கடன் வாங்க முதல்ல கொஞ்சம் யோசிங்கப்பா..
8:17 AM Hisham Mohamed - هشام 0 Comments
இவங்கதான் நம்ம Santa N Benjy
சென்டா வங்கியில கடன் வாங்கி ஒரு அழகான கார் வாங்கியிருந்தார். ஆன அவரு சரியான நேரத்துல வங்கி தவணைப்பணத்த கட்டுறதே இல்ல. இதனால வங்கி அந்த காரை பறிமுதல் செய்தது. ரெர்மப கவலயா இருந்த சென்டாக்கு ஆறுதலா நாலு வர்த்த சொல்ல ஆசப்பட்டாரு அவரோட தோஸ்து பென்சி.
பென்சி : என்னடா சென்டா இப்படி ஆச்சு கவலைப்படாத.....
சென்டா : நான் ஒன்னும் அதுக்கு கவலைப்படல
பென்சி : பின்ன
சென்டா : வங்கி இப்படி செய்யும்னு தெரிஞ்சிருந்தா ஏன் கல்யாணத்துக்கும் கடன் வாங்கியிருப்பேன்.
நன்றி - SmsGuru
Hisham :கல்யாணத்துக்கு முதல்ல கொஞ்சம் யோசிங்க
காரியாலயங்களில் பணிபுரியும் நண்பர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்...
5:45 AM Hisham Mohamed - هشام 1 Comments
காரியாலயங்களில் பணிபுரியும் போது நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் ஏராளம். இதன் மூலம் உங்களுக்கு பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படலாம் ஜலதோஷம், காய்ச்சல், தடிமண் என்று அடிக்கிக்கொண்டே போகலாம்.
Puff ஆய்வு மையம் 35 முதல் 49 வயதெல்லைக்குட்பட்டவர்களிடம் அண்மையில் ஓர் ஆய்வை நடத்தியது. ஆய்வின் முடிவில் காரியாலயங்களில் அதிகம் நோய் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து தொலைபேசியின் Telephone Handset இல் இருப்பது தெரிய வந்தது இது 45% ஆகும். அதற்கடுத்த படியாக wash Sink 35%, மின் ஏற்றப்பொறி Elevator Button 18%. எஞ்சிய 7% ஏனைய காரணங்களினாலும் ஏற்படுகிறது. காரியாலயங்களின் பொதுவான பயன்பாட்டு Computer Keyboard மூலமும் நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.
அப்புறம் சொல்லலன்னு சொல்லக்கூடாது..............
நன்றி - UsaToday
85 வயது ஓய்வூதியக்காரர் கடவுளின் அழைப்பிற்காக வீதி ஓரத்தில் சந்தோசமாக........
10:14 AM Hisham Mohamed - هشام 2 Comments
ஹங்கேரியாவைச் சேர்ந்த 85 வயது நிரம்பிய சர்மாஸ் தன்னுடைய வாழ் நாளில் தான் சேமித்த பணம், சொத்து மற்றும் வீடு வாசல் அனைத்தையும் சிறுவர்களின் நலனுக்காக கொடுத்துவிட்டு வீதியில் வசிக்கிறார்.
கார்ட் போர்ட் பெட்டியில் கட்டி அதில் வசிக்கும் இவர் தானமாக கொடுத்த பணத்தில் சிறுவர் இல்லத்தில் x-tray கருவியும் இதய scanning கருவியும் வாங்கப்பட்டிருக்கிறது. மேலும் இவர் கடமை புரிந்த இடத்தில் 100000 ஸ்ரேலிங் பவுணை சிறுவர் நிதியத்திற்கு சேகரித்துக்கொடுத்திருக்கிறார்.
