பத்து கட்டளைகள் - தம்பதிகளுக்கு

17:29 Hisham Mohamed - هشام 0 Comments


கட்டளை 1

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனஅதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது


கட்டளை 2

உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.

கட்டளை 3

திருமணம் என்பது பெரும் கொடைஅதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது

கட்டளை 4

திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.

கட்டளை 5

ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...

கட்டளை 6

ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.

கட்டளை 7

திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.

கட்டளை 8

மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.

கட்டளை 9

காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.

கட்டளை 10

ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.
போனஸாக ஒரு கட்டளை கதை வடிவில்நீண்ட காலத்துக்கு முன் திருமணமான ஒர் தம்பதி வேண்டுதல் கிணற்றுக்குச் சென்றார்கள்.மனைவி கிணற்றில் குனிந்து ஒரு வேண்டுதலைக் கேட்டுவிட்டு ஒரு நாணயத்தை உள்ளே எறிந்தாள்.கணவணும் ஒரு வேண்டுதல் செய்ய விரும்பினான். ஆனால் கிணற்றில் குனியும்போது சிறிது கூடுதலாக குனிய, தவறி உள்ளே விழுந்து மூழ்கினான்.
கணநேரம் மனைவி அப்படியே பிரமை பிடித்தவளாகி நின்றாள். ஆனால் உடனே முறுவலித்தாள். ''அட! இந்த கிணறு உடனே வேலை செய்கிறதே!''

0 COMMENTS: