
சேறு பதிந்த சப்பாத்துடனும் நனைந்த சொக்சுடனும் சேற்றில் சிக்கிய வாகனத்தை தனது சகாக்களுடன் தள்ள முற்படுகிறார் இலங்கை இராணுவ வீரர். இதுதான் இலங்கை யுத்தக்களமுனையின் உண்மை கதை. பருவ மழை என்கிற புதிய ஒரு எதிரிக்கு முன்னால் இருதரப்பும் தங்கள் காய் நகர்த்தல்களை திட்டமிட்டு செயற்படுத்துகின்றன.
ஏற்கனவே இலங்கை அரச படையினரிடம் பல பிரதேசங்களை பறிகொடுத்த வேதனையில் புலிகள் கையாளும் யுத்த தந்திரம் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்ததை கடந்த கால தாக்குதல்கள் நிரூபித்திருக்கும். தரைமார்க்கமாக தற்பொழுது தாக்குதல் நடத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல காரணம் கடவுளோடு மோத யாரால் முடியும். (அதுதான் பருவமழை)
பருவ மழைக்காலம் ஆரம்பமான பிறகு புலிகள் கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்பல்களுக்கு தாக்குதலை மேற்கொண்ட பிறகு மன்னார் மற்றும் தலைநகர் கொழும்பின் களனி பிரதேசத்தின் மீது புலிகளின் இரண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தியிருந்தன அதன் பிறகு வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலையும் சுட்டிக்காட்டலாம். இவை இலங்கை அரசுக்கு பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தாவிட்டாலும் பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக களனி மின் நிலையத்தின் மீதான தாக்குதல் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை செலுத்தும்.
இலங்கை இராணுவத்தினர் அதிரடியாக ஆரம்பித்த தாக்குதலின் வேகம் கடந்த வாரங்களில் கொஞ்சம் மந்த கதியில் செல்வதை அவதானிக்க முடிந்தது. பருவ மழையின் தாக்கம் யுத்த நடவடிக்கைகளை பெரிதும் பாதித்திருக்கிறது. இலங்கை படையினரின் வான் தாக்குதல்களும் மப்பும் மந்தாரமுமான காலநிலையால் மந்த கதியிலேயே இடம்பெறுகிறது.
கிளினொச்சியை நெருங்கிக்கொண்டிருக்கும் இராணுவத்தினர் மிகுந்த மனவலிமையுடன் இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. புலிகளின் வெப்தளங்களின் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் தரைமார்க்கமாக தாக்குதல்களை மேற்கொள்வதை விடுத்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிய முடியும் அதேநேரம் பருவ மழையை புலிகள் சாதகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான சான்றுகளாக வான் மற்றும் கடல் தாக்குதல்களில் அவர்கள் காட்டும் தீவிரத்தை குறிப்பிடலாம்.
புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பிரதேசங்களை அறிய
இந்த தளத்தை சொடுக்கி விரிவான வரைபடத்தை பார்க்கலாம்.
http://www.defence.lk/orbat/Default.asp
ஒபாமா வென்றாலும் மெக்கெய்ன் வென்றாலும் இதில் மாற்றம் ஏற்படப்போவதில்லை................

உண்மையில் இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றை புதுப்பித்திருக்கிறது என்பது யாரலும் மறுக்க முடியாத உண்மை. ரிபப்லிகன் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட பல மாநிலங்களிலும் அக்கட்சி கோட்டைவிட்டது. வெள்ளையர்களின் வாக்குகளோடு ஒரு கறுப்பினத்தவர் ஜனாதிபதியான முதல் முறை.
இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தல் உலகத்துக்கு நல்ல பாடத்தை கற்பித்தது. இனத்தாலும் நிறத்தாலும் ஏன் ஊர்களாலும் பிளவுபட்டிருக்கும் பிளவுபடச்சொல்லும் மங்கா பசங்களுக்கு கொடுத்த சிறந்த கசையடி.
இம்முறை நடைபெற்ற தேர்தல் கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளை இனத்தவர்களுக்குமிடையில் நடந்த போட்டியா?
இந்த படத்தில் இருப்பது போல ஒபாமா வெள்ளை இனத்தவராகவும் மெக்கெய்ன் கற்பினத்தவராகவும் இருந்திருந்தால் இந்த நிலை மாறியிருக்குமா?
என்னதான் இருந்தாலும் இலங்கை இந்திய அரசியல்வாதிகளை விட அமெரிக்கர்கள் ஒரு படி மேல் என்பதை ஒபாமாவின் வெற்றிக்கு பிறகு மெக்கெய்ன் ஆற்றிய உரை உணர்த்தியிருக்கிறது. ''அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் ஒபாமா''. அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா எடுக்கப்போகும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குமாறும் தன்னுடைய ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டவர் வாழ்த்துச்சொல்லவும் மறக்கவில்லை.
மெக்கெயன் இந்தியா அல்லது இலங்கை நாட்டைச்சேர்நதவராக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் 'ஒபாமா செய்தது முழுக்க மோசடி எல்லா வாக்குகளும் கள்ள வாக்குகள்."
இனி என்ன ஒபாமாவா? ஒசாமவா?

இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சி சேவைகள், வங்கிகள் மேலும் பல விடயங்களை அறிந்து கொள்வதற்கான தளம்.
web