நாலு பேர் தப்பா பேசுவாங்க.... யார் அந்த நாலு பேர்?

அந்த நாலு பேர் யாருன்னு தெரியாது ஆனா தப்பா பேசுவாங்க. இந்த நாலு பேருக்கு பயப்பட்ற நம்ம நண்பர்கள் ஏன் அந்த ஒருத்தனுக்கு(இறைவன்) பயப்பட்றதில்ல.

இது என்னோட அனுபவ பதிவு மனசுல உள்ளத கொட்டி தீர்க்கப்போறேன் நேரம் இருந்தா படிச்சுப்பாத்துட்டு பின்னூட்டம் எழுதுங்க.

பதிவு எழுத ஆரம்பிக்கும் போது பக்கத்துல இருந்த லோஷன் அண்ணாவுக்கும் அருந்ததி அக்காவுக்கும் (எல்லாரும் ஒன்னாதான் வெற்றிக்காக உழைக்கிறம்)சின்னதா ஒரு விவாதம் நடந்தது. ஏற்கனவே பதிவின் ஆரம்பத்தில் 'அந்த ஒருத்தனுக்கு பயப்பட்றதில்ல' என்று சொல்லியிருக்கேன் கடவுள் நல்லவங்கள தேடி வருவாருன்னும் கஷ;டத்துல தான் கடவுள தேடி போவேன்னும் லோஷன் அண்ணா சொல்றார் அதுக்கு அது கூடாது என்று ஆரம்பித்த அருந்தி அக்கா சொன்னாங்க மனிதனுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எவ்வளவோ இருக்கு நீங்க கூட கடவுள தேடி பேவீங்க உங்களுக்காக இல்லன்னாலும் உங்க குடும்பத்துக்காகவாவது செய்வீங்க இப்படி நேர் எதிரான கருத்துக்கள் பறந்து கொண்டிருந்த போது எனக்கொரு விஷயம் எழுதனும் போல இருந்தது பள்ளிகளிலும் கோயில்களிலும் ஏன் எல்லா மதத்தலங்களிலும் அதிகம் கடவுளை தரிசிப்பவர்கள் 50 வயதை தாண்டியவர்கள் பொதுவாக வாழ்க்கையை கிட்டத்தட்ட முழுமையாக வாழ்ந்தவர்கள். ஏன் இந்த வயதெல்லையில் இருப்பவர்கள் அதிகம் கடவுளை தரிசிக்கனும் தெளிவாக புரியுது மரண பயம்....... இது ஏன் ஆரம்பத்துல வரக்கூடாது? எப்படி வரும். 50 வயதுக்கு பிறகு மரணம் நேரும் என்பது நிச்சயமான உண்மை ஆனால் அதற்கு முதலும் வரலாம் வராமலும் போகலாம்.

இந்த 50 வருட வாழ்க்கையில கிட்டத்தட்ட அரைவாசி முடிஞ்சுது (அதுக்காக எனக்கு 25 வயதுன்னு நீங்க நினைக்க கூடாது) அதுக்குள்ள நான் கத்துக்கிட்டத கொட்டப்போறேன். வாழ்க்கைய புரிந்து கொள்ள எனக்கு ரொம்ப காலம் எடுத்தது. என்னுடைய மத குரு, ஊடகத்தில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவருடைய இறப்பு என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. இப்ப கூட என்னுடைய கையடக்கத்தொலைபேசியில ஏதாவதொரு இலக்கத்த தேடும்போது அவருடைய இலக்கம் கடந்து போகும் அப்ப நான் பட்ற வேதனைய சொல்ல வார்த்தைகள் இல்ல அந்த இலக்கம் இப்ப பாவனையில் இல்லையென்றாலும் அத அழிக்கிறதுக்கு மனசும் இல்ல. அவரு சொல்லி கொடுத்த நல்ல விஷயங்கள கொஞ்சம் கொஞ்சமா கடைபிடிக் ஆரம்பிச்சிட்டேன். எஞ்சியிருக்கிற அரைவாசி வாழ்க்கையில சரி நல்லவனா வாழ முயற்சி செய்யப்போறேன். இல்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க..

