வெற்றிப்பயணத்தில் ஒரு வருடம் எப்படி போச்சுன்னு தெரியல ஜனவரி 26ம் திகதி...
இதே போல ஒரு ஜனவரி 26ம் திகதி ஆனால் 2008ம் ஆண்டு.இலங்கை வானொலியில் சில வலிகளும் குறைகளும் இருக்கலாம். ஆனால் அது
என்னைப் பொறுத்தமட்டில் எனக்கொரு பள்ளிக்கூடம்.
பெரும் குழப்பத்தில் 2008ம் ஆண்டு 26ம் திகதி சனிக்கிழமை காலைப் பொழுது புலர்ந்தது. இருந்த எல்லா வேலைகளையும் ரத்துச் செய்து விட்டு வீட்டில் முடங்கிக்கிடந்தேன். ஒலிபரப்புத்துறையில் கடும் முயற்சிகளுக்கு பிறகு கொழும்புக்கு நான் காணக்கொண்டு வந்த கனவுகளில் ஒன்று நிறைவேறும் சந்தோசத்திலும் என் மனதில் பெரும் சோகம் குடிகொண்டிருந்தது. இலங்கை வானொலியில் சில வலிகளும் குறைகளும் இருக்கலாம். ஆனால் அது என்னைப் பொறுத்தமட்டில் எனக்கொரு பள்ளிக்கூடம். அறிவிப்புத்துறையில் அ ஆ மட்டுமல்ல தொலைக்காட்சி, விளம்பர உலகம் என பரந்துபட்ட ஊடகத்துறையில் நடக்க பழகிக்கொண்டதும் அங்கேதான்.
பதிய முடியாத சில வருத்தங்களால் மாறுதலின் தேவையை உணர்ந்தேன்;(பதிவுலகும் ஊடகத்துறையும் நானும் பதிவில் வரும்). அம்மாவையும் அப்பாவையும் இறுதி வரை சமாளிக்க முடியாமலே போயிட்டு. மறைந்த என்னுடைய மதப்போதகர்(ஹஸரத்) கொடுத்த தைரியமான வார்த்தைகளால் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன். இவர் மதகுரு மட்டுமல்ல என் நெருங்கிய நண்பர். சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். நான் ஊடகத்தில் நுழைந்தது முதல் வெற்றி இல் இணைந்து கொண்டது வரை என் உயர்வுகளிலும் சரிவுகளிலும் எனக்கு ஆலோசனை தந்தவர்.
''புத்தம் புது காத்துதான் என்ன வா வான்னு அழைக்கிறதே''
அன்றைய தினம் கேட்கும் எல்லா பாடல்களிலும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு. முக்கியமாக கண்ணாமூச்சி ஏனடா படத்தில் ''புத்தம் புது காத்துதான் என்ன வா வான்னு அழைக்கிறதே'' பாடல். ஒரு மாதரியாக மாலை வேளையில் ஒரு முடிவுக்கு வரக்கூடியதாக இருந்தது. அப்போது வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அடுத்த நாள் 27ம் திகதி ஞாயிற்றுகிழமை காலை நிறுவனத் தலைவரை வந்து சந்திக்கும்படி. உறுதியோடு புதிய பயணத்திற்கு தயாரானேன். இரவு இலங்கை வனொலியின்(தென்றல்) கட்டுப்பாட்டாளர் என் நிலை அறிய அழைப்பினை ஏற்படுத்தினார். 28ம் திகதி நான் விலகப்போவதை அவரிடம் உறுதிப்படுத்தினேன். கேட்டுக்கொண்டிருந்தவர் ஞாயிற்றுகிழமை 1 மணியிலிருந்து 3 மணிவரை நிகழ்ச்சி செய்ய முடியுமா என்று கேட்டார். இலங்கை வனொலியில் செய்யப்போகிற கடைசி நிகழ்ச்சி என்பதால் ஒத்துக்கெண்டேன்.
ஜனவரி 27ம் திகதி நிறைய அலுவல் இருந்தது......
(தொடரும்)
3 COMMENTS:
எதிர்பார்ப்புடன்....................
அண்ணா எத்தினை Episode போடுவதாக உத்தேசம்
என்ன கொடும சார் இது?
எங்கள ஏங்க வைக்கிறீன்க.......
கருத்துரையிடுக