மும்பாய் யுத்தக்களமுனையின் மறக்க முடியாத தருணங்கள்.

10:38 PM Hisham Mohamed - هشام 4 Comments



ந்திய வரலாற்றில் பதியப்பட்ட மிக மோசமான தாக்குதல்.

60 மணி நேர தாக்குதலில் உயிர் தியாகங்களுக்கு பின்னர் மனித
நேயம் ஜெயித்தது.

இந்தியா விழித்துக்கொள்ள இது தக்க தருணம்.

20 முதல் 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞாகள் குழு முழு உலகையும் திரும்பிப்பார்க்க இடம் கொடுத்தது இந்திய பாதுகாப்பில் இருந்த ஓட்டைகள்தான்.

ஒரு பிரதமராக தேசத்தை வழிநடத்தி செல்லவேண்டிய மன்மோகன் சிங் இது தொடர்பாக கொஞ்சம் தாமதமாகவே குரல் கொடுத்தார்.

அயராத இந்திய பாதுகாப்பு படையின் முயற்சி பாராட்டத்தக்கது.










தாக்குதல் மேற்கொள்ளவந்த தீவிரவாதிகள்........









தமது மக்களுக்காக போராடும் இராணுவ வீரர்கள்.



உயிரிழந்த பெண் ஊடகவியலாளரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.



மும்பாய் தாக்குதலில் உயிரிழந்த தாஜ் ஹோட்டல் அதிகாரி Vijaya Rao இன் தாய் புகைப்படத்துடன்.




60 மணி நேர தாக்குதலில் உயிர் தியாகங்களுக்கு பின்னர் மனித நேயம் ஜெயித்தது.


முத்தத்தில் மூழ்கிப்போன கதை

1:45 PM Hisham Mohamed - هشام 5 Comments

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பாட்டு என்ன ரொம்ப பாதிச்சுது. தாம் தூம் படத்துல ஆழியிலே முக்குளிக்கும் பாட்டு அடிக்கடி கேட்குறேன் சலிக்கவே இல்ல. மறைந்த ஜீவாவை தமிழ் திரை ரொம்ப மிஸ் பன்னுது.



ஹரிஸ்ஜெயராஜ}க்கு பாராட்டுக்கள் இருந்தாலும் எனக்கு கொஞ்சம் வருத்தம் எதையும் அளவுக்கு மீறி கொடுத்தா நஞ்சா போயிடும்னு இரண்டைர நிமிசத்துக்குள்ள பாட்டை முடிச்சிட்டாரு பாருங்கோ.

முத்தத்துக்கு வித்தியாசமா விளக்கம் கொடுத்த கவிஞருக்கு ஒரு முத்தம் கொடுக்கலாம். முத்தத்திற்கு விளக்கம் கொடுத்த எத்தனை பாடல்கள் வந்திருந்தாலும் இந்த பாட்டுக்கு ஆயிரம் முத்தம் கொடுப்பேன்.

முத்தத்தில் பல வகை இருக்கு என்னவிட யாராவது அனுபவசாலிகள் சொன்னா நல்லா இருக்கும் (அதுக்காக நான் ஒன்னும் நல்லவன் இல்ல)

கவிஞர் மூச்சுக்கும் முத்தத்திற்கும் முடிச்சு போட்ட விதம் அருமை.
ஆழியிலே முக்குளிக்கும் அழகே....

மூச்சுக்கும் முக்குளிக்கிறதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறத போல முத்தத்திற்கும் மூச்சுக்கும் தொடர்பிருக்கு வேணும்னா ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன்(புத்திஜீவிகள் சொல்லி இருக்காங்க).

இப்படித்தான் ஒரு மங்காவோட பேச்சக்கேட்டு ஒருத்திக்கு முதல் முத்தம் கொடுக்கலாம்னு முயற்சி செய்தேன் இப்ப அவளோ அவ குழந்தைக்கு கொடுக்கிறாள் முத்தம்.

15 வயசுல யாரோ பெயர் தெரியாத ஒரு நண்பன்தன்னுடைய காதலியுடன் கைகோர்த்துக் கொண்டு நடக்கஎனக்குள் அடித்த கத்ரினா அது.
எவளாவது ஒருத்தியை எப்படியாவது மடக்க வேண்டும் என்கிற ஆர்வத்தோடு பாடசாலை விட்டு காத்திருந்தேன் மாட்டியவளோ ஒரு அப்பாவி ஆனால் நான் தான் என்கிற மனிதர்களில் இவளும் ஒருத்தி.

