முறைதவறி பிறந்த குழந்தை

12:21 AM Hisham Mohamed - هشام 4 Comments

சனிக்கிழமை அரச தொலைக்காட்சியில் மாலை செய்தி அறிக்கையை வாசிச்சிட்டு நொறுக்குத்தீணியோட சந்தோசமா வீடு திரும்பினேன். Body wash பன்னிட்டு சூடா ஒரு காப்பி குடிக்கலாம்னு குளிக்கபோன தண்ணீ கட். சடார்னு என்னுடைய ஞாபகத்துக்கு வந்தது கொஞ்ச காலத்துக்கு முதல்ல நான் தகவல் பரிமாற்று தொலைக்காட்சியொன்றில் பார்த்த தண்ணீர் இல்லாம போனால் புத்தீஜீவிகள் என்ன செய்வார்கள் என்ற விவரணத்திரைப்படம்தான். அப்படி ஒரு நிலை வந்தா தண்ணீரைப்பொன்ற ஒரு திரவப்பதார்த்தத்தின் தேவை அதிகரிக்கும் அதை எங்கிருந்து பெறுவது. இருக்கவே இருக்கு ஒரேஞ்ச் பழச்சாறு மற்றும் பால். இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தா சூப்பர் ஸ்டாரின் கட்அவுட் இற்கு பாலாபிNஷகம் செஞ்ச மாங்கா பசங்களுக்கு கல்லடிக்க நினைக்காதா? சவரம் செய்வதற்கு ஒரேஞ்ச் பழச்சாறு ஆனால் சவரம் செய்த பழச்சாறு இன்னும் பல தேவைகளுக்கும் பயன்படும். இப்படி நினைச்சு பார்க்க முடியாத பல விடயங்கள்.

இருக்கும் போது அருமை தெரியாதுன்னு சொல்லுவாங்க இது தண்ணீருக்கு மட்டுமில்ல லியனாடோ டாவின்சி என்கிற அறிஞன் வாழ்ந்த காலத்தில் கூட அவர் சொன்ன பல கண்டுபிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இப்பொழுது ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது டாவின்சி வாழ்ந்திருக்க வேண்டிய யுகம் மாறிப்போனதாக நான் உணர்கிறேன். டாவின்சியைப்பற்றி பதிவெழுத ரொம்ப நாளாக காத்திருந்தேன். சந்தர்ப்பம் அமைந்துவிட்டது.



இத்தாலியில் ஒரு வழக்கம் பெயரோடு பிறந்த இடைத்தையும் சேர்த்தே அழைப்பார்கள். லியனாடோ இவர் வின்சி என்ற இடத்தில் பிறந்தார். வின்சியில் பிறந்ததால் டா வின்சி என்று அழைத்தார்கள். பொதுவாக லியனாடோ என்றே தன்னுடைய படைப்புகளில் பெயர் இடுவது இவரது வழக்கம். இவர் தன்னுடைய தந்தை பெயரை அதிகம் பயன்படுத்துவதில்லை அதற்கு போதிய சான்றுகள் இல்லாத வரலாறு சொல்லும் கதை லியனாடோ முறைதவறி பிறந்த குழந்தை என்பதாகும்.

மோனாலிசா ஓவியம் மூலமாக உலகப்புகழ் பெற்ற லியனாடோவை கட்டிடக்கலைஞராகவும் ஓவியராகவும் சிற்பியாகவும் பொறியியலாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் அறிந்திருக்கிறோம். லியானாடோவின் பல ஓவியங்கள் இன்றும் பல மில்லியன் டொலர்களுக்கு விற்பனைக்கு விடப்பட்டாலும் அவருக்குள் இருந்த ஓவீயங்களின் மவுசு காரணமாக நாம் அறியாத இன்னுமொரு பக்கம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இவர் ஒரு சிறந்த சிந்திக்கக்கூடிய கற்பனை கதைகளை எழுதும் திறமைப்படைத்தவர்.

