இராணுவ வீரனால் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி


ஈராக், ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்கள் அமெரிக்க பயங்கரவாதிகளால் தொடர்ந்தும் கற்பழிக்கப்படுகிறார்கள். இவற்றை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் அவை சட்டத்தின் முன் செல்லாக்காசு.

ஆதாரங்களை அழித்து சட்டப்படி குற்றம் புரியும் தீவிரவாதிகளை எந்த நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும்?
எந்த நீதிமன்றத்தில் போய் நீதி கேட்க முடியும்?

தன் மகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள் என்று அலறும் தாய் பொய் சொல்கிறாள். தவறு செய்த தீவரவாதி உண்மை சொல்கிறான்.
கேட்பதற்கு இன்னும் எத்தனையோ கேள்விகள் இருந்தும் கேட்டுத்தான் என்ன பலன்.

சட்டப்படி நடத்தப்படுகிற ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் கொலைகள் இன்னும் எத்தனையோ கொடூரங்கள் கணக்கில் வருவதில்லை. அவை கணக்கெடுக்கப்படுவதில்லை.

Former U.S. soldier Steven Green got life in prison after being convicted of murdering four Iraqis.

கடந்த வியாழக்கிழமை (28) 14 வயது சிறுமியை கற்பழித்து அவளையும் மூன்று குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்ததற்காய் பகிரங்க மன்னிப்பு கோரினான் அமெரிக்க இராணுவ வீரன் ஸ்டீவ் க்ரீன்.

''நான் ஒரு குடும்பத்தை அழிப்பதற்குகாரணமாகிவிட்டேன். மீண்டும் அவர்களை திரும்ப பெற முடியுமென்றால் அது என்னால் முடியாது.'' என்று பயங்கரவாதி ஸ்டீவ் பகிரங்கமாக மன்னிப்பு கோரினான்.(ஸ்டீவ் க்ரீன் கோரிய மன்னிப்பு அறிக்கை) பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தமை, அவள் பெற்றோர் மற்றும் 6 வயதான சகோதரியை கொலை செய்த குற்றத்திற்காக அமெரிக்காவின் கென்டக்கி மாவட்ட நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டான் ஸ்டீவ்.

பயங்கரவாதம் எங்கே விதைக்கப்படுகிறது? அதை விதைப்பவர்கள் யார்?
தன் மகள் கற்பழிக்கப்படுவதை கண்களால்; பார்க்கிற கொடுமையை ஒரு தந்தையாக ஒரு தாயாக இருந்து யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியுமா?
அத்;தனை கொடுமைகளும் இன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஸ்டீவ்வைப்போன்ற எத்தனையோ தீவிரவாதிகள் இன்னும் கடமையில் இருக்கிறார்கள்.

கடந்த செப்டெம்பர் மாதம் ஸ்டீவ்வுடன் அவனுடைய சகாக்கள் 5 பேர் அமெரிக்க இராணுவத்தால் பல குற்றச்செய்ல்கள் புரிந்த காரணத்தால் பதவீ நீக்கம் செய்யப்பட்னர். பின்பு அவர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 மாதம் முதல் 110 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


உன் போன்ற தீவிரவாதிகளை செருப்பால் அடித்து கொலை செய்ய வேண்டுமென்று என் மனசாட்சி உத்தரவிடுகிறது.

அன்னை சிந்தும் கண்ணீர்

பல்வேறு கலாச்சாரங்கள் உலக நாடுகளில் அவ்வப்போது தலை தூக்கினாலும் அம்மா என்கிற அந்தஸ்தும் பாசமும் பெருகி வரும் கலாச்சாரங்களால் வெற்றி கொள்ள முடியாதவை.

ஒரு குழந்தையை பெற்றெடுத்ததற்காய் அவள் படுகிற வேதனைகளும் வலிகளும் வார்த்தைகளுக்கப்பாற்பட்டவை.

குறைந்த உதவிகளோடும் அதிக வலிகள் அழுத்தங்களோடும் தனித்து நின்று போராடுகிற மனவலிமை நீங்கள்தானம்மா.

