ஜனவரி 28, ஏன்பா ஜன்னல் ஓரத்துல கறுப்பு நிறத்துல என்ன அது?

PM 9:47 Hisham Mohamed - هشام 6 Comments

இதே போல ஒரு ஜனவரி 28ம் திகதி ஆனால் 2008ம் ஆண்டு.

வெற்றி FM இல் நான் இணைந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. ஜனவரி 28ம்திகதிதான் வெற்றியில் உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டேன். சிகரங்கள் உருவான இலங்கை வானொலிக்கு குட்பாய் சொன்னாலும் அங்கே எனக்கு ஒலிபரப்பை கற்றுக்கொடுத்தவர்களை அன்போடு ஞாபகப்படுத்திக்கொள்கிறேன். வெற்றி நிகழ்ச்சிகளை அவ்வப்போது அவர்கள் கேட்டுவிட்டு என்னை வாழ்த்தவும் திருத்தவும் மறப்பதில்லை.

என் ஒலிபரப்பு வாழ்க்கையில் முக்கியமான நாள் ஜனவரி 28ம்திகதி 2008. 99.6 FM பண்பலையின் பரீட்சார்த்த ஒலிபரப்பை நடத்திய வெற்றி வானொலியில் முதல் நாள் கடமையை சந்தோசமாக ஆரம்பித்தேன்.

காலைப்பொழுது நிறுவனத் தலைவரிடமிருந்து வெற்றி வானொலியின் உதவி முகாமையாளராக பொறுப்பேற்றுக்கொண்டேன். அவர் வெற்றி வானொலியின் நோக்கங்களை தெளிவாக விளக்கியதற்கு பிறகு நிறுவன அதிகாரிகள் அறிமுகம் என்று வழமையான நிறுவன நடைமுறைகள். அன்று நான கடமையில் இணைந்த போது எமது நிறுவனத்தில் கிட்டத்தட்ட 90 பேர் பணிபுரிந்தார்கள். ஆனால் இப்பொழுது 150 ஜ தொடுகிறது பணியாளர் எண்ணிக்கை. அப்பொழுது வெற்றி வானொலிக்காக யாரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சில வாரங்கள் வரை நான் பம்பரம் போல சுழல வேண்டி இருந்தது. ஒரு வானொலிக்கு இருக்க வேண்டிய எந்தவொரு விடயமும் இருக்கவில்லை கலையகம், ஒலிவாங்கி என்று ஆரம்பித்து பட்டியலிடலாம். அதன் பிறகு பல நியமனங்கள் உருவாகி வெற்றிக்குழு உருவானது. ஆரம்பித்ததிலிருந்து எம்மோடு இணைந்திருக்கும் அறிவிப்பாளர்களுக்கும் நேயர்களுக்கும் வெற்றியின் ஒவ்வொரு வளர்ச்சி படியும் நன்கு புரியும். வெற்றி வானொலி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தியை கொண்டாட இருக்கும் இந்த தருணத்தில் அதன் வெற்றியில் கைகோர்த்து நிற்கும் அன்பான நேயர்களை என்றும் மறப்பதற்கில்லை. ஆரம்பித்த நாட்களில் இருந்தே வெற்றி வானொலியை நேசிக்கும் அன்பு உள்ளங்கள் உலகெங்கிலும் இருக்கிறர்கள்.

கடவுளுக்கு பிறகு நான் நன்றி சொல்லவேண்டியவரை பெயரளவிலும் குறிப்பிட முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

நண்பர்களின் வாழ்த்துக்களோடு என் பணி தொடர இறைவன் அருள் புரிய வேண்டும்.


OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO


நான் தேநீரில் மிதந்த மாலைப்பொழுதில் அம்மா ஒரு கதை சொன்னாங்க. ஒரு வயது முதிர்ந்த அப்பா தன் மகன் லெப்டொப்பில் ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருந்ததை பெருமையாக பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்பா என்கிற அந்தஸ்து வந்த பிறகு தன் மகன் தான் அனுபவித்த துயரங்களில் ஒரு துளியேனும் அனுபவிக்ககூடாது என்று எண்ணுகிறவர். தோளுக்கு மேல வளர்ந்தாலும் அவன் வீடு சேரும் வரை அந்த அப்பாவிற்கு இருக்கிற ஏக்கத்தையும் தவிப்பையும் அப்பா என்று நீங்கள் அழைக்கப்படும் போது தான் உணரமுடியும். கதைக்கு வாங்க தீடீரென்று ஜன்னலோரத்தில் ஏதோ ஒன்று கறுப்பு நிறத்தில் அமர்ந்தது போல கண் பார்வை இழந்த அந்த அப்பா உணர்ந்தார். உடனே மகனிடம் '' ஏன்பா அது என்ன ஜன்னலோரத்துல'' என்று கோட்டார். மகன் ''காகம்'' என்று முதல் முறை பதில் சொன்னானாம். காது கேட்கும் திறனை இழந்ததால் மீண்டும் அந்த தந்தை '' ராஜா அது என்ன கறுப்பு நிறத்துல ஜன்னல் ஓரத்துல:'' என்று கேட்க கொஞ்சம் சினம் கொண்டவனாய் ''காகம் '' என்று அழுத்தி பதில் சொன்னான். மீண்டும் சொற்ப நேரத்தில் அந்த தந்தை '' மகன் அது என்ன கறுப்பு நிறத்துல ஜன்னல் ஓரத்துல'' என்று கேள்வி எழுப்ப பெரும் கோபத்துடன் அந்த மகன் '' ஜயோ அப்பா அது காகம் காகம்'' என்று கத்தத் தொடங்கினான். இருந்தும் அந்த தந்தைக்கு ஜன்னலோரத்துல கறுப்பு நிறத்துல இருக்கிறது என்னவென்று புரியவில்லை. நடந்தவற்றை சமையலறையில் இருந்து அவதானித்துக்கொண்டிருந்த தாய் ஒரு பழைய டயரியுடன் அந்த மகனை நோக்கி வந்தாள். அந்த அம்மா மகனை பார்த்து '' இதுல பெப்ரவரி 10ம் திகதியை திருப்பிப்பார்'' என்று சொன்னதும் காற்றில் பறந்த காகிதங்கள் 10ம் திகதியில் போய் நிற்க அதில் அந்த தாய் எழுதியிருந்தது. ''மூத்தவன் கதைக்க ஆரம்பித்து ஒரு சில வாரங்கள். அவனுக்கு ; அம்மா, ப்ப்பா, என்னது என்று தெரிந்தது ஒரு சில வார்த்தைகள்தான். அன்று என் கணவர் ஜன்னலோரத்தில் என் செல்லக்குட்டியை தூக்கிக்கிட்டு நின்று கொண்டிருந்தபோது ஒரு காகம் ஜன்னலோரத்தில் அமர்ந்தது அப்போ மகன் அவரிடம் 28 தடவைகள் அது என்ன? அது என்ன? அது என்ன, என்று கேள்வி கேட்டான். ஒரு தடவைக்கூட சலிப்பு தட்டாதவறாய் சிரித்துக்கொண்டே காகம் என்று பதில் சொன்னார்''.


வாழ்க்கை என்பது ஒரு வட்டம் போல சின்ன வயசுல நாங்க நடந்து கொள்கிற விதம் வயது போக போக எங்களை தொற்றிக்கொள்ளும். வயதானவர்கள் குழந்தை போலன்னு சொல்லுவாங்க. ஒரு தொழிலுக்கான நேர்முகப்பரீட்சைக்கு போனால் எத்தனை வருட அனுபவம் இருக்குன்னு கேட்பாங்க. அதுமட்டுமல்ல எந்த ஒரு துறைக்கும் பலரும் கேட்கும் முதல் விடயம் அனுபவம். ஒரு கட்டத்துக்கு மேல அனுபவமும் வாழ்க்கைக்கு உதவாமல் போகிற கொடுமை அது முதுமை. என்னதான் பத்து பிள்ளைகளை பெத்து வளர்த்திருந்தாலும் பல பெண் பிள்ளைகளை கரை சேர்த்து ஒரு குடும்பத்தையே முதுகில் சுமந்திருந்தாலும். தாத்தா என்று பேரப்பிள்ளைகள் உங்களை அழைக்கும் போது நீங்கள் குழந்தை மாதிரி.

6 COMMENTS:

kuma36 சொன்னது…

வாழ்த்துக்கள்

ARV Loshan சொன்னது…

முதல் பத்தி எனக்கும் பரிச்சயப் பட்டது.. அது பற்றி வேண்டாம்.. (இன்னும் பல அப்படியே தானே.. ;))

இரண்டாவது நெஞ்சைத் தொடுவது.. ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தாலும் மீண்டும் வாசிக்கும் போதும் மனதில் ஒரு பாரம்.. எனது வாழ்க்கை சக்கரத்தின் இரண்டாம் பாகத்தில் நான் இப்போது.. அன்று எனது தந்தை இருந்த இடத்தில் நான் இன்று.. :)

பி.கு- இன்னும் வெற்றி அத்தியாயங்கள் வருமா? ;)

Hisham Mohamed - هشام சொன்னது…

வருகைக்கும் முதல் வாழ்த்துக்கும் நன்றி கலை.

லோஷன் சார் ஒரு முகாமையாளராக உங்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள் ஏராளம் என்பதால் வெற்றியின் அத்தியாயம் வரும் ஆனாலும் வரும்.

பெயரில்லா சொன்னது…

உன்னைபோலவே உன் பதிவும் கள்ளங்கபடமற்று இருக்குது நண்பா.......
தொடரட்டும் உன் கலைப்பயணம் .

Sinthu சொன்னது…

வாழ்த்துக்கள்..

"நண்பர்களின் வாழ்த்துக்களோடு என் பணி தொடர இறைவன் அருள் புரிய வேண்டும்."
கண்டிப்பாக எங்கள் ஆதரவு உங்களுக்கும் வெற்றிக்கும் இருக்கும்..

Hisham Mohamed - هشام சொன்னது…

நன்றி பிரபா வருகைக்கும் வாழ்த்துக்கும்...

கடல் கடந்த வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி சிந்து....