இலங்கை பற்றிய சகல விடயங்களையும் தெரிந்து கொள்ள ஒரு தளம்.

12:24 AM Hisham Mohamed - هشام 0 Comments


இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சி சேவைகள், வங்கிகள் மேலும் பல விடயங்களை அறிந்து கொள்வதற்கான தளம்.

web

பதிவுலகத்திற்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

12:18 AM Hisham Mohamed - هشام 0 Comments


கறுப்பு ஒக்டோபர் - இலங்கையின் வடபுல சோனிகள் விரட்டியடிக்கப்பட்டு 18 ஆண்டுகள்.

12:07 AM Hisham Mohamed - هشام 19 Comments


ஒக்டோபர் 25ம் திகதி நமீதாவுடைய பிறந்த தினம்னு நினைக்காதிங்க அதவிட சந்தோசமான நாள் புலிகளுக்கு.


1990ம் ஆண்டு வேலைக்கு போயிருந்த அப்பாவுக்கு உறவுக்காறங்க சொன்ன தகவல் அவர கதி கலங்க வைத்தது அப்படின்னு ஒரு மகன் தன்னுடைய வேதனையை சொல்கிறார்.


10 வருஷத்துக்கு மேல உட்காந்து சாப்பிடலாம் அப்படின்னு விடுதலை புலி உறுப்பினர்கள் மார்தட்டிக்கொண்டார்கள்.


இலங்கையின் வடபுலத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்த அத்தனை முஸ்லிம் இனத்தவர்களும் விரட்டியடிக்கப்பட்ட நாள். இவர்களை கதறக்கதற ஆயுத முனையில் விரட்டிய புலிகள் சொன்ன ஒரு விடயம் அசையும் அசையா சொத்துக்கள் எதையும் கொண்டு போகக்கூடாது.


'அக்காவோட கழுத்துல ஆசையாக அப்பா வாங்கிக்கொடுத்த நகைகளை புலிகள் கண் முன்னே அறுத்தெடுத்த நிகழ்வை நினைச்சா நான் ஆம்புளயா பொறந்தது நினைச்சி வெட்கப்பட்றேன்.' அகதி முகாமில் இருக்கிற ஒரு வாலிபர்.


'என்னோட மகன் படிப்பு செலவுக்கு மத்தவங்ககிட்ட பிச்ச கேட்குற மாதிரி பணம் கேட்பதை கண்ணால பாத்த பிறகு நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்' உடல் ஊனமுற்ற ஒரு தந்தை சொல்கிறர்.


90களுக்கு முன்பு நல்ல வசதி வாய்ப்புக்களோடு நாலு பேருக்கு தர்மம் செய்யக்கூடிய மாடி வீடுகளில் இருந்தவர்கள் 2008இல் இன்று மழை பெய்தால் ஒழுகுகிற குடிசைகளில் மூன்று வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடுவதை நினைத்தால் சந்தோசமாக இருக்கும் புலிகளுக்கு. புலிகளால் அவதிப்படுகிறவர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல இந்துக்களும்தான் இன்று வடக்கில் அகதிகளாக ஆயிரக்கணக்கில் மர நிழல்களில் வாழுகிறவர்களும் தென் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களும் இதற்கு நல்ல சான்று.


அடுத்த வீட்டுக்காரனோட வேலி பிரச்சினையில் ஆரம்பிக்கிற யுத்தம் அடுத்த நாட்டு எல்லை வரை யோயிடுச்சி. இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ஆடு மாடுகளாக வாழப்போறோம்?


ஒரு விசயத்தை கவனிச்சிங்களா என் குடும்பம், என் வீடு, என் சொத்து என்று வாழ்கிற நிறைய பேர் வானொலிகளிலும் தொலைக்ககாட்சியிலும் இந்த செய்திகளை கேட்டு விட்டு "எந்த நாளும் இதே பிரச்சினை" என்று சலித்துக்கொண்டு AC கார், கை நிறைய சம்பளம், அழகான மனைவி, பிள்ளைகள் குடும்பம் என்று சந்தோசமாக வாழவில்லையா.(உங்கள தப்பா சொல்லல......)


ஒரு சில இனவாதிகளால் தமிழ் பேசும் அப்பாவி மக்கள் அல்லல் பட வேண்டியிருக்கு. இவங்க பிள்ளைகள் வசதியா வெளிநாடுகளில் படிக்கிறதுக்காக கோமதி அக்காவுடைய மகன் மழையில நனைஞ்சுகிட்டு வெடிகுண்டு சுமக்கணுமா? ஏன் அவன் படிச்சா படிப்பு ஏறாதா?

