படைத்தவனையா சந்தேகப்படுவது?

3:13 PM Hisham Mohamed - هشام 6 Comments



யாரையும் எந்த அமைப்பையும் புண்படுத்துவதற்காக எழுதும் பதிவல்ல,
இது அன்புள்ள நண்பனுக்காக,

மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்தவே. எந்த மதமாக இருந்தாலும் அத்தனையும் சொல்கிற ஒரு உண்மை இறைவன் ஒருவன் என்பதே. அவன் தேவையற்றவன், உலகத்தை படைத்தான் மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்தான். பகுத்தறிவை கொடுத்தவனையே சமூதாயம் சந்தேகத்தோடு ஆராயத்தொடங்கிவிட்டது.

ஒரு நல்ல நண்பனின் அறியாமையை அறிய விளையும் பயணத்தில் அவனை சந்திந்தபோது வந்தது இந்த பதிவு. வாடா என்று விழிக்கும் அளவுக்கு நெருங்கிய நண்பன். அவன் கொள்கைகளுக்கு நான் என்றும் உடன் பட்டதில்லை. வழக்கமாக நாம் ஞாயிற்றுகிழமைகளில் சந்தித்து அரட்டையடிப்பதுண்டு. நல்ல ஒரு புத்தகப் பிரியன், புத்தகங்களுக்குள்ளே தன்னை தொலைத்துவிடுவான். இன்னைக்கு தெரியாம ஒரு புத்தகம் தா வாசிச்சிட்டு தாரேன்னு கேட்டேன். அவன் புத்தகங்களை காட்டிய பிறகு கேட்டதற்காக வருத்தப்பட்டுக்கொண்டேன். அவன் காட்டிய புத்தகங்களில் ஒன்று ''குருவைத்தேடு'' மற்றயது ''கடவுளை நம்பலாமா வேண்டாமா''

கடவுள் இல்லை என்று சொல்பவர்களில் இவனும் ஒருவன். இப்படிப்பட்டவர்கள் பல வழிகளில் செல்வார்கள். கடவுள் இல்லை என்று ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு வகை. இருந்தா என்ன இல்லைன்னா என்ன என்று இருப்பவர்கள் சிலர். ஒரு விஷயம் சொல்லுவாங்க கடவுள் இல்லை என்கிறவனையும் நம்பலாம் இருக்குங்கிறவனையும் நம்பலாம் நான்தான் கடவுள்னு சொல்றானே அவனை நம்பவே கூடாதும்பாங்க. ஆனால் என்ன பொறுத்தவரையில இல்லைங்கிறவனையும் நம்ப கூடாது நான்தான கடவுள்ங்கிறவனையும் நம்ப கூடாது. மதங்கள் வழிகாட்ட வந்தவைன்னு சொல்றோம் அப்போ அதை மறுக்கிறவர்கள் வழிகேட்டில்தானே இருக்கனும்.

அறிவு ஆற்றல் ஆசை இவை ஒரு எல்லையை கடக்கும்போது முக்தி கிடைக்குமா முட்டாள் என்கிற பட்டம் கிடைக்குமா?
இறைவனின் அற்புதமான படைப்புகளை ரசிக்கலாம் அதை ஆராயலாம். அவனையே சந்தேகக்கண் கொண்டு ஆராயலாமா?
இந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் இறைவனை முழுமையாக நம்புகிறேன்.


மத ரீதியானதல்ல ஒரு நல்ல பயிற்சி வகுப்பு இருக்கு வா என்று அண்மையில் வற்புறுத்தி அழைத்தான் மறுக்காமல் சென்றிருந்தேன். (அமைப்புகளையும் தங்களை தூதுவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்களையும் நான் நம்புவதில்லை)

600ரூபாய் கொடுத்து அப்ளிகேசன் நிரப்பிவிட்டு அமர்ந்து கொண்டோம். கோடை காலத்தில் எங்களை பாதுகாத்து கொள்வதற்கும் கவலைகளை குறைப்பதற்குமான வழிகளையும் சொல்லித்தர தொடங்கினார் குரு.
அந்த இரண்டு நாளின் அனுபவங்கள் சின்னதாய் சில விடயங்களை தந்தது. (வட போச்சேன்னு நினைக்கவும் வைச்சுது)