வலைப்பூ யுகம் லியனாடோவின் காலத்தில் இருந்திருந்தால்?? இருப்பினும் அவருடைய படைப்புக்கள் பலவற்றை இணையதளங்களில் படிக்க கிடைப்பது சந்தோசத்தை தருகிறது.

இவருடைய சிந்தனைக்கதைகள் சிறுபிள்ளைகளுக்கான பொழுதுபோக்கு கதைகள் இல்லை. பல உள் அர்த்தங்களை கொண்ட வயது வந்தவர்களுக்கான அர்த்தமுள்ள கதைகள். நான் படித்த ஒரு கதை கொடி மரமும் பழைய கம்பும்.

சுவர்க்கத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் பசுமையான இலைகளை கொண்ட ஒரு கொடி தன்னுடன் நெருங்கி இருக்கும் ஒரு பழைய கம்பை கேவலமாக பார்த்து வருத்தப்பட்டுக்கொண்டது.

ஏய் பழைய கம்பே நீ என்னை விட்டு சற்று விலகி செல்லக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியது அந்த கொடி..

எந்த பதிலும் சொல்லக்கூடாது என்ற திடமான கொள்ளையோடு இருந்த கம்பு எதுவும் பேசவில்லை.

அடுத்ததாக அந்த கொடி தன்னை சுற்றி இருந்த முள் வேலி ஒன்றை பார்த்து நீ என்னுடைய அழகைக் கெடுக்கிறாய் உன்னால் ஒதுங்கிப்போக முடியாதான்னு கேட்டதாம்.

காதில் விழாதது போல வேலியும் தன்பாட்டில் இருந்தது.

கொடி உச்சியில் இருந்து இதை கவனித்துக்கொண்டிருந்த பல்லி கதைக்க ஆரம்பித்தது.

ஏய் அழகான கொடியே........
நீ பார்க்கலயா?
இந்த பழைய கம்பு உன்னை தாங்கிக்கொண்டிருக்கு.
இந்த முள் வேலி தீய சக்திகளிடமிருந்து சதா உனக்கு பாதுகாப்பு தருது..

இது போல ஏராளமான சிந்தனை கதைகளை லியனாடோ எழுதியிருக்கிறார். இதில் பல கதைகள் உண்மை வடிவில் இருந்து வாய்க்கு வாய் பரவி மாற்றம் பெற்று விட்டன.
(உங்க கிட்னியை தட்டி ஒரு சிந்தனையை பின்னூட்டமா போடுங்க.....)

இவருடைய சிந்தனை கதைகளை படிக்க ஆசைப்படுபவர்களுக்காக... லியனாடோவின் கற்பனை கதைகள்.

தண்ணீ வருது குளிச்சிட்டு வாரேன். அடுத்த பதிவில் சந்திப்போம்.

4 COMMENTS:

Sinthu சொன்னது…

'லியனாடோவின் கற்பனை கதைகள்."
thanks for that you gave the link....
I'll read when I have time...
Sinthu
Chittagong.

இவர் தன்னுடைய தந்தை பெயரை அதிகம் பயன்படுத்துவதில்லை அதற்கு போதிய சான்றுகள் இல்லாத வரலாறு சொல்லும் கதை லியனாடோ முறைதவறி பிறந்த குழந்தை என்பதாகும்.//



இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...


நல்லவர்..

வல்லவர்..

திறமைச்சாலி...

அப்படின்னு ஆராய்ச்சி பண்ணுங்க...

ரைட்...

kuma36 சொன்னது…

மோனாலிசா ஓவியம் மூலமாக உலகப்புகழ் பெற்ற லியனாடோவை கட்டிடக்கலைஞராகவும் ஓவியராகவும் சிற்பியாகவும் பொறியியலாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் அறிந்திருக்கிறோம்

உங்கள் இந்த பதிவை பார்த்த பிறகு லியனாடோவைப்பற்றி தேடிபடித்தேன்.
நன்றி

பெயரில்லா சொன்னது…

அந்தரங்க ஆராய்ச்சி தேவையா?