உலக அரங்கில் அண்மையில் அரங்கேற்றப்பட்ட அருமையான சில நாடகங்கள் .

7:23 PM Hisham Mohamed - هشام 0 Comments

தசாவதாரம் சிவாஜியை விட இந்த நாட்களில் நாடகங்கள் சூப்பர் ஹிட். ஆனால் இந்த நாடகங்களில் வில்லன் யார்னு தெரியல.

'ஒரே நாளில்' இலங்கையில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹிட் நாடகம்

இலங்கையின் மாகண சபை எதிர்கட்சி தலைவர் முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக்க பெரேரா மற்றும் 20க்கு மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட அதே நாளில் கருணா பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பு. தமிழ் சினிமாவின் பாதிப்பு இதில் அதிகம் தெரிந்தது ஏன்ன கெஞ்சம் ஓவரா அதிரடி. இந்த கதையில் யார் வில்லன்னு தெரியல

சூப்பர் ஸ்டாரின் 'ஒக்கனக்கல்'

ரஜினியின் ஒக்கனக்கல் நாடகம் புதிய சாதனை படைத்தது. ஏற்கனவே இவர் நடித்து வெளியான 'வருவேன் ஆனா வரமாட்டேன்' வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. ரஜினி படம் என்றாலே முப்பது நாள் சாப்பிடாம நாலு வாரம் குளிக்காம பெருசா கட்அவுட் வைச்சு அபிNஷகம் செய்கிறபோது நாடகம் என்றால் சொல்லவா வேணும். ஒக்கனக்கல் நாடகத்தில் முக்கியமா ரஜினி இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். ஆனால் வில்லன் யார்னு தெரியல

வடிவேலுவின் விட்டில் கல் வீசி தாக்குதல் நடத்திய நாடகம். இந்த நாடகத்தை முழுமையாக பார்க்காததால் படத்தின் பெயரும் விபரமும் தெரியல. க்ளைமெக்சில் விஜயகாந்த் கோர்ட்டுக்கு வாராரு. வில்லன் யார்னு தெரியல

இது இந்த வருடம் வெளியான சில நல்ல நாடகங்கள்.

அவ்வப்போது டுப்பாகூர் நாடகங்ளும் வரும்...................

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் ???

2:00 PM Hisham Mohamed - هشام 0 Comments

அரசியல் சாக்கடையில் எவையெல்லாம் விழுமோ அவை நாசமாகிப்போகும் என்பது பச்சக் குழந்தைக்கும் தெரிந்த விஷயம். இப்பெல்லாம் நம்ம தாய்மார் சின்ன பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுவது எம் பி மாமா வரார்னுதான். அண்மையில் இலங்கை கிரிக்கட் விழுந்ததும் இது போல ஒரு அசிங்கமான சாக்கடையில்தான். இலங்கை கிரிக்கட்டில் அது இன்னும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அர்ஜூன ரனதுங்க இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக இலங்கை ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு அதிரடியாக பல மாற்றங்கள் இலங்கை கிரிக்கட்டில் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றன. இது சாதகமா பாதகமா என்பது ஒரு பக்கமிருக்க இதன் பாதிப்பு இலங்கையின் கிரிக்கட்டை சீரழித்துவிடும் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.


ஜனாதிபதி இந்த நியமனத்தை வாரி வழங்கக் காரணம் அரச கட்சியின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தும் நோக்கம் ஒன்று தான். ரணதுங்கவின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் அதிகமான வாக்குகளை பெறுவது வழக்கம். இதனால் ரணதுங்கவின் குடும்ப உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு நல்ல பதவிகளை வழங்கியது. ஏற்கனவே இந்த இலங்கை அரசாங்கத்தை பலரும் சகோதரர்களின் கம்பனி என்று நக்கலடிப்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இதே பணியை இலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவாராக நியமிக்கப்பட்ட முன்னாள் அணித்தலைவர் ரணதுங்க பின்பற்ற தொடங்கிவிட்டார். முதல் நடவடிக்கையாக தன்னுடைய சகோதரரை இலங்கை அணியின் முகாமையாளராக நியமித்தார். அடுத்த அடி ஜசிசி தடை செய்த ஜ பி எல் அமைப்பில் விளையாடும் தனது நெருங்கிய உறவினரான அதபத்து உள்ளிட்ட சில வீரர்களுக்கு தேசிய மட்டத்திலான போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கினார். இன்னுமொரு அடி வெகுவிரைவில் விழப்போகிறது. இலங்கை கிரிக்கட்டில் நீண்டகாலம் சிரேஷ;ட அதிகரியாக கடைமையாற்றி வரும் முன்னாள் வீரர் ஒருவருக்கு கர்த்திருக்கிறது(நடக்கத்தானே போகுது நடந்த பிறகு உங்களுக்கு புரியும்). இன்னுமொரு விடயத்தை இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும்

விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் கிரிக்கட் தலைவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு பூகம்பமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

எது எவ்வாறாக இருப்பினும் 'தாருன்யட ஹெடக்' என்ற அமைப்பின் தலைவர், ஜனாதிபதியின் மகன் தலைமையில் ஹம்பாந்தொட்டையில் கட்டப்படும் சர்வதேச தரத்திலான மைதானத்தின் பணிகள் மும்முரமாக நடக்குதாம்.

(புதிய சர்வதேச தரத்திலான மைதானத்திற்கு ரணதுங்கவின் பெயரை வைத்து இலங்கை அணியை அவரது குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் கொண்ட அணியாக உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...)

ஆப்ரகாம் லிங்கன் உயிருடன் இருந்திருந்தால் இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக்கியிருக்கலாம்.

11:32 AM Hisham Mohamed - هشام 1 Comments


ஆப்ரகபம் லிங்கனும் கிரிக்கட் களத்தடுப்பு சிந்தனையும்.

வெற்றி வானொலியின் காலை நேர நிகழ்ச்சிக்கு நல்ல சிந்தனைகளை தேடிக் கொண்டிருந்த போது நான் பார்த்த ஆப்ரகாம் லிங்கனின் சிந்தனை இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நிலையை ஞாபகப்படுத்தியது.

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இந்திய அணி களத்தடுப்பில் விட்ட தவறுகள் அணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற தேவையை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.

சரி ஆப்ரகாம் லிங்கன் எப்படி சம்பந்தப்படறார் அப்படின்னு கேட்கிறீங்களா. அவரோட சிந்தனையை தருகிறேன் அப்ப உங்களுக்கு புரியும் "You can hide some of the fielders all of the time, and all of the fielders some of the time, but you can not hide all of the fielders all of the time."


அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விக்கட்டுகளுக்கிடையில் ஒட்டங்களை பெற எடுத்த வேகம் களத்தடுப்பில் ஈடுபட்ட இந்திய வீரர்களின் மோசமான வெளிப்பாடுகள் 430 என்ற ஒட்ட எண்ணிக்கையை எட்ட உதவியது அவுஸ்திரேலிய அணிக்கு.


பொன்டிங் போட்டி ஆரம்பமாக கொஞ்ச நாளைக்கு முன் சில விடயங்களை ஊடகங்களோடு பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமாக ஆஸி வீரர்கள் விளையாடுவது 'new age' cricket என்றும் ஆஸியின் இலக்கு இந்திய அணியின் மூத்த வீரர்கள் என்றும் குறிப்பிட்டார்.(இதன் அர்த்தம் ஒரு வேளை இப்படி இருக்கலாம் ஆஸி ஒட்டங்களை குவிக்க எடுக்கும் வேகம், இந்தியாவின் களத்தடுப்பு, அல்லது இரண்டும்.) உண்மையில் பொன்டிங் சொன்னது போல ஆஸியின் ஆட்டம் 'new age' cricket தான். இந்திய அணியின் களத்தடுப்பு 90க்கு முதல் கிரிக்கட்டை ஞாபகப்படுத்துகிறது.

லிங்கனின் சிந்தனை அது இனி என் சிந்தனை முதல் நாள் ஆட்டத்தின் போது 90 ஓவர்கள் வீசப்பட்டன. ஏன் 100 ஓவர்கள் வீசக் கூடாது போட்டி ஆரம்பமானதோ 9.30க்கு நிறைவடைந்தது 4.30க்கு பெங்களுரில் 5.30 வரை போதிய வெளிச்சம் காணப்பட்டது. ஒரு நாள் போட்டிகளில் 100 ஓவர்கள் மொத்தமாக வீசப்படுகின்ற போது டெஸ்ட் இல் ஏன் வீசக்கூடாது. தேனீர் இடைவேளைக்காக எடுத்துக் கொள்ளும் 20 நிமிட நேரத்தில் 4 ஓவர்கள் பந்து வீசலாம்.