சர்மாஸ் : "அந்த சிறுவர்கள் முழழுமையாக தங்களுடைய வாழ்க்கையை வாழ முடியாமல் தவிப்பதை நினைத்து கவலைப்படுகிறேன். நான் 85 வருடங்கள் வாழ்ந்துவிட்டேன் இது அவர்களுடைய சந்தர்ப்பம். இதனால் நான் கஷடப்படுவதை நினைத்து வருந்தவில்லை என் ஒருவனின் கஷ;டத்தில் ஆயிரம் சிறுவர்கள் சிரிக்கிறார்கள்". என்கிறார் அந்த நல்ல மனசுக்காரர்.
இப்படியும் நல்லவங்க இருக்கிறதாலதான் கொஞசம் மழை பெய்யுது.
வன்முறைகளை தூண்டும் தமிழ் சினிமா.....
6:22 AM Hisham Mohamed - هشام 1 Comments
தமிழ் சினிமா எதிர் காலத்தில் ரவுடி, போக்கிரி, கெட்டவன், பொல்லாதவன் போன்ற பல நல்லவர்களை உருவாக்க போகிறது.
சங்கர், மணிரத்னம் போன்றோரின் வீட்டில் அடுப்பெரிக்க முழு இந்தியாவிலும் ஏன் இலங்கையில் சில முட்டாள்கள் வாழும் இடங்களிலும் இருந்துதான் நெருப்பெடுக்க வேண்டுமா?
என்னுடைய தளத்திலும் சரி என்னுடைய ஊடகத்துறை வாழ்க்கையிலும் சரி வன்முறைகளை தூண்டும் தமிழ் சினிமாவிற்கு தெரியாமலும் நான் இடம் கொடுத்ததில்லை. கொடுக்கப்போவதுமில்லை. உயிர் கொல்லும் புற்று நோயை விட இது கொடுமையானது ஊடக்த்துறையின் தர்மம் தெரிந்தவர்களுக்கு இது நன்றாகத்தெரியும்.
அண்மைக்காலமாக நல்ல சில தமிழ் திரைப்பட கதைகள் முட்டாள்களின் தேவை உணர்ந்தும் இலாபநோக்கத்திற்காகவும் வன்முறைகள் சேர்க்கப்படுகின்றன தமிழ் சினிமாவில் அதற்கு நல்ல உதாரணம் சுப்ரமணியபுரம். எப்படி தந்திரமாக கொலை செய்வது என்று பாடம் கற்பித்தது 'நேபாளி". எந்த ஒரு நடிகரையும் இதற்கு விதிவிலக்காக சொல்ல முடியாது சூப்பர் நடிகர் முதல் தளபதிகள் தலைகள் எல்லா கலைஞானிகளும் வன்முறையெனும் சாக்கடைக்கு விளம்பரம் செய்பவர்கள்தான்.
தற்போதைய தமிழ் சினிமாவின் போக்கை யாராவது ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கிறார்களா?
இந்த கொடிய ஆட்கொல்லி கிருமியின் தாக்கத்தை இப்பொழுது தமிழகமும் தமிழர்களும் உணரப்போவதில்லை அதற்கு கொஞ்சம் காலம் தேவை ஏனென்றால் இன்னும் நிறைய கலைஞானிகள் டாக்டர் பட்டத்திற்காகவும் கலைமாமணி பட்டத்திற்காகவும் காத்திருக்கிறார்கள் பாவம் அவர்களும் விருதினை பெறு;றுக்கொள்ளட்டுமே. ஆனால் இறுதியில் எஞ்சப்போவது வன்முறை மட்டும்தான். இதற்கு நல்ல உதாரணம் வடிவேல் எதிர் விஜயகாந்த். குறித்த சவர்க்கார விளம்பரங்களில் தோன்றுபவர்கள் தங்களின் பாவனைக்கு அதை பயன்படுத்துவதில்லை(அவர்கள் குளிப்பதேயில்லை) ஆனால் கயிறு தெரிய பறந்து பறந்து அடிக்கும் விஜயகாந்தும் நகைச்சுவை நடிகரும் நிஜமான நடிகர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இது ஆட்கொல்லியின் ஆரம்பகட்டம் மட்டுமே.(மெயன் பிக்சர இன்னும் நீங்க பாக்கல) 'கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று சொல்லி மாபெரும் தேசத்தின் சுதந்திரப் போரே அமைதியான வழியில் அன்று ஒரு முடிவுக்கு வந்தது அந்த அஹிம்சாவாதியின் திருமுயற்சியால். ஆனால் இன்று அதே தேசத்திலே, கத்தியின்றி இரத்தமின்றி சினிமாப் படம் வெளிவருவதில்லை.
