? இதுதானா வாழ்க்கை

PM 5:48 Hisham Mohamed - هشام 3 Comments

நான் தேநீரில் மிதந்த மாலைப்பொழுதில் அம்மா ஒரு சொன்ன கதை. (சாரி போஸ் மூன்று நாள் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிகமான வேலை அதனால ஏற்கனவே போட்ட பதிவை ரீமேக் பன்றேன். பாசக்கதையை பாசக்கார நண்பர்கள் படிச்சிட்டு போங்கோ.)




அப்பா என்கிற அந்தஸ்து வந்த பிறகு தன் மகன் தான் அனுபவித்த துயரங்களில் ஒரு துளியேனும் அனுபவிக்ககூடாது என்று எண்ணுகிறவர். தோளுக்கு மேல வளர்ந்தாலும் அவன் வீடு சேரும் வரை அந்த அப்பாவிற்கு இருக்கிற ஏக்கத்தையும் தவிப்பையும் அப்பா என்று நீங்கள் அழைக்கப்படும் போது தான் உணரமுடியும்.

ஒரு வயது முதிர்ந்த அப்பா தன் மகன் லெப்டொப்பில் ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருந்ததை பெருமையாக பார்த்துக்கொண்டிருந்தாராம்.


தீடீரென்று ஜன்னலோரத்தில் ஏதோ ஒன்று கறுப்பு நிறத்தில் அமர்ந்தது போல கண் பார்வை இழந்த அந்த அப்பா உணர்ந்தார். உடனே மகனிடம் '' ஏன்பா அது என்ன ஜன்னலோரத்துல'' என்று கோட்டார். மகன் ''காகம்'' என்று முதல் முறை பதில் சொன்னானாம். காது கேட்கும் திறனை இழந்ததால் மீண்டும் அந்த தந்தை '' ராஜா அது என்ன கறுப்பு நிறத்துல ஜன்னல் ஓரத்துல:'' என்று கேட்க கொஞ்சம் சினம் கொண்டவனாய் ''காகம் '' என்று அழுத்தி பதில் சொன்னான். மீண்டும் சொற்ப நேரத்தில் அந்த தந்தை '' மகன் அது என்ன கறுப்பு நிறத்துல ஜன்னல் ஓரத்துல'' என்று கேள்வி எழுப்ப பெரும் கோபத்துடன் அந்த மகன் '' ஜயோ அப்பா அது காகம் காகம்'' என்று கத்தத் தொடங்கினான். இருந்தும் அந்த தந்தைக்கு ஜன்னலோரத்துல கறுப்பு நிறத்துல இருக்கிறது என்னவென்று புரியவில்லை.

நடந்தவற்றை சமையலறையில் இருந்து அவதானித்துக்கொண்டிருந்த தாய் ஒரு பழைய டயரியுடன் அந்த மகனை நோக்கி வந்தாள். அந்த அம்மா மகனை பார்த்து '' இதுல பெப்ரவரி 10ம் திகதியை திருப்பிப்பார்'' என்று சொன்னதும் காற்றில் பறந்த காகிதங்கள் 10ம் திகதியில் போய் நிற்க அதில் அந்த தாய் எழுதியிருந்தது. ''மூத்தவன் கதைக்க ஆரம்பித்து ஒரு சில வாரங்கள். அவனுக்கு ; அம்மா, ப்ப்பா, என்னது என்று தெரிந்தது ஒரு சில வார்த்தைகள்தான். அன்று என் கணவர் ஜன்னலோரத்தில் என் செல்லக்குட்டியை தூக்கிக்கிட்டு நின்று கொண்டிருந்தபோது ஒரு காகம் ஜன்னலோரத்தில் அமர்ந்தது அப்போ மகன் அவரிடம் 28 தடவைகள் அது என்ன? அது என்ன? அது என்ன, என்று கேள்வி கேட்டான். ஒரு தடவைக்கூட சலிப்பு தட்டாதவறாய் சிரித்துக்கொண்டே காகம் என்று பதில் சொன்னார்''.

வாழ்க்கை என்பது ஒரு வட்டம் போல சின்ன வயசுல நாங்க நடந்து கொள்கிற விதம் வயது போக போக எங்களை தொற்றிக்கொள்ளும். வயதானவர்கள் குழந்தை போலன்னு சொல்லுவாங்க. ஒரு தொழிலுக்கான நேர்முகப்பரீட்சைக்கு போனால் எத்தனை வருட அனுபவம் இருக்குன்னு கேட்பாங்க. அதுமட்டுமல்ல எந்த ஒரு துறைக்கும் பலரும் கேட்கும் முதல் விடயமும் அதுதான் அனுபவம். ஒரு கட்டத்துக்கு மேல அனுபவமும் வாழ்க்கைக்கு உதவாமல் போகிற கொடுமை அது முதுமை.

என்னதான் பத்து பிள்ளைகளை பெத்து வளர்த்திருந்தாலும் பல பெண் பிள்ளைகளை கரை சேர்த்து ஒரு குடும்பத்தையே முதுகில் சுமந்திருந்தாலும். தாத்தா என்று பேரப்பிள்ளைகள் உங்களை அழைக்கும் போது நீங்கள் குழந்தை மாதிரி இல்லையா?

3 COMMENTS:

பெயரில்லா சொன்னது…

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

கார்த்தி சொன்னது…

அண்ணா நேரம் கிடைக்கலயா???

Sinthu சொன்னது…

"ஒரு தொழிலுக்கான நேர்முகப்பரீட்சைக்கு போனால் எத்தனை வருட அனுபவம் இருக்குன்னு கேட்பாங்க. அதுமட்டுமல்ல எந்த ஒரு துறைக்கும் பலரும் கேட்கும் முதல் விடயமும் அதுதான் அனுபவம். ஒரு கட்டத்துக்கு மேல அனுபவமும் வாழ்க்கைக்கு உதவாமல் போகிற கொடுமை அது முதுமை."

எனக்கு அனுபவம் சம்பந்தமான ஒரு சந்தேகம் நீண்ட நால்லாக இருக்கிறது... யாராவது தீர்த்து வையுங்களேன்..
நேமுகப் பரீட்சையில் அனுபவம் அனுபவம் எண்டு கேக்கிறாங்களே... யாராவது ஒரு ஆள் வேலை கொடுத்தால் தான் அந்த மனிதனுக்கு அனுபவம் வரும் என்பதை ஏன் அவர்கள் நினைப்பதில்லை.....?

Answer plzzzzzzzzzzzzzan