இது ஜிஹாதா? கோழைத்தனமா?

PM 9:10 Hisham Mohamed - هشام 3 Comments


Fort Hood பாதுகாப்பு தளத்தில் ஹஸனின் துப்பாக்கி முனையில் 13 பேர் பலியான நிகழ்வு ஆட மேடை தேடியவனுக்கு வழி அமைத்து கொடுத்துவிட்டது.

அமெரிக்க பாதுகாப்பு தளங்களில் ஒன்றான Fort Hood இல் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரியும் நிடால் மலிக் ஹசன் சக பாதுகாப்பு அதிகாரிகள் மீது மேற்கொண்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு. கட்டியெழுப்பபடும் நல்லிணக்கப்பாடுகளை சீர்குலைக்கும் இன்னுமொரு செப்டம்பர் 11.

பாதுகாப்பு தளத்தில் நுழைந்த ஹசன் தான் சொந்தமாக வாங்கிய துப்பாக்கியில் சம்பவ தினம் மருத்து பரிசோதனைக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் வந்திருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது '' இறைவன் மிகப் பெரியவன்'' எனக் கோசமிட்டபடி வேட்டுக்களை தீர்த்தான். 13 பேர் தளத்தில் பலியானதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர். கண்மூடித்தனமான தாக்குதலை பலரும் இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது ஜிஹாத் என்று பெயர் வைத்து கருத்து சொல்வது வேதனைக்குரியது.

ஜிஹாத் என்றால் என்ன? நிராயுதபாணிகளையும் பெண்களையும் கொலை செய்வதா?

சமயத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்துவது சரியானதா?

இப்படி பல கேள்விகளும் வேதனைகளும் உள்ளே புதைந்து போய் கிடந்தாலும், உன் போனற மந்த புத்தியுள்ளவாகளால் அவை வெளிக்காட்டப்படும் விதம் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான வெறுப்புக்கு கதவு திறக்கிறது.

சம்பவத்திற்கு பிறகு ...

வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளின் போது பள்ளிகளுக்கருகில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள்...

உண்மையான முஸ்லிம் அமைப்புகளுக்கு ஈமெயில் மூலமாக மரண அச்சுறத்தல்களும் கசப்பான கடிதங்களும் குவிந்துள்ளன...

அமெரிக்க பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் 3572 முஸ்லிம்கள் எந்த கோணத்தில் நோக்கப்படுவார்கள்...

ஹசனின் துணிவு ஒரு கோழையின் செயல்.
அமெரிக்க முஸ்லிம்களின் வருங்காலம் இருளில்

3 COMMENTS:

தெரு விளக்கு சொன்னது…

இவரிடமிருந்து நாம் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது....
இது வெறுமனே பிரபலம் தேடலுக்கும் செய்யப் பட்டிருக்கலாம்....
இருப்பினும் இவ் விஷயத்தை சரி தவறுக்கு அப்பாலும் சிந்திக்க வேண்டியதே இன்றைய தேவை என்பது எனது பார்வை

தெரு விளக்கு சொன்னது…

"நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதை விட மூளைகளும் உணர்வுகளும் ஆக்கிரமிக்கப் படுவது, மிகப்பயங்கரமான விளைவுகளை இஸ்லாமிய உம்மத்திடையே ஏற்படுத்தியுள்ளது" என்று டாக்டர் யூஸூப் அல் கர்ளாவி கூறுகிறார்.

Hisham Mohamed - هشام சொன்னது…

தெரு விளக்கு வருகைக்கு நன்றி..
இந்த சம்பவத்தில் ஒரு கர்ப்பினியும் கொல்லப்பட்டதாய் விவரமறிந்தேன்..

//"நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதை விட மூளைகளும் உணர்வுகளும் ஆக்கிரமிக்கப் படுவது, மிகப்பயங்கரமான விளைவுகளை இஸ்லாமிய உம்மத்திடையே ஏற்படுத்தியுள்ளது" என்று டாக்டர் யூஸூப் அல் கர்ளாவி கூறுகிறார்.//
வரவேற்கப்பட வேண்டிய ஒரு கருத்து ஜிஹாத் என்கிற போர்வையில் தீவிரவாதத்தை போஷிக்கிறார்கள்.