எதுலயும் லாபத்த தானே பாக்கனும்...............

நாலு பேர் தப்பா பேசுவாங்க.... யார் அந்த நாலு பேர்?

12:26 PM Hisham Mohamed - هشام 6 Comments

அந்த நாலு பேர் யாருன்னு தெரியாது ஆனா தப்பா பேசுவாங்க. இந்த நாலு பேருக்கு பயப்பட்ற நம்ம நண்பர்கள் ஏன் அந்த ஒருத்தனுக்கு(இறைவன்) பயப்பட்றதில்ல.

இது என்னோட அனுபவ பதிவு மனசுல உள்ளத கொட்டி தீர்க்கப்போறேன் நேரம் இருந்தா படிச்சுப்பாத்துட்டு பின்னூட்டம் எழுதுங்க.

பதிவு எழுத ஆரம்பிக்கும் போது பக்கத்துல இருந்த லோஷன் அண்ணாவுக்கும் அருந்ததி அக்காவுக்கும் (எல்லாரும் ஒன்னாதான் வெற்றிக்காக உழைக்கிறம்)சின்னதா ஒரு விவாதம் நடந்தது. ஏற்கனவே பதிவின் ஆரம்பத்தில் 'அந்த ஒருத்தனுக்கு பயப்பட்றதில்ல' என்று சொல்லியிருக்கேன் கடவுள் நல்லவங்கள தேடி வருவாருன்னும் கஷ;டத்துல தான் கடவுள தேடி போவேன்னும் லோஷன் அண்ணா சொல்றார் அதுக்கு அது கூடாது என்று ஆரம்பித்த அருந்தி அக்கா சொன்னாங்க மனிதனுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எவ்வளவோ இருக்கு நீங்க கூட கடவுள தேடி பேவீங்க உங்களுக்காக இல்லன்னாலும் உங்க குடும்பத்துக்காகவாவது செய்வீங்க இப்படி நேர் எதிரான கருத்துக்கள் பறந்து கொண்டிருந்த போது எனக்கொரு விஷயம் எழுதனும் போல இருந்தது பள்ளிகளிலும் கோயில்களிலும் ஏன் எல்லா மதத்தலங்களிலும் அதிகம் கடவுளை தரிசிப்பவர்கள் 50 வயதை தாண்டியவர்கள் பொதுவாக வாழ்க்கையை கிட்டத்தட்ட முழுமையாக வாழ்ந்தவர்கள். ஏன் இந்த வயதெல்லையில் இருப்பவர்கள் அதிகம் கடவுளை தரிசிக்கனும் தெளிவாக புரியுது மரண பயம்....... இது ஏன் ஆரம்பத்துல வரக்கூடாது? எப்படி வரும். 50 வயதுக்கு பிறகு மரணம் நேரும் என்பது நிச்சயமான உண்மை ஆனால் அதற்கு முதலும் வரலாம் வராமலும் போகலாம்.

இந்த 50 வருட வாழ்க்கையில கிட்டத்தட்ட அரைவாசி முடிஞ்சுது (அதுக்காக எனக்கு 25 வயதுன்னு நீங்க நினைக்க கூடாது) அதுக்குள்ள நான் கத்துக்கிட்டத கொட்டப்போறேன். வாழ்க்கைய புரிந்து கொள்ள எனக்கு ரொம்ப காலம் எடுத்தது. என்னுடைய மத குரு, ஊடகத்தில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவருடைய இறப்பு என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. இப்ப கூட என்னுடைய கையடக்கத்தொலைபேசியில ஏதாவதொரு இலக்கத்த தேடும்போது அவருடைய இலக்கம் கடந்து போகும் அப்ப நான் பட்ற வேதனைய சொல்ல வார்த்தைகள் இல்ல அந்த இலக்கம் இப்ப பாவனையில் இல்லையென்றாலும் அத அழிக்கிறதுக்கு மனசும் இல்ல. அவரு சொல்லி கொடுத்த நல்ல விஷயங்கள கொஞ்சம் கொஞ்சமா கடைபிடிக் ஆரம்பிச்சிட்டேன். எஞ்சியிருக்கிற அரைவாசி வாழ்க்கையில சரி நல்லவனா வாழ முயற்சி செய்யப்போறேன். இல்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க..

