இராணுவ வீரனால் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி

16:23 Hisham Mohamed - هشام 9 Comments


ஈராக், ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்கள் அமெரிக்க பயங்கரவாதிகளால் தொடர்ந்தும் கற்பழிக்கப்படுகிறார்கள். இவற்றை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் அவை சட்டத்தின் முன் செல்லாக்காசு.

ஆதாரங்களை அழித்து சட்டப்படி குற்றம் புரியும் தீவிரவாதிகளை எந்த நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும்?
எந்த நீதிமன்றத்தில் போய் நீதி கேட்க முடியும்?

தன் மகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள் என்று அலறும் தாய் பொய் சொல்கிறாள். தவறு செய்த தீவரவாதி உண்மை சொல்கிறான்.
கேட்பதற்கு இன்னும் எத்தனையோ கேள்விகள் இருந்தும் கேட்டுத்தான் என்ன பலன்.

சட்டப்படி நடத்தப்படுகிற ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் கொலைகள் இன்னும் எத்தனையோ கொடூரங்கள் கணக்கில் வருவதில்லை. அவை கணக்கெடுக்கப்படுவதில்லை.

Former U.S. soldier Steven Green got life in prison after being convicted of murdering four Iraqis.

கடந்த வியாழக்கிழமை (28) 14 வயது சிறுமியை கற்பழித்து அவளையும் மூன்று குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்ததற்காய் பகிரங்க மன்னிப்பு கோரினான் அமெரிக்க இராணுவ வீரன் ஸ்டீவ் க்ரீன்.

''நான் ஒரு குடும்பத்தை அழிப்பதற்குகாரணமாகிவிட்டேன். மீண்டும் அவர்களை திரும்ப பெற முடியுமென்றால் அது என்னால் முடியாது.'' என்று பயங்கரவாதி ஸ்டீவ் பகிரங்கமாக மன்னிப்பு கோரினான்.(ஸ்டீவ் க்ரீன் கோரிய மன்னிப்பு அறிக்கை) பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தமை, அவள் பெற்றோர் மற்றும் 6 வயதான சகோதரியை கொலை செய்த குற்றத்திற்காக அமெரிக்காவின் கென்டக்கி மாவட்ட நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டான் ஸ்டீவ்.

பயங்கரவாதம் எங்கே விதைக்கப்படுகிறது? அதை விதைப்பவர்கள் யார்?
தன் மகள் கற்பழிக்கப்படுவதை கண்களால்; பார்க்கிற கொடுமையை ஒரு தந்தையாக ஒரு தாயாக இருந்து யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியுமா?
அத்;தனை கொடுமைகளும் இன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஸ்டீவ்வைப்போன்ற எத்தனையோ தீவிரவாதிகள் இன்னும் கடமையில் இருக்கிறார்கள்.

கடந்த செப்டெம்பர் மாதம் ஸ்டீவ்வுடன் அவனுடைய சகாக்கள் 5 பேர் அமெரிக்க இராணுவத்தால் பல குற்றச்செய்ல்கள் புரிந்த காரணத்தால் பதவீ நீக்கம் செய்யப்பட்னர். பின்பு அவர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 மாதம் முதல் 110 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


உன் போன்ற தீவிரவாதிகளை செருப்பால் அடித்து கொலை செய்ய வேண்டுமென்று என் மனசாட்சி உத்தரவிடுகிறது.

9 COMMENTS:

Anonymous said...

//மகே அம்மே ஏயா கியா...! என்ட ஐயோ போய்டீங்களே ...!//

இப்படி ஒரு பொய் செய்தி உங்கள் தளத்தில் உள்ளது. அது மாதிரி தானா இதுவும்?

இர்ஷாத் said...

தாலிபான்களை விதைத்து அறுவடை செபவர்களும் இவர்களே..

மனச என்னவோ பண்னுதுங்க.. உங்க பதிவு!
இவனுங்கள.. செருப்பால இல்ல..
"அந்த" இத்துலயே மிதிச்சு கொல்லனும்

டைம் இருந்தா அப்படியே நம்ம பக்கங்களுக்கும் வாங்க..
உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...

Anonymous said...

yov,muthala nee irukira naatilayum ithan nadakuthu.athayum konjam paaru.engu intha mathiri ethu nadanthalum entha MANITHARGALALAYUM ithanai eatu kolla mudiyathuthaan.

//மகே அம்மே ஏயா கியா...! என்ட ஐயோ போய்டீங்களே ...!
இப்படி ஒரு பொய் செய்தி உங்கள் தளத்தில் உள்ளது. அது மாதிரி தானா இதுவும்?//

அது யாரோ ஒரு வருடைய தளத்தில் உள்ள தகவல்..

நன்றி இர்ஷாத் வருகைக்கு..

கலையரசன் இதோ வருகிறேன் உங்கள் தளத்திற்கும்.

“காலை நேர FM நிகழ்ச்சி” JUICEசெய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
இன்றைய பத்திரிகை – 4
இந்த நாளில் – 10
Jingles – 25
விளம்பரம் – 25
தலைப்பு – 1
பாடல்கள் - 30
நட்ஷத்திர பலன் - விரும்பினால்

செய்முறை...

மேலும் வாசிக்க கிளிக்குங்க http://eksaar.blogspot.com/

Sinthu said...

This is reality Hisham anna, something we cannot do and control. Someone who has the power can ask in some case, but in some case they also cannot..
We will see, what happen?

ஈழத்தில் எவ்வளவோ நடக்கிறதே நீங்கள் எங்கோ போய்விட்டீர்களே!

Hamshi said...

I cant tell anything.avvalavukku rompave feel panavachchddinga.. ethuku mudivu eppothu...but obama's leading ellum ethu arangerutha? who is Terriost? onrume purijala anna..Girl agaentha ulgil pirappathu pavama?/sapama?