அன்னை சிந்தும் கண்ணீர்
பல்வேறு கலாச்சாரங்கள் உலக நாடுகளில் அவ்வப்போது தலை தூக்கினாலும் அம்மா என்கிற அந்தஸ்தும் பாசமும் பெருகி வரும் கலாச்சாரங்களால் வெற்றி கொள்ள முடியாதவை. ஒரு குழந்தையை பெற்றெடுத்ததற்காய் அவள் படுகிற வேதனைகளும் வலிகளும் வார்த்தைகளுக்கப்பாற்பட்டவை.
குறைந்த உதவிகளோடும் அதிக வலிகள் அழுத்தங்களோடும் தனித்து நின்று போராடுகிற மனவலிமை நீங்கள்தானம்மா.
ரேகைகள் தேயும் வரை உன்னைப்போல் யாரால் உழைக்க முடியும். அதற்காகவோ என்னவோ உன் பாதங்களின் கீழ் சுவர்க்கம் என்றார் நபிகள் நாயகம்.
ஆண்களை விட தாய்மார் சராசரியாக தம் ஆயுட் காலம் முழுதும் 2.5 தடவைகள் அதிகமாக வலிகளை அனுபவிக்கிறார்கள் கடந்த வாரம் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிலரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு சொல்லும் உண்மை இது. இந்த வலிகள் எப்பொழுதும் அவளுக்கு வேதனையாக இருந்ததில்லை.
ஒரு தாயின் உழைப்புதான் குழந்தையின் எதிர்காலம் என்கிறார் பிரென்சுப் புரட்சியின் தளபதி நெப்போலியன் பொனபாட். ஆப்ராகாம் லிங்கனும் தன் தாய் மீது அதிக பாசம் கொண்டவர் அவர் அடிக்கடி சொல்லும் ஒரு விடயம் 'என் தாயின் பிரார்த்தனைகள் என்னை பின் தொடர்கின்றன அவை என் வாழ்வோடு பயணிக்கின்றன.
ஒரு மனிதனின் வெற்றிக்கு பெற்றோரின் பங்களிப்பு அளப்பரியது. சில சமயம் அவை மறைமுகமாக கிடைப்பதுமுண்டு. பொதுவாக ஜீன்கள்தான் மனித இயல்புகளை நிர்ணயிக்கின்றன. தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் சம அளவு ஜீன்களை ஒரு மனிதன் பெற்றாலும் தாயின் ஜீன்கள்தான் செல்வாக்கு செலுத்துகின்றன. கர்ப காலத்தில் அவளது செயற்பாடுகள் உணவு பழக்க முறையோடு சிறுபராயத்தில் அவள் விரும்பிய உணவுவகைகள் போன்ற பல விடயங்கள் ஜீன்களின் பரிமாற்றத்தால் அவள் குழந்தையும் அதை உணர்கிறது.
சின்ஹா என்கிற ஒருவர் தன் சிறுபராயத்து நிகழ்வொன்றை mothersdayworld என்கிற தளத்தில் பதிந்திருந்தார்."சிறுவயதில் என் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் என் நண்பருக்கும் எனக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் சண்டையில் பொய் முடிந்தது. என் நண்பன் என் மீது ஒரு சிறிய கல்லை வீசி எறிந்தான் அது என் வலது கண்ணுக்கு கீழ் சிறிய காயத்தை எற்படுத்தியது. ஆத்திரத்தில் அவன் முகத்தில் நான் குத்தியதில் அவன் கண்ணாடி நொருங்கியது. வேகமாக வீட்டுக்கு விரைந்தவன் தன் பெற்றோரிடம் என் மீது குற்றம் சொல்லிவிட்டான். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் என்ன நடக்குமோ அம்மா என்ன சொல்லுவாங்களோ என்கிற அச்சத்தோடு வீட்டுக்குள் நுழைந்தேன். என்னை நோக்கி ஓடி வந்த என் அம்மா எனக்கு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்பதை மட்டும்தான் பார்த்தாலே தவிர வேறு எதையும் கேட்கவில்லை. நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னேன். அதற்கு அம்மா சொன்ன பதில் என் புள்ள தப்பு பண்ண மாட்டான்னு எனக்கு தெரியும்." அன்று அவள் கொடுத்த தன்னம்பிக்கை தான் இன்றும் தன்னை ஒரு நல்ல மனிதராக வாழ வைத்திருக்கிறது என்கிறார் சின்ஹா.
