புஷ்ஷின் அமெரிக்காவில் அதிகம் பிரயோகிக்கப்பட்ட சொற்கள்.

11:32 PM Hisham Mohamed - هشام 0 Comments

மன்னன் புஷ்ஷின் ஆட்சி முடிகிறது.

மாமன்னன் புஷ் 8 வருட கொடுங்கோல் ஆட்சியில் அதிகம். பயன்படுத்தியது எந்த சொல்லை ?

இந்த முகிற்கூட்ட சொற்களை நன்கு அவதானித்து பாருங்கோ கடந்த 12மாதங்களிலும் அமெரிக்காவின் மாநிலங்களின் உத்தியோகபூர்வ உரைகளிலும் மாமன்னன் பயன்படுத்திய சொற்கள் இவை.

புஷ் எட்டு சந்தர்பங்களில் நிகழ்த்திய உரைகள் ஆராயப்பட்டன. அவற்றில் பொதுவாக நம்ம ராமசாமி அண்ணே கூட பாவிக்கிற in, on, of, many, also என்கிற சொற்கள் நீக்கப்பட்டன.

தீவிரவாதம் என்கிற சொல்லோடு ஆரம்பிக்கப்படட ஆட்சி....


அட்டவணையோடு வெளியிட்ட சில விடயங்கள்.
இந்த நிறக் கோடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சொல்லை குறித்து நிற்கின்றன. ஆட்சி ஆரம்பமானதே தீவிரவாதம், எதிரிகள், ஆப்கானிஸ்தான் என்கிற சொற்களோடுதான்.

9\11 தாக்குதல்

9\11 தாக்குதல் கடந்த எட்டு ஆண்டுகளில் அமெரிக்கா உரைத்த சொற்களில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2002 ம் ஆண்டு ஆரம்பத்தில் அதிக தலைவலியை கொடுத்த ஆப்கானிஸ்தான் தொடர்நது ஆண்டின் இறுதியில் ஈராக்கை இலக்கு வைத்து தீவிரவாதம் என்கிற சொல்லுக்கு இன்னும் அதிகமாக விளம்பரம் கொடுக்கப்பட்டது. புஷ்ஷின் அமெரிக்கா 2006ம் ஆண்டுக்கு பிறகு ஈராக்கிற்கு கொடுத்த விளம்பரம் 9\11 தாக்குதலின் பின்னர் தீவிரவாதம் என்ற சொல்லுக்கு கொடுத்ததைவிட அதிகம்.

மக்கள் மீது புஷ்ஷின் அமெரிக்கா கொடுத்த அழுத்தம்.


அமெரிக்காவை தலை குனிய வைத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு புஷ்ஷுக்கு உண்டு.
பொருளாதாரம் என்றாலே வரி என்ற சொல்தான் ஞாபகத்திற்கு வருமளவிற்கு மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்க பொருளாதாரத்தை போலவே பொருளாதாரம் என்ற சொல்லின் பயன்பாடும் பல சரிவுகளை கண்டது.

சமூகத்தை மறந்து போன மாமன்னன்.


ஆட்சியின் ஆரம்ப உரைகளை தொடாந்து சமூகம் தொடர்பான சொற்களின் பாவனை குறைந்தது என்பதை விட மறந்து போனது என்பதே மிகப்பொருந்தும்.2001ம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் அதிகம் பிரயோகிப்பட்ட சிறுவர்கள் மற்றும் சுகாதாரம் என்ற சொற்கள் பிந்நாட்களில் பல சரிவுகளை சந்தித்தன.

இன்னும் ஒரு சில தினங்களில் மாமன்னன் நடித்த பல படங்கள் திரையிடப்படும் இல்லையென்றால் அவை ரீமேக் செய்யப்படும்.

புள்ளி விபரம் - C - Span