பைத்தியக்காரத்தனமாக பதின்ம வயதில் எனக்குள் ஏற்பட்ட பருவ மாற்றத்தை நினைத்து இப்பொழுது சிரிக்கிறேன்.

கஞ்சா அடிக்கிறவன் காசு இல்லாம கேவலமா பிச்சை கேட்குற மாதிரி (பிச்சைக்காரர்கள் ஒரளவுக்கு மேல கேட்க மாட்டாங்க) கெஞ்சினேன். ஆனால் அவள் ரொம்ப நல்லவ.............

உன் தின் என்ற கன்னத்தில் திம் என்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா......
இச்சைக்கோர் இலை வைக்கவா.....
தாம்பத்திய உறவுக்கு பாலமாக கடவுள் கொடுத்த ஒரு மருந்து இந்த முத்தம். அதுக்காக அவளை முத்தமிட்டே சாகடிக்கிறேன்... அவளை கட்டிப்போட கயிறு தேவையில்லை...அடடே இப்ப நானும் கூட கவித எழுத ஆரம்பிச்சிட்டேன் பாருங்கோ.

இச்சைக்கோர் இலை வைக்கவா.....
இந்த வரி எனக்கொரு சம்பவத்தை ஞாபகப்படுத்துது என்னோட வேடிக்கையான நண்பர் ஒருவர் காதலி பிரிஞ்சிட்டாங்கிறதுக்காக ஒரு பாட்டு கேட்பாரு பாருங்கோ. ஜானகி பாடிய 'எடுத்த வச்ச பூவும் விரிச்சு வைச்ச பாயும்' பாட்டு.

உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி முந்தானை படியேறவா..........
மூச்சோடு குடியேறவா......
வர்த்தைகளால் அடக்க முடியாத அளவுக்கு அனுபவிக்கிறேன்.அவ்வப்போது அடிக்கிற காத்துல அவ கூந்தல் என் முகத்தை தடவுவதை நான் உணர்கிறேன். ஆனால் அவள் முதல் காதலி இல்லை(அப்போ ஏராளமா இருக்கான்னு கேட்காதிங்க நான் அவ்வளவு நல்லவன் இல்லை)பாரதிக்கு ஒரு கண்ணம்மா போல எனக்கும் ஒருத்தி(முடிஞ்சா அவளுக்கொரு பெயர் வைச்சிடுங்க)

உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி எந்நாளும் சூடேறவா.........
என்னோட கண்ணம்மாவுக்கு சேலை கட்ட பழக்கும்போது கடைசி மடிப்பை இடுப்பில் செருகும் போது என் விரல் அவ இடுப்புல பட்டதுல பத்திக்கிட்ட நெருப்பை அணைக்க கொஞ்ச நேரம் எடுக்கும் அதுதானோ இது.

உன் உம் என்ற சொல்லுக்கும் இம் என்ற சொல்லுக்கும் இப்போதெ தடை வைக்கவா....
மௌனத்தில் குடி வைக்கவா.............
அடுத்த வரியில நான் செத்துட்டேன் ஆனாலும் மறக்க முடியாது..அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீறி மறித்தாலும் மறக்காது அழகே.....
இந்த முத்த யுத்தமே வேண்டாம் கண்ணம்மா உன் கையை பிடிச்சிக்கிட்டு உரிமையோட அந்திப்பொழுதில் நாலடி நடக்கிற இன்பமும் பாசத்தோட என் முகத்தை நீ பார்க்கிற அந்த அன்பும் போதும் வேறென்ன வேண்டும்.
அடி வானம் சிவந்தாலும் கொடி பூக்கள் பிறந்தாலும் உனைபோல இருக்காது அழகே...

நீங்களும் கொஞ்சம் முக்குளிச்சித்தான் பாருங்களேன்.(பாட்டுக்குள்ள)

இலங்கை யுத்தக்களமுனையிலிருந்து.

12:09 PM Hisham Mohamed - هشام 3 Comments


சேறு பதிந்த சப்பாத்துடனும் நனைந்த சொக்சுடனும் சேற்றில் சிக்கிய வாகனத்தை தனது சகாக்களுடன் தள்ள முற்படுகிறார் இலங்கை இராணுவ வீரர். இதுதான் இலங்கை யுத்தக்களமுனையின் உண்மை கதை. பருவ மழை என்கிற புதிய ஒரு எதிரிக்கு முன்னால் இருதரப்பும் தங்கள் காய் நகர்த்தல்களை திட்டமிட்டு செயற்படுத்துகின்றன.