பரபரப்பான இந்த யுகத்தில் தாய்க்கும் கொஞசம் ஓய்வு தேவை. தாய்மாரின் அன்றாட வாழ்நாளில் ஓய்வுக்கு கிடைப்பது ஆண்களை விட குறைந்த நேரம்தான். நாளொன்றுக்கு அமெரிக்க ஆண்கள் தாய்மாரை விட 40 நிமிடம் ஓய்வெடுக்கிறார்கள். இதுவே இத்தாலி ஆண்கள் 80 நிமிடம் ஓய்வெடுக்கிறார்கள். இன்று அன்னையர் தினம் நாம் எம் தாய்க்கு என்ன செய்யப்போகிறோம்.
பசி தூக்கம் ஓய்வு இல்லாத உன் அகராதியில் உனக்கான தினத்திலும் நீ ஓய்வெடுக்கப்போவதில்லை. அம்மா உன்னிடம் நான் கற்றுக்கொண்டது எராளம். என்னுடைய ஒவ்வொரு உயர்விலும் என்னை தாங்கி நிற்கிறாய். ஒவ்வொரு சரிவிலும் என்னை தட்டிக்கொடுக்கிறாய்.
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்.
என்றென்றும் நீ நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்.
7 COMMENTS:
குறைந்த உதவிகளோடும் அதிக வலிகள் அழுத்தங்களோடும் தனித்து நின்று போராடுகிற மனவலிமை நீங்கள்தானம்மா.
உண்மை தான் ஹிஷாம். ஒரு குழைந்தையை பிரசவிக்கும் போது அந்த தாய் மரண வேதனையை அனுபவிக்கிறாள். அப்படி பட்ட தாயை வர்ணிக்க , வாழ்த்த உண்மையில் என்னிடம் வார்த்தைகள் இல்லை. பதிவுக்கு நன்றி ஹிஷாம்.
சின்ஹா சொல்லிய அனுபவ நிலை பலருக்கும் இருக்கும். தாய்மை எப்போதும் மேன்மையே!
என் ஞாபகத்திற்கு குழந்தைகளின் வளர்ப்பில் முக்கிய பங்கு தாயிடம் தான் என்பதை சொல்லும் நாமனைவரும் அறிந்த பாடல் வரிகள் வந்து தொலைக்கிறது.
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே."
பதிவு நச்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
amma enru alyikkatha oru ugrinamum ellai entha ulakil,but naan en thayai mummy enruthan kuppiduven.robave kavalayai erukku,but enna seigrathu palakka thosaththi mattra mudiyala.evvalavu alagan word "AMMA".enyway try to call to my mother amma.really greet article.thanks a lot for remembring mothers day."Anna one and only kind request for u.Pease put ur article in ur page regularly."
neeyellam irundu islaattukku enna senja. unnoda wela pakkira loshan pottulla pathivai paakka villaya muslimgalikki avvalavu taakka mudiyumoo avvalavu taakki irukkiran adukkahawendi oru padil padivu eludu. summa cenima adu idu endru eluthamal namma islam markattap patti eludi marumaikkahawendi ulaikkap paar
allah arul purivan
நல்ல பதிவு ஹிஷாம் அண்ணா...
என்னைப் பொறுத்த வரை, நம்மை எல்லாம் பெற்று பிரச்சனைகளை சம்பாதித்துக் கொள்கின்ற ஒரே ஜீவன்..
சப்ராஸ் அபூ பக்கர்,உதய தாரகை,Hamshi,Sinthu நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். Hamshi நேரம் கிடைக்கும்போது பதிவெழுத முயற்சிக்கிறேன்.
அன்பால் மட்டுமே உருவாக்கப்பட்டவள் தாய் .
கருத்துரையிடுக