இதயத்தை உருக்கும் கதை

11:40 PM Hisham Mohamed - هشام 14 Comments


கடின உழைப்பாளிகள் நேரம் ஒதிக்கி கொஞ்சம் வாசிச்சிட்டு போங்க.



ஒரு தந்தை தன் வேலையை முடிச்சிட்டு மிகுந்த களைப்புடன் வீட்டுக்குப்போகிறார்.

தந்தையின் வருகைக்காக கதவோரத்தில் சாய்ந்தபடி காத்திருக்கிறான் 5 வயது சிறுவன்.

அப்பாவை கண்ட சந்தோசத்தில் அவரை கட்டித்தழுவிக்கொண்டான்.

மகன் : அப்பா உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கனும்?

அப்பா : ம்ம்ஹ்..... என்ன அது?

மகன் : அப்பா ஒரு மணித்தியாலத்திற்கு நீங்க எவ்வளவு காசு சம்பாதிப்பீங்க?

அப்பா : அது உனக்கு தேவையில்லாத கேள்வி. அது எதுக்கு உனக்கு? என்று கோபித்துக்கொண்டார்.

மகன் : எனக்கு தெரிஞ்சிக்கனும்பா சொல்லுங்க ப்ளீஸ்? ஒரு மணித்தியாலத்திற்கு நீங்க எவ்வளவு காசு சம்பாதிப்பீங்க?

அப்பா : ஒரு மணித்தியாலத்திற்கு 100 ரூபாய் சம்பாதிக்கிறன்.

மகன் : 'ஓ' என்று தலையை குனிந்தவன் நிமிர்ந்து நின்று 'அப்பா எனக்கொரு 50 ரூபா காசு வேணும்' என்றான்.

'இதற்காகவா இந்தக்கேள்வியை என்னிடம் கேட்டான்' என்ற கோபத்தில். ஒரு விளையாட்டுப்பொருளை வாங்கிக்கேட்டிருந்தாலும் பரவாயில்ல என்று கோபப்பட்டு முனுமுனுத்துகொண்டவர். 'உள்ள போ என்று மகனை திட்டிவிட்டார்'

வாடிப்போனவன் தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டான்.

சிறிது நேரத்தில் வேலை விட்டு வந்த சோர்வு நீங்கி அமர்ந்திருந்த அந்த தந்தை சிந்திக்க தொடங்கினார்.

''அவன் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் 50 ரூபா காசு கேட்டிருப்பான். அவன் என்கிட்ட அண்மையில காசு கேட்டதே இல்ல'' என்று தனக்குள் நொந்துக் கொண்டவர் அவன் அறைக்குள் நுழைந்தார்.

அப்பா : தூங்கிறீயா?

மகன் : இல்லப்பா நான் எழும்பித்தான் இருக்கேன்.

அப்பா : டேய் அப்பாவுக்கு ரொம்ப டயர்ட்டா இருந்தது அதுதான் கோபமா திட்டிட்டேன். சரி இந்தா நீ கேட்ட 50 ரூபா.

'ஓ தெங்கியு அப்பா' என்று அளவில்லா ஆனந்தமடைந்தவன் தன் தலையணையின் அடியிலிந்து இன்னும் கொஞ்சம் காசையும் எடுத்து கணக்கிட தொடங்கினான்.

அவன் கிட்ட ஏற்கனவே காசு இருந்ததை கண்ட அப்பா ''இவ்வளவு காசு உனக்கு எதுக்கு'' என்றார்.

மகன் : முன்ன கொஞசம் போதாமல் இருந்தது இப்பதான் சரியா இருக்கு. அப்பா இப்ப என்கிட்ட 100 ரூபா காசு இருக்கு உங்க டைம்ல ஒரு மணித்தியாலத்தை எனக்கு தருவீங்களா?

அப்பா நாளைக்கு நேரத்தோடு வீட்ட வாங்க உங்க கூட இரவு சாப்பிட்டதே ஞாபகமில்ல. உங்களோட ஒன்னா சாப்பிட ஆசையா இருக்கு.