ஊடகத்துறையை விட்டுவிட்டு அப்பாவோட சேர்ந்து வியாபாரத்தை கவனி இல்லன்னா மேல்படிப்பை கவனின்னு அடிக்கடி சொல்ற அம்மாவோட வார்த்தைக்கு காது கொடுக்கலாம்னு நினைக்கும் போதே எனக்கு ஞாபகத்துக்கு வாரது அன்னை வானொலி இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக 8 மாதகாலமாக நான் பெற்ற கடுமையான பயிற்சி. அறிவிப்பாளனாக இப்படி ஒரு பயிற்சியான்னு அன்று வெறுத்துப்போனாலும் இன்று அதன் தேவையை உணர்கிறேன்.

திரு அப்துல் ஹமீத், திரு ஜெயகிருஷ;ணா, திரு சந்திரமோகன், மறைந்த திரு கணேஷ;வரன், திருமதி ராஜேஷ;வரி சண்முகம், திரு ராஜகுரு சேனாதிபதி, திரு அஹமத் முனவ்வர் இவர்களிடம் அறிவிப்புத்துறையின் குழந்தைப்பருவத்தில் பெற்ற பயிற்சி என்னை இன்று வெற்றி வானொலியின் உதவி முகாமையாளர் கதிரையில் அமர வைத்திருக்கிறது. இவ்வாறான ஒரு பதவி எனக்கு கிடைத்திருக்காவிட்டால் ஒரு வேளை ஊடகத்துறைக்கு விடை கொடுத்திருப்பேன். இந்த புதிய பயணத்தில் நான் சந்தித்தவர்களில் ஒருவர் லோஷன் அண்ணா இவர்தான் வெற்றியின் முகாமையாளர் என்னோட புதிய குரு. முகாமையாளர் பயிற்சி நெறிக்கான என்னுடைய குரு (ஆனால் அவர் கட்டணம் அறவிடுவதில்லை) அவ்வப்போது அவர் சொல்லித்தருகிற நல்ல விஷயங்களை எனது நாட்குறிப்பு பதிவு செய்யும்;. எப்பவுமே பைபிளோடு நான் பார்க்கிற அருந்ததி அக்கா, வெற்றியின் ஒழுங்கமைப்பாளர் இலங்கையில் தனியார் வானொலியின் ஆரம்பம் முதல் இன்று வரை பல நட்சத்திரங்களை பார்த்தவர் இவரிடமிருந்து நான் பெற வேண்டிய அனுபவ அறிவு ஏராளம். இப்படி இன்னும் ஏராளமாக சொல்லலாம் அதுக்குள்ள பல வருஷங்கள் ஓடிடும் அப்போ நான் எப்ப நல்லவனாகிறது? இல்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க..

பதவியும் பணமும் இல்லாத போது இருந்த சந்தோஷம் இப்ப என்கிட்ட இல்ல. பணமும் பதவியும் நிரந்தரமில்;லை என்பதை தற்போதைய உலக பொருளாதாரமும் அரசியலும் உறுதிப்படுத்துவதாக அண்மையில் 16வது பாப்பரசர் சொல்;லியிருந்தார். எளிமையாக வாழ்ந்த நபிகள் நாயகமும் புத்தரும் அதற்கு நல்ல உதாரணம். பணம் கொஞ்சம் அதிகமாக இருந்தா இன்னும் கொஞ்சம் சேர்க்கலாமே அப்படி ஒரு ஆசை. பதவி இருந்தா அடுத்தவர்களால தொல்லை. இது இரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கைய தேட கொஞ்சம் காலம் தேவை. அதுக்குள்ள நாலு பேர் தப்பா பேச மாட்டாங்களா?

