எந்திரன் பாடல் விமர்சனமும் இன்னமும்.

23:55 Hisham Mohamed - هشام 4 Comments


காலங்கள் காணாத காதல், கூகுள்கள் காணாத தேடல்கள்,
பல்லவி சரணம் துறந்த பாடல்கள் என்று பலவாறு வர்ணிக்கலாம் இரும்பு மனிதன் எந்திரனை.

பாரம்பரியம் உடைத்தார் மீண்டும் ரஹ்மான்.


விண்ணைத்தான்டி வருவாயா படத்தில் கையாண்ட சில உத்திகளோடு முக்கியமாக பல்லவி சரணமென்ற வட்டத்துக்குள் வரும் திரை இசைப்பாடல்களுக்கு குட்பாய் சொல்லத்தொடங்கியவர் எந்திரனிலும் அதை தொடர்கிறார்.
ஒவ்வொரு படைப்பிலும் ஒரு புதுமை தரனும்னு நினைக்கிற ரஹ்மான் இளம் இசையமப்பாளர்களுக்கு ஒரு நல்ல முன்னூதாரணம்.


தமிழ் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரும் பொருட் செலவில் வருகிறது எந்திரன் படம்.150 - 175 கோடி வரை செலவு எந்திரனுககு. ரஜினி இன்னும் சம்பளம் வாங்கல படம் ரிலீஸானதும் கொடுங்கன்னு தயாரிப்பாளர் மாறனுக்கு சொல்லியிருக்கிறார்.

அதிகம் செலவு செய்து பிரமாண்டமாக படங்களை தந்து இலாபம் உழைக்கிற உத்தி அறிந்தவர் சங்கர். தரவுகளை தூசு தட்டி பார்த்ததுல படம் வெற்றி பெற்றாலும் போட்ட முதல் வாரது சந்தேகம்னு ராமசாமி அண்ணே சொல்றார். பத்து வருடத்துக்கு முதல்ல எழுதின ஒரு கதை இப்போ பொருந்துமாங்கிறது அவரோட முதல் கேள்வி? 150கோடி தாண்டிய செலவு தமிழ் திரையால் ஜீரணிக்கக் கூடியதா? விவரம் தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க.


ஜெக்கி செய்னை உலகறியச்செய்தவர் யார் தெரியுமா?


தமிழில் வரும் ஹலிவுட் என்ஜின் இந்த எந்திரன் படம். இந்த படத்துக்;காக உழைப்பவர்கள் வாங்கிய ஒஸ்கார்களின் மொத்தம் 22.

இசை வழங்கும் ரஹ்மான் 2 ஒஸ்கார்கள் வாங்கியவர்.

ஒலியமைப்பு செய்யும் ரஸுல் பூக்குட்டி ஒரு விருது வென்றவர்.

அவதார்,ஜுராஸிக் பார்க் படங்களில் கலக்கிய Visual Effects நிறுவனம் 16 ஒஸ்கார்களை அடுக்கி வைத்திருக்கிறது.

எந்திரனுக்கு ஒப்பனை செய்த Stan Winston Studio 3 ஒஸ்கார்களை வென்றிருக்கிறது.

ஜெக்கி செய்னை சர்வதேச அந்தஸதுள்ள நட்சத்திரமாக்கி பல வெற்றி படங்களின் சண்டைக்காட்சிகளால் நினைவில் நிற்கும் Yuen Woo-Ping தான் எந்திரனுக்கும் சண்டை சொல்லிக்கொடுக்கிறார்.

இப்படி எந்திரனுக்காக உழைப்பவர்கள் சர்வதேச அளவில் பெயர் மற்றும் விருது வாங்கியவர்கள்.

வைரமுத்துவின் பேரன் பெயர் உங்களுக்கு தெரியுமா?

வாரிசுகளும் வாறாங்கோ!