மப்பும் மந்தாரமுமான ஒரு மாலைப்பொழுது நானும் என் இரு நண்பர்களும் உள்ளே அமர்ந்து கொண்டோம். அதுல ஒருத்தர் நாத்திகர் மற்றவர் ஆத்திகர். ஒரு அழகான இடம், அந்த வீடு கட்டப்பட்டவிதமும் மனசுக்கு ஒரு அமைதியை தந்தது. இன்னும் பத்துபேர் வந்திருந்தாங்க.(அதனால கவலை இல்ல)

வசீகரமான ஒரு பேச்சும் ஒருவரின் மனதை வெல்லும் ஆற்றலும் பாடம் சொல்லித்தந்ந வெளிநாட்டவரிடம் நான் பார்த்தேன். மூச்சு பயிற்சியோட வகுப்பு தொடங்கியது. அது யோகா கலையின் அடிப்படையான சில முறைகள் இப்போ கூட செய்து பார்கிறேன் நல்லாதான் இருக்கு.

அடுத்து ரொம்ப இக்கட்டான ஒரு கட்டம், சிரிப்பு பயிற்சி சொல்லும்போதே அழைத்து வந்த என் நண்பனை ஒரு மாதிரி பார்த்தேன். வாய் விட்டு சிரிக்கச் சொன்னார் பரவாயில்லை சிரிச்சேன் அப்புறம் விவதாம் செஞ்சிகிட்டே சிரிங்கன்னாரு என்ன பன்ன வந்துட்டோமேன்னு சிரிச்சேன். அதுக்கு மேல முடியல விவதாம் செஞ்சிகிட்டே பக்கத்துல இருக்கவரோட சிரிக்கச்சொன்னார். என் பக்கத்துல அவன்தான் இருந்தான். சிரிச்சிக்கிட்டே சொன்னேன் 'வெளியில வாடா...'ன்னு. அப்புறம் ஏன் கேட்கிறீங்க சிங்கம் மாதிரி பூனை மாதிரி மில்க் சேக் பண்ற மாதிரி எப்படியெல்லாம் சிரிக்க முடியுமோ அவ்ளவும் பண்ணியாச்சு.

முடிச்சதும் சொன்னாரு ஒரு விடயம் சூப்பரா இருந்தது. அது நம்ம மனச ஏமாத்துற ஒரு வழி நீங்க கூட பண்ணலாம்.

சிரிக்கிறது உண்மையாவும் செய்யலாம் பொய்யாவும் செய்யலாம் அது மனசுக்கு தெரியாது உண்மையா பொய்யான்னு. எப்படி சிரிச்சாலும் உடம்பை புத்துணர்வடையச்செய்யும் ஹர்மோன் சுரக்கும் என்றார்.

காலையில எழும்பும்போதும் இரவு தூங்கும் போதும் சிரிச்சிகிட்டே இருங்கன்னாரு. அப்போ ஒருத்தர் 'யாராவது முட்டாள்னு சொல்லிட்டான்னு' ஒரு முக்கியமான கேள்வி கேட்டாரு. 'ஆமா நான் முட்டாள்தான்னு' சொல்லிட்டு நீங்க சிரிங்கன்னு ஈஸியா பதில் சொன்னார் அவர்.

அடுத்து கோடை காலத்தை சமாளிக்கிற பயிற்சி அது சொல்ல முடியாது. (அதுக்கு எனக்கிட்ட ஒ அப்ளிகேசன் இருக்கு... ஹி ஹி)

முதலாவது நாள் முடிய இரண்டாவது நாள் புதுசா ஏதாவது இருக்கும்னு நினைச்சேன் அதே படம்தான் ஸாரி பாடம்தான். அதுல நடந்த மேட்டரோட முடிச்சுகிறேன். கால்களை நீட்டி படுத்தபடி தான் சொல்வதை செய்யச்சொன்னாரு (முதல் நாளும் இது நடந்தது அனால் ஒரு பத்து நிமிடம்தான்) கண்களை மூடிக்கொண்டு ஒரு அரை மணிநேரம் படுத்தபடி பயிற்சியின் நிறைவில் மெதுவாக அமர்ந்து கண்களை மெதுவாக திறக்கச்சொன்னார். எல்லாரும் எழும்பிட்டாங்க என் பக்கத்துல இருந்த ஒருத்தர் தூங்கிட்டாரு (ஐயோ ஐயோ!)

