மிமிக்கிரி கலைஞர்களை மிஞ்சும் மைனா

12:27 Hisham Mohamed - هشام 0 Commentsசீனாவின் அட்டகாசமான 2 கிளிகளை அடக்கிய மைனா.பொதுவாக மைனாக்களுக்கு இயற்கையில் இறைவன் கொடுத்த ஒரு வரம் மிமிக்ரி. கிளிகளை பொறுத்தமட்டில் சொன்னதையே திருப்பிச் சொல்லும். இனி நடந்த சம்பவத்தை படிங்க.
சீனாவின் ஜியாங் நன்ஜிங் என்பவர் பறவைகளை வியாபராத்திற்காக வளர்த்து வருகிறார்.அண்மையில் ஒரு மைனாவை விலைக்கு வாங்கியருந்தார். ஏற்கனவே இவரிடம் 2 கிளிகள் இருந்தன அவை பயிற்றுவிக்கப்பட்டவை அதனால் அவை வாயை திறந்த மூடாது நம்ம தமிழர்கள போல. கிளிகளின் செயற்பாடு மைனாவுக்கு பெரும் தலை வலியை ஏற்படுத்தியது.
ஒரு நாள் கிளிகள் வழக்கம் போல அட்டகாசத்தை ஆரம்பிக்க எதிரில் வந்த பூனை மியாவ்னு கத்த பத்தாம் வகுப்பு ஆசிரியர பாத்த பசங்க மாதிரி அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுது கிளிகள். இதை கவனித்த மைனா பூனையை போல கத்தி கிளிகளை அடக்கி வைச்சிருக்கு. கதையல்ல நிஜம்.

0 COMMENTS: