ஜனாதிபதி ஆலோசகர்களுக்கு ரூபா 1.25 கோடி!! தோட்டத்தொழிலாளரின் நாள் சம்பளம் 270 ரூபா !!

இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசாகர்ளாக 38 பேர் கடமையாற்றுகின்றனர்.
அவர்களில் 22 பேருக்கு 2008ம் ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம் மாத்திரம் 1,17,29,653,36 ரூபாய் என்கிறார் அரச அமைச்சர் தினேஷ் குணவர்தன.
16 பேர் சம்பளம் பெறாமல் கடமையாற்றுகின்றனர்.( சம்பளம் பெறாமல் இவர்கள் பல சலுகைகளை அனுபவிக்கிறார்களாம் ராமசாமி அண்ணே சொல்றார்.)
இந்த ஆலோசகர்ளில் அதி கூடிய சம்பளமாக 60,000 ரூபா வாங்குபவர்களும் இல்லாமல் இல்லை.
சில ஆலோசகர்களுக்கு நான்கைந்து அரச வாகனங்கள், விமான பயணச்சீட்டுக்கள், அமைச்சர்களை விட உயர்ந்த அந்தஸ்து வழங்கபடுவது உண்மையான்னு ராமசாமி அண்ணே கேட்க சொன்னாரு.
கந்தசாமி விமர்சனம், எந்திரன் எப்ப வரும்? அத்துடன் இன்னும் பல மொக்கை பதிவுகளால் பதிவுலகம் பரபரப்பான தருணத்தில் இவர்களை பற்றியும் கொஞ்சம் சிந்திப்போம்.
அரசியல்வாதிகளும்இ சங்கங்களும் பல தடவைகள் தோட்டத்தொழிலாளர் பிரச்சினையை தட்டிக்கேட்டாலும் ஒரு சில அரசியல்வாதிகளின் தந்திரமான காய் நகர்த்தல்களால்; போராட்டங்கள் சோரம் போன கதை உண்டு ஏராளம்.
பிச்சையெடுப்பவனை விட குறைவாக் உழைக்கும் ஓர் வர்க்கம் ஊதியம் பெறுகிற கொடுமையை எங்க போய் சொல்லுவேன்.(பிச்சைக்காரனை உதாரணமாக்கியதற்கு.....)
இலங்கையில் சராசரி ஊழியர் ஒருவர் பெறும் குறைந்த மாதாந்த சம்பளம் 11700 ரூபா.
அவங்களுக்கு அவ்வளவு கொடுக்காதீங்கன்னு சொல்லல,(அத சொல்ல.....)
இவங்களுக்கு இவ்வளவு கொடுங்கன்னு சொல்றேன்.
9 COMMENTS:
மிகப்பெரிய கொடுமை ஒழிந்திருக்கும் post comment ஐ தேடிப்பிடித்து ஒரு comment போடுவதுதான்..
500 க்கு என்ன செய்ய முடியும்? மூன்று நேரச்சாப்பாடு குறைந்தது ரூ 200/- ஆகாதா ஒரு நாளுக்கு.. குறைந்தது இன்னும் இரண்டு வயிறுகள் ஒரு சம்பளத்தை எதிர்பார்த்து இருக்குமே..அதேபோல் ஹோட்டல் துறை ஊழியர்கள், கடை கண்ணிகளில் வேலைசெய்பவர்கள்,, சில பிரபல தனியார் நிறுவனgகளில் வேலை செய்பவர்கள் , வீட்டு வேலையாட்கள் எல்லாம் உழைப்பது ரூ 10,000/- குறைவாகவே.. அவர்களையும் பற்றியும் பேசுவோம்..
சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லும் விதத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.. கார்ட்டூன் பிரமாதம்
நல்ல ஒரு அலசல்.....
ஹிஷாம் மொஹமட்,
முதல் தடவையாக உங்கள் பக்கம் இப்பொழுது தான் வந்தேன்.
வானொலி , தொலைக்காட்சியூடாக "ஹிஷாம் மொஹமட்" பெயர் தெரிந்திருந்து. முஸ்லிம் சேவையில் "இணையத்திலிருந்து " நிகழ்ச்சியினூடாகவே உங்கள் மீதான கவனம் திரும்பியது.
முஸ்லிம் சேவையில் உள்ள புதிய "சொதப்பல்" அறிவிப்பாளர்கள் மத்தியில் நீங்கள் ஒரு நட்சத்திரம்.தெளிவான அழகிய உச்சரிப்பு உங்களுடையது.
அஷ்ரப் ஷிஹாப்தீன், யு.எல்.யாக்கூப்,ஏ.ஆர்.எம்.ஜிப்ரி வரிசையில் நம்பிக்கை தரும் இளம் அறிவிப்பாளர் நீங்கள்.
எனது அன்பான வாழ்த்துக்கள்.
உங்கள் வலைப்பக்கம் தடைசெய்யப் பட்டிருந்தது தொடர்பான தகவல்களை அறிய விரும்புகிறேன்.
எவ்வளவு காலம் சென்றாலும் கொடுக்கவேண்டியவற்றை கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள்!!!
// மிகப்பெரிய கொடுமை ஒழிந்திருக்கும் post comment ஐ தேடிப்பிடித்து ஒரு comment போடுவதுதான்..//
என்ன கொடும சார் டெம்லேட்டை மாற்றிவிட்டேன் நன்றி
நன்றி LOSHAN, சப்ராஸ் அபூ பக்கர்
//வானொலி , தொலைக்காட்சியூடாக "ஹிஷாம் மொஹமட்" பெயர் தெரிந்திருந்து. முஸ்லிம் சேவையில் "இணையத்திலிருந்து " நிகழ்ச்சியினூடாகவே உங்கள் மீதான கவனம் திரும்பியது.//
5 வருடங்களுக்கு முன்பு என் ஞாபகத்தை ரீவைன்ட் செய்ததற்கு நன்றி ஃபஹீமாஜஹான்.
கார்த்தி போராட்டத்திற்கு ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது 500ரூபா கோரிக்கை 405 ரூபா வரை வந்தாச்சு பொறுத்திருந்து பார்க்கலாம்
http://shanthru.blogspot.com/2009/09/blog-post_17.html
மட்டக்களப்பில் நடப்பதென்ன...
இலங்கையில் இப்படியான விடயங்களுக்குக் குறைவேது அண்ணா...
விருது வழங்கியுள்ளேன், பெற்றுக் கொள்க...
இதில்தான் இவர்கள் குடும்பம் முழுவதும் தங்கியிருப்பதையும் - 30 நாட்களும் வேலையில்லை என்ற விடயத்தையும் நீங்கள் குறிப்பிடவில்லையே! இவர்களிருக்கும் இடங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாமில்லையா? மாதாமாதம் இவர்களின் சம்பளத்தில் தொழிற்சங்கம் பெற்றுக்கொள்ளும் சந்தாவையும் விட்டுவிட்டீர்களே ஹிஷாம்!
கருத்துரையிடுக