முத்தத்தில் மூழ்கிப்போன கதை

1:45 PM Hisham Mohamed - هشام 5 Comments

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பாட்டு என்ன ரொம்ப பாதிச்சுது. தாம் தூம் படத்துல ஆழியிலே முக்குளிக்கும் பாட்டு அடிக்கடி கேட்குறேன் சலிக்கவே இல்ல. மறைந்த ஜீவாவை தமிழ் திரை ரொம்ப மிஸ் பன்னுது.

video

ஹரிஸ்ஜெயராஜ}க்கு பாராட்டுக்கள் இருந்தாலும் எனக்கு கொஞ்சம் வருத்தம் எதையும் அளவுக்கு மீறி கொடுத்தா நஞ்சா போயிடும்னு இரண்டைர நிமிசத்துக்குள்ள பாட்டை முடிச்சிட்டாரு பாருங்கோ.

முத்தத்துக்கு வித்தியாசமா விளக்கம் கொடுத்த கவிஞருக்கு ஒரு முத்தம் கொடுக்கலாம். முத்தத்திற்கு விளக்கம் கொடுத்த எத்தனை பாடல்கள் வந்திருந்தாலும் இந்த பாட்டுக்கு ஆயிரம் முத்தம் கொடுப்பேன்.

முத்தத்தில் பல வகை இருக்கு என்னவிட யாராவது அனுபவசாலிகள் சொன்னா நல்லா இருக்கும் (அதுக்காக நான் ஒன்னும் நல்லவன் இல்ல)

கவிஞர் மூச்சுக்கும் முத்தத்திற்கும் முடிச்சு போட்ட விதம் அருமை.
ஆழியிலே முக்குளிக்கும் அழகே....

மூச்சுக்கும் முக்குளிக்கிறதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறத போல முத்தத்திற்கும் மூச்சுக்கும் தொடர்பிருக்கு வேணும்னா ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன்(புத்திஜீவிகள் சொல்லி இருக்காங்க).

இப்படித்தான் ஒரு மங்காவோட பேச்சக்கேட்டு ஒருத்திக்கு முதல் முத்தம் கொடுக்கலாம்னு முயற்சி செய்தேன் இப்ப அவளோ அவ குழந்தைக்கு கொடுக்கிறாள் முத்தம்.

15 வயசுல யாரோ பெயர் தெரியாத ஒரு நண்பன்தன்னுடைய காதலியுடன் கைகோர்த்துக் கொண்டு நடக்கஎனக்குள் அடித்த கத்ரினா அது.
எவளாவது ஒருத்தியை எப்படியாவது மடக்க வேண்டும் என்கிற ஆர்வத்தோடு பாடசாலை விட்டு காத்திருந்தேன் மாட்டியவளோ ஒரு அப்பாவி ஆனால் நான் தான் என்கிற மனிதர்களில் இவளும் ஒருத்தி.

பைத்தியக்காரத்தனமாக பதின்ம வயதில் எனக்குள் ஏற்பட்ட பருவ மாற்றத்தை நினைத்து இப்பொழுது சிரிக்கிறேன்.

கஞ்சா அடிக்கிறவன் காசு இல்லாம கேவலமா பிச்சை கேட்குற மாதிரி (பிச்சைக்காரர்கள் ஒரளவுக்கு மேல கேட்க மாட்டாங்க) கெஞ்சினேன். ஆனால் அவள் ரொம்ப நல்லவ.............

உன் தின் என்ற கன்னத்தில் திம் என்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா......
இச்சைக்கோர் இலை வைக்கவா.....
தாம்பத்திய உறவுக்கு பாலமாக கடவுள் கொடுத்த ஒரு மருந்து இந்த முத்தம். அதுக்காக அவளை முத்தமிட்டே சாகடிக்கிறேன்... அவளை கட்டிப்போட கயிறு தேவையில்லை...அடடே இப்ப நானும் கூட கவித எழுத ஆரம்பிச்சிட்டேன் பாருங்கோ.

