எரிந்தது வெற்றி FM இன் செய்திப்பிரிவு

23:20 Hisham Mohamed - هشام 11 Comments


நண்பனிடம் சொல்லுங்கள் நிகழ்ச்சி முடிந்து போகும் போது இரவு 11.30இற்கு நான் பார்த்த எமது அலுவலகம் இரண்டு மணித்தியாலங்கள் கழித்து கரும் புகைமூட்டத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டது.

அலுவலக காவலாளி நெற்றி வடிய ரத்தத்தோடு நின்றுகொண்டிருந்தார். காயங்களின் வலி மறந்து தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்த செய்திப்பிரிவின் நண்பர்கள் இருவரோடு இன்னும் சிலரும் பாடுபட்டுக்கொண்டிருந்த நேரம் தீயணைப்பு படையினர்; வந்து சேர்ந்தனர்.10இற்கும் மேற்பட்ட காடையர்கள் குழு அதிகாலை 1.20 அளவில் எமது செய்திப்பிரிவின் இருவரை மண்டியிடச்செய்து வைத்திருந்த துப்பாக்கிகளாலும் ஆயுதங்களாலும் தாக்கிவிட்டு பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தி தீயிட்டுள்ளனர்.

பல மணிநேர போரட்டத்தின் பின்னர் தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்போது செய்திப்பிரிவு கருகிப்போயிருந்தது.


Voice of Asia Network Pvt. Ltd நிறுவனத்தின் அங்கமாக செயற்படுகிற சியத, ரியல், வெற்றி வானொலிகளும் முற்றுமுழுதாக செயலிழந்து போயிருக்கும் எமது செய்திப்பிரிவும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நம்பிக்கையோடும் எம் அன்பு நேயர்களின் ஆதரவோடும் இன்னும் பல மடங்கு பலத்துடன் வரும்.


காடையர்களாலும் அவர்கள் கொளுத்தும் தீயினாலும் உயிர்காவும் ஆயதங்களாலும் சத்தியத்தை புதைத்துவிடத்தான் முடியுமா?


அவசர நேரத்தில் ஆறுதலாய் இருந்த நேயர்கள், சக ஊடக நண்பர்கள் என்றும் எம் ஞாபகத்தில் நிற்பார்கள்...

எம் பயணத்தில் பதியப்பட்ட நாளின் படங்கள் சில...11 COMMENTS:

kulam said...

நண்பன் லோசன் அவர்ஹலே!
நான் அதிர்ச்சி நிறைந்த இந்த நேரத்தில் உங்களுடன் எனது ஆழ்ந்த துக்கத்தையும் பகிர்ந்து கொல்கிறேன். ஒருமுறை நீ தோற்றுபார் உன் எதிர்கால வெற்றி இலக்கு.. உன் கை விரலிடுக்கில் ஒளிந்திருக்கும்* வெற்றியை வெண்டுவிட்டோம் என்று மடையர்கள் எண்ணக்கூடும்.. பாவம் வெற்றியின் வெற்றி சீக்கிரம் பிரமிட்டை தொடப்போவது புரியாமல்.. வாசம்(வெற்றி FM) ஒன்றும் மலர்களின் சொத்து அல்ல அதை நேசிக்கும் இயற்கையின் (எங்கள்) சொத்து என்பதை காடையர்கள் அறியவில்லை போலும்.. ஒடம் ஒருநாள் கரைசேரும் என்பார்கள் அதில் ஓட்டை விலாதவரை.. ஆனால் வெற்றி ஒன்றும் ஓடமல்ல இது அலை வெற்றி அலை...

நண்பன் லோசன்! என்னோடு எனது நண்பர்களும் அவர்களது அனுதாபங்களை பகிர்ந்துள்ளார்கள். வெகு சீக்கிரம் சர்வதேச வலையமைப்பை வெற்றி நிச்சயம் வெற்றிகொள்ள வாழ்த்துக்கள்..

Anonymous said...

பயங்கரவாதிகள் பயங்கரவாதம். இவைகள் எங்கிருக்கின்றார்கள் என்பது புரிந்திருக்கும். இந்த மண்ணில் இது இனியும் தொடர்கதையே.

//////காடையர்களாலும் அவர்கள் கொளுத்தும் தீயினாலும் உயிர்காவும் ஆயதங்களாலும் சத்தியத்தை புதைத்துவிடத்தான் முடியுமா?///////

மிகவும் வருத்தமாக இருக்கின்றது, செய்தி கேள்விப்பட்டதும்

வருத்தத்திற்குரிய செய்தி ஹிஷாம்
இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த பலத்த அடி. தளராது தொடந்து செல்லுங்கள்

இலங்கையில் உண்மைகளுக்கு மதிப்பில்லை, மதிப்பளிக்கவிட்டாலும் பரவயில்லை இது போன்ற மிலேச்சத்தனமான செய்கைகளில் ஈடுபடாமல் இருக்கலாமே.
மிகுந்த வருத்தங்கள் அண்ணா.. இந்த தடைகளைத் தாண்டி சாதனைகள் பல படைக்க வாழ்த்துக்கள்.

வருத்தம் வேண்டாம் ஹிஷாம், காடையர்கள் வெற்றிக்கு என்ன செய்தாலும் வெற்றியின் நேயர்கள் என்றும் உங்களோடு இருக்கிறார்கள்(ளோம்)

SASee said...

எத்தனையோ சாதனைகளையும் சோதனைகளை செய்தியாக தரும் செய்திகளத்திற்கே சோதனை...!!!

என்ன செய்ய அண்ணா
இதுவும் எமக்கு ஒரு செய்திதான்....!!! :-(

செய்தி அறிந்த நாள் சில நண்பர்களை கண்டபோது..... இப்படி

// "என்ன மச்சான் வெற்றி FM அ அடிச்சுட்டானுங்களாமே"

எப்படா...?


அப்புடியோ.....

கதைச்சி வேல இல்லடா// தொடர்கிறது கதை.......................................................

இப்படி இதற்கு முன் எத்தனையோ....??? பாதி நினைவிலும் இல்லை.....???!!!!யார் கண்டுகொள்கிறார்கள்.......!!!???


உதவிக்கு இறைவன் மட்டுமே வரமுடியும்....!!

வெற்றி கிட்டும் இனி ஒரு விதி செய்ய......!!

தொடருங்கள் அண்ணா... நம்பிக்கையோடு....!!!

NERUBEN said...

பீனிக்ஸ் பறவைக்கு தீ மூட்டி பார்க்கும் மூடரிற்கு சாம்பலில் உயிர்த்து பாடம் புகட்டிடு நண்பனே.....

murugaih said...

aarudhal solvadhai thavira veru ondrum saiya mudyaada nilai.....

mathisutha said...

வெற்றி முற்றாக அழிந்திருந்தாலும் நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். ஏனெனில் எம் மனங்களில் உள்ள வெற்றி வானோலி ஒவ்வோரு தமிழன் வாழும் வரை ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்.
உடுப்பிட்டி. ம.தி.சுதா
mathisutha.blogspot.com

அண்ணா வெற்றிக்கு எப்போதும் வெற்றி உண்டு. எல்லா சோதனைகளும் சாதனைகளுக்கே. மீண்டு எழுவோம் என நம்புவோம்.