தற்போது வெளிவரும் பெரும்பான்மையான தமிழ்த் திரைப்படங்களில் 'அரிவாள்'தான் அதிகாரப்பூர்வமற்ற கதாநாயகன். படம் ஆரம்பிக்கும்போதே, கொலைக்காரக் கும்பல் ஒன்று அரிவாளோடு யாரையோ இருட்டில் துரத்துவது போலவும், இடையிடையே பன்றிக்கூட்டங்கள் பயந்து ஒதுங்குவது போலவும் காட்டி நம்மை மிரட்சியடையச் செய்து, ஓடிக்கொண்டிருக்கும் உதிரத்தை ஒரு நொடியிலேயே உறையச் செய்துவிடுகிறார்கள். மனிதனைக் கத்தியால் குத்துவதை அப்படியே ஒளிவு மறைவின்றி பச்சை பச்சையாகக் காட்டுகிறார்கள். காட்சிக்குச் காட்சி பச்சை இரத்தம் பரிமாறுகிறார்கள்.
வெள்ளை மனம்' கொண்ட அந்தக் கிராமத்தவர்களை, ஏதோ நித்தம் நித்தம் இரத்தத்திலே ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பவர்களாகச் சித்தரிக்கும் காட்சிகள் நியாயமா?
ஹீரோவும், ஹீரோயினும் தங்களின் பால்ய வயதிலேயே ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதைக் காட்டுவதற்காக, கடலை பிடுங்கி சாப்பிடுவது, பம்பரம் விடுவது போன்ற என்றுமே நெஞ்சில் இனிக்கும் காட்சிகளைக் காட்டி சிறியவர், பெரியவர் என எல்லோரையும் கவர்ந்து இழுத்து அமரவைத்து, தடாலடியாக கத்திக் குத்துக் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். எண்ணற்ற படங்களில் அதன் உக்கிரக் காட்சிகளில் எல்லாம் வக்கிரம் தொனிக்கிறது.
வன்முறைக்காவியத்திற்கு விருதுகளை அள்ளிக்கொடுப்பது சரியா?
கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் மல்லாந்து கிடக்கும் கதாநாயகியை, 4 பேர் மாறி மாறிக் கற்பழிக்கும் காட்சியை (படம்: பருத்தி வீரன்) முழுவதுமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே, எப்படித்தான் நாமெல்லாம் அதைக் கண்விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ? இது வன்முறைக்குத் துணை போவதாகாதா? ஒரு படத்தைவிட மறு படத்தில் அதிகமான வன்முறை இருக்கவேண்டும் என்று இயக்குநர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு விதியை வகுத்துக்கொண்டு செயல்படுவதுபோல் தெரிகிறது. 'ரொம்ப நல்ல படம்' என்று விமர்சிக்கப்பட்ட 'வெயில்' படமும் இந்த வன்முறையின் வக்கிரத்திலிருந்து தன்னை விலக்கி நிறுத்திக் கொள்ளவில்லை. இப்படி எத்தனையோ சமீபத்திய படங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பதிவு செய்ய இடம்தான் போதாது!
சினிமா ஒரு பொழுதுபோக்காம். அடுத்தவனைப் 'போட்டுத் தள்ளுவது' எப்படி என்று வெள்ளித் திரையிலே மணிக்கணக்கில் போட்டுக் காட்டுகிறார்களே, அதைப் பச்சைக் குழந்தைகளைப் பக்கத்திலே வைத்துக்கொண்டு குடும்பத்தோடு அமர்ந்து பார்த்துவிட்டு, அங்கே திரையிலே பரிமாறப்படும் அந்தப் பச்சை இரத்தத்தை நாமும் பருகிவிட்டு அந்தப் பச்சைக் குழந்தைகளுக்கும் ஊட்டிவிட்டு வருகிறோமே, அதுதான் பொழுதுபோக்கா?
