இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு நீள்காற்சட்டை அணிய தடையா?

2:54 PM Hisham Mohamed - هشام 3 Comments


இலங்கையின் கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரனவக்கவுக்கு,

பஞ்சத்துல அடிபட்ட பரதேசி பாசத்துடன் எழுதிக்கொள்வது. ஐயா நான் உங்களுக்கு ஓட்டு போட்டதில்ல. ஆனா நீங்க எனக்கு ஒரு சூப்பர் ஹீரோ. உங்களுடைய ஒவ்வொரு சிந்தனையும் செயலும் சாய்வு கோபுரம் போல் இலங்கையின் புகழை உலகத்திற்கே கொண்டு செல்லும்.

ஐயா உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை. நீங்க இந்த நாட்டின் முதுகெலும்பு. இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் அவர்களுடைய கலாச்சார விழுமியங்களை அடியோடு ஒழித்துக்கட்ட தனித்து நின்று போராடுகிற ஒரு வீரன். பள்ளிவாசல்களில் ஐவேளை தொழுகைக்கான அழைப்பை விடும் ஒலிபெருக்கிகளுக்கு மாத்திரம் தடையை ஏற்படுத்திய மாவீரன் ஐயா நீங்கள். அடுத்து முஸ்லிம் பாடசாலை பெண்கள் அணியும் நீள்காற்சட்டைக்கு ஆப்பு வைக்க போறிங்களாமே. ஜயா நீங்க வேணும்னா பாருங்க இதுக்காகவே வேடுவ இனத்தவங்க உங்களுக்கு பெரிய ஒரு கௌரவிப்பு விழாவே நடத்தப்போறாங்க. (அடுத்தது ஹிஜாப்தானே அதுதான் தலையில கட்டுவாங்க).


இப்படி நல்ல சமாசாரங்களா பன்னுற உங்கள பாத்து பிச்சு மணி கேட்டான் பாருங்க ஒரு கேள்வி.'' உலக பொருளாதாரம் சரிந்து விழுகிற தருவாயில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிற தருவாயில் பெற்றோல் விலை குறையுமா குறையாதா என்கிற தருவாயில் எப்படி ஐயா உங்களால் மாத்திரம் இப்படி மொக்கை சிந்தனைகளை கொண்டு வர முடிகிறது'' என்று கேட்குறான் மடப்பய அவனுக்கெப்படி புரியம். நீங்க பன்னுங்கய்யா நாங்க எப்பவும் உங்க கூடதான் எங்களுக்கு மான் கராத்தே எல்லாம் நல்லா தெரியும்.


ஐயா கை கழுவாம சாப்பிடுறவன் எத வேணும்னாலும் சொல்லட்டும். கடைசியா நீங்க கொண்டு வரப்போற நீள்காற்சட்டை தடை சூப்பர் பாடசாலை பசங்கெல்லாம் ஒரே குஷியா இருக்காங்கன்னு கஞ்சா சொல்றான். அத விட சந்தோசமான ஒரு செய்தி நம்ம பூந்தி பாய் போராட்டம் நடத்தப்போறாராம். இது சந்தோசமான போராட்டம் நீங்க கொண்டு வரப்போற இந்த சட்டத்தை இலங்கை முழுவதும் கொண்டுவரணும் என்றும் அதிலும் குறிப்பாக பெண்கள் நீள்காற்சட்டை போடக்கூடாதுன்னு கொண்டு வரணுமாம். அப்பதான் சாமி நாடே சிக்கனமா வாழ கத்துக்கும். அதுக்கப்புறம் பாருங்க கொலை கற்பழிப்பு எல்லாம் எப்படி குறையுதுன்னு. அந்த போராட்டத்துல உங்கள ஒருத்தன் உலக நாயகன்னு சொல்லிட்டாங்கய்யா சந்தோசத்துல அவன மேஞ்சிட்டாய்ங்க. ஏன்னா நீங்க என்ன உலக நாயகன் மாதிரி ஒம்பது பொன்னாட்டியா வைச்சிருக்கிங்க. ஐயா நீங்க நல்லவரு .

என்னதான் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு சமாசாரத்தை கொண்டு வரும்போது. நம்ம ஐடியா மணியையும் நீங்க கூப்பிட்டிருக்கனும். அவன் எவ்வளவு மேட்டர் வைச்சிருக்கான் தெரியுமா. அவன் சொல்றான் நயன்தாராவ உங்கட ஆலோசகராக்கியிருக்கணுமாம். ஏன்னா இந்த ஆடை விசயத்துல ரொம்ப சிக்கனம் பேண்றவங்க இவங்கதான். நிறைய சமாசாரங்கள சொல்லி கொடுத்திருப்பாங்கய்யா. அப்புறம் நம்ம ஊர் முக்கோண தொலைக்காட்சியில நடத்துற டான்சிங் ஸ்டார் மாதிரி நிகழ்ச்சிகள்ல வார பெண்களின் உடையை எல்லாருக்கும் கட்டாயப்படுத்தியிருக்கணுமாம். சாமி நீங்க நாலு எழுத்த படிச்சவங்க தப்பா ஏதும் சொல்லி இருந்தா மன்னிச்சுகிங்க.




கலாசாரம் சம்பிரதாயம் எல்லாம் எவனோ ஒருத்தன் உருவாக்கினது தானே அத நம்ம சீங்கம் நீங்க உருவாக்கினா என்ன. முஸ்லிம் அமைச்சர்ட மகளே நீள்காற்சட்டை இல்லாம போறப்போ இவனுங்களுக்கு என்னவாம்.

ஐயா இப்பதான் சீனாக்காரிகள் நம்ம நாட்டுக்கு வந்திருக்காங்க இன்னும் பலபல சமாசாரங்கள கொண்டுவாங்க அப்புறம் பாருங்க பேங்கொக்,இந்துனேசியா,சோமாலியான்னு கலக்கப்போறோம்.

சம்பிக்க சிந்தனை வாழ்க!!!!!

இப்படிக்கு,

கிறிஸ்மசிற்கு தேவாலயத்திற்கு பெய்ன்ட் அடிச்சு பொங்கல் கொண்டாடப்போகும் உண்மையான முஸ்லிம்.
Check Spelling
பி.கு - இப்படியான சமாசாரத்திலாவது அமெரிக்காவ முந்தப்போரத நினைச்சா பெருமையா இருக்கு.

3 COMMENTS:

kuma36 சொன்னது…

//கிறிஸ்மசிற்கு தேவாலயத்திற்கு பெய்ன்ட் அடிச்சு பொங்கல் கொண்டாடப்போகும் உண்மையான முஸ்லிம்.//

//'' உலக பொருளாதாரம் சரிந்து விழுகிற தருவாயில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிற தருவாயில் பெற்றோல் விலை குறையுமா குறையாதா என்கிற தருவாயில் எப்படி ஜயா உங்களால் மாத்திரம் இப்படி மொக்கை சிந்தனைகளை கொண்டு வர முடிகிறது'//

இன மத கலை காலசாரங்களை உதாசினப்படுத்த நினைக்கும் மாகான்களே காலம் உங்களுக்கு பாடம் கற்பிக்கும் நாள் வெகுவிரைவில்...

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Suganthi B J சொன்னது…

சகோ.... நீங்க இலங்கையில இருக்கீங்க? தமிழ் நாடு இல்லையா? வானொலி அறிவிப்பாளர் ஆகனும்னா நமக்கு என்னென்ன தகுதிகள் வேணும்..?