நான் அடிச்சா தாங்க மாட்ட!

PM 11:03 Hisham Mohamed - هشام 3 Comments


வருகிற சோதனைகளும் வேதனைகளும் இன்னுமொருவருக்கு சொல்லி அழுவதற்கல்ல. அதன் மூலம் வாழ்க்கையை படித்து அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டும்.

எனக்குத்தான் யாருமில்ல எனக்குத்தான் எல்லா கஷ்டமும் இப்படி நினைப்பவர்கள் நம்மில் பலர். இவர்கள் என்னை பொறுத்தவரை வாழத்தெரியாத கோழைகள்.

எதுக்கெடுத்தாலும் அடுத்தவன் முதுகு சொறியனும்னு எவ்வளவு காலத்துக்கு பாத்துக்கிட்டு இருக்க போறோமோ? சிந்தனைகளையும் அறிவுரைகளையும் விட, நம்ம உள்ளங்கை ரேகைகளைவிட, நெற்றியிலிருந்து வழிந்து விழும் வியர்வை துளி பலமானது நம்புங்க. இத விட்டுட்டு நான் அடிச்சா தாங்க மாட்டென்னு மொக்கை சிந்தனை சொல்ற பாடல்களை கேட்டு கெட்டுப்போயிடாத அப்பு அப்பிடீன்னு ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு. சொல்லிட்டேனுங்கண்ணா..

மொக்கைன்னு சொல்லும் போது ஞாபகத்தில் வந்ததை தட்டிவிடுகிறேன். கொஞச்காலம் நம்ம ஊர் பதிவர்கள் சிலருக்கு ப்ளக் புளு தாக்கிடுச்சி பாருங்க எதுக்கெடுத்தாலும் அடுத்த தேசத்து தாக்கம் லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் கருத்து. உங்க குமுறல்களை சொல்லி நல்லா போய்க்கிட்டிருக்கிற தமிழ் பதிவுலகத்திலயும் கும்மியடிச்சிடாதீங்க. தமிழ் தானாக வளரும் அதை விட்டுட்டு உங்க ஊர் தமிழ் உங்க தேசத்து தமிழ் எதுக்கு? நம்ம பதிவுகளில 75 சதவீதத்துக்கு மேல அடுத்த தேசத்து சொத்தைதான் விமர்சிக்கிறோம் இல்லைன்னு சொல்ல முடியுமா?

''பதிய வந்ததை விட்டுட்டு ஏதேதோ தட்டிக்கிட்டிருக்க.. ஓ இப்ப இது கூட பேஷன் தானே கோவிந்தன் வீட்டு நாய் வயசுக்கு வந்தாலும் பதிவு போடுறாங்கப்பு'' - ராமசாமி அண்ணே

Nick Vujicic - 4th Dec 1982 (Melbourne, Australia)


மருத்துவர்களாலும் தீர்வு சொல்ல முடியாமல் போன நிக்கின் கதை சாதிக்க பிறந்த ஒவ்வொருவருக்கும் நல்ல உதாரணம். பிறக்கும் போதே கை கால்களற்றவறாக பிறந்தவர் நிக். மருத்துவ ரீதியில் நிக்கின் பிறப்பிற்கான காரணம் இன்னும் மர்மமானதாகவே உள்ளது. ஆனாலும் அவருடைய சகோதரரும் சகோதரியும் ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள்.


''வாழ்க்கைல அதிஷ்டம்னு ஒன்னும்மில்லை. சந்தர்ப்பங்களும் எதிர்பாரா நிகழ்வுகளும்தான் மோசமான விடயங்களை தீர்மானிக்கின்றன. கடவுள் நம்ம வாழ்க்கையில எதையும் தப்பா கொடுக்க மாட்டாரு ஏதாவது காரணத்தோடுதான் எதையும் செய்வார். எனக்கு இப்போ 23 வயசாகுது வர்த்தகத்துறையிலும் நிதித்துறையிலும் பட்டம் வாங்கினாலும் சமூகத்துக்கு சிந்தனை சொல்லும் பேச்சாளராக இருக்கிறதுதான் எனக்கு பிடிக்கும். மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை உண்டுபன்னனும்.'' என்கிறார் நிக்.


நல்ல பேச்சாற்றாலால் இளைஞர்களை கவர்ந்த நிக்கினின் இலட்சியம் ஒரு புத்தகம் எழுதுவது. அந்த புத்தகம் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடவுளை மிஞ்சியவனும், கடவுளை மிஞ்சியதும் ஒன்னுமில்லைன்னு சொல்லும் நிக் தான் கைகளற்றவன் கால்களற்றவன் என்று வருந்தப்போவதில்லை என்கிறார்.

அடுத்த தடவை சோதனை மேல் சோதனை என்று நாம் வருந்த முடியாது.


3 COMMENTS:

/* சிந்தனைகளையும் அறிவுரைகளையும் விட, நம்ம உள்ளங்கை ரேகைகளைவிட, நெற்றியிலிருந்து வழிந்து விழும் வியர்வை துளி பலமானது நம்புங்க.*/
உண்மையான வரிகள் ஹிஷாம்.
(ஒரு சின்ன சந்தேகம் குளிரூட்டப்பட்ட அறையினில் இருந்து வேலை செய்பவர்களுக்கு வியர்வை வராதே ஹிஷாம். Juz Fun. தலைப்பை காப்பி ரைட் பண்ணிடுங்க. இல்லை என்றால் பேரரசு அடுத்த படத்தின் பெயராக வைத்து விட போகிறார்.)

Sinthu சொன்னது…

அனைத்தும் உண்மை...

Hisham Mohamed - هشام சொன்னது…

தலைப்புக்கு சொந்தக்காரர் விஜய்...
முதன் மறையாக பின்னூட்டமிடுகிறீர்கள்..
வருகைக்கு நன்றி பி.ஏ.ஷேக் தாவூத்

உண்மையைதவிர வேறொன்றுமில்லை சிந்து...