மக்களின் தலைவன் தோன்றும் காலம்! தவறவிடாதீர்கள்.

PM 9:33 Hisham Mohamed - هشام 4 Comments





தவறவிட்டால் இன்னும் 6 வருடங்களின் பின் தான் தரிசனம் தருவார்.
உங்களில் ஒருவன். ஏழைகளின் தோழன், வறியவர்களின் சொந்தக்காரன் எல்லாவற்றையும் தாண்டி இம்முறை ஒரு வாசகம் கேட்டேன். மக்கள் மத்தியில் தோன்றும் தெய்வம்.(டுப்பாகூரு ராமசாமி அண்ணே சொன்னாரு).

ஏப்ரல் எட்டாம் திகதிக்கு பிறகு தெய்வங்களும் தோழர்களும் தரிசனம் தருவார்களா?

எந்திரன்ல ஒரு சூப்பர் பஞ்ச் இருக்காம் '' வாழ்க்கை கொடுக்கிறவன் வாக்காளன் வாய்கரிசி போட்றவன் வேட்பாளன்'' எப்படி இப்படி சொல்லலாம்? சூப்பர் ஸ்டாரு..... நல்லா இல்ல! நம்ம ஊர்ல எல்லாம் அப்டி இல்ல தெரியுமா....!

இப்படித்தான் நம்ம ஊர்ல ரொம்ப நாளைக்கு பிறகு 'ஸாரி பாஸ்' வருடத்துக்கு பிறகு ஒரு தெய்வத்தை பாத்துட்டு தம்பி அப்பிடியே செவப்பா கலரா இருக்கீங்கன்னு சொன்னாங்களாம். ''எப்பத்தான் திருந்தப்போறிங்களோ'' நானில்லை ராமசாமி அண்ணே உங்ககிட்ட கேட்டுட்டு அப்புறாம சொல்ல சொன்னாரு.




அப்புறம் நான் நினைச்சு நினைச்சு சிரிக்கிற இந்த திருவிழா காலத்து காமெடி ஒன்னு நீங்களும் சிரிக்கலாம்.

ஒரு கட்சித்தலைவர் பிரசாரக்கூட்டத்தில் சொல்றார்.

''என்ன செஞ்சிட்டாங்க பெருசா?

மேம்பாலம் கட்டியிருக்காங்க.. பெரிய பாலம் கட்டியிருக்காங்க..

என்ன நடக்குது...

அம்மாமார் பாலத்திலிருந்து குழந்தையை களுகங்கையில போடுறாங்க..''

கடைசியா அடுத்தவாட்டி நீங்களும் களத்துல நிற்கிறதா இருந்தா சின்னதா ஒரு எட்வைஸ் பெருசா தரலாம்.

முதல்ல ஒரு நல்ல பாட்டு தெரிவுசெய்து கொள்ளுங்கோ
விஜய் பட பாட்டாக இருந்தா ரொம்ப நல்லது உதவிக்கு ரெண்டு பாட்டு சொல்றேன் ''அர்ஜுனரு வில்லு'', ''நீ எந்த ஊரு நா எந்த ஊரு''
அடுத்து ஒரு பெரிய படிக்கட்டுல இருந்து வேகமா நடந்து வாங்கோ(கவனம் எங்கயும் விழுந்திடாதீங்க)
நாலு பேரு கூட்டி வைச்சு சும்மா கை நீட்டி ஏதாவது முக்கியமா சொல்லுற மாதிரி ரியாக்ஷன் கொடுங்க. யாரோடையாவது காரை கடனா வாங்கி பந்தாவா ஏறுங்க.
அம்புட்டயும் கெமராவில பதிவு செய்து கடைசியா ஒரு வாசகம் வைத்துக்கொள்ளுங்க. (உதவிக்குறிப்பு - உலகத்தலைவன்)

முக்கியமான ஒரு விசயம் திருவிழாவுக்கு நாலு மசத்துக்கு முதல்லயும் தொடங்கலாம். செலவில்லாம ஆடு அல்லது மாடு தையல் இயந்திரம் போன்றவற்றை ஒரு ரெண்டு மூணு பேருக்கு கொடுத்துட்டு அப்படியே போஸ் கொடுத்து பேப்பர்ல போடுங்க. குடும்பதுல அல்லது தெரிஞ்சவங்களா தெரிவு செய்தால் திருப்பி வாங்கி இன்னும் ரெண்டு மூணு பேருக்கு கொடுக்கலாம்.

நான் பொழுது போகலயேன்னு சும்மாதான் எழுதினேன். ஏதும் சீரியஸா எடுத்துக்காதீங்கோ.
'ஸாரி பாஸ்'

4 COMMENTS:

SShathiesh-சதீஷ். சொன்னது…

//கடைசியா அடுத்தவாட்டி நீங்களும் களத்துல நிற்கிறதா இருந்தா சின்னதா ஒரு எட்வைஸ் பெருசா தரலாம்.

முதல்ல ஒரு நல்ல பாட்டு தெரிவுசெய்து கொள்ளுங்கோ
விஜய் பட பாட்டாக இருந்தா ரொம்ப நல்லது உதவிக்கு ரெண்டு பாட்டு சொல்றேன் ''அர்ஜுனரு வில்லு'', ''நீ எந்த ஊரு நா எந்த ஊரு''
அடுத்து ஒரு பெரிய படிக்கட்டுல இருந்து வேகமா நடந்து வாங்கோ(கவனம் எங்கயும் விழுந்திடாதீங்க)
நாலு பேரு கூட்டி வைச்சு சும்மா கை நீட்டி ஏதாவது முக்கியமா சொல்லுற மாதிரி ரியாக்ஷன். யாரோடையாவது காரை கடனா வாங்கி பந்தாவா ஏறுங்க.
அம்புட்டயும் கெமராவில பதிவு செய்து கடைசியா ஒரு வாசகம் வைத்துக்கொள்ளுங்க. (உதவிக்குறிப்பு - உலகத்தலைவன்)
//

இதை பார்த்தால் ராமசாமி அன்னார துணையுடன் நீங்களும் களத்தில் குதிக்கப்போவதற்க்கான ஐடியா போல கிடக்கு. வாழ்த்துக்கள் அண்ணா. அதுசரி இப்போ நீங்க வேட்பாளன் நான் வாக்காலம் தமிளிஷில் சொன்னன் முதல் வாக்கு நான் தான் போட்டன். முதலில அரிசி,டி.வி அப்புறம் என்ன என்ன எல்லாம் குடுக்கிறதோ அதெல்லாம் அனுப்பி வச்சிடணும். இல்லாட்டில் நாங்கள் வந்திடுவம்.....

EKSAAR சொன்னது…

பாதையோரத்தில் குழாய் வ்சதி செய்து குழாயை திறந்தவாறு சிரிக்கும், மிகப்பெரும் சேவை செய்தார்களும் இந்த தேர்தலில் நிற்கிறார்கள்.

மக்களுக்கு நிஜ பிரச்சினை இன்னும் புரியல.. ஒரு பெரும் பஞ்சம் வரும் வரைக்கும் தான் காத்திருக்கான்க போல்.. It will be too late..

கார்த்தி சொன்னது…

அண்ணே நீங்க எப்ப நிக்கப்போறீங்க!

ம்... நானும் கொஞ்சம் சீரியசா இருக்கும் என்று நினைத்துப் பாரத்தால்....