இச்சைக்கோர் இலை வைக்கவா.....
இந்த வரி எனக்கொரு சம்பவத்தை ஞாபகப்படுத்துது என்னோட வேடிக்கையான நண்பர் ஒருவர் காதலி பிரிஞ்சிட்டாங்கிறதுக்காக ஒரு பாட்டு கேட்பாரு பாருங்கோ. ஜானகி பாடிய 'எடுத்த வச்ச பூவும் விரிச்சு வைச்ச பாயும்' பாட்டு.

உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி முந்தானை படியேறவா..........
மூச்சோடு குடியேறவா......
வர்த்தைகளால் அடக்க முடியாத அளவுக்கு அனுபவிக்கிறேன்.அவ்வப்போது அடிக்கிற காத்துல அவ கூந்தல் என் முகத்தை தடவுவதை நான் உணர்கிறேன். ஆனால் அவள் முதல் காதலி இல்லை(அப்போ ஏராளமா இருக்கான்னு கேட்காதிங்க நான் அவ்வளவு நல்லவன் இல்லை)பாரதிக்கு ஒரு கண்ணம்மா போல எனக்கும் ஒருத்தி(முடிஞ்சா அவளுக்கொரு பெயர் வைச்சிடுங்க)

உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி எந்நாளும் சூடேறவா.........
என்னோட கண்ணம்மாவுக்கு சேலை கட்ட பழக்கும்போது கடைசி மடிப்பை இடுப்பில் செருகும் போது என் விரல் அவ இடுப்புல பட்டதுல பத்திக்கிட்ட நெருப்பை அணைக்க கொஞ்ச நேரம் எடுக்கும் அதுதானோ இது.

உன் உம் என்ற சொல்லுக்கும் இம் என்ற சொல்லுக்கும் இப்போதெ தடை வைக்கவா....
மௌனத்தில் குடி வைக்கவா.............
அடுத்த வரியில நான் செத்துட்டேன் ஆனாலும் மறக்க முடியாது..அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீறி மறித்தாலும் மறக்காது அழகே.....
இந்த முத்த யுத்தமே வேண்டாம் கண்ணம்மா உன் கையை பிடிச்சிக்கிட்டு உரிமையோட அந்திப்பொழுதில் நாலடி நடக்கிற இன்பமும் பாசத்தோட என் முகத்தை நீ பார்க்கிற அந்த அன்பும் போதும் வேறென்ன வேண்டும்.
அடி வானம் சிவந்தாலும் கொடி பூக்கள் பிறந்தாலும் உனைபோல இருக்காது அழகே...

நீங்களும் கொஞ்சம் முக்குளிச்சித்தான் பாருங்களேன்.(பாட்டுக்குள்ள)

5 COMMENTS:

Anonymous said...

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே!!
-----சோவண்ணா. ஸ்ரீ

Anonymous said...

முத்தம் பற்றி சொல்லப் போறிங்க என்டு நினைச்சா இப்படி சொதப்பீட்டிங்க.... கொஞ்சம் கிசு கிசு போட்டால் தான் என்ன???

கொழும்பிலிருந்து கே.ரி.சாரங்கன்

sinthu said...

"பாரதிக்கு ஒரு கண்ணம்மா போல எனக்கும் ஒருத்தி(முடிஞ்சா அவளுக்கொரு பெயர் வைச்சிடுங்க"
அண்ணா நிட்சயமா அவங்கட பெயர் Safra or Fatina என்று தான் வரும்......... கவலை படாதீங்க... எனது வாழ்த்துக்கள்....

அண்ணி எப்ப வருவாங்க...........
best of luck..........

Lojee said...

nalla irukke
best of luck

Mr.TH said...

ஹிச்சு ஹிச்சு Hisham,
சரி சார், உங்கள் கண்னமாவின் பெயர் தான் என்ன? நாங்க ஹிச்சு ஹிச்சு ஹிஷாமின் கிசு கிசு என்று பதிவு போடுவமேள்ள....(ஆமா சார், பிரபலம் என்றாலே கிசு கிசு தானே)

Hisham, Just kidding machang... :) However, hope to c ur Kannamaa too machang :)

Cheers,
- Mr.TH