ரேகைகள் தேயும் வரை உன்னைப்போல் யாரால் உழைக்க முடியும். அதற்காகவோ என்னவோ உன் பாதங்களின் கீழ் சுவர்க்கம் என்றார் நபிகள் நாயகம்.

ஆண்களை விட தாய்மார் சராசரியாக தம் ஆயுட் காலம் முழுதும் 2.5 தடவைகள் அதிகமாக வலிகளை அனுபவிக்கிறார்கள் கடந்த வாரம் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிலரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு சொல்லும் உண்மை இது. இந்த வலிகள் எப்பொழுதும் அவளுக்கு வேதனையாக இருந்ததில்லை.

ஒரு தாயின் உழைப்புதான் குழந்தையின் எதிர்காலம் என்கிறார் பிரென்சுப் புரட்சியின் தளபதி நெப்போலியன் பொனபாட். ஆப்ராகாம் லிங்கனும் தன் தாய் மீது அதிக பாசம் கொண்டவர் அவர் அடிக்கடி சொல்லும் ஒரு விடயம் 'என் தாயின் பிரார்த்தனைகள் என்னை பின் தொடர்கின்றன அவை என் வாழ்வோடு பயணிக்கின்றன.

ஒரு மனிதனின் வெற்றிக்கு பெற்றோரின் பங்களிப்பு அளப்பரியது. சில சமயம் அவை மறைமுகமாக கிடைப்பதுமுண்டு. பொதுவாக ஜீன்கள்தான் மனித இயல்புகளை நிர்ணயிக்கின்றன. தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் சம அளவு ஜீன்களை ஒரு மனிதன் பெற்றாலும் தாயின் ஜீன்கள்தான் செல்வாக்கு செலுத்துகின்றன. கர்ப காலத்தில் அவளது செயற்பாடுகள் உணவு பழக்க முறையோடு சிறுபராயத்தில் அவள் விரும்பிய உணவுவகைகள் போன்ற பல விடயங்கள் ஜீன்களின் பரிமாற்றத்தால் அவள் குழந்தையும் அதை உணர்கிறது.

சின்ஹா என்கிற ஒருவர் தன் சிறுபராயத்து நிகழ்வொன்றை mothersdayworld என்கிற தளத்தில் பதிந்திருந்தார்."சிறுவயதில் என் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் என் நண்பருக்கும் எனக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் சண்டையில் பொய் முடிந்தது. என் நண்பன் என் மீது ஒரு சிறிய கல்லை வீசி எறிந்தான் அது என் வலது கண்ணுக்கு கீழ் சிறிய காயத்தை எற்படுத்தியது. ஆத்திரத்தில் அவன் முகத்தில் நான் குத்தியதில் அவன் கண்ணாடி நொருங்கியது. வேகமாக வீட்டுக்கு விரைந்தவன் தன் பெற்றோரிடம் என் மீது குற்றம் சொல்லிவிட்டான். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் என்ன நடக்குமோ அம்மா என்ன சொல்லுவாங்களோ என்கிற அச்சத்தோடு வீட்டுக்குள் நுழைந்தேன். என்னை நோக்கி ஓடி வந்த என் அம்மா எனக்கு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்பதை மட்டும்தான் பார்த்தாலே தவிர வேறு எதையும் கேட்கவில்லை. நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னேன். அதற்கு அம்மா சொன்ன பதில் என் புள்ள தப்பு பண்ண மாட்டான்னு எனக்கு தெரியும்." அன்று அவள் கொடுத்த தன்னம்பிக்கை தான் இன்றும் தன்னை ஒரு நல்ல மனிதராக வாழ வைத்திருக்கிறது என்கிறார் சின்ஹா.


பரபரப்பான இந்த யுகத்தில் தாய்க்கும் கொஞசம் ஓய்வு தேவை. தாய்மாரின் அன்றாட வாழ்நாளில் ஓய்வுக்கு கிடைப்பது ஆண்களை விட குறைந்த நேரம்தான். நாளொன்றுக்கு அமெரிக்க ஆண்கள் தாய்மாரை விட 40 நிமிடம் ஓய்வெடுக்கிறார்கள். இதுவே இத்தாலி ஆண்கள் 80 நிமிடம் ஓய்வெடுக்கிறார்கள். இன்று அன்னையர் தினம் நாம் எம் தாய்க்கு என்ன செய்யப்போகிறோம்.

