என் கண்மணி உன் காதலி

AM 12:28 Hisham Mohamed - هشام 10 Comments



சில சமயம் நாம் வாசிக்கும் விடயங்கள் நம்மை சிந்திக்க வைப்பதுண்டு... அதை நம் இதயத்தில் இருக்கும் பலரோடும் பகிர்ந்து கொள்ளவும் நாம் மறப்பதில்லை... அதுபோல நம் இதயத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு காதல் கதை...

கண் தெரியாத ஒருத்தி தன் வாழ்க்கையை வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தாள். அவள் வெறுக்காதவை எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அவள் இந்த உலகத்தில் அன்பு வைத்தது தன் காதலனிடம் மட்டும்தான். அவன் எப்போதும் அவளுக்காகவே வாழ்கிறவன். அவன் விடுகிற ஒவ்வோரு மூச்சும் இவள் பற்றிய சிந்தனையாகத்தான் இருக்கும்.

ஒரு நாள் பார்வையிழந்த அந்த பெண் தன் காதலினிடம் ''எனக்கு மட்டும் பார்வை இருக்குமென்றால் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்'' என்றாள்.

பல நாட்கள் கடந்த இந்த காதல் பயணத்தில் ஒரு முறை யாரோ ஒருத்தர் இவள் பார்வைக்கு கண்களை தானமாக கொடுத்திருந்தார்.

இப்பொழுது அவள் இந்த உலகத்தையே பார்க்கிறாள். அவள் இதயக்கூட்டில் இருக்கும் காதலனை தன் இரு கண் கொண்டு பார்க்கிறாள்.

இந்த உலகத்தை விட தன்னை நேசித்த காதலியிடம் காதலன் ''இப்போ உனக்கு பார்வை வந்துடுச்சி என்னை கல்யாணம் கட்டிக்கிறியா'' என்று கேட்கிறான். திடுக்கிட்டுப்போன காதலி ''கண் தெரியாத உன்னை நான் கல்யாணம் கட்டுவதா? எப்படி சாத்தியப்படும்? '' என்று கோபத்தோடு பதில் சொன்னாள்.

நொறுங்கிய இதயத்தோடு அவன் எழுதிய கடிதத்தின் அடியில்...

''உனக்குள் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிற சந்தோசத்தோடு விடை பெறுகிறேன். என் கண்களையாவது கவனமாகப்பார்த்துக்கொள்.''


வாழ்க்கையின் படிநிலைகள் மாறி உயர்வு பெறும் போது மனித மனங்களும் மாறுவதில்லையா? 
எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம் கடந்த பாதையை? 
வருத்தங்களில் எம் கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள் எங்கே?


(இப்போது இவளை உலகம் தெரியாதவள் அல்லது கண் தெரியாதவள் என்பதை விட குருடி என்றழைப்பது பொருத்தமென்று ராமசாமி அண்ணே சொல்லச்சொன்னாரு.)

10 COMMENTS:

Sinthu சொன்னது…

"வாழ்க்கையின் படிநிலைகள் மாறி உயர்வு பெறும் போது மனித மனங்களும் மாறுவதில்லையா? எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம் கடந்த பாதையை? வருத்தங்களில் எம் கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள் எங்கே?"

அது தான் பிரச்சனையே அண்ணா...உதவிகளுக்காகவே பழகுகின்ற உறவுகள் அதிகம்...

பெயரில்லா சொன்னது…

ராமசாமி அண்ணே வேற எதுவும் சொன்னாரா ?

kuma36 சொன்னது…

//வாழ்க்கையின் படிநிலைகள் மாறி உயர்வு பெறும் போது மனித மனங்களும் மாறுவதில்லையா? எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம் கடந்த பாதையை? வருத்தங்களில் எம் கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள் எங்கே?///

தல கலக்கிட்டிங்க போங்க!

kuma36 சொன்னது…

///''உனக்குள் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிற சந்தோசத்தோடு விடை பெறுகிறேன். என் கண்களையாவது கவனமாகப்பார்த்துக்கொள்.'' ////

ஊனம் என்பது உள்ளத்தில் தான் என்று இதற்குதான் சொவார்களே??????

Unknown சொன்னது…

"எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம் கடந்த வந்த பாதையை? வருத்தங்களில் எம் கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள் எங்கே?"
ஆனாலும் மீண்டும் துன்பம் வருகின்ற போது கண்ணீர் துடைக்க போவது இதே கைக்குட்டைகள்தான் !
-Priya-

Vathees Varunan சொன்னது…

ம்ம்ம்............. சீரியசான பதிவுபோட ஆரப்பிச்சுட்டார்றா. இந்த பதிவு பலருடைய உணர்வுகளை தீண்டி விட்டது. இது உண்மையான கதையா என கேட்கும்படி ராமசாமியண்ண கனவில வந்து சொன்னாரு.

Lucky சொன்னது…

Very nice thought. Yes we always forget the old life which we lived when we are in a better state

பூச்சரம் சொன்னது…

உங்கள் வலைப்பதிவு பூச்சரம் - இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS இல் இணைக்கப்பட்டுள்ளது..


பூச்சரத்துக்கு இணைப்பு கொடுக்க

http://poosaram2.blogspot.com/2009/03/blog-post_31.html

அதில் உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் (Web site) / வலைப்பூவில் (Blog) Paste செய்யவும்.

*இயற்கை ராஜி* சொன்னது…

கலக்கிட்டிங்க

கார்த்தி சொன்னது…

Really Nice post...
பெரும்பாலோனோர் செய்த நன்மைகளை மறந்து விடுகிறார்கள்
:( :(