ஏற்கனவே இலங்கை அரச படையினரிடம் பல பிரதேசங்களை பறிகொடுத்த வேதனையில் புலிகள் கையாளும் யுத்த தந்திரம் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்ததை கடந்த கால தாக்குதல்கள் நிரூபித்திருக்கும். தரைமார்க்கமாக தற்பொழுது தாக்குதல் நடத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல காரணம் கடவுளோடு மோத யாரால் முடியும். (அதுதான் பருவமழை)

பருவ மழைக்காலம் ஆரம்பமான பிறகு புலிகள் கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்பல்களுக்கு தாக்குதலை மேற்கொண்ட பிறகு மன்னார் மற்றும் தலைநகர் கொழும்பின் களனி பிரதேசத்தின் மீது புலிகளின் இரண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தியிருந்தன அதன் பிறகு வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலையும் சுட்டிக்காட்டலாம். இவை இலங்கை அரசுக்கு பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தாவிட்டாலும் பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக களனி மின் நிலையத்தின் மீதான தாக்குதல் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை செலுத்தும்.
இலங்கை இராணுவத்தினர் அதிரடியாக ஆரம்பித்த தாக்குதலின் வேகம் கடந்த வாரங்களில் கொஞ்சம் மந்த கதியில் செல்வதை அவதானிக்க முடிந்தது. பருவ மழையின் தாக்கம் யுத்த நடவடிக்கைகளை பெரிதும் பாதித்திருக்கிறது. இலங்கை படையினரின் வான் தாக்குதல்களும் மப்பும் மந்தாரமுமான காலநிலையால் மந்த கதியிலேயே இடம்பெறுகிறது.

கிளினொச்சியை நெருங்கிக்கொண்டிருக்கும் இராணுவத்தினர் மிகுந்த மனவலிமையுடன் இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. புலிகளின் வெப்தளங்களின் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் தரைமார்க்கமாக தாக்குதல்களை மேற்கொள்வதை விடுத்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிய முடியும் அதேநேரம் பருவ மழையை புலிகள் சாதகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான சான்றுகளாக வான் மற்றும் கடல் தாக்குதல்களில் அவர்கள் காட்டும் தீவிரத்தை குறிப்பிடலாம்.
புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பிரதேசங்களை அறிய
இந்த தளத்தை சொடுக்கி விரிவான வரைபடத்தை பார்க்கலாம்.
http://www.defence.lk/orbat/Default.asp

ஒபாமா வென்றாலும் மெக்கெய்ன் வென்றாலும் இதில் மாற்றம் ஏற்படப்போவதில்லை................

மெக்கெய்ன் தோல்வியடைய என்ன காரணம்?

1:01 PM Hisham Mohamed - هشام 0 Comments


உண்மையில் இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றை புதுப்பித்திருக்கிறது என்பது யாரலும் மறுக்க முடியாத உண்மை. ரிபப்லிகன் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட பல மாநிலங்களிலும் அக்கட்சி கோட்டைவிட்டது. வெள்ளையர்களின் வாக்குகளோடு ஒரு கறுப்பினத்தவர் ஜனாதிபதியான முதல் முறை.


இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தல் உலகத்துக்கு நல்ல பாடத்தை கற்பித்தது. இனத்தாலும் நிறத்தாலும் ஏன் ஊர்களாலும் பிளவுபட்டிருக்கும் பிளவுபடச்சொல்லும் மங்கா பசங்களுக்கு கொடுத்த சிறந்த கசையடி.


இம்முறை நடைபெற்ற தேர்தல் கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளை இனத்தவர்களுக்குமிடையில் நடந்த போட்டியா?


இந்த படத்தில் இருப்பது போல ஒபாமா வெள்ளை இனத்தவராகவும் மெக்கெய்ன் கற்பினத்தவராகவும் இருந்திருந்தால் இந்த நிலை மாறியிருக்குமா?


என்னதான் இருந்தாலும் இலங்கை இந்திய அரசியல்வாதிகளை விட அமெரிக்கர்கள் ஒரு படி மேல் என்பதை ஒபாமாவின் வெற்றிக்கு பிறகு மெக்கெய்ன் ஆற்றிய உரை உணர்த்தியிருக்கிறது. ''அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் ஒபாமா''. அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா எடுக்கப்போகும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குமாறும் தன்னுடைய ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டவர் வாழ்த்துச்சொல்லவும் மறக்கவில்லை.


மெக்கெயன் இந்தியா அல்லது இலங்கை நாட்டைச்சேர்நதவராக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் 'ஒபாமா செய்தது முழுக்க மோசடி எல்லா வாக்குகளும் கள்ள வாக்குகள்."


இனி என்ன ஒபாமாவா? ஒசாமவா?