சினிமா எடுப்பவர்களைவிட அதனைப் பார்ப்பவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். இரத்தக் கறை படிந்த இதுபோன்ற படங்களையே பார்த்துவிட்டு, ஒன்றுக்குமே உதவாத சில மசாலாப் படங்களைப் பார்க்கும்போது, 'அப்பாடா... இது பரவாயில்லை' என்று தோன்றுகிறது. ஆதலால் படைப்பாளிகளே, நீங்கள் ஒன்றும் கருத்துச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை 'வன்முறை' இருக்கக்கூடாது என்று ஒரு 'வரைமுறை'யை ஏற்படுத்திக்கொண்டு படம் எடுங்கள்! இப்போதைக்கு அது போதும்.
சினிமா எடுப்பவர்களைவிட அதனைப் பார்ப்பவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். இரத்தக் கறை படிந்த இதுபோன்ற படங்களையே பார்த்துவிட்டு, ஒன்றுக்குமே உதவாத சில மசாலாப் படங்களைப் பார்க்கும்போது, 'அப்பாடா... இது பரவாயில்லை' என்று தோன்றுகிறது. ஆதலால் படைப்பாளிகளே, நீங்கள் ஒன்றும் கருத்துச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை 'வன்முறை' இருக்கக்கூடாது என்று ஒரு 'வரைமுறை'யை ஏற்படுத்திக்கொண்டு படம் எடுங்கள்! இப்போதைக்கு அது போதும்.
ஒரு வரிக்குள் இருக்கும் மறைந்த அர்த்தம்..
5:57 PM Hisham Mohamed - هشام 0 Comments
கம்பனிகள், உயர் அதிகாரிகள் உங்களுக்கு சொல்லும் சில விடயங்களில் மறைந்திருக்கும் சில உள் அர்த்தங்கள்.
One liners -- Hidden meanings in Company talk
Today's Professional Management FUNDAS
1."We will do it" means "You will do it"
Today's Professional Management FUNDAS
1."We will do it" means "You will do it"
2."You have done a great job" means "More work to be given to you"
3."We are working on it" means "We have not yet started working on the same"
4."Tomorrow first thing in the morning" means "Its not getting done "At least not tomorrow!"
5."After discussion we will decide-I am very open to views" means "I have already decided, I
will tell you what to do"
6."There was a slight miscommunication" means "We had actually lied"
7."Lets call a meeting and discuss" means "I have no time now, will talk later"
8."We can always do it" means "We actually cannot do the same on time"
9."We are on the right track but there needs to be a slight extension of the deadline" means "The project is screwed up, we cannot deliver on time."
10."We had slight differences of opinion "means "We had actually fought"
11."Make a list of the work that you do and let's see how I can help you" means "Anyway you have to find a way out no help from me"
12."You should have told me earlier" means "Well even if you told me earlier that would have made hardly any difference!"
13."We need to find out the real reason" means "Well I will tell you where your fault is"
14."Well Family is important; your leave is always granted. Just ensure that the work is not affected," means, "Well you know..."
15."We are a team," means, "I am not the only one to be blamed"
16."That's actually a good question" means "I do not know anything about it"
17."All the Best" means "You are in trouble"
************
************
செல்போனால் ஆண்மை பாதிப்பு?
5:39 PM Hisham Mohamed - هشام 0 Comments
தகவல் தொழில்நுட்பத் துறையும், தொலைத்தொடர்புத் துறையும் வேகமாக வளர்ச்சியடைந்து பல்கிப் பெருகி விட்ட இக்காலத்தில் செல்போன் உபயோகிக்காதவர்களே இல்லை எனலாம்.