ஊடகத்துறையை விட்டுவிட்டு அப்பாவோட சேர்ந்து வியாபாரத்தை கவனி இல்லன்னா மேல்படிப்பை கவனின்னு அடிக்கடி சொல்ற அம்மாவோட வார்த்தைக்கு காது கொடுக்கலாம்னு நினைக்கும் போதே எனக்கு ஞாபகத்துக்கு வாரது அன்னை வானொலி இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக 8 மாதகாலமாக நான் பெற்ற கடுமையான பயிற்சி. அறிவிப்பாளனாக இப்படி ஒரு பயிற்சியான்னு அன்று வெறுத்துப்போனாலும் இன்று அதன் தேவையை உணர்கிறேன்.

திரு அப்துல் ஹமீத், திரு ஜெயகிருஷ;ணா, திரு சந்திரமோகன், மறைந்த திரு கணேஷ;வரன், திருமதி ராஜேஷ;வரி சண்முகம், திரு ராஜகுரு சேனாதிபதி, திரு அஹமத் முனவ்வர் இவர்களிடம் அறிவிப்புத்துறையின் குழந்தைப்பருவத்தில் பெற்ற பயிற்சி என்னை இன்று வெற்றி வானொலியின் உதவி முகாமையாளர் கதிரையில் அமர வைத்திருக்கிறது. இவ்வாறான ஒரு பதவி எனக்கு கிடைத்திருக்காவிட்டால் ஒரு வேளை ஊடகத்துறைக்கு விடை கொடுத்திருப்பேன். இந்த புதிய பயணத்தில் நான் சந்தித்தவர்களில் ஒருவர் லோஷன் அண்ணா இவர்தான் வெற்றியின் முகாமையாளர் என்னோட புதிய குரு. முகாமையாளர் பயிற்சி நெறிக்கான என்னுடைய குரு (ஆனால் அவர் கட்டணம் அறவிடுவதில்லை) அவ்வப்போது அவர் சொல்லித்தருகிற நல்ல விஷயங்களை எனது நாட்குறிப்பு பதிவு செய்யும்;. எப்பவுமே பைபிளோடு நான் பார்க்கிற அருந்ததி அக்கா, வெற்றியின் ஒழுங்கமைப்பாளர் இலங்கையில் தனியார் வானொலியின் ஆரம்பம் முதல் இன்று வரை பல நட்சத்திரங்களை பார்த்தவர் இவரிடமிருந்து நான் பெற வேண்டிய அனுபவ அறிவு ஏராளம். இப்படி இன்னும் ஏராளமாக சொல்லலாம் அதுக்குள்ள பல வருஷங்கள் ஓடிடும் அப்போ நான் எப்ப நல்லவனாகிறது? இல்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க..

பதவியும் பணமும் இல்லாத போது இருந்த சந்தோஷம் இப்ப என்கிட்ட இல்ல. பணமும் பதவியும் நிரந்தரமில்;லை என்பதை தற்போதைய உலக பொருளாதாரமும் அரசியலும் உறுதிப்படுத்துவதாக அண்மையில் 16வது பாப்பரசர் சொல்;லியிருந்தார். எளிமையாக வாழ்ந்த நபிகள் நாயகமும் புத்தரும் அதற்கு நல்ல உதாரணம். பணம் கொஞ்சம் அதிகமாக இருந்தா இன்னும் கொஞ்சம் சேர்க்கலாமே அப்படி ஒரு ஆசை. பதவி இருந்தா அடுத்தவர்களால தொல்லை. இது இரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கைய தேட கொஞ்சம் காலம் தேவை. அதுக்குள்ள நாலு பேர் தப்பா பேச மாட்டாங்களா?

5 வருட ஊடகத்துறை வாழ்விலும் சரி அதற்காக ஏங்கிய நாட்களிலும் சரி எத்தனையோ விதமான மனிதர்களை பார்த்துவிட்டேன்;. எங்க குடும்பத்துலயும் சரி பரம்பரையிலும் சரி ஊடகத்துறையில் யாரும் கால் பதித்ததில்ல. ஏன் அது பற்றி அறிந்ததும் இல்ல. எங்கப்பா புகையிரதத்தில பேப்பர் போட்டு உழைப்பை தெடங்கினவரு. அப்புறம் நான் எப்படி அறிவிப்பாளரானேன்னு கேட்கிறீங்களா? அம்மா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. பாடசாலையில் அவங்ககிட்ட படிக்க கிடைச்சது பெரும் பாக்கியம். இப்போ இலங்கை அரச தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், வெற்றி எப் எம் தனியார் வானொலியின் உதவி முகாமையாளராகவும் இருக்கேன். கொஞ்ச காலத்துக்கு முதல்ல இதெல்லாம் வெறும் இலட்சியக்கனவு எனக்கு. அத அடைய நான் எடுத்த 4 வருடங்கள் எதிர்பார்ப்புகளுடனும் ஏக்கத்துடனும் கழிந்ததால் நாட்கள் நகர்ந்ததே தெரியல. எனக்காக நான் வாழ்ந்தது தான் அதிகம் இந்த இடைப்பட்ட காலத்தில் கவலையாக இருந்த சில சந்தர்ப்பங்களில் சில நல்ல மனிதர்களின் நாலு வார்த்தை மனசுக்கு ஆறுதலாக இருக்கும். அண்மையில் கொஞ்சம் மனசுக்கு கவலையா இருந்தது அப்போ என்னோட மூத்த அதிகாரி ஒருவர் சொன்ன ஒரு விஷயம் நகைச்சுவையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது உங்களை மனதளவில் பாதிப்படைய செய்கிறவர்களை நகைச்சுவை பாத்திரங்களாகவும்; அவர்களுடைய செயல்களை இவ்வாண்டின் சிறந்த நகைச்சுவையாகவும் எடுத்துக்கொள்ளுங்கள் பிரச்சினையே வராது என்றார்.
இறுதியாக ஒரு விஷயம் நான் உங்களுக்கு சொல்லவில்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க.

உலகின் பணக்காரர் பில்கேட்ஸூம் சரி நாங்களும் சரி எதை கொண்டு போக போறோம். சூரியன் மேற்கில் உதிப்பதற்கு முன் எனக்கு நிறைய பொறுப்புகள் காத்திருக்கி;ன்றன ஏன்னா அதுக்கு பிறகு பிரார்த்தனைகளை என்னுடைய இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
இப்ப சொல்லுங்க உங்களுக்கு தெரியுமா யார் அந்த நாலு பேர்?ஒரு வேளை நாத்தம் புடிச்ச நம்ம உடலை சுமந்து போக போற அந்த நாலு பேரா இருக்குமோ!!!!!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு


இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Jean-Marie Gustave Le Clezio வின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. Le Clezio வின் "sensual ecstasy" என்ற படைப்புதான் நோபல் பரிசுக்கு வழிவகுத்தது. 68 வயதான Le Clezio, "Desert"என்ற படைப்பின் மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்.

நேபாள மக்களின் புதிய கடவுளாக மூன்று வயது சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


நேபாளம், காத்மண்டு மக்களின் நம்பிக்கை படி வழக்கமாக பெண் சிறுமிகளைதான் தெய்வமாக தெரிவு செய்து வணங்கி வருகிறார்கள். இவர்களை குமாரி என்று அழைப்பார்கள். 2 முதல் 4 வயது வரையான சிறுமிகள் கடவுள் தேர்வில் கலந்து கொள்வார்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படும் சிறுமிகள் இறுதிகட்ட தேர்வில் சித்தியடைந்தால் கடவுளாகும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அது அவ்வளவு இலகுவானதல்ல ஒரு அறையில் இரவு முழுவதும் இருக்க வேண்டும் அங்கே ஆட்டுத்தலைகளும் மாட்டுத்தலைகளும் வைக்கப்பட்டிருக்கும். குறித்த சிறுமி பருவ வயதை அடையும் போது புதிய கடவுளை தேடும் பணி தொடங்கும்.


சகல தேர்வுகளிலும் சித்தியடைந்து 3 வயது சிறுமி ஒருத்தி கடவுளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் தன்னுடையை பெற்றோரை விட்டு பிரிந்து குறித்த ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்பது தான் விதி இதனால் சிறுமியின் தந்தை atap Man Shaky குறிப்பிடுகையில் கொஞ்சம் கவலையாக இருந்தாலும் தன்னுடைய மகள் கடவுளாக போற்றப்படுவதை நினைத்து பெருமைப்படுகிறார். கடவுளாக போற்றப்படும் சிறுமி சிவப்பு நிற ஆடைகளை மாத்திரமே அணிய முடியும்.