பசி தூக்கம் ஓய்வு இல்லாத உன் அகராதியில் உனக்கான தினத்திலும் நீ ஓய்வெடுக்கப்போவதில்லை. அம்மா உன்னிடம் நான் கற்றுக்கொண்டது எராளம். என்னுடைய ஒவ்வொரு உயர்விலும் என்னை தாங்கி நிற்கிறாய். ஒவ்வொரு சரிவிலும் என்னை தட்டிக்கொடுக்கிறாய்.


வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்.


என்றென்றும் நீ நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்.

உங்கள் பதிவு நட்சத்திர அந்தஸ்து பெற வேண்டுமா?

உங்கள் பதிவுகளைப்பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறீர்களா?


அழகான 5 நட்சத்திரங்களை உங்கள் உவ்வொரு பதிவின்போதும் பெற்றுக்கொள்ள முடியம். உங்கள் வலைப்பூ (Blog,Wordpress,typepad)எந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.  

குறித்த விட்ஜட்டை முற்றிலும் இலவசமாக எவ்வித பதிவுகளுமின்றி பெற்றுக்கொள்ள முடியும். அதன் மூலம் வாசகர்களின் திருப்தியை உடனடியாக அறிந்து கொள்ளமுடியும்.  

உங்கள் தளத்திற்கு வருகை தருகிறவர்களில் சிலருக்கு பின்னூட்டமிட நேரமும் பொறுமையும் இருப்பதில்லை ஆனால் இந்த விட்ஜட்டின் மூலம் ஓரிரு நொடிகளில் வாசகரின் திருப்தியை  அறியலாம்.  

நட்சத்திர விட்ஜட்டை பெற இங்கே சொடுக்குங்கள்.

பாத்திரம் நிரம்ப பால்...


ஒரு ஏழைச்சிறுவன் பாடசாலை செல்வதற்காய் வீடு வீடாக தன் தாய் தயாரித்து தரும் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தான். விற்பனை நிறைவுக்கட்டத்தில் பசி அவன் வயிற்றை கிள்ளியது.

எதிரே தென்பட்ட வீட்டில் பசிக்கு ஏதேனும் உணவு கேட்க நினைத்து கதவை தட்டியவன் உணர்விழந்து போனான். அங்கே ஒரு அழகான பெண் கதவை திறந்து நின்றுகொண்டிருந்தாள். பசிக்கு உணவு கேட்க வந்தவன் தடுமாறி கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமான்னு கேட்டான். வந்தவன் பசியால் வாடியிருந்ததை உணர்ந்தவள் ஒரு பெரிய பாத்திரத்தில் பால் கொடுத்தாள். நிதானமாக குடித்து முடித்தவன்.

''நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்'' என்றான்.

அதற்கு அந்த கிராமத்து பெண் '' நீங்கள் எனக்கு கடன் பட வேண்டியதில்லை. எப்பொழுதும் கருணைக்கு சம்பளம் பெறக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க'' என்று பதில் சொன்னாள்.

''அப்போ என்னுடைய இதயப்பூர்வமான நன்றியையாவது ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டான்.

தொடந்த அந்த ஏழைச்சிறுவனின் கடின உழைப்பும் படிப்பும் ஒரு பெரிய நகரத்தில் பிரபல வைத்தியர் என்கிற அந்தஸ்தை அவனுக்கு கொடுத்தது.

ஒரு சில வருடங்களுக்கு பிறகு. அந்த கிராமத்து பெண் சுகவீனமுற்றாள். கடும் முயற்சிக்கு பிறகு கிராமத்து வைத்தியர்கள் சிகிச்சையளிப்பதை கைவிட்டுவிட்டனர். அரிய வகை நோயக்கு தகுந்த சிகிச்சையை நகரத்தில் தேர்ந்த ஒரு வைத்தியரிடம் பெற்றுக்கொள்ளுமாறு அவள் அறிவுறுத்தப்பட்டாள்.
அவசரமாக நகரத்தின் பிரபல வைத்தியரிடம் அழைத்துச்செல்லப்பட்டாள் அந்த பெண்.

உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாய் குறித்த வைத்தியருக்கு தகவல் சொல்லப்பட்டது. நோயளியின் முகவரியை பார்த்தவர் சிகிச்சைக்காக விரைந்தார்.

தன் பசிக்கு பாத்திரம் நிரம்ப பால் கொடுத்த அந்த கிராமத்து பெண்தான் அவள் என்பதை பார்த்த பார்வையில் உணர்ந்து கொண்டார். அவளை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு பல நாட்களாக கடுமையாக போரடிய வைத்தியர் வெற்றிபெற்றார்.

இறுதியாக அந்த பெண்ணின் சிகிச்சைகளுக்கான செலவுப்பட்டியல் வைத்தியரின் அனுமதிக்காக வந்தது. அதைப்பார்த்தவர் அந்தப்பட்டடியலின் அடியில் ஏதோ எழுதி கையொப்பமிட்டு அனுப்பி வைத்தார்.

கிராமத்து பெண்ணிடம் அந்த பட்டியல் கொடுக்கப்பட்டது. '' என் வாழ் நாள் முழுவதும் உழைத்தாலும் இதை என்னால் கட்ட முடியாது'' என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டு அதை திறந்தாள்.

அவள் கண்ணில் முதலில் பட்டது அந்த பட்டியலின் அடிப்பகுதியில் வைத்தியரின் கையொப்பத்துடன் அடிக்கோடிட்டு எழுதப்பட்ட அந்த சொற்கள்தான்.

''முழுமையாக செலுத்துங்கள், ஒரு பாத்திரம் நிரம்ப பாலை ஊற்றி''


சந்தோசம் அவள் கண்களை மூழ்கடிக்க தெளிவான இதயத்தோடு ''நன்றி இறைவா, உன் அன்பை மனித மனங்களில் பரப்பச்செய்'' என்று வேண்டிக்கொண்டாள்.

சுவரை நோக்கி வீசிய பந்து மீண்டும் நம்மை வந்தடைவது போல நாம் செய்யும் எல்லா நல்ல செயல்களுக்கும் என்றோ ஒரு நாள் பலனை பெறுவோம். பலன் கிடைக்காவிட்டால் உலகை அழகுபடுத்தியதற்காய சந்தோசப்படுவோம்.

இந்த உலகை அன்பு மட்டும் ஆளட்டும். கொடிய யுத்தமில்லாத உலகிற்காய் பிரார்த்திப்போம்.

விரோதி புதுவருடத்தை கொண்டாடுபவர்களுக்கு என் புத்தாண்டு வாழ்தத்துக்கள்.

என் கண்மணி உன் காதலி



சில சமயம் நாம் வாசிக்கும் விடயங்கள் நம்மை சிந்திக்க வைப்பதுண்டு... அதை நம் இதயத்தில் இருக்கும் பலரோடும் பகிர்ந்து கொள்ளவும் நாம் மறப்பதில்லை... அதுபோல நம் இதயத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு காதல் கதை...

கண் தெரியாத ஒருத்தி தன் வாழ்க்கையை வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தாள். அவள் வெறுக்காதவை எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அவள் இந்த உலகத்தில் அன்பு வைத்தது தன் காதலனிடம் மட்டும்தான். அவன் எப்போதும் அவளுக்காகவே வாழ்கிறவன். அவன் விடுகிற ஒவ்வோரு மூச்சும் இவள் பற்றிய சிந்தனையாகத்தான் இருக்கும்.

ஒரு நாள் பார்வையிழந்த அந்த பெண் தன் காதலினிடம் ''எனக்கு மட்டும் பார்வை இருக்குமென்றால் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்'' என்றாள்.

பல நாட்கள் கடந்த இந்த காதல் பயணத்தில் ஒரு முறை யாரோ ஒருத்தர் இவள் பார்வைக்கு கண்களை தானமாக கொடுத்திருந்தார்.