ஆண்களைப் பொருத்தவரை செல்போன்களை இடுப்பு பெல்டில் அணியும் கவரிலோ அல்லது பேண்ட்-சட்டை பாக்கெட்டிலோ செல்போன்களை வைத்துக் கொள்கிறார்கள்.
சிலர் செல்போன்களை எடுக்காமல் காதில் ஹியரிங் ஹெட் கருவியைப் பொருத்திக் கொண்டு மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பவர்களையும் பார்க்கிறோம்.
பொதுவாக ஆண்கால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 மணி நேரம் வரை செல்போனில் பேசுகிறார்கள். பாக்கெட்டில் வைத்தபடியே செல்போனில் பேசுவதால், ஆண்மைக்குறைவு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
நல்ல உடல் நலத்துடன் கூடிய ஆரோக்கியமான ஆண்கள் 23 பேரிடமும், ஆண்மைக்குறைவு பிரச்சினை இருப்பவர்கள் 9 பேரிடமும் உயிரணுக்கள் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த விந்தணுக்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உயிரணுக்களை செல்போன்களில் இருந்து வரக்கூடிய 850 மெகாஹெர்ட்ஸ் ரேடியேஷனுக்கு உட்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், செல்போன் அதிர்வலைகளால் உயிரணுக்கள் பாதிப்புக்குள்ளாவது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த ஆய்வை நடத்திய அசோக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
உயிரணுக்கள் நகரும் தன்மை, அவற்றின் வீரியத் திறன், மூலக்கூறு மாற்றம் போன்றவை பற்றியும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 6 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனவே ஆண்களே உஷார் ! செல்போன்களை எடுத்து காதில் வைத்துப் பேசுங்கள். ஹியரிங் போன்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பாருங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்!!
ஆண்களைப் பொருத்தவரை செல்போன்களை இடுப்பு பெல்டில் அணியும் கவரிலோ அல்லது பேண்ட்-சட்டை பாக்கெட்டிலோ செல்போன்களை வைத்துக் கொள்கிறார்கள்.
சிலர் செல்போன்களை எடுக்காமல் காதில் ஹியரிங் ஹெட் கருவியைப் பொருத்திக் கொண்டு மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பவர்களையும் பார்க்கிறோம்.
பொதுவாக ஆண்கால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 மணி நேரம் வரை செல்போனில் பேசுகிறார்கள். பாக்கெட்டில் வைத்தபடியே செல்போனில் பேசுவதால், ஆண்மைக்குறைவு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
நல்ல உடல் நலத்துடன் கூடிய ஆரோக்கியமான ஆண்கள் 23 பேரிடமும், ஆண்மைக்குறைவு பிரச்சினை இருப்பவர்கள் 9 பேரிடமும் உயிரணுக்கள் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த விந்தணுக்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உயிரணுக்களை செல்போன்களில் இருந்து வரக்கூடிய 850 மெகாஹெர்ட்ஸ் ரேடியேஷனுக்கு உட்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், செல்போன் அதிர்வலைகளால் உயிரணுக்கள் பாதிப்புக்குள்ளாவது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த ஆய்வை நடத்திய அசோக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
உயிரணுக்கள் நகரும் தன்மை, அவற்றின் வீரியத் திறன், மூலக்கூறு மாற்றம் போன்றவை பற்றியும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 6 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனவே ஆண்களே உஷார் ! செல்போன்களை எடுத்து காதில் வைத்துப் பேசுங்கள். ஹியரிங் போன்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பாருங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்!!
மிமிக்கிரி கலைஞர்களை மிஞ்சும் மைனா
12:27 PM Hisham Mohamed - هشام 0 Comments
சீனாவின் அட்டகாசமான 2 கிளிகளை அடக்கிய மைனா.பொதுவாக மைனாக்களுக்கு இயற்கையில் இறைவன் கொடுத்த ஒரு வரம் மிமிக்ரி. கிளிகளை பொறுத்தமட்டில் சொன்னதையே திருப்பிச் சொல்லும். இனி நடந்த சம்பவத்தை படிங்க.