ரஹ்மான் தன் பிள்ளைகளை பொதுவான நிகழ்வுகளுக்கு அழைத்துவருவதுமில்லை அவர்களை பிரபலப்படுத்த விரும்புவதுமில்லை. முதன் முறையாக இசைப்புயலின் மூத்த மகள் கதீஜா புதிய மனிதா பாடலை பாடி திரை இசையுலகில் அறிமுகமாகியுள்ளார்.


அண்ணா பல்கலைகழகத்தில் பேராசிரியாரக கடமைபுரிகிறார் கார்கி இவர் வைரமுத்துவின் மகன். வைரமுத்து எழுதிய முதல் பாடல் பொன் மாலைப்பொழுது இருந்தாலும் வெளிவந்தது காளி படப்பாடல் உச்சரித்தவர் சுப்பர் ஸ்டார்;. மகன் கார்க்கியின் முதல் பாடலையும் உச்சரிக்கிறவர் அவர்தான். சிங்கப்பூரில் தயாரான குருசேஷ்த்ரம் படத்தின் மூலம் பாடலாசிரியராக அவதாரமெடுத்தவர் எந்திரனில் எழுதியது இரும்பு மனிதா மற்றும் பூம் பூம் ரோபோடா பாடல்கள். இவர் மகனுக்கு வைச்சிருக்கும் பெயர்தான வினோதமானது. மகனோட பெயர் ஹைக்கூ.(அடுத்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பாரோ தெரியல..)

பாடல்கள் பற்றிய சிறு அலசல்
அரிமா என்றால் என்ன?


பல்லவி சரணமில்லா புதுவகை தமிழ் பாடல்கள் எந்திரனில். ரஜினி ரசிகர்கள் ஒவ்வொரு பாடலிலும் ஆழம் போய் அர்த்தம் தேடுகிற பணியில் இறங்கியிருப்பாங்க. எந்திரனில் தீம் இசையுடன் மொத்தம் ஏழு பாடல்கள். கேட்ட முதல் நாளே என்னோட மனசுல நின்னது ''காதல் அணுக்கள்''

01.புதிய மனிதா... (ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி)
இதுதான் படத்தோட முதல் பாடலாக இருக்கோணும் ஒரு சின்ன கெசிங் ஸ்பிபி பாடியதால்.
தந்தையோடு மகள் முதல் தடவை இணைகிறார் தமிழ் இசையில் ரஹ்மானின் மகள் கதீஜா.
மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று... என்று தொடர்கிறது இவர் குரல்


எனக்கு பிடித்த வரிகள்

கருவில் பிறந்த எல்லா மறிக்கும்
அறிவில் பிறந்தது
மரிப்பதே இல்லை

நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி

ரொபோ பன்மொழிகள் கற்றாலும்
என்தந்தை மொழி
தமிழ் அல்லவா...

இதுல ஒரு வரி
நான் நளைய ஞான ஒளின்னு வரும் இதுக்கு வைரமுத்து கிட்டதான் ஆழமா விளக்கம் கேட்கனும்..


02. காதல் அணுக்கள் (விஞ்ஞானியின் காதல்)
விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல் நல்லா பாடியிருக்காங்கோ.
விண்ணைத்தாண்டி வருவாயா ஓமணப்பெண்ணே போல ஒரு பாட்டு. பில்ஹாரி ராகம்னு சொல்றாங்க.

எனக்கு தெரிஞ்சு முதல் முறையாக ஒரு விஞ்ஞானி காதலை சொல்லும் பாடல். நியுட்டன் அணுக்கள் என்று பாடல் நல்லா இருந்தாலும் ஏற்கனNவு வந்த பாடல் வரிகள் விஞ்ஞானப்படுத்தப்பட்டதாய் ஒரு உணர்வு.

காதல்காரா!
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே...

பாடல் வரிகள் வைரமுத்துவின் முதல்வனே பாடலின் கருவை ஞாபகப்படுத்துகிறது. வித்தியாசமா சிந்திச்சிருக்கார் மனுஷன்.

எனக்கு பிடிச்ச வரி

காதல்காரி!
உந்தன் இடையைபோல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே....