குஷ'பு, எம் ஜி ஆர் இப்படி நிறைய பேருக்கு கோயில் கட்டி வழிபடும் போது இது சாதாரண விடயம். அவர்களுடைய நம்பிக்கை காலகாலமாக இப்படித்தான் இருக்கு என்ன செய்வது.............


நன்றி - msnbc

5 நிமிடத்தில் பயணம் செய்யக்கூடிய தொலைவில் இருந்த சகோதரியை 60 வருடங்களாக தேடிய சகோதரர்.


அண்ணன் என்னடா தம்பி என்னடான்னு வாழுகிற Fast Food யுகத்துல வித்தியாசமான ஒரு சம்பவம் லண்டனிலிருந்து.

George Culwick க்கு வயது 87 அவரது சகோதரி Lucy Heenan வயது 88, கடந்த 60 வருடங்களுக்கு முன்னர் George தனது தொழில் நிமித்தம் பல நாடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டதால் தனது 20ஆவது வயதில் புறப்பட்டு சென்றவர் தாயகம் திரும்பும் போது தன்னுடைய சகோதரி காணமல் போனதை உணர்ந்தார். பல வருடங்களாக இங்கிலாந்தின் பல மாநிலங்களிலும் தேடி அலைந்தும் அவரால் கண்டுபிடிக்க முடியாமல் போனது(இதுக்குதான் குடும்ப பாட்டு ஒன்னு தயாரிக்கனும்னு சொல்றது)

3மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற George, நடைபெற்ற குடும்ப அங்கத்தவர் நிகழ்வொன்றில் இன்னுமொரு உறவினரின் உதவியுடன் சகோதரியை இனம் கண்டார். தான் வசித்த இடத்தில் இருந்து 5 நிமிடத்தில்(4miles) பயணம் செய்யக்கூடிய Quinton என்ற இடத்தில் 60 வருடங்களாக வசித்த சகோதரியை பிரிந்து வாழ்ந்ததை நினைத்துவருத்தப்படுகிறார் George.

தற்பொழுது பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகளோடு ஓடி பிடித்து விளையாடுகிறார்களாம் அக்காவும் தம்பியும்.

நட்புக்கு இலக்கணம் ஆண்கள்


பெண்கள்
ஒரு மனைவி இரவு முழுதும் வீட்டுக்கு செல்லாமல் அடுத்த நாள் காலையில் தன்னுடைய கணவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் தன்னுடைய தோழி வீட்டில் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அந்த கணவர் தன்னுடைய மனைவியின் பல இடங்களில் இருக்கும் பத்து தோழிகளிடம் விசாரித்த போது பத்து பேரும் அவள் வரவில்லையென சொல்லியிருக்கிறார்கள்.

ஆண்கள்
ஒரு கணவர் இரவு முழுதும் வீட்டுக்கு செல்லாமல் அடுத்த நாள் காலையில் தன்னுடைய மனைவிக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் தன்னுடைய நண்பன் வீட்டில் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அந்த மனைவி தன்னுடைய கணவரின் பல இடங்களில் இருக்கும் பத்து நண்பர்களிடம் விசாரித்த போது 5 நண்பர்கள் தன்னுடன் தங்கியதாகவும் 5 பேர் இன்னும் தங்களுடன் தங்கியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

எப்படி மாமா இப்படி திறந்த புத்தகமா இருக்கீங்க

யானை தாக்கி உயிரிழந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்தவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் - இலங்கை.


இலங்கை, மொனராகல பிரேதேசத்தில் குளத்தில் விழுந்த யானையையும் அதன் குட்டியையும் காப்பாற்ற முயன்ற பொது மகன் ஒருவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

வேடிக்கை என்னவென்றால் வன விலங்கு அதிகாரிகளோ சம்பவத்தை வேடிக்கை பார்த்தார்கள், பொலிசார் தன் பங்கிற்கு உயிரிழந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்தவரை கைது செய்தார்கள்.