சீனாவின் ஜியாங் நன்ஜிங் என்பவர் பறவைகளை வியாபராத்திற்காக வளர்த்து வருகிறார்.அண்மையில் ஒரு மைனாவை விலைக்கு வாங்கியருந்தார். ஏற்கனவே இவரிடம் 2 கிளிகள் இருந்தன அவை பயிற்றுவிக்கப்பட்டவை அதனால் அவை வாயை திறந்த மூடாது நம்ம தமிழர்கள போல. கிளிகளின் செயற்பாடு மைனாவுக்கு பெரும் தலை வலியை ஏற்படுத்தியது.
ஒரு நாள் கிளிகள் வழக்கம் போல அட்டகாசத்தை ஆரம்பிக்க எதிரில் வந்த பூனை மியாவ்னு கத்த பத்தாம் வகுப்பு ஆசிரியர பாத்த பசங்க மாதிரி அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுது கிளிகள். இதை கவனித்த மைனா பூனையை போல கத்தி கிளிகளை அடக்கி வைச்சிருக்கு. கதையல்ல நிஜம்.
திருட்டு கும்பல் ஒன்றை உருவாக்கி கோடீஸ்வரராக அரிய வாய்ப்பு
11:34 AM Hisham Mohamed - هشام 0 Comments
உங்க திருட்டு வியாபாரம் ரொம்ப வீக்கா இருக்கா? ஊழியர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கா? இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்.
உங்க திருட்டு கும்பலுக்கு சம்பளமே இல்லாம சாப்பாட்டு செலவும் இல்லாம ஒரு கூட்டத்த உருவாக்குங்க. அதுக்கு மிருகங்களும் பறவைகளும் உங்களுக்கு உதவி செய்யப்போகுது ஆனால் சிறந்த பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் புத்திசாலித்தனமாக செயற்படக்கூடிய சில விலங்குகள் ஓநாய், கழுகு, கரடி. இவை நன்றாக திருடக்கூடியவை. இவற்றையெல்லாம் மிஞ்சிய ஒருவர் இருக்கிறார் காகம் பிரகாசமான பொருட்களை கண்டால் திருடும். பழக்கினால் உங்களை விட நன்றாக திருடும். இதனால் ஒரு சில நாடுகளில் காகத்தை செல்லப்பிரணியாக வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
நன்றி : ஆவுஸ்திரேலிய இணையத்தளம்
3 சங்கடமான தருணங்கள் - மிஸ் பண்ணாதிங்க
6:06 AM Hisham Mohamed - هشام 0 Comments
உலகின் கருத்து கணிப்பு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் உலகின் சங்கடமான தருணங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த நிகழ்வுகள்.
3வது இடம் - அதிர்ச்சியான பார்ட்டி
18வது பிறந்த தினத்துக்கு முதல் நாள் வீட்ல இருக்காரு நம்ம கதையின் நாயகன். வீட்ல உள்ளவங்க ஈவ்னிங் வெளியில போனதால தன்னோட காதலிய வீட்டுக்க அழைச்சு ஜில்லுனு ஒரு மாலைப்பொழுத கழிக்க காதலிக்கு அழைப்பு விடுத்தாரு பாருங்க. அதுகப்பறம் என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கு தெரியாதா? விஷயத்துக்கு வாங்க மேல் மாடியில உல்லாசமா இருக்கும்போது கீழ் மாடியில் தொலைபேசி அடிக்க அத அவசரமா ஆதம் உடையில இருந்த ஜோடி வந்து எடுக்கும் போது எல்லா விளக்குகளும் திடீர்னு எரிய குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் "Surprise Wish u a happy Birthday" கத்திட்டு சைலன்ட் ஆகிட்டாங்களாம்.
அதுக்கப்புறம் அவங்க குடும்பத்துல யாரும் யாருக்கும் Surprise கொடுக்கிறதில்ல..
2வது மேட்டர சொல்றதுக்கு முன்னால உங்க கருத்த சொல்லுங்க
சீனாவில் 90 வயது தாத்தா சாதனை.