ஒரு 100 ரூபா காசுக்காக உண்மையான அன்பை இழக்கிறதுல அர்த்தம் இருக்கா? எல்லாருமே கடுமையாக உழைக்கிறோம். நேரமும் காலமும் ஓடிகிட்டே இருக்கு சிலர் கடல் கடந்து உழைப்பவர்களாகவும் இருப்பீர்கள். எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர்களோடு செலவழிக்கவும் எங்களிடம் நேரமில்லையா?

நாம நாளைக்கே மண்டைய போட்டா நம்ம கம்பனி இலகுவாக நம்ம இடத்துக்கு இன்னுமொருவரை நியமிக்கும். ஆனால் உங்கள் குடும்பமும் நண்பர்களும் அவர்களின் ஆயுள் முழுதும் நம் பிரிவை உணர்ந்து வாடமாட்டார்களா?

பணமா பாசமா என்கிற போராட்டத்திற்கு மத்தியில் நம் தெருவில் இது போல ஆயிரம் கதைகள்.

14 COMMENTS:

Mathu சொன்னது…

நல்ல கருத்துள்ள கதை...This exactly explains how family-bonding is nowdays among many families.

பெயரில்லா சொன்னது…

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

kuma36 சொன்னது…

/// முன்ன கொஞசம் போதாமல் இருந்தது இப்பதான் சரியா இருக்கு. அப்பா இப்ப என்கிட்ட 100 ரூபா காசு இருக்கு உங்க டைம்ல ஒரு மணித்தியாலத்தை எனக்கு தருவீங்களா?///

பல மகன்களின் ஏக்கங்கள் இது அதே சமயம் இப்போ பல தந்தைகளின் ஏக்கமும் கூட‌

தமிழ். சரவணன் சொன்னது…

அருமையாண பதிவு பல தந்தைகள் இதைப்படித்துபார்கவும்... ஆனால் எனக்கு இந்த வாய்பில்லை

பெயரில்லா சொன்னது…

i have read this story before! it is very true, we are always running to cope up with the pace of this racy world, but we froget to spend time with our loved Ones... Everybody should spend atlest an hour daily with fmly and frnds!!!

dearbalaji சொன்னது…

Simply superb!

Nanum tamilan.., சொன்னது…

namma kastappatu ulaithal than nan pillai fifty rupee save panna mutiyum

பெயரில்லா சொன்னது…

இது போல நாம் பல கதைகள் கேட்டிருந்தாலும்,இதுதான் இப்போதைய உண்மை நிலை.....
இந்த ஏக்கம் இப்போது......
வயதுபோன காலத்தில்வெளிநாடு சென்று தங்கள் பிள்ளைகளோடு தங்கி வாழும் பெற்றோரின் ஏக்கமாகவும்,
பெற்றோர் பணம்தேடி வெளிநாடு செல்ல தனிமையில் வாடும் குழந்தைகளின் ஏக்கமாகவும் மாறிக்கொண்டு வருகிறது.....
இதற்கு எப்போ விடிவு பிறக்கும்?????????

-வைதேகி-

Sinthu சொன்னது…

அண்மித்த நாட்களில் நடப்பது இது தான்.. பொதுவாக எல்லோரும் பணத்தையே முக்கியமாகக் கருதுகிறார்கள்..
காரணம் தெரியாதவளாக...

Hisham Mohamed - هشام சொன்னது…

மது, கலை - இராகலை, தமிழ். சரவணன்,balaji, sekar, வைதேகி, Sinthu நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி மாயவன்.

kannan nadarajan சொன்னது…

Really Fantastic. Keep it up.

பெயரில்லா சொன்னது…

உண்மையில் இதயத்தை உருக்கியது!
இன்றைய பிஞ்சு உள்ளங்களின் ஏக்கமும் தவிப்பும் இதுதான்!
காலத்திற்கு தேவையான அருமையான பதிவு!
வாழ்த்துகள்!

Mujahidh Haseem சொன்னது…

கதைதான்..ஆனாலும் எவ்வளவு பெரிய உண்மை அதுல இருக்கு.
இந்த கால தந்தைமார் கொஞ்சம் வாசித்தால் நன்று.
it's really great idea telling us a truth that we never feel.
continue.....Weldon....

painful to read...
anbudan aruna