மூனாவது நாள் பக்கமும் போகல. ஒரு சில நல்ல விடயங்களை படித்தேன் ஆனால் சரியான ஒரு பாடநெறியுடன் நடத்தப்பட்டால் வரவேற்கப்படும்னு நினைக்கிறேன்.

எப்படியோ இதுக்குபிறகு கூப்பிட மாட்டான்னு ஒரு சந்தோசம். உன்னிடம் இருக்கும் சொல்வளத்தை கண்டு நான் பிரமித்துப்போயிருக்கிறேன். ஒரு நல்ல நண்பனாக உனக்கு சொல்லக்கூடியது உன் தேடல்களின் திசையை மாற்று, வாழ்க்கையை நெறிமுறைகளோடு ரசிக்க பழகு அமைதி கிடைக்கும். காசு கொடுத்து சிரிக்க பழக வேண்டி இருக்காது.

இனிமேல் 600ரூபாய் கொடுத்து சிரிக்க கூப்பிட்டா மவனே!...

6 COMMENTS:

priyamudanprabu சொன்னது…

அவந்தான் படைத்தானா என்பதில்தான் சந்தேகம்

கடவுள் மேல் என்ன கோவம் எங்களுக்கு??

கடவுள் இல்லைனு சொல்லுறோமோ இல்லையோ இருந்து இருந்தா நல்லாயிருக்கும்

மனுசன் தப்பு செய்ய பயப்படுவான்

ஆனா இப்ப தைரியமா செய்யுறான்

இப்ப சொல்லுங்க?/

IRSHATH சொன்னது…

நிம்மதியை எங்கெல்லாம் தேடுவதைவிட, நாம் செய்வது சரிதானா என்று தேடுவது அதன்மூலம் தெளிவுபெறுவது என்பன அதிகமான மன நிம்மதியை கொடுக்கும்.

muszhaaraff சொன்னது…

கடவுள்! அதிகம் குழப்பமான ஒரு சொல். ஹிசாம்..நண்பனிடம் ஒரு கேள்வி.. உனது பதிவில் கடவுள் பற்றிய உனது நம்பிக்கையை அழகாக பதிந்திருக்கிறாய்..சபாஸ்..உனதும் எனதுமான மூதாதையர்களின் நம்பிக்கையை அப்படியே பற்றிப்பிடித்திருக்கும் உனது பற்று நன்றாக புரிகிறது. உன் பதிவிலே . அவன் தேவையற்றவன், உலகத்தை படைத்தான் என எழுதப்பட்டிருக்கிறது.தேவையற்றவன் ஏன் படைக்கனும்? படைக்கவேண்டிய தேவையிருந்ததால் தானே அவன் படைத்திருக்கிறான்? பதில் சொல்லுங்கள் நண்பரே

Hisham Mohamed - هشام சொன்னது…

பிரபு
//அவந்தான் படைத்தானா என்பதில்தான் சந்தேகம்//
அன்பே சிவம் என்று பதிவை ஆரம்பிக்கும் நீங்கள் இப்படி சொல்வது வியப்பு. வருகைக்கு நன்றி நண்பரே

Hisham Mohamed - هشام சொன்னது…

வருகைக்கு நன்றி IRSATH,
நிம்மதியை, தொலைத்தவர்தானே தேடணும்....

Hisham Mohamed - هشام சொன்னது…

muszhaaraff நீ குழம்பி இருக்கிறாய்.. ஜென் துறவியின் கதை தெரியுமா?