03. இரும்பிலே ஒரு இருதயம் (பிளேஸிக்கு பாட்னர் கிடைச்சாச்சு. கார்க்கிக்கு முளைத்த முதல் பாடல்)

Kash n Krissy மற்றும் ரஹ்மான் பாடும் பாடல்.
ரொபோவுக்கு பொருத்தமாக பாடல் எழுதியிருக்கிறார் கார்க்கி. ஒவ்வொரு வரியிலும் உயர் தொழிநுட்பம் புகுந்து விளையாடுது. ப்ளு டூத்தை நீல பல்லென்கிறார்.

இரும்பிலே ஒர் இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்குதோ...

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு...

உன் நீலக்கண்ணோரம் மின்சாரம் பறிப்பேன்
என் நீலப்பல்லாலே உன்னோடு சிரிப்பேன்...
இவை இரண்டும் எந்திரனால் முடிந்தவை.

ஒவ்வொன்றும் இயந்திரம் கொள்கிற காதலின் அற்புத தமிழ்படுத்தல்.

எனக்கு பிடித்த வரி

கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணாத காதல்.....


04. அரிமா அரிமா.. (எந்திரனுடன்(சிங்கத்துடன்) ஓரு டூயட்)
கீரவாணி ராகத்தில் கொஞ்சம் உசுரே போகுதெ புரிஞ்சுதா? ராவண் பாடலின் மிச்ச சொச்சங்கள் இங்கேயும்.

ஆண் சிங்கத்தை அழகாக அரிமான்னு அழைத்து பாட்டு எழுதியிருக்கிறார் வைரமுத்து. ஹீரோயிசத்தை காதலுடன் சொல்கிற மாதிரி ஒரு பாடல். பாடல் வரியும் இசையும் கைகொடுக்கிறது. (முதல்வனே பாடல் ஞாபகம் வருது)

பிடித்த வரி

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்...


05. கிளிமஞ்சாரோ.(ஆபாசம்.. நான் இல்ல ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு)கரகரப்பிரியா ராகத்தில் பேருவில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட பாடல். இதோடதான் படப்பிடிப்பு ஆரம்பமானது. மஞ்சு பிஞ்சு என்கிற பாரம்பரிய வரலாறு கொண்ட மலை உச்சியில் எடுக்கப்பட்டது.

ஜாவிட் அலி மற்றும் முடிஞ்சா கண்டுபிடிங்கன்ற மாதிரி சின்மயி பாடிய பாடல்.

பா.விஜய் எப்படியெல்லாம் யோசிச்சிருக்காரு மனுசன்.(வயது வந்தவர்களுக்கு மட்டும்)

மலை பாம்பு போல வந்து
மான் குட்டியை பிடிய்யா
சுக்கு மிளகு தட்டி என்னை
சூப்பு வைச்சு குடிய்யா...

எப்புடி! தனி ஒரு பதிவே போடலாம் விளக்கமா யாராவது ட்ரை பன்னுங்க.

ஜந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
மேய்ந்து விடு மொத்தம்

பிடிச்ச வரி
!@#@#%@%^$^#$&&


06. பூம் பூம் ரோபோடா..(அறிஞர்களே கேளுங்கோ!)

ரத்தத்தை மின்சாரமாக பார்க்கிறார் கார்க்கி.
மின்சாரம் உடலில் ரத்தம்...
வாயுண்டு ஆனால் வயிறில்லை..
பேச்சுண்டு மூச்சில்லை..
நாடி உண்டு இருதயம் இல்லை..

இப்படி ஒரு காதலி காதலன் கிடைக்காதான்னு ஏங்குகிற நண்பர்களுக்கு ஒரு மேட்டரு

குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்
காதலி இதுபோல் கிடையாதோ?...

யே சொல்வதெல்லாம் கேட்டுவிடும்
காதலன் இதுபோல் அமையாதோ?...

பிடித்த வரி

பவர்தான் உண்டு திமிரே இல்லை...4 COMMENTS: