எரிந்தது வெற்றி FM இன் செய்திப்பிரிவு
நண்பனிடம் சொல்லுங்கள் நிகழ்ச்சி முடிந்து போகும் போது இரவு 11.30இற்கு நான் பார்த்த எமது அலுவலகம் இரண்டு மணித்தியாலங்கள் கழித்து கரும் புகைமூட்டத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டது.
அலுவலக காவலாளி நெற்றி வடிய ரத்தத்தோடு நின்றுகொண்டிருந்தார். காயங்களின் வலி மறந்து தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்த செய்திப்பிரிவின் நண்பர்கள் இருவரோடு இன்னும் சிலரும் பாடுபட்டுக்கொண்டிருந்த நேரம் தீயணைப்பு படையினர்; வந்து சேர்ந்தனர்.
10இற்கும் மேற்பட்ட காடையர்கள் குழு அதிகாலை 1.20 அளவில் எமது செய்திப்பிரிவின் இருவரை மண்டியிடச்செய்து வைத்திருந்த துப்பாக்கிகளாலும் ஆயுதங்களாலும் தாக்கிவிட்டு பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தி தீயிட்டுள்ளனர்.
பல மணிநேர போரட்டத்தின் பின்னர் தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்போது செய்திப்பிரிவு கருகிப்போயிருந்தது.
Voice of Asia Network Pvt. Ltd நிறுவனத்தின் அங்கமாக செயற்படுகிற சியத, ரியல், வெற்றி வானொலிகளும் முற்றுமுழுதாக செயலிழந்து போயிருக்கும் எமது செய்திப்பிரிவும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நம்பிக்கையோடும் எம் அன்பு நேயர்களின் ஆதரவோடும் இன்னும் பல மடங்கு பலத்துடன் வரும்.
காடையர்களாலும் அவர்கள் கொளுத்தும் தீயினாலும் உயிர்காவும் ஆயதங்களாலும் சத்தியத்தை புதைத்துவிடத்தான் முடியுமா?
அவசர நேரத்தில் ஆறுதலாய் இருந்த நேயர்கள், சக ஊடக நண்பர்கள் என்றும் எம் ஞாபகத்தில் நிற்பார்கள்...
எம் பயணத்தில் பதியப்பட்ட நாளின் படங்கள் சில...
11 COMMENTS:
கருத்துரையிடுக