வெற்றிப்பயணத்தில் ஒரு வருடம் எப்படி போச்சுன்னு தெரியல ஜனவரி 25ம் திகதி........
இதே மாதிரி ஒரு ஜனவரி 25ம் திகதி ஆனால் அது 2008ம் ஆண்டு.வெள்ளிக்கிழமை மாலை 2.30
ஜனவரி 25ம் திகதி 2008ம் ஆண்டு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில முக்கியமான ஒரு நாள். இலங்கை வானொலியில் மாலை 3மணி நிகழ்ச்சிக்கு தயாராகிக்கொண்டிருந்தேன் திடீரென்று ஒரு அழைப்பு வந்தது. அழைப்பினை ஏற்படுத்தியவர் வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் தலைவர் என்று அப்போது எனக்கு தெரியாது. புதிதாக தனியார் வானொலி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும் என்னை அதில் இணைந்து கொள்ளும் படியும் அவசரமாக அழைப்பு விடுத்தார். என்ன செய்வது ஏது செய்வதென்று ஒன்னுமே புரியல ஏன்னா தனியார் FM இலிருந்து வருகிற இரண்டாவது அழைப்பு இது ஏற்கனவே ஒரு வானெலியில் அழைத்திருந்தார்கள் அங்கே முக்கியமான தலைகள் என் சம்பளத்தை நிர்ணயிக்கிறதுக்காக ஆட்டோ காரர் கிட்ட பேரம் பேசுவது போல ஆயிரம் ஆயிரத்து ஜநூறுன்னு ஏத்தி ஏறக்கினதுல இனிமேல் தனியார் வானொலிகள் பக்கம் தலை வச்சும் படுக்கிறது இல்லன்னு முடிவெடுத்திருந்தேன்.
வெள்ளிக்கிழமை மாலை 7.00
வெள்ளிக்கிழமை மாலை 7 மணி இருக்கும் புதுசா கொஞ்ச நாளைக்கு முதல்ல ஒரு கார் வாங்கியிருந்தேன். அதுல அந்த ஒலிபரப்பு நிறுவன தலைவரை சந்திக்கிறதுக்கு போனேன். அப்போ அந்த புதிய வனொலி FM 99.6 இல் பரீட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்திருந்தது. பாட்டு மட்டும்தான் ஒலிபரப்பாகும் அதுவும் போன பாட்டே திரும்ப திரும்ப போகும். அதுல ஒரு பாட்டு அஜந்தா படத்துல 'எங்கே இருந்தாய் இசையே' என்று அந்த பாட்டு என்ன வா வான்னு கூப்பிடுவது போல ஒரு உணர்வு. இது உத்தியோக பூர்வமான சந்திப்பு இல்லைனாலும் என் வாழ்க்கையில இது முக்கியமான திருப்பு முனைங்கிறது ஜனவரி 27ம் திகதிதான் எனக்கு புரிஞ்சுது.
வெள்ளிக்கிழமை மாலை 7.30
வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் வரவேற்பரையில் நிறுவனத்தின் தலைவரை சந்திக்கும்போது கிட்டத்தட் 7.30மணி இருக்கும். என்னை பற்றி முழுசா தெரிஞ்சிக்கிட்ட அவரு வனொலியில என்ன மாதிரியான பொறுப்பு கொடுத்தா செய்வீங்கன்னு திரும்ப திரும்ப கேட்டாரு நானும் என்னால முடிஞ்ச விடயங்களை எடுத்துச் சொன்னேன். ஒரு 15 நிமிட கலந்துரையாடலின் பிறகு மனசுக்குள் பல போராட்டங்களோடு புறப்பட்டேன். அதுவரை புதிய தமிழ் வானொலியில் யாரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை அந்த பயம் வேற ஒரு பக்கம். இன்னுமொரு புறம் எனக்கிருந்த இன்னுமொரு வருத்தம் ஒலிபரப்பின் ஆரம்ப காலத்தில் நான் தத்தி தவழ்ந்து முட்டி மோதி வந்த இலங்கை வானொலியை எப்படி மறப்பது என்பதுதான்.
துர்க்கமில்லாத நீளமான ராத்திரியில் இதுவா அதுவா என்ற போரில் கொஞ்சம் கண் அயர்ந்தேன்.
நளை 26ம் திகதி..............
(தொடரும்)
பி.கு - கடவுளுக்கு பிறகு நான் நன்றி சொல்லவேண்டியவரை பெயரளவிலும் குறிப்பிட முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.
2 COMMENTS:
மிகுதியை வாசிக்க ஆவலாய்.....
அண்ணா கெதியாக மீதியையும் போடுங்க நல்லா இருக்கு!
வெற்றிக்கு நீங்க வந்தது நாங்களும் செய்த புண்ணியம்.
கருத்துரையிடுக