5 வருட ஊடகத்துறை வாழ்விலும் சரி அதற்காக ஏங்கிய நாட்களிலும் சரி எத்தனையோ விதமான மனிதர்களை பார்த்துவிட்டேன்;. எங்க குடும்பத்துலயும் சரி பரம்பரையிலும் சரி ஊடகத்துறையில் யாரும் கால் பதித்ததில்ல. ஏன் அது பற்றி அறிந்ததும் இல்ல. எங்கப்பா புகையிரதத்தில பேப்பர் போட்டு உழைப்பை தெடங்கினவரு. அப்புறம் நான் எப்படி அறிவிப்பாளரானேன்னு கேட்கிறீங்களா? அம்மா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. பாடசாலையில் அவங்ககிட்ட படிக்க கிடைச்சது பெரும் பாக்கியம். இப்போ இலங்கை அரச தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், வெற்றி எப் எம் தனியார் வானொலியின் உதவி முகாமையாளராகவும் இருக்கேன். கொஞ்ச காலத்துக்கு முதல்ல இதெல்லாம் வெறும் இலட்சியக்கனவு எனக்கு. அத அடைய நான் எடுத்த 4 வருடங்கள் எதிர்பார்ப்புகளுடனும் ஏக்கத்துடனும் கழிந்ததால் நாட்கள் நகர்ந்ததே தெரியல. எனக்காக நான் வாழ்ந்தது தான் அதிகம் இந்த இடைப்பட்ட காலத்தில் கவலையாக இருந்த சில சந்தர்ப்பங்களில் சில நல்ல மனிதர்களின் நாலு வார்த்தை மனசுக்கு ஆறுதலாக இருக்கும். அண்மையில் கொஞ்சம் மனசுக்கு கவலையா இருந்தது அப்போ என்னோட மூத்த அதிகாரி ஒருவர் சொன்ன ஒரு விஷயம் நகைச்சுவையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது உங்களை மனதளவில் பாதிப்படைய செய்கிறவர்களை நகைச்சுவை பாத்திரங்களாகவும்; அவர்களுடைய செயல்களை இவ்வாண்டின் சிறந்த நகைச்சுவையாகவும் எடுத்துக்கொள்ளுங்கள் பிரச்சினையே வராது என்றார்.
இறுதியாக ஒரு விஷயம் நான் உங்களுக்கு சொல்லவில்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க.

உலகின் பணக்காரர் பில்கேட்ஸூம் சரி நாங்களும் சரி எதை கொண்டு போக போறோம். சூரியன் மேற்கில் உதிப்பதற்கு முன் எனக்கு நிறைய பொறுப்புகள் காத்திருக்கி;ன்றன ஏன்னா அதுக்கு பிறகு பிரார்த்தனைகளை என்னுடைய இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
இப்ப சொல்லுங்க உங்களுக்கு தெரியுமா யார் அந்த நாலு பேர்?ஒரு வேளை நாத்தம் புடிச்ச நம்ம உடலை சுமந்து போக போற அந்த நாலு பேரா இருக்குமோ!!!!!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

7:07 PM Hisham Mohamed - هشام 0 Comments


இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Jean-Marie Gustave Le Clezio வின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. Le Clezio வின் "sensual ecstasy" என்ற படைப்புதான் நோபல் பரிசுக்கு வழிவகுத்தது. 68 வயதான Le Clezio, "Desert"என்ற படைப்பின் மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்.

நேபாள மக்களின் புதிய கடவுளாக மூன்று வயது சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

6:33 PM Hisham Mohamed - هشام 5 Comments


நேபாளம், காத்மண்டு மக்களின் நம்பிக்கை படி வழக்கமாக பெண் சிறுமிகளைதான் தெய்வமாக தெரிவு செய்து வணங்கி வருகிறார்கள். இவர்களை குமாரி என்று அழைப்பார்கள். 2 முதல் 4 வயது வரையான சிறுமிகள் கடவுள் தேர்வில் கலந்து கொள்வார்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படும் சிறுமிகள் இறுதிகட்ட தேர்வில் சித்தியடைந்தால் கடவுளாகும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அது அவ்வளவு இலகுவானதல்ல ஒரு அறையில் இரவு முழுவதும் இருக்க வேண்டும் அங்கே ஆட்டுத்தலைகளும் மாட்டுத்தலைகளும் வைக்கப்பட்டிருக்கும். குறித்த சிறுமி பருவ வயதை அடையும் போது புதிய கடவுளை தேடும் பணி தொடங்கும்.


சகல தேர்வுகளிலும் சித்தியடைந்து 3 வயது சிறுமி ஒருத்தி கடவுளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் தன்னுடையை பெற்றோரை விட்டு பிரிந்து குறித்த ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்பது தான் விதி இதனால் சிறுமியின் தந்தை atap Man Shaky குறிப்பிடுகையில் கொஞ்சம் கவலையாக இருந்தாலும் தன்னுடைய மகள் கடவுளாக போற்றப்படுவதை நினைத்து பெருமைப்படுகிறார். கடவுளாக போற்றப்படும் சிறுமி சிவப்பு நிற ஆடைகளை மாத்திரமே அணிய முடியும்.


