Ven.​Maduluwawe Sobhitha Thera who loves the Nation and People | Tamil

நாட்டையும் மக்களையும் நேசித்த மாதுலுவாவே சோபித தேரர் நவம்பர் 8ம் திகதி தனது 73ஆவது வயதில் காலமானார்.

Ven.​Maduluwawe Sobhitha Thera Passes Away 08.11.2015


நல்ல தேசம் வேண்டும், நல்லாட்சி மலர வேண்டும், மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று போராடியவர் வெற்றிப்பாதை கண்ட தனது பயணத்தின் ஆரம்பத்திலேயே விடைபெறுவது நாட்டு மக்களுக்கும் நல்ல தலைவர்களுக்கும் மிகப்பெரியதொரு பொறுப்பை விட்டுச்செல்வதாகவே உணர்கிறேன்.


"பிளவுபட்டு நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை 35 வருட கால யுத்தம் யாருக்கும் வெற்றியை தரவில்லை.. இனிமேலும் ஒரு யுத்தம் வேண்டாம். ஒன்று பட்டு வாழ்வதே வெற்றி தரும் இதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன" சோபித தேரர்.

மற்றவர் நம்பிக்கைகளை அவமதிக்காமல் ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொடுக்கும் எந்தவொரு மதகுருவும் வரலாற்றுப்பக்கங்களில் அத்தியாயமாக என்றும் வாசிக்கப்படுகிறார்கள்.

நாடு அமைதியிழந்தபோதெல்லாம்  ஒற்றுமையை வலியுறுத்திய
சோபித தேரரின் வாழ்க்கை அரை குறையாய் வேதம் படித்து நச்சு விதைக்கும்  மதகுருமாருக்கும். மதத்தின் பெயரால் தேர்தல் காலங்களில் வாக்கு பிச்சை கேட்கும் அரசியல் தலைவர்களுக்கும் நல்ல முன்மாதிரி.





Which Plastics Are Safe?

நாம் பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் பற்றி நாம் அறியாத சில விடயங்கள். 

நாம் தண்ணீர் பருகும் ப்ளாஸ்டிக் போத்தலை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்துவது உடல் நலத்தை பாதிக்குமா?




Abraham Lincoln's Letter to His Son's Teacher | Tamil

ஆபிரஹாம் லிங்கன் தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம் 

உழைத்துச் சம்பாதிக்கும் ஒரு டாலர் , உழைக்காமல் சம்பாதிக்கும் ஐந்து டாலரை விட மதிப்பானது என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
அவனுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும்
கற்றுக்கொடுங்கள்..









வாழ்த்துக்களால் வாழ்க்கைய வளப்படுத்தும் ரகசியம்.

சின்னச்சின்ன வாழ்த்துக்களால் நாட்டையே மாற்ற முடியும். உணர்வுபூர்வமாக வாழ்த்துச்சொல்லி வாழ்க்கையை அழகுபடுத்தும் எளிமையான ரகசியம்.



வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவது எப்படி?

சீனாவின் மூங்கில் மரம் கற்றுத்தரும் அற்புத வாழ்க்கைப்பாடம்.





என் நண்பன்!

ஏதோ ஒரு தெரியாத தொலைபேசி இலக்கத்துல இருந்து ரெண்டு மிஸ் கோல். ஒரு சில மணித்தியாலத்திற்கு பிறகு மீண்டும் அழைப்பெடுத்து பார்த்தேன். மறுமுனையில் 'அறிவிப்பாளர் எப்படி இருக்கீங்கன்னு' ஒரு குரல். உடனடியா மதிக்க முடியல. 'சவுத் ஆப்ரிக்கால இருந்து தீலீப் பேசுறேன்டா..' திலிப் என் பள்ளிக்காலத்து நல்ல நண்பன்.பல வருடங்களுக்கு பிறகு அவனோட குரல கேட்குறேன். கொஞ்ச நேரம் என்னையே மறந்து பேசிட்டிருந்தேன். ஒரு சில நிம
ிடம் வசந்த காலத்தின் வாசல் திறந்தேன். கடைசியா 'இங்க வந்து ஆறு வருசமாச்சு இப்போதான் இந்த தூரமும் தனிமையும் எவ்வளவு தூரம் அன்பை தேட வைக்குதுன்னு புரியுது.. டேய் வேலை இருக்கு வரும் போது கட்டாயம் சந்திக்கனும்னு' சொல்லிட்டு போன கட் பண்ணி ரொம்ப நேரமாகியும் ஒன்னு ரெண்டு ஞாபகங்கள் இன்னும் இங்கதான் சுத்திக்கிட்டு இருக்கு..

அவனோட ஒரு சில நிமிட உரையாடல் நண்பர்களோடு இருந்த நல்ல பொழுதுகளின் நம்பிக்கையை உணர்த்தியது. திரும்பும் இடமெல்லாம் நண்பர்கள்னு ராஜா போல ஒரு வாழ்க்கை என் இலட்சியத்துக்காக அத்தனையும் துறந்து பட்டணம் வந்தேன். பறந்தோடிய நாட்களின் முடிவில் நண்பர்கள் பல திசைகளில் நாடு கடந்து வாழ்கிறார்கள். காலம் தலைநகரின் வாழ்க்கை வட்டத்தில் இப்படியும் நண்பர்கள்னு இரண்டு விதமாகவும் காட்டியது. இப்போது சறுக்கல்களிலும் சந்தோசங்களிலும் கூட இருக்கும் நண்பர்கள் என் வெற்றியின் ரகசியம்.

நமக்குள் இருக்கும் 'நான்' யாருன்னு தேடனும். முகவரிய தொலைச்சிட்டு மிமிக்ரி பண்றதுல லாபமில்ல. 
 


என்னோட நண்பர்கள நினைக்கும்போது பெருமையா இருக்கு அவங்ககிட்ட இருந்து நான் இன்னும் படிக்க வேண்டி இருக்கு. சுயநலமில்லாத அவங்களோட அன்பு இந்த உலகத்துல எதுவுமே விலை மதிப்பில்லன்னு சொல்லும். அத்தனையும் செஞ்சிட்டு மேடையேறி நான் கை தட்டு வாங்கும் போது பின் வரிசையில நின்னு இதயத்தால சிரிக்கிற நீதான் என் நண்பன். வெட்கப்பட்றேன் சில நேரம் மனிதர்கள் போல சுயநலமா இருந்ததுக்கு. எதிர்பார்ப்பில்லாத அன்பு வாழ்க்கையை உணர்த்தும்னு சொல்லுவாங்க. நாம எப்பவும் உண்மையா வாழ நல்ல நண்பர்கள் இருக்கனும். அவங்கதான் எப்பவும் நமக்கு நல்ல கண்ணாடி.

ஒரு குழந்தையின் சிரிப்பு நம் மனதுக்கு அவ்வளவு ஆனந்தத்தை தருகிறதே ஏன்னு யோசிச்சு பாத்திருக்கோமா? அதில் வஞ்சம் இல்லை. ஆனால் நாம இப்ப யாரயாவது பாத்து சிரிக்கக் கூட பல தடவை யோசிக்கிறோம். நான் எதுக்கு சிரிக்கனும்னு ஒரு இருமாப்பு. நம்மை சுத்தி ஒரு இரும்புக்கதவு போட்டு பூட்டி வைச்சிருக்கோம். எதுக்காக? சமூகம், அந்தஸ்து, பணம் இன்னும் என்னென்னவோ. இதனாலதான் மனுசன் குழந்தையாவே இருக்கிறதில்ல. கடவுள் ஒன்னும் நமக்கு முதுமைய தாரதில்ல நாம்தான் தேடிப்பெற்றுக்கொள்றோம். இனியாவது என்னோட குழந்தைதனத்தை நான் தேடக் கூடாதா. ஒரு அழகான பட்டாம் பூச்சியை எவ்வளவு கொடூரமா கொலை பண்ணியிருக்கோம் நம்ம சுயநலத்துக்காக.

என் துயர் நெடுகிலும் என்னோடு துணையிருந்து. ஏறும்போதெல்லாம் ஏணியாய் தோள்கள் தந்த என் நண்பர்களுக்கு இந்த பதிவு.

பெயர் குறிப்பிட்டால் குற்றமாகிவிடும். இப்போது இந்த நிமிஷம் உன் உள் மனது ஒரு உண்மை சொல்லும் நீதான் என் நண்பன் என்று பூட்டு போட்டு மறைத்து விடாதே நீ மனிதனாகி விடுவாய்.

நடு சாமத்திலும் உன் கதவு தட்டுவேன் உரிமையோடு என் பதிவை வாசிச்சு பாருன்னு யேன்னா நான் உன் நண்பன்.