இலங்கை யுத்தக்களமுனையிலிருந்து.

12:09 PM Hisham Mohamed - هشام 3 Comments


சேறு பதிந்த சப்பாத்துடனும் நனைந்த சொக்சுடனும் சேற்றில் சிக்கிய வாகனத்தை தனது சகாக்களுடன் தள்ள முற்படுகிறார் இலங்கை இராணுவ வீரர். இதுதான் இலங்கை யுத்தக்களமுனையின் உண்மை கதை. பருவ மழை என்கிற புதிய ஒரு எதிரிக்கு முன்னால் இருதரப்பும் தங்கள் காய் நகர்த்தல்களை திட்டமிட்டு செயற்படுத்துகின்றன.

ஏற்கனவே இலங்கை அரச படையினரிடம் பல பிரதேசங்களை பறிகொடுத்த வேதனையில் புலிகள் கையாளும் யுத்த தந்திரம் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்ததை கடந்த கால தாக்குதல்கள் நிரூபித்திருக்கும். தரைமார்க்கமாக தற்பொழுது தாக்குதல் நடத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல காரணம் கடவுளோடு மோத யாரால் முடியும். (அதுதான் பருவமழை)

பருவ மழைக்காலம் ஆரம்பமான பிறகு புலிகள் கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்பல்களுக்கு தாக்குதலை மேற்கொண்ட பிறகு மன்னார் மற்றும் தலைநகர் கொழும்பின் களனி பிரதேசத்தின் மீது புலிகளின் இரண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தியிருந்தன அதன் பிறகு வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலையும் சுட்டிக்காட்டலாம். இவை இலங்கை அரசுக்கு பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தாவிட்டாலும் பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக களனி மின் நிலையத்தின் மீதான தாக்குதல் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை செலுத்தும்.
இலங்கை இராணுவத்தினர் அதிரடியாக ஆரம்பித்த தாக்குதலின் வேகம் கடந்த வாரங்களில் கொஞ்சம் மந்த கதியில் செல்வதை அவதானிக்க முடிந்தது. பருவ மழையின் தாக்கம் யுத்த நடவடிக்கைகளை பெரிதும் பாதித்திருக்கிறது. இலங்கை படையினரின் வான் தாக்குதல்களும் மப்பும் மந்தாரமுமான காலநிலையால் மந்த கதியிலேயே இடம்பெறுகிறது.

கிளினொச்சியை நெருங்கிக்கொண்டிருக்கும் இராணுவத்தினர் மிகுந்த மனவலிமையுடன் இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. புலிகளின் வெப்தளங்களின் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் தரைமார்க்கமாக தாக்குதல்களை மேற்கொள்வதை விடுத்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிய முடியும் அதேநேரம் பருவ மழையை புலிகள் சாதகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான சான்றுகளாக வான் மற்றும் கடல் தாக்குதல்களில் அவர்கள் காட்டும் தீவிரத்தை குறிப்பிடலாம்.
புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பிரதேசங்களை அறிய
இந்த தளத்தை சொடுக்கி விரிவான வரைபடத்தை பார்க்கலாம்.
http://www.defence.lk/orbat/Default.asp

ஒபாமா வென்றாலும் மெக்கெய்ன் வென்றாலும் இதில் மாற்றம் ஏற்படப்போவதில்லை................

3 COMMENTS:

//புலிகள் கையாளும் யுத்த தந்திரம் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்ததை//

களத்தில்கூட வித்தியாசமான போர் தந்திரோபாயங்களை கையாள்வதாக அறியக்கிடைத்தது. சீனப்படைகள் இந்தியாவுக்குள் ஊடுறுவுவதை தவிர்க்க இந்தியா கையாண்டதாக கூறப்படும் நிலத்தந்திரோபாயங்களும் இவற்றில் அடங்கும்.

சயந்தன் சொன்னது…

இலங்கை இராணுவத்தினர் அதிரடியாக ஆரம்பித்த தாக்குதலின் வேகம் கடந்த வாரங்களில் கொஞ்சம் மந்த கதியில் செல்வதை அவதானிக்க முடிந்தது. //

தொடர்ந்து வெற்றியடைவதும் களைப்பை சோர்வை ஏற்படுத்துமோ என்னமோ ?

karu சொன்னது…

ungal vellaithanamum pillaithamilum nalla irukku kialakku musleem ellam thamilanai irunthu panathukkaha vum saathi pirachanaikkahavum matham maaripponaarkal veru yaarum kooduthal panam koduthhal avarkal pinnal poovarkal ippo mahinda pinnal 26 musleem manthirikal /ungkalaal mudinthaal avarkalai thiruthungkal /vaalka vlamudan/