பலஸ்தீன சோகக்கதைகள்.

PM 11:10 Hisham Mohamed - هشام 2 Comments

எட்டு வருட தீவிரவாதத்தின் ஓய்வில் மனிதம் விழித்திடுமா மரணிக்குமா? இறைவன் எழுதும் புதிய பதிவில் பல புதிய காதாப்பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. இந்த பதிவு ஏழைகளின் விடிவுக்கானதா? யுத்தத்தின் முடிவுக்கானதா? விடை தேடும் புதிய பயணம் இன்று (20ம் திகதி) ஆரம்பமாகிறது.

யுத்தம் கொடூரமானது. இதை வார்த்தைகளாலும் செய்திகளினாலும் உணர்ந்த எங்கள் செவிகள் உண்மைச்சம்பவங்களை அறியும் போது அதன் கொடூரத்தன்மையை நன்கு உணர்வதுண்டு.


17ம் திகதி காலைப்பொழுதில் பலஸ்தீன வைத்தியர் ஒருவர் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இஸ்ரேலிய தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் இழந்துவிட்டு பித்துப்பிடித்தது போல கதறி அழுத கொடூரத்தை தொலைக்காட்சி செய்தி வெளியட்டது.

வைத்தியர் அபு அல் அஷி வித்தியாசமான மனிதர். பலஸ்தீனில் பிறந்திருந்தும் இவர் கடமை புரிவது இஸ்ரேலிய வைத்தியசாலையில். சம்பவ தினத்தில் தன்னுடைய குடும்பத்தாரோடு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளை காஸாவில் உள்ள இவர் இல்லத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. செய்வதறியாது செய்திச் சேவை ஒன்றை தொடர்பு கொண்டு தொலைபேசி மூலம் இவர் கதறியது
'' என் இறைவா என் இறைவா'', '' உதவி செய்ய யாரும் இல்லையா''
என்றுதான்.

உடனே தொலைக்காட்சி ஊடகவியலாளர் குறித்த வைத்தியரின் இடத்தை அறிந்து கொண்டு உதவி செய்ய முற்பட்டதில் இஸ்ரேலிய தீவிரவாதிகளின் உதவியோடு பலஸ்தீனிய அம்யூலன்ஸ் வண்டி அவ்h இடத்தை அடைந்தது. இறுதியில் கோரத்தாண்டவத்திற்கு தன் மூன்று குழந்தைகளை பலி கொடுத்தவர் துடி துடித்துக் கொண்டிருந்த தன் ஒரு குழந்தையை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தார்.

யுத்த நிறுத்தம் செய்வதாக அறிவித்த தினத்தில் நடந்த கொடுமை இது. இஸ்ரேலிய மக்களுக்காக தொண்டு புரிந்த வைத்தியர் மனிதத்தை நேசித்தார் இருந்தும் என்ன பயன்? இதுதான் சமாதானமா?

இன்னும் 90 சதவீதமான இஸ்ரேலியர்கள் யுத்தத்தை ஆதரிக்கிறார்கள். 22 நாட்களாக உத்தியோகபூர்வமாக நடந்த யுத்தத்தில் பலியான பலஸ்தீன அப்பாவிகள் ஆயிரத்திற்கும் மேல்.......

மரணம் என்கிற முடிவின் போது ஞாபகப்படுத்தப்படுகிறான்.

செய்திச் சேவையின் வீடியோ காட்சி

2 COMMENTS:

பெயரில்லா சொன்னது…

Dear Hisham,

The day is not far when all those oppressors would be punished by the Almighty.

Lets pray for all the innocent victims.

Sinthu சொன்னது…

"எட்டு வருட தீவிரவாதத்தின் ஓய்வில் மனிதம் விழித்திடுமா மரணிக்குமா?"
இதுவரையும் நடந்ததை வைத்துப் பார்க்கும் பொது இதில் இரண்டுமே நடக்காது...
இது என் கருத்து மட்டுமே.... கடவுளை மட்டுமே நம்பி பல ஜீவன்கள் என்பது மட்டுமே உண்மை..