mohamed - هشام 6 Comments


நேபாளம், காத்மண்டு மக்களின் நம்பிக்கை படி வழக்கமாக பெண் சிறுமிகளைதான் தெய்வமாக தெரிவு செய்து வணங்கி வருகிறார்கள். இவர்களை குமாரி என்று அழைப்பார்கள். 2 முதல் 4 வயது வரையான சிறுமிகள் கடவுள் தேர்வில் கலந்து கொள்வார்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படும் சிறுமிகள் இறுதிகட்ட தேர்வில் சித்தியடைந்தால் கடவுளாகும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அது அவ்வளவு இலகுவானதல்ல ஒரு அறையில் இரவு முழுவதும் இருக்க வேண்டும் அங்கே ஆட்டுத்தலைகளும் மாட்டுத்தலைகளும் வைக்கப்பட்டிருக்கும். குறித்த சிறுமி பருவ வயதை அடையும் போது புதிய கடவுளை தேடும் பணி தொடங்கும்.


சகல தேர்வுகளிலும் சித்தியடைந்து 3 வயது சிறுமி ஒருத்தி கடவுளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் தன்னுடையை பெற்றோரை விட்டு பிரிந்து குறித்த ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்பது தான் விதி இதனால் சிறுமியின் தந்தை atap Man Shaky குறிப்பிடுகையில் கொஞ்சம் கவலையாக இருந்தாலும் தன்னுடைய மகள் கடவுளாக போற்றப்படுவதை நினைத்து பெருமைப்படுகிறார். கடவுளாக போற்றப்படும் சிறுமி சிவப்பு நிற ஆடைகளை மாத்திரமே அணிய முடியும்.


குஷ'பு, எம் ஜி ஆர் இப்படி நிறைய பேருக்கு கோயில் கட்டி வழிபடும் போது இது சாதாரண விடயம். அவர்களுடைய நம்பிக்கை காலகாலமாக இப்படித்தான் இருக்கு என்ன செய்வது.............


நன்றி - msnbc

6 COMMENTS:

http://sivasinnapodi1955.blogspot.com/

tamilraja சொன்னது…

வினோதமான பழக்கங்களுக்கு
இன்னும் உலகம் முழுதும்
மனிதர்கள் ஆட்பட்டே இருக்கிறார்கள்!

Hisham Mohamed - هشام சொன்னது…

சின்னப்பொடி நல்லா இருக்கு உங்க கருத்து........

Thanks for the Information.

பெயரில்லா சொன்னது…

wow! Very useful information to know, but I have heard from one of my Nepali friends that they will choose the "Kumari" every year and during that period she cannot go outside of the palace as well as she cannot get marriage.

பெயரில்லா சொன்னது…

//குஷ'பு, எம் ஜி ஆர் இப்படி நிறைய பேருக்கு கோயில் கட்டி வழிபடும் போது இது சாதாரண விடயம். //
நிச்சயமாக. பாராட்டுகள்.