''நாயே இது உனக்கு நாங்கள் கொடுக்கும் கடைசி முத்தம்'' - ஸெய்தி

21:47 Hisham Mohamed - هشام 2 Comments

அன்புள்ள ராமசாமியின் மின்அஞ்சலை நாகரீகம் கருதி சில சென்சாருக்கு பிறகு U சான்றிதழோடு உங்கள் பார்வைக்கு தருகிறேன்(அடைப்புக்குள் நான்)..உலகத் தலைவன் என்று தன்னை தானே அழைத்துக்கொள்ளும் பெருமிதம் பிடித்த கொலைக்காரன் சப்பாத்துக்களால் அடிவாங்கியது உலக வரலாற்றில் சந்தோசமான ஒரு பதிவு. அதில் ஒரு சப்பாத்தாவது அவன் முகத்திரையை கிழித்திருக்கக்கூடாதா?
(என்ன இருந்தாலும் அவர் ஓரு நாட்டின் தலைவர் இல்லையா இப்படியா நடந்து கொள்வது )

Muntadar-al-Zaidi

தனித்து நின்று போராடிய ஈராக் டிவி நிருபர் ஸெய்தியின் தில் கூட்டமாக வந்த கொலைக்காரனின் பாதுகாவலர்களுக்கு என்றும் வராது. கூட்டு சேர்ந்து ஸெய்தியின் கை கால்களை முறிக்கவும் முகத்தில் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தவும் தான் அவர்களால் முடியும். அரபுலகில் ஸெய்தி இப்பொழுது ஒரு தேசபக்தனாக போற்றப்படுகிறான். (ஆளாலுக்கு உசுப்பேத்தி அவன் குடும்ப வாழ்க்கையை நாசமாக்கிடாதிங்கப்பா)

படம் - அமெரிக்காவிற்கு ஈராக் கொடுத்த பரிசு.

வல்லரசு தலைவன் அவனுடைய ஆட்சிக்காலத்தில் விதைத்தவற்றை பிரியாவிடையில் பெற்றுக்கொண்டான். இவன் மீது வீசப்பட்ட சப்பாத்துக்களை பல கோடிகளை கொடுத்து ஏலத்தில் எடுக்க பலரும் தயாராகி வருகின்றனர்.
(உலக பொருளாதாரத்தின் ஆணிவேராக இருந்த எங்கள் உலக தலைவருக்கு என்னதான் கோபம் இருந்தாலும் ஈராக் செய்தது அவ்வளவு நல்லதாக படவில்லை. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்திருக்கலாம்தானே)


சதாமை இலக்கு வைத்து யுத்தத்தை ஆரம்பித்தவன் சதாமை கொன்ற பிறகும் ஈராக்கின் ரத்தத்தை இன்னும் ருசிபார்ப்பதேனோ?
(ஸெய்தி போன்றவர்களை விட்டு வைக்க கூடாது பாருங்கோ)


ஈராக் பெண்களின் கற்பை பறிக்கவும் சிறுபிள்ளைகளின் ரத்தத்தை குடிக்கவும் இன்னுமொருவன் ஈராக் மண்ணில் காலடி எடுத்த வைக்க அஞ்சமாட்டானா?


ஈராக்கின் புழுதி படிந்த சப்பாத்து தாக்குதலை விட கேவலமான ஒரு தாக்குதலை துப்பாக்கி ரவைகள், க்ளஸ்டர் குண்டுகள், விமானத்தாக்குதல்கள் ஏற்படுத்த முடியுமா?
(ஈராக் சப்பாத்துல அப்படி என்ன இருக்கு)

புத்தாண்டில் பதவியேற்கும் ஒபாமாவுக்கு இதை விட மகத்தான ஒரு வரவேற்பை யாரால் கொடுக்க முடியும்?
(பாவம் இப்பதான் புள்ள குட்டிகளோட வெள்ளை மாளிகைக்கு சுன்னாம்பு அடிக்க கிளம்பியிருக்காரு அவர எதுக்கு வம்புக்கு இழுக்கிறீங்க.)

2 COMMENTS:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

YOUR BLOG IS EXCELLENET.. I WISH YOU ALL THE VERY BEST!!