Bots மூலம் பரப்பப்படும் இனவாதம்

 இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விமானப்படைக்கு சொந்தமான விமான விபத்தொன்று குறித்த ஒரு செய்திப்பதிவில் வழக்கத்துக்கு மாறாக அனேகமான சிரிக்கும் ரியாக்‌ஷன்ஸ் இடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இதன் பின்னணி மற்றும் அதனோடு இயங்கும் ஆழமான அரசியல் குறித்த ஒரு விரிவான பதிவு.




மனம் விட்டு பேச ஒரு உறவு வேண்டும்!


நீங்கள் தனித்துப்போய்விடவில்லை என்பதே இந்த உலகத்தில் நாம் மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடிய மகத்தான நம்பிக்கை. ஆனால் அழுத்தங்கள் மிக்க இந்த வாழ்க்கையில் தன் கவலைகளை கொட்டித்தீர்த்து மீண்டு வர எத்தனை பேருக்கு வாய்க்கிறது ஒரு திறமையான கலைஞனின் அவசரமான மரணம் மிகுந்த வருத்தம் தருகிறது. போரட்டங்கள் மிகுந்த தன் வாழ்க்கையில் ஒரு பைக் கூட வாங்க முடியாதவர் பொலிவூட்டின் சிகரங்களில் யார் துணையுமின்றி சிறகடித்துப்பறந்ததாய் படித்தேன். Sushant Singh Rajput தன் கடைசிப்படமான Chhichhoreஇலும் நம்பிக்கை தரும் வசனங்கள் பேசியவர் நண்பர்களையும் ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டாரே. அன்பான உறவுகளுடன் மனம் விட்டு பேசுவோம், வலி மிகுந்த உணர்வுகளை வெளிப்படுத்துவோம். ஒன்றும் கைக்கூடாத போது தயக்கமின்றி மருத்துவரின் உதவியை நாடுவோம். மன அழுத்தங்கள் நீங்க யாரும் தங்கள் மனக்கவலைகளை வெளிப்படுத்தும்போது காது கொடுத்து கேட்போம். வாழ்க்கை மிக மிக அழகானது அது அற்புதமானது! #SushantSinghRajput. #RIPSushantSinghRajput

இத்தருணத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைத்துக்கொள்ள 5 ஆலோசனைகள்

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முடங்கிப்போயிருக்கும் நிலையில் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர்.

இத்தருணம் பலருக்கும் பயம் பதட்டம் மற்றும் மனச்சோர்வை கொடுக்கக்கூடும். இறுதியில் இதன் மூலமாக நாம் நோய்  எதிர்ப்பு சக்தியை இழக்க நேரிடலாம். இந்நிலையில் இருந்து மீள உதவும் 5 ஆலோசனைகள் கீழ் காணும் வீடியோ பதிவில்.



டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets

டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன் மூலம் நேர்காணல் ஒன்றை பதிவு செய்யவும் முடியும்.
மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் USB Vaccum Cleaner, USB card Reader பற்றி அறியவும் வீடியோவை பாருங்கள்.

கீழே தரப்பட்டுள்ள தொடுப்புகளினூடாக மேலதிக விபரம் அறியலாம்,
USB Vaccum Cleaner https://goo.gl/enMUbp 
Lav Clip on Mic  https://goo.gl/QMfFFg 
USB Card Reader https://goo.gl/f9Xdb5 






பலவீனத்தை பலமாக மாற்றுவோம்

பலவீனத்தை பலமாக மாற்றிய 12 வயது ஜுடோ சாம்பியனின் தன்னம்பிக்கை கதை.



புத்தாண்டு தீர்மானங்கள் 2018

அன்பான நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த வீடியோ பதிவில் கடந்த ஆண்டிலிருந்து எதை புத்தாண்டுக்கு கொண்டு செல்லலாம் என்பது பற்றியும் புத்தாண்டின் தீர்மானங்கள் பற்றியும் பேசுகிறேன்.