குஷ'பு, எம் ஜி ஆர் இப்படி நிறைய பேருக்கு கோயில் கட்டி வழிபடும் போது இது சாதாரண விடயம். அவர்களுடைய நம்பிக்கை காலகாலமாக இப்படித்தான் இருக்கு என்ன செய்வது.............


நன்றி - msnbc

5 நிமிடத்தில் பயணம் செய்யக்கூடிய தொலைவில் இருந்த சகோதரியை 60 வருடங்களாக தேடிய சகோதரர்.

2:10 PM Hisham Mohamed - هشام 1 Comments


அண்ணன் என்னடா தம்பி என்னடான்னு வாழுகிற Fast Food யுகத்துல வித்தியாசமான ஒரு சம்பவம் லண்டனிலிருந்து.

George Culwick க்கு வயது 87 அவரது சகோதரி Lucy Heenan வயது 88, கடந்த 60 வருடங்களுக்கு முன்னர் George தனது தொழில் நிமித்தம் பல நாடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டதால் தனது 20ஆவது வயதில் புறப்பட்டு சென்றவர் தாயகம் திரும்பும் போது தன்னுடைய சகோதரி காணமல் போனதை உணர்ந்தார். பல வருடங்களாக இங்கிலாந்தின் பல மாநிலங்களிலும் தேடி அலைந்தும் அவரால் கண்டுபிடிக்க முடியாமல் போனது(இதுக்குதான் குடும்ப பாட்டு ஒன்னு தயாரிக்கனும்னு சொல்றது)

3மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற George, நடைபெற்ற குடும்ப அங்கத்தவர் நிகழ்வொன்றில் இன்னுமொரு உறவினரின் உதவியுடன் சகோதரியை இனம் கண்டார். தான் வசித்த இடத்தில் இருந்து 5 நிமிடத்தில்(4miles) பயணம் செய்யக்கூடிய Quinton என்ற இடத்தில் 60 வருடங்களாக வசித்த சகோதரியை பிரிந்து வாழ்ந்ததை நினைத்துவருத்தப்படுகிறார் George.

தற்பொழுது பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகளோடு ஓடி பிடித்து விளையாடுகிறார்களாம் அக்காவும் தம்பியும்.

நட்புக்கு இலக்கணம் ஆண்கள்

11:04 AM Hisham Mohamed - هشام 3 Comments


பெண்கள்
ஒரு மனைவி இரவு முழுதும் வீட்டுக்கு செல்லாமல் அடுத்த நாள் காலையில் தன்னுடைய கணவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் தன்னுடைய தோழி வீட்டில் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அந்த கணவர் தன்னுடைய மனைவியின் பல இடங்களில் இருக்கும் பத்து தோழிகளிடம் விசாரித்த போது பத்து பேரும் அவள் வரவில்லையென சொல்லியிருக்கிறார்கள்.

ஆண்கள்
ஒரு கணவர் இரவு முழுதும் வீட்டுக்கு செல்லாமல் அடுத்த நாள் காலையில் தன்னுடைய மனைவிக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் தன்னுடைய நண்பன் வீட்டில் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அந்த மனைவி தன்னுடைய கணவரின் பல இடங்களில் இருக்கும் பத்து நண்பர்களிடம் விசாரித்த போது 5 நண்பர்கள் தன்னுடன் தங்கியதாகவும் 5 பேர் இன்னும் தங்களுடன் தங்கியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

எப்படி மாமா இப்படி திறந்த புத்தகமா இருக்கீங்க

யானை தாக்கி உயிரிழந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்தவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் - இலங்கை.

10:30 AM Hisham Mohamed - هشام 1 Comments


இலங்கை, மொனராகல பிரேதேசத்தில் குளத்தில் விழுந்த யானையையும் அதன் குட்டியையும் காப்பாற்ற முயன்ற பொது மகன் ஒருவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

வேடிக்கை என்னவென்றால் வன விலங்கு அதிகாரிகளோ சம்பவத்தை வேடிக்கை பார்த்தார்கள், பொலிசார் தன் பங்கிற்கு உயிரிழந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்தவரை கைது செய்தார்கள்.