2:24 PM Hisham Mohamed - هشام 1 Comments
சீனாவைச் சேர்ந்த 90 வயது தாத்தா இன்னும் 30முதல் 40 அடி உயரமான மரங்களில் ஏறுகிறார். சிறுவயதில் வயிற்றுப்பிழைப்பிற்காக ஆரம்பித்ததால் அதை விட அவருக்கு மனம் இல்லையாம். இப்பொழுது உயரமான மரங்களில் ஏறுவதற்கு குடும்பத்தார் தடை விதித்திருகிறார்கள்.
Success! The world hasn't ended
10:58 AM Hisham Mohamed - هشام 0 Comments
Thanks to thesun & ReutersWE are all still here!
GENEVA (Reuters) - International scientists celebrated the successful start of a huge particle-smashing machine on Wednesday which aims to simulate the conditions of the "Big Bang" that created the universe.Experiments using the Large Hadron Collider (LHC), the biggest and most complex machine ever made, could revamp modern physics and unlock secrets about the universe and its origins.The project has had to work hard to deny suggestions by some critics that the experiment could create tiny black holes of intense gravity that could suck in the whole planet.Such fears spurred huge public interest in advanced physics ahead of the start up of the 10 billion Swiss franc ($9 billion) machine, which proceeded smoothly on Wednesday morning.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
About me
Sri Lanka's National Award Winning Tamil TV Anchor Hisham.M, Head of programming at Varnam TV, Sri Lanka. Passionate about Journalism, Travel and helping others lead more creative lives.
பதிவுகள்
-
►
2017
(14)
- ► செப்டம்பர் (2)
-
►
2009
(31)
- ► செப்டம்பர் (2)
-
▼
2008
(38)
-
▼
செப்டம்பர்
(16)
- நாராயணன் துணிந்து தமிழ்க்கொலை புரிய களம் அமைத்து க...
- கடன் வாங்க முதல்ல கொஞ்சம் யோசிங்கப்பா..
- காரியாலயங்களில் பணிபுரியும் நண்பர்கள் அவசியம் அறிந...
- 85 வயது ஓய்வூதியக்காரர் கடவுளின் அழைப்பிற்காக வீதி...
- வன்முறைகளை தூண்டும் தமிழ் சினிமா.....
- ஒரு வரிக்குள் இருக்கும் மறைந்த அர்த்தம்..
- செல்போனால் ஆண்மை பாதிப்பு?
- அன்புள்ள நண்பர்களுக்கு
- மிமிக்கிரி கலைஞர்களை மிஞ்சும் மைனா
- திருட்டு கும்பல் ஒன்றை உருவாக்கி கோடீஸ்வரராக அரிய ...
- எதிர்காலம் இன்றே
- 3 சங்கடமான தருணங்கள் - மிஸ் பண்ணாதிங்க
- இது நிஜமா ஓவியம்தான் நம்புங்க.
- ஸ்பெய்ன் பிச்சைக்காரர்கள்.
- சீனாவில் 90 வயது தாத்தா சாதனை.
- Success! The world hasn't ended
-
▼
செப்டம்பர்
(16)
Popular Posts
-
ஆபிரஹாம் லிங்கன் தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உழைத்துச் சம்பாதிக்கும் ஒரு டாலர் , உழைக்காமல் சம்பாதிக்கும் ஐந்து டாலரை...
-
அன்பான நண்பர்களே, நமது வாழ்க்கையில் எல்லாமே ஒரு காரணத்தோடுதான் நடக்கிறது. இந்த ரகசியத்தை புரிந்துகொள்கிறவர்கள் சிகரம் தொடுகிறார்கள். பல சந்...
-
விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட உதவும் கருவியாக மனக்கண்ணில் காட்சிப்படுத்தல் நுட்பம் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சவால்களை...
பின்பற்றுபவர்கள்
Blogger இயக்குவது.
1 COMMENTS:
கருத்துரையிடுக