கியூபாவின் கண்ணீர் கனவுகள்.

11:06 PM Hisham Mohamed - هشام 5 Comments

::யாவும் கற்பனை::

கொஞ்(ச)சும் மழை, காது நோகாம ஒரு பாட்டு, நெடுந்தூரம் யாருமில்லை கால் நீட்டி வண்டி ஓட்டுற சுகம் இதை விட வேற என்ன வேணும் மது?. ஆஹா பிராமதம்! சோடா புட்டிக்கு ரசிக்கவும் தெரியுதுன்னு சொன்னாள் மது. லூசுத்தனமா எதச் சொன்னாலும் ஆஹா போட நீ இருக்கும் போது செவேரோ சாதூயை மிஞ்சிடுவேன் பாரேன்னு பதில் சொன்னான் ராகுல்.


செவேரோ கியூபாவின் பிரபல கவிஞர்களில் ஒருவர். ராகுலுக்கு ஆறு வயது இருக்கும் போதே அவன் பெற்றோர் கியூபாவின் சென் நிக்கலோஸில் குடியேறிவிட்டார்கள். இவன் அடிப்படை கல்வியை பெற்றது இங்குதான். ஸ்பெய்னின் காலநித்துவத்தில் கசங்கிப்போன சுவடுகளில் இருந்து மீளாத கியூபாவைப்போல அவன் ரசனைகளும் பழக்க வழக்கங்களும் வருடங்கள் 19 கடந்தும் மாறவில்லை.

தாயகத்தை இன்னும் அவனுக்கு ஞாபகப்படுத்த இருக்கும் ஒரே ஒரு சொத்து மது. கம்பியில்லாமல் காற்றில் வாகனத்தை செலுத்திக் கொண்டே கதை சொல்லும் ஒரு வழக்கம் ராகுலுக்கு கார் வாங்கிய பிறகு.

''ரெண்டு மூனு நாளா உன்ன மாதிரியேதான்'' என்று வாய் திறந்தவன் மூடுவதற்குள் ''என்ன என் மாதிரியான்னு?'' கேட்டு முடித்தாள் மது. ''ம்ஹ்ஹ்; அழுது கிட்டே இருக்கு வானம்'' எப்பவும் அவளை கிண்டலடிப்பதில் அவனுக்கு அப்படி ஒரு ப்ரியம்.

காலையில் எழுந்து கடன் தீர்த்து அலுவலகம் செல்வதும் மாலை வீடு திரும்புவதும் தவிர ராகுலுக்கு இருக்கும் ஒரே ஒரு தனிமை கில்லர் மது. அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான தூரம் 40 நிமிடங்கள். இந்த இடை வெளியில் அவன் கொட்டித்தீர்க்கும் வார்த்தைகள் ஏராளம்.

''எனக்கென்ன கவலை மது ஓபீஸ் - வீடு - ஓபீஸ் வீடுபோனால் என்னை காதலிக்க டீட் டீட் டீட் டீட '' தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் அழைத்தால் ஸ்பெனிஸ் மொழியில் ஒரு பெண் குரல்.

''நீங்கள் அழைத்த வாடிக்கையாளருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை''
தொடரும்....

5 COMMENTS:

Lojee சொன்னது…

enna anna eppadi mudiththu vidderkal.

Hisham Mohamed - هشام சொன்னது…

காத்திருங்கள் Lojee இன்னும் வரும்....

Subankan சொன்னது…

விரைவில் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்.

Sinthu சொன்னது…

தொடர்கதையா....... ஒரு வாரம் கடந்தும் தொடராமல் இருக்கிறீர்களே அண்ணா.. எதிர்பார்ப்புடன்..

விபு சொன்னது…

அடுத்த பதிவுக்கை காத்திருக்க முடியவில்லை.... விரைவாக எழுதவும்...