ஒபாமாவும் நானும்.
இன்று மின் காந்த அலைகளில் நான் இல்லை. ரொம்ப யோசிக்க வேணாம். வானொலி தொலைக்காட்சி எல்லாத்துக்கும்; இன்னைக்கு ஓய்வு கொடுத்து இயற்கையை சுவாசிக்கிறேன்.
ரொம்ப நாளைக்கு பிறகு இப்படி ஒரு ஓய்வு. என்ன கொஞ்சம் வேலை இருந்தது இருந்தாலும் ரிலாக்சாக முடிச்சுட்டன்.
பதிவெழுதி ரொம்ப நாளாச்சு. பதிவுலகில் நான் காணாமல் போன நாட்களில் எத்தனையோ விடயங்கள் நடந்திருக்கும். அப்புறம் நிறைய பேர் விருதுகளெல்லாம் தந்திருந்தீங்க கொஞ்ச கொஞ்சமா தேடிபிடிச்சு ஏத்துக்கிறேன் தாமதத்திற்கு மன்னிக்கனும். இன்னும் நிறைய பேசுவோம் வரும் ஞாயிறு (23) வலைப்பதிவர் சந்திப்பில்.
கொஞ்ச நாளைக்கு முதல்ல எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதுல இருந்த விடயங்கள முழுமையா படிச்சதுக்கப்புறம் அனுப்பியவருக்கு பதில் மடல் அனுப்பி அந்த உண்மைக் கதையை முழுமையாக தெரிஞ்சிக்கிட்டு எழுதி வைச்சிருக்கேன் ஒரு பதிவு. சில மாற்றங்கள் செய்து விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .
அது இருக்கட்டும் அப்பு ஓபாமாவை எதுக்கு கூப்பிட்டீங்க?
அது ஒன்னுமில்ல மனுசன் இப்ப குடும்பத்தோட செம ஜாலியா விடுமுறையில இருக்காரு நானும் இன்னைக்கு விடுமுறை பாருங்க அதுதான்.
பொருளாதாரம், சுகாதாரம், G20 மாநாடு என பல அலுவல்களுக்கு மத்தியில் இப்பதான் ஒபாமா கொஞசம் ஓய்வெடுக்கிறார்.
மனைவி பிள்ளைகளுடன் அமெரிக்க ஜனாதிபதி இப்போ இயற்கை தளங்களை பார்வையிடுகிறார். இறுதியாக தன்னுடைய குடும்பத்தாரோடு கிராண்ட் கெனியோன் என்கிற மலைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தார் ஒபாமா.
கிராண்ட் கெனியொன் (Grand Canyon) அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடம். அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய தேசிய பூங்காவும் இங்கேதான் இருக்கிறது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட்டும் தான் பதவியில் இருந்த போது ஓய்வு நேரங்களை அதிகம் கழித்தது கிராண்ட் கெனியொனின் முக்கிய இடங்களில்தான். நம்ம சூப்பர் ஸ்டார் அடிக்கடி இமயமலைக்கு போற மாதிரி அமெரிக்கர்களுக்கு கிராண்ட் கெனியொன்.
இன்னும்.........
8 COMMENTS:
மறைந்திருக்கும் Post a Commentஐ தேடி பின்னூட்டமிடுங்கள்.
என்ன அண்ணா.... ஓய்வுல ஒபாமாவோடு ஓசியா ஒரு சுற்றுலாவா?.... முடியல......
அடிக்கடி பதிவு போடுங்க அண்ணா.... ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தோட திரும்பிப் போகிறோம்.... அங்க கற்றது கையளவு.... இங்க பதிவது மனதளவு.....
வாழ்த்துக்கள் அண்ணா.....
அன்பு முஹமது வணக்கம், புகைபடங்களும், செய்தியும் நன்றாக உள்ளது.
தொடருங்கள்."ஜெரிஈசானந்தா"-மதுரை.
வந்துட்டிங்களா? வாங்கோ வாங்கோ!!!
///அது ஒன்னுமில்ல மனுசன் இப்ப குடும்பத்தோட செம ஜாலியா விடுமுறையில இருக்காரு நானும் இன்னைக்கு விடுமுறை பாருங்க அதுதான்.///
நீங்களும் குடும்பத்தோடா அதாவது மனைவி பிள்ளைகளோடானு கேக்குறேன்!
நன்றி ஜெரி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
எப்படி கலை உங்களால மட்டும் முடியுது.
//அங்க கற்றது கையளவு.... இங்க பதிவது மனதளவு.....//
சப்ராஸ் சூப்பரு
ஒபாமா உன்னுடைய போன் நம்பர் கேட்டார் மச்சான் கொடுக்கவா????
Fantastic Combination between you and him...
Anna I have given you something in my blog, Can u please visit my blog and get it when you are free.. Thanks.
தாங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்.
என் தளத்திற்கு வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளவும்...
கருத்துரையிடுக