இப்பொழுது அவள் இந்த உலகத்தையே பார்க்கிறாள். அவள் இதயக்கூட்டில் இருக்கும் காதலனை தன் இரு கண் கொண்டு பார்க்கிறாள்.

இந்த உலகத்தை விட தன்னை நேசித்த காதலியிடம் காதலன் ''இப்போ உனக்கு பார்வை வந்துடுச்சி என்னை கல்யாணம் கட்டிக்கிறியா'' என்று கேட்கிறான். திடுக்கிட்டுப்போன காதலி ''கண் தெரியாத உன்னை நான் கல்யாணம் கட்டுவதா? எப்படி சாத்தியப்படும்? '' என்று கோபத்தோடு பதில் சொன்னாள்.

நொறுங்கிய இதயத்தோடு அவன் எழுதிய கடிதத்தின் அடியில்...

''உனக்குள் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிற சந்தோசத்தோடு விடை பெறுகிறேன். என் கண்களையாவது கவனமாகப்பார்த்துக்கொள்.''


வாழ்க்கையின் படிநிலைகள் மாறி உயர்வு பெறும் போது மனித மனங்களும் மாறுவதில்லையா? 
எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம் கடந்த பாதையை? 
வருத்தங்களில் எம் கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள் எங்கே?


(இப்போது இவளை உலகம் தெரியாதவள் அல்லது கண் தெரியாதவள் என்பதை விட குருடி என்றழைப்பது பொருத்தமென்று ராமசாமி அண்ணே சொல்லச்சொன்னாரு.)


சுதந்திர இந்தியாவின் மானம் நிவ்யோர்க் ஏலத்தில்



சுதந்திரத்தை பார்த்த கண்ணாடிகள் மீண்டும் தாயகத்துக்கு

இந்தியாவின் நாணயம் தொட்டு பல விடயங்களில் தேசிய சொத்தாக போற்றப்படும் காந்தி பாவித்த கண்ணாடி, கடிகாரம், இறுதியாக உணவருந்திய தட்டு இவை இந்தியாவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க தலைநகர் நிவ்யோர்க்கில் ஏலத்தில் விடப்பட்டது.

எதிர்ப்புகளை சமாளிக்க ஏலம் கைவிடப்பட்டதாக அறிவித்திருந்தும். குறித்த திகதியில் ஏலத்தை நடத்தியது ஏல நிறுவனத்தின் சாமர்தியம்.

உலகின் பல நாடுகளில் இருந்தும் பலர் வருகை தந்திருந்தனர்.

அகிம்சையை போதிக்க இப்படி ஒரு வழிமுறையை அமெரிக்காவை தவிர யாரால் கையாள முடியும்.

பொருளாதாரம் சரிந்து விழுகிற தருவாயிலும் இவர்கள் மீசையில் மண் ஒட்டாது பாருங்கோ. சரிந்ததை நிமிர்த்துவதற்கான வழியாக கூட இது இருக்கலாம்.

காந்தியின் பொருட்கள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன.

அதை வாங்கியவர் இந்திய பணக்காரர் விஜய் மல்லய்யா என்பதில் இந்தியா பெருமைக்கொள்ளலாம். அவற்றை அவர் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்.(இல்லாட்டி விட்டுருவாங்களா)

இந்த ஏலம் இன்னும் இரண்டு வாரங்களில் முழுமைபெறும். அதுவரை சட்ட சிக்கல்கள் பிச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

காந்தி தன் கண்ணாடியை இந்திய இராணுவ வீரரான தீவான் நவபின்னுக்கு 1930களில் பரிசளித்திருந்தார். இதை பரிசளிக்கும் போது காந்தி ''இதுதான் சுதந்திர இந்தியாவை எனக்கு காட்டியது'' என்று சொல்லியிருந்தாராம்.

ஸெனித் கடிகாரம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பரிசாக கொடுத்தது.

காந்தி தன் கைகளால் உருவாக்கிய செருப்பை இந்திய சுதந்திரத்துக்காக லண்டன் வட்ட மேசை மாநட்டில் கதைக்க சென்ற பிரிட்டிஷ் இராணுவ வீரருக்கு பரிசாக கொடுத்தார்.


காந்தியின் சொத்தை விற்றது யார்?