தயவு செஞ்சு க்ளிக் பன்னிடாதீங்க!

22:44 Hisham Mohamed - هشام 10 Comments

ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்காதான் நான் பதிவெழுதுவேன்.
உண்மையாக இது என் வலைபூதானா? என் பக்கத்துக்கு நான் வந்தே மாதக்கணக்காகிறது. அதுதான் இப்படியொரு சந்தேகம் எனக்கு.

இவங்கெல்லாம் என்னை மறந்திருப்பாங்களோன்னு நினைச்சிகிட்டிருந்த நண்பர்கள் நிறையபேர் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போதுதான் தெரிஞ்சுது அவங்க பளோ பன்னிகிட்டுதான் இருக்காங்கன்னு. முக்கால்வாசி பேர் கேட்டது ஏன் பதிவெழுதுறதில்லன்னு.(அதனால ஒரு மினி பதிவு)

கடைசியாக நான் இட்ட பதிவு மக்கள் தலைவன் தோன்றும் காலம். கிட்டதட்ட நானும் ஒரு அரசியல்வாதியாகிட்டேன். ''நண்பர்கள் மன்னிக்கனும்னு"" பதிவெழுதுறதும் தொடர்ந்து அஞ்சாறு பதிவெழுதுறதும் மாதக்கணக்குல காணாமல் போறதும் இயல்பாகிடிச்சில்ல.(அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. இப்ப பதிவுலகமும் அரசியல் நடத்துது..)

அவ்வப்போது நடக்கிற சுவாரஷ்யங்களை பதியனும்னு நினைப்பேன் பிறகு மறந்துடுவேன். எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் என்னோட சோம்பேறித்தனம். எல்லாத்துலயும் இல்ல டைப்பன்றதுல ம்ம்ஹ்... இன்னும் சில விசயங்கள்ல அத பிறகு பட்டியல் போட்றன். கடந்த மாதங்கள் உழைப்போடும் கொஞ்சம் (நிறைய)ஓய்வாக இருந்தது அதிகம் என்பதால் மிஞ்சியது செல்ல தொப்பைதான். இப்போ குறைக்கிறதுக்;காக ஓடிக்கிட்டிருக்கேன்.(அதுவும் ரெண்டு நாள்தான்)

35ஆவது(நண்பர்கள் சிலரின் திருப்திக்காக) பிறந்த நாளில் வாய் நிறைய வாழ்த்து சொன்ன உறவுகளுக்கு நன்றிகள் கோடி.

வெற்றி வானொலியில் நான் தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி பற்றிய உணர்வுகளுடனும் இன்னும் சில கப்சிப்களுடனும் சந்திப்போம்.
10 COMMENTS:

LOSHAN said...

இனிமேல் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தான் பதிவுபோடுவதா சொல்லி இருக்கேங்கலாமே..
கந்தசாமி அண்ணே சொன்னார். ;)

//35ஆவது(நண்பர்கள் சிலரின் திருப்திக்காக) பிறந்த நாளில் வாய் நிறைய வாழ்த்து சொன்ன உறவுகளுக்கு நன்றிகள் கோடி.
//

இதுக்கெல்லாம் குறைச்சலில்லை. ட்ரீட் தாங்கப்பு.. ;)

Loganathan said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .........

வாங்க வாங்க :)

//ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்காதான் நான் பதிவெழுதுவேன்.//

ஓ அதுதான் ஆடி மாசத்தில ஒரு பதிவு போட்டின்களோ? அண்ணே நீங்கள் பதிவேளுதிய அடுத்தநாள்(இன்று) பௌர்ணமி தானே ஏதோ நடந்திருக்கு உங்களுக்கு.

மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

EKSAAR said...

நன்றி ஹிஷாம்.. அதையாவது எழுதுங்க வாசிக்க நான் இருக்கேன்..

@LOSHAN //இனிமேல் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தான் பதிவுபோடுவதா சொல்லி இருக்கேங்கலாமே..
கந்தசாமி அண்ணே சொன்னார். ;)//

எப்புடி சார் உங்களால மட்டும்...

என்ன சார் எவ்வளவு ட்ரீட் கொடுத்தேன் மறந்துட்டீங்களே.(போன வருஷம்)

நன்றி Loganathan..

எங்க பிரசன்னா?.
நன்றி வருகைக்கு

நல்லா கோர்த்துவிட்றீங்க சதீஷ்

//மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். //

மீண்டும் நன்றி.

EKSAAR, முடியல புல்